ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

கனத்த இதயத்துடன்...



السلام عليكم ورحمة الله وبركاته.....


 என்எனருமை தந்தை மர்ஹூம் அல் காரி அல் ஹாஜ் V.M.பீர் முஹம்மது ரஷாதி.யின் நினைவு நாள் இன்று 
இறை அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள்.. இன்றோடு 8 வருடங்கள் ஆகிவிட்டது. . .நினைக்காத நாளில்லை. . .
4.11.1964 பிறந்தார்கள் 
மூன்றாம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு..
சேலம் மளாஹிருல் உலூமில் சிறிது காலம் ஓதிவிட்டு நிறைவாக பெங்களூர் ஸபீலுர்ரஷாதில் ஆலிம் படிப்பை முடித்து அங்கேயே காரி பட்டமும் பெற்றார்கள் ..அன்னாரின் திறமையைக் கண்டு அல்லாமா அமீரே ஷரீஅத் அபுஸுஊத் ஹழ்ரத் அவர்கள் தன்னுடைனே தங்க வைத்து கர்நாடகவில் பல பகுதிகளுக்கும் தொளுகை நேரங்களை கணிக்கும் பொறுப்பை கொடுத்தார்கள்....
1984க்கு பிறகு 4வருடங்கள் கேரளா மஞ்சேரியில் உஸ்தாதாக வேலை..
21.2.1988ல் திருமணம்.
நவம்பரில் முதல் குழந்தை.
1993
ல் இரண்டாம் குழந்தை.
1996ல்  ஹஜ் யாத்திரை.
1997ல் மூன்றாம் குழந்தை.
1999
ல் நான்காம் குழந்தை.
2004ல் முதல் மகள் திருமணம்.
2005ல் ஈரோடு அக்ரஹாரத்தில் جامعة طيبةஎன்ற பெண்கள் மதரஸா தொடங்கபட்டது அதற்கு தலைமை தாங்கி பெண்கள் சீர்திருத்தம் அடைய அக்கறையுடன் சிறப்பாக வழிநடத்தி சென்றார்கள்.
1989ஆம்  ஆண்டு முதல் 19ஆண்டுகள் தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் பணிபுரிந்தார்கள்.
15
வருடங்கள் ரமளான் மாதம் தப்லீக் ஜமாத்தில் சில்லா செல்வார்கள்.
அத்துடன் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் பல மஸ்ஜித்கள் மக்தப் மதராஸாக்கள் உருவாவதற்கு ஆலோசனை நல்கி ஏற்பாடு செய்தார்கள்.
மேலும் குடும்ப பிரச்சினைக்காக வரும் தம்பதிகளுக்கு நல் ஆலோசனை வழங்கியும் சமூக விஷயத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்தார்கள்..
மாற்றார்களை இஸ்லாம் ஆக்குவதி்ல் முனைப்பாக இருந்தார்கள்..(எங்கள் வீட்டில் என் தந்தை கலிமா சொல்லி கொடுக்க
இஸ்லாத்தை ஏற்ற பலரை நான் என் சிறுவயதில் கண்டது இன்னமும் நினைவு இருக்கிறது..)
 
மேலும் சில ஆண்டுகள் ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா தலைவராகவும் இருந்து அரும்பணியாற்றினார்கள்.
சிறந்த பேச்சாளர்,, இனிமையான கிராஅத்,,எதிலும் நிதானம் புகழ்ச்சியை சிறிதும் விரும்பமாட்டார்கள்..

எல்லா விஷயங்களிலும் இறைவனின் திருப்தியை மையமாக கொண்டிருந்தது அவர் வாழ்க்கை எதற்கும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.. 
சமுதாய சேவையால் குடும்ப சூழ்நிலை பெரிதும் பாதிக்க பட்டிருந்தது..மிகவும் ஏழ்மையான சூழ்நிலைதான்..ஆடம்பரத்தையே விரும்பமாட்டார்கள் கடைசி வரை அப்படித்தான்.. 
3
அபா  4கைலி 3 பனியன் கிழியும் வரை போடலாம் என்பார்கள்..அத்தா பனியன் கிழிந்து இருக்கிறதென்று நாங்கள் சொன்னால் அது காத்து போகும் ஓட்டைடா எனகூறி சிரிப்பார்கள்..
தன் வாழ்நாள் முழுவதும் தீனுக்காகவும் மார்க்க சேவைக்காகவும் அர்ப்பணித்தவர்.. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பெரும் பணிகளை வெரும் 19ஆண்டுகளில் நிறைவு செய்தார்கள்.. 
இறைவன் தன்  சுவர்க்கலோகத்துக்கு  அழைத்து விட்டான் போலும்
   என் அம்மா,அக்கா,நான் மற்றும் எனது 6,7வயதுடைய தங்கைகளயும் தவிக்க விட்டுவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார்கள்...

