செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மனிதனுக்கு மறதி - பலனா? பாதிப்பா?

மனிதனுக்கு மறதி - பலனா? பாதிப்பா?

وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا - [طه: 115]
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آفَةُ الْعِلْمِ النِّسْيَانُ،- مصنف ابن أبي شيبة

மனிதனின் இயல்பான தன்மைகளில் ஒன்று மறதி. மறதி அனுபவம் இல்லாத மனிதனே இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைவரும் அதில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
மறதி சாமானியனுக்கும் ஏற்படுகிறது சாதனையாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
உயர் நிலையில் இருந்தவர்கள் கூட மறதியால் சில நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுக்கு மறப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே தனது 9 வயது மகளை சாப்பிடச் சென்ற ரெஸ்ரோடன்டிலேயே விட்டு விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

கடந்த  ஜூன் மாதம் காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ரெஸ்ரோடிரன்டிற்கு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிட்டு முடிந்த பின்னர் 9 வயதான தன் மகள் நான்சியை மட்டும் அந்த உணவகத்திலேயே விட்டு விட்டு தானே காரினை செலுத்திக் கொண்டு ஏனையவர்களுடன் வீடும் வந்து சேர்ந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பின்பே நான்சியை எல்லோரும் தேடியுள்ளனர். அப்பொழுதுதான் கை கழுவும் பகுதியில் நான்சியை விட்டு வந்தது கமரூனுக்கு நினைவுக்கு வந்தது.

பின்னர் மீண்டும் காரினை செலுத்திக் கொண்டு உணவகத்திற்குச் சென்ற போது அச்சிறுமி அமைதியாக தனது தந்தைக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். 

மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் பயங்கரமான மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
டிக்கெட் பரிசோதகர் வந்து ஒவ்வொருவரிடமாக டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சியடைந்தார். தன் கைப் பையையையும் முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார். அவரோ பாவம் செய்வதறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது. எனவே அவர் '' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல, இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும். எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள் என்றார்.''

அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா ? ''அதுவல்ல என் பிரச்சனை. டிக்கெட் வேண்டுமென்றால் இன்னொன்று கூட உங்களிடம் வாங்கிக் கொள்ளலாமே. ஆனால், நான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதே அந்த டிக்கெட்டைப் பார்த்தால்தானே எனக்குத் தெரியும் !'' இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.
கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டுமென்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் மறதி பெரும் சவாலாகி விடுகிறது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آفَةُ الْعِلْمِ النِّسْيَانُ،- مصنف ابن أبي شيبة
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَيِّدُوا الْعِلْمَ بِالْكِتَابِ» مسند الشهاب القضاعي
عَنْ مَرْثَدٍ أَبِي يَزِيدَ قَالَ: سَمِعْتُ عُمَرَ يَقُولُ: «أَيُّهَا النَّاسُ قَيِّدُوا النِّعَمَ بِالشُّكْرِ، وَقَيَّدُوا الْعِلْمَ بِالْكِتَابِ»- حلية الأولياء وطبقات الأصفياء
மறக்க முடியாத மறதிகள்
சுவனத்தில் ஆதம் ]அலை[ அவர்களின் மறதி
وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا - [طه: 115]
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا تَأْكُلُوا بِشَمَائِلِكُمْ، فَإِنَّ آدَمَ أَكَلَ بِشِمَالِهِ وَنَسِيَ، فَأَوْرَثَهُ ذَلِكَ النِّسْيَانَ» مصنف ابن أبي شيبة
உலகிலும் மறந்தார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ مَسَحَ ظَهْرَهُ، فَسَقَطَ مِنْ ظَهْرِهِ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا مِنْ ذُرِّيَّتِهِ إِلَى يَوْمِ القِيَامَةِ، وَجَعَلَ بَيْنَ عَيْنَيْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ وَبِيصًا مِنْ نُورٍ، ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدَمَ فَقَالَ: أَيْ رَبِّ، مَنْ هَؤُلَاءِ؟ قَالَ: هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ، فَرَأَى رَجُلًا مِنْهُمْ فَأَعْجَبَهُ وَبِيصُ مَا بَيْنَ عَيْنَيْهِ، فَقَالَ: أَيْ رَبِّ مَنْ هَذَا؟ فَقَالَ: هَذَا رَجُلٌ مِنْ آخِرِ الأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ يُقَالُ لَهُ دَاوُدُ فَقَالَ: رَبِّ كَمْ جَعَلْتَ عُمْرَهُ؟ قَالَ: سِتِّينَ سَنَةً، قَالَ: أَيْ رَبِّ، زِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً، فَلَمَّا قُضِيَ عُمْرُ آدَمَ جَاءَهُ مَلَكُ المَوْتِ، فَقَالَ: أَوَلَمْ يَبْقَ مِنْ عُمْرِي أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَوَلَمْ تُعْطِهَا ابْنَكَ دَاوُدَ قَالَ: فَجَحَدَ آدَمُ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ، وَنُسِّيَ آدَمُ فَنُسِّيَتْ ذُرِّيَّتُهُ، وَخَطِئَ آدَمُ فَخَطِئَتْ ذُرِّيَّتُهُ "- سنن الترمذي ت شاكر
மூஸா [அலை] அவர்கள் மறந்தார்கள்
قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا [الكهف: 73]
நபி ]ஸல்[ அவர்களுக்கும் மறதி ஏற்பட்டிருக்கிறது.
714 - عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ، أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ-صحيح البخاري
714. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைந்துவிட்டனவா? அல்லது நீங்கள் மறந்த விட்டீர்களா? என்று துல்யதைன் கேட்டார். 'துல்யதைன் கூறுவது உண்மையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், 'ஆம்' என்றனர். உடன், மற்றும் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறி முன்பு செய்தது போன்று, அல்லது அதை விடவும் நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள்.
401- عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ إِبْرَاهِيمُ: لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ  فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ؟ قَالَ: «وَمَا ذَاكَ» ، قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا، فَثَنَى رِجْلَيْهِ، وَاسْتَقْبَلَ القِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: «إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ، فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيُسَلِّمْ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ» صحيح البخاري
401. 'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் - கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது' என இப்ராஹீம் கூறுகிறார் - தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. 'அது என்ன (அப்படியென்றால் என்ன)?' என்று நபி(ஸல்) கேட்டதும், 'நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்' என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து, 'தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படுமானால் அதை உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்' என்று கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
அபூ ஹுரைரா [ரலி] அவர்களுக்கு இருந்த மறதி
119 - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا أَنْسَاهُ؟ قَالَ: «ابْسُطْ رِدَاءَكَ» فَبَسَطْتُهُ، قَالَ: فَغَرَفَ بِيَدَيْهِ، ثُمَّ قَالَ: «ضُمَّهُ» فَضَمَمْتُهُ، فَمَا نَسِيتُ شَيْئًا بَعْدَهُ-صحيح البخاري
119. 'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!' என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மனிதனுக்கு மறதி இயல்பு என்பதாலேயே வியாபாரம் கடன் போன்றவற்றில் எழுதி வைப்பதையும் சாட்சி ஏற்படுத்துவதையும் மார்க்கம் வலியுறுத்தியுள்ளது.
மனிதனுக்கு மறதி இயல்பாகிப்போனதாலேயே மறந்து தவறிழைப்பவர்களுக்கு தயவு காட்டுகிறான்.
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»سنن ابن ماجه
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ - صحيح البخاري
597. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'
யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.'
மறக்க வேண்டிய இரண்டும் மறக்க கூடாத இரண்டும்
லுக்மான் ஹகீம் அவர்களின் கூற்று
إثنان لا تذكرهما أبدا، واثنان لا تنساهما أبدا

إثنان لا تذكرهما أبدًا: إساءة الناس إليك، وإحسانك إلى الناس
، واثنان لا تنساهما أبدًا: الله والدار الآخرة.


கவலை சங்கடம் மறந்து போவதால்தான் அடுத்த விஷயங்களை ஈடுபாட்டுடன் செயலாற்ற முடிகிறது. அந்தவகையில் மறதியும் வரமே!