மஅன் இப்னு யஸித்(ரலி) அறிவித்தார். நானும்
என்னுடைய தந்தையும் என்னுடைய பாட்டனாரும் நபி(ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று)
பைஅத் செய்திருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்து
வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு முறை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன். அதாவது, என்னுடைய தந்தை யஸித் தருமம்
செய்வதற்காக சில தினார்களை எடுத்துச் சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த
ஒருவருக்கருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். உடனே
என்னுடைய தந்தை, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம்
உனக்கல்லவே" என்றார். உடனே நான் அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம்
வந்து தீர்வு கேட்டதற்கவர்கள் 'யஸிதே! உம்முடைய (தர்ம)
எண்ணத்திற்கான நற்கூலி உமக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த
(பொருளான)து உமக்கே!" எனக் கூறினார்கள்.
ஒருவன் கிணற்றில் விழுந்து தற்கொலை அவனைக் காப்பாற்றும்
எண்ணத்தில் இன்னொருவன் ...இறந்து போனது இருவரும் ஆனால் முதலாமவன் நரகவாசி
இரண்டாமவன் சுவனவாசி ஏன்? சிந்திப்போம்!
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை
உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.முஸ்லிம் 149.
உல்கில் வாழ்ந்த உத்தமர்களிலெல்லாம் உயர்வின்
உச்சத்தை வழங்கப்பட்டவர்கள் முஹம்மது நபி ஸல் அவர்கள்தான். என்பதில் யாருக்கும்
மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஏனெனில் படைப்புகளில் சிறந்த படைப்பு மனிதன்
அந்த மனிதனில் சிறந்தவர்கள் நபிமார்கள். அந்த நபிமார்களில் ‘உலுல் அஜ்ம்’ எனும் உறுதியம் தைரியமும் கொண்ட ஐந்து நபிமார்கள்
சிறப்பானவர்கள்.
[நூஹ் அலை
இப்றாஹீம் அலை மூஸா அலை ஈஸா அலை முஹம்மது ஸல் ஆகியோர்]
அவர்களில் சிறந்தவர்கள் முஹம்மது நபி ஸல்அவர்கள்.
முழு மனித சமுதாத்தையும் சிறப்பு மற்றும்
உயர்வின் அடிப்படையில் அடுக்கடுக்கான ஒருகுவியலாக கற்பனை செய்தோமானால் ஆக
உச்சத்தில் இருப்பவர்கள் முஹம்மது நபி ஸல்அவர்கள்தான்.
அவர்களுக்கு இருக்கும் உயர்வை அல்லாஹ்
பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளான்.
உலகிலுள்ள மனித ஜின் இனத்தின் அனைவருக்குமான
நபியாக ஆக்கினான்.
பைத்துல் முகத்தஸில் நபிமார்களுக்கு இமாமாக
ஆக்கி அழகு பார்த்தான்.
மிஃராஜ் எனும் விண்ணுலக பயணத்தின் மூலம்
தன்தர்பாருக்கு அழைத்து நேரடியாக உரையாடி கௌரவித்தான்.
நாளை மஹ்ஷரிலும் எவருக்கும் இல்லாத உயர் பதவி
வழங்க இருக்கிறான்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது
அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின்
பிள்ளைதான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்: இப்னுமாஜா (3303)
அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள்.
மேலும், நபி (ஸல்)
அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீநூல்: புகாரி (6247)
திடமான மணிகளை
தாங்கிய கதிர்கள் தலை கவிழ்ந்து நிற்கின்றன
ஒன்றுமில்லாத
சாவிக்கதிர்கள்தான் தலை நிமிர்ந்து நிற்கின்றன என்பது ஒரு அரபிக் கவிதையின்
கருத்து.
பெருமை
ஒரு உளவியல் வியாதி
எப்படியென்றால் பெருமை குணம் கொண்ட ஒருவன்
தனக்கு பெரிய உயர்வு இருப்பதாக கருதுவான் என்பதால் எவ்வளவுதான் பிறரால்
மதிக்கப்பட்டாலும் தன் அந்தஸ்துக்கு தக்கவாறு மதிக்கப்படவில்லை என்றும் இன்னும்
ஒருபடி மேலாக தான் அவமதிக்கப்படுகிறோம் என்றுகூட எண்ணுவான். அதன் மூலம்
கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான்.
ஆனால் பிறரை விட எனக்கென்று எந்த உயர்வும்
இல்லை நான் ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணும் பணிவு குணம் உள்ளவன் தனக்கு வழங்கப்படும் கொஞ்ச மரியாதையைப்பற்றிகூட
தன்தகுதிக்கு மீறி கௌரவிக்கப்பட்டதாக நினைத்து சந்தோஷப்படுவான்.
தொழுகையில்
பணிவின் பாடம்
தொழுகையில் நிலை நிற்கின்றோம் ஸஜ்தாவும்
செய்கின்றோம் ஆனாலும் மிக சிறந்த நிலை எது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் சஜ்தாவுடைய ஆயத்தை ஓதி
சஜ்தாச் செய்தால் ஷைத்தான் அழுதவாறு ஒருபக்கம் ஒதுங்கி விடுகிறான்.
"ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்ய கட்டளையிடப்பட்டது,
அவன் ஸஜ்தா செய்து சுவனத்திற்கு உரியவனாகி விட்டான். எனக்கும் ஸஜ்தா செய்ய
கட்டளையிடப்பட்டது ஆனால் ஸஜ்தா செய்ய நான் மறுத்தேன். நரகத்திற்குறியவனாகி
விட்டேனே! அந்தோ கைசேதமே என்று
ஒப்பாரி வைக்கிறான்". இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம்
133.
832.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது
அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர்
சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப்
பிரார்த்தியுங்கள். இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஏனென்றால் பணிவின் உச்சம் ஸஜ்தாவாகும்
العبادة هي أقصى
غاية الخضوع والتذلل
உயர்வின் அளவைப் பொருத்து பணிவின் அளவும்
இருக்க வேண்டும்.
உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் பணிவு ஓர்
எடுத்துக்காட்டு