إنا لله وإنا إليه راجعون


என்னுயிர் தந்தையே  4ம் பெண் பிள்ளைகள் என்று நினைத்து ஒரு நாளும் நீங்கள் கவலை பட்டதே இல்லை..அல்லாஹ் எனக்கு தந்த பரக்கத் என்பீர்கள்.. 
எங்களுடன் மிகவும் பாசமாக நடந்து கொள்வீர்கள்..
நோயுற்று கடைசி தருணத்தில் இருக்கும்போது கூட என்  பிள்ளைகளை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு செல்கிறேன் என் ரப்பு பார்த்து கொள்வான் நீ கவலை படாதே என்று அம்மாவிற்கு ஆறுதல் கூறினீர்கள்... 
உண்மைதான் அத்தா எந்த சொந்தங்களுடய உதவியோ தயவோ எங்களுக்கு இல்லை,, அல்லாஹ்வின் மாபெரும் கிருபை ஒவ்வொரு நாளும் நிம்மதியாக கழிகிறது الحمدلله..
பிரிவின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றாலும் இறை நியதியை ஏற்று பொறுமையுடன் இருக்கிறோம்.. அத்தா நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும் உங்கள் உபதேசங்கள் போதும் மார்க்க முறைப்படி நடந்து கொள்வோம் انشالله..
இந்த நாகரீக குழப்பவாதிகள் தோன்றிய பின்னர் சமுதாயத்திலும் கொள்கை ரீதியிலும் பிளவை ஏற்படுத்தி நாங்கள் தான் இஸ்லாத்தை தூய வடிவில் காட்டுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு அண்ணல் நபி(ஸல்)அவர்களும் ஸஹாபாக்களும் கட்டி காத்து வந்த இஸ்லாத்தின் ஒற்றுமை தற்போது தகர்ந்து போய் விட்ட  கவலைக்குரிய நிலையை நீங்கள் பார்த்தால் மிகவும் வேதனை படுவீர்கள் என்றுதான் அல்லாஹ் உங்களை 44வயதிலேயே தன்னுடைன் அழைத்து கொண்டான்..
தாவூதிய்யாவுக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை உங்கள் மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஆலிம்களின் மரணம்தான். உங்கள் நெருங்கிய நண்பர் நஸ்ருல்லாஹ் ஹஜ்ரத்,,அப்துல் காதர் ஹஜ்ரத்,,சித்தீக் ஹஜ்ரத்,, நம் பக்கத்து வீட்டுக்காரர் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள்...
அல்லாஹ் உங்கள் அனைவரின் மார்க்க சேவைகளை ஏற்றுفردوس எனும் உயர்வான சொர்க்கத்தை அளிப்பானாக...امين
எனதுயிர் தந்தையே சிரித்த முகத்துடன் மரணித்த உங்கள்
முகம் இப்போது நினைவுக்கு வருகிறது. . .
சுவனத்தில் ஓய்வெடுக்க இறைவன் உங்களை அன்போடு அழைத்து கொண்டான் சுகமாக ஓய்வெடுங்கள் . . .
அல்லாஹ் உங்களின் இக்லாஸான சேவையை அங்கீகரித்து உயர்வான அந்தஸ்த்துக்களை மறுமை நாளில் வழங்கிடுவானாக... امين 
             
கண்ணீரோடும் 
பிரார்த்தனைகளோடும் உங்கள் பிரிய மகள் ஹபீபா...........
இப்பதிவை படிப்பவர்கள்
படிப்பவர்கள் உங்களால் முடிந்தால் என் அத்தாவிற்காக குர்ஆன் ஓதி யாஸீன் ