வியாழன், 16 ஜூலை, 2015

மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.



மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.

நோன்பு பெருநாள் குத்பா உரை.

மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.


قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ  يونس: 58
" وَلِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطْرِهِ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ " صحيح مسلم
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சந்தோஷப்படும் நாள்

சிறியவர் முதல் பெரியவர் வரை முதலாளி முதல் தொழிலாளி வரை பாமரர் முதல் பட்டதாரி வரை பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்யும் மகத்தான நாள் இந்த ஈதுல் பித்ர் எனும் திருநாள்.

நபி ஸல் வீர விளையாட்டை கண்டு மகிழ்ந்தார்கள்
988 - وَقَالَتْ عَائِشَةُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي وَأَنَا أَنْظُرُ إِلَى الحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي المَسْجِدِ فَزَجَرَهُمْ عُمَرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفِدَةَ» يَعْنِي مِنَ الأَمْنِ
988. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்விட்டு அபீ ஸீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!" என்று கூறினார்கள். 

சிறுமிகளின் பாடல் கேட்டு மகிழ்ந்தார்கள்
952 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ، قَالَتْ: وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا»
952. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள். 

நோன்பிருந்ததால் இந்த மகிழ்ச்சி

"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்."
ஒரு பொருளின் அருமை, அது நமக்கு கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.
தாகத்திற்க்குப் பின் குடித்தால்தான் தண்ணீரின் அருமைகூட புரியும்.
நோன்பாளிக்கு இரட்டை மகிழ்ச்சி
பதிநான்கு மணி நேரம் பத்தியமாக இருந்து விட்டு நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில் நோன்பு திறக்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே! அதை வார்த்தைகளினால் வடித்து விட முடியாது.
இப்படி அந்த நேரத்தில் கிடைக்கும் நிகரில்லா சுகம் நோன்பிருப்பதால் தான் கிடைக்கிறது. நோன்பில்லாதவர்கள் அந்த சுகத்தை ஒருக்காலும் அனுபவிக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். நோன்பாளிக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவன் நோன்பு திறக்கும் வேளையில் ஒரு மகிழ்ச்சி! நோன்பிருந்த பலனாக தனது இறைவனைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றொன்று அறிவிப்பவர் அபூ ஹ¥ரைரா (ரழி-1) நூல் புஹாரி முஸ்லிம்.
பேரின்பம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுபவித்துக்கூறும் இரட்டை மகிழ்ச்சியில் முந்தியது உணர்வு ரீதியாக அனுபவிக்கப்படுவது அது சிற்றின்பம், இரண்டாவது ஆத்ம சுகம், அது பேரின்பம்.
ஹாரூன் ரஷீத் மாமன்னர் தனது மனைவியர்களை விட (அவருக்கு அனுமதிக்கப்பட்ட) அடிமைப் பெண்ணொருத்தியை வெகுவாக நேசித்து வந்தார். இது குறித்து அரசிகளுக்கு மனக்குறை இருந்து வந்தது. அந்த மன்குறையைப் போக்குவதற்காக அரசர் ஒரு ஏற்பாடு செய்தார். தனது மனைவிமார்கள், அடிமைப் பெண் அனைவரும் கூடி இருக்கும் போது விலையுயர்ந்த முத்துக்களையும், மாணிக்கக் கற்களையும் விசிறி எறிந்து அவர்கள் அவற்றை பொறுக்கிக் கொள்ளுமாறு கூறினார். அரசிகள் அனைவரும் அவற்றைப் பொறுக்குவதில் அவசரம் காட்டிய போது அந்த அடிமைப் பெண் மட்டும் அசையாது நின்றார். அதைக் கண்ணுற்ற அரசர் அந்தப் பெண்ணிடம் நீ பொறுக்க வில்லையா?” வெனக் கேட்டார். எனக்கு அந்த முத்து மாணிக்கங்கள் தேவையாயிருக்கவில்லை. அதை விசிரிய கைதான் தேவைஎன்று அந்த அடிமை பதிலளித்தார். அவரது இந்தப் பதிலைக் கேட்டதும் அரசிகள் வெட்கித் தலைகுனிந்தனர்.
ஆம்! இந்த உலகம் இந்த உலகத்தில் இன்பமயமாகத் தோற்றம் தருபவை அனைத்தும் அல்லாஹ்வினால் விசிறி எரியப்பட்டவைகளே! அவை அனைத்தையும் விட அதைத் தரும் அல்லாஹ் கிடைத்து விட்டால் அது தானே பேரின்பம்!
நோன்பு நோற்பவர் இத்தகைய நிலையை அடைகிறார். சுவையான உணவு. இன்பம் தரும் மனைவி, மற்ற எதுவும் அவருக்குப் பெரிதாகத் தோன்றுவதில்லை. அவை அனைத்¨யும் மறந்து அல்லாஹ்வை அடையவே அவர் துடிக்கிறார்.
சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்
அல்லாஹ்வையும் அடியார்களையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்
வகைகள்
1 விரும்பத்தக்கவை
فالفرح نوعان: نوع مشروع وهو الفرح في عيد الفطر بتفضل الله وشكره على إتمام الصيام والقيام في شهر رمضان، والفرح بإتمام مناسك الحج في عيد الأضحى

2 விரும்பத்தகாதவை
والفرح بالدنيا الزائلة هو الفرح المذموم

لا تَفْرَحْ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْفَرِحِينَ  ( القصص:76)

وَرَوَى أَبَانُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال من هَدَاهُ اللَّهُ لِلْإِسْلَامِ وَعَلَّمَهُ الْقُرْآنَ ثُمَّ شَكَا الْفَاقَةَ كَتَبَ اللَّهُ الْفَقْرَ بَيْنَ عَيْنَيْهِ إِلَى يَوْمِ يَلْقَاهُ- ثُمَّ تَلَا-" قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ".
عَنِ الزُّهْرِيِّ , عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ: أُتِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ بِغَنَائِمَ مِنْ غَنَائِمِ الْقَادِسِيَّةِ، فَجَعَلَ يَتَصَفَّحُهَا وَيَنْظُرُ إِلَيْهَا وَهُوَ يَبْكِي، وَمَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، هَذَا يَوْمُ فَرَحٍ، وَهَذَا يَوْمُ سُرُورٍ، قَالَ: فَقَالَ: " " أَجَلْ، وَلَكِنْ لَمْ يُؤْتَ هَذَا قَوْمٌ قَطُّ إِلَّا أَوْرَثَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ "  السنن الكبرى للبيهقي (6 / 582

நம் சந்தோஷம் பிறரை மகிழ்விக்கக்கூடியதாக இருக்கனும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட இரு திருநாட்களிலும் படைத்தவனை வணங்கி பணிகின்றோம் மேலும் படைப்புகளுக்கு வழங்கி மகிழ்கின்றோம்.

உலகில் பலரும் பலவிதமான பண்டிகைகளை கடைபிடிக்கின்றனர் பெரும்பாலும் மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதாகவே இருந்து வருகிறது. ஆனால் இஸ்லாம் பண்டிகையின் பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்க அனுமதிப்பதில்லை.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا ضَرَرَ وَلَا ضِرَارَ» سنن ابن ماجه (2 / 784
  
ومعنى " لا ضرر ولا ضِرار " أن الإنسان لا يجوز له أن يضرّ بنفسه ولا بغيره .

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ» المعجم الأوسط (6 / 58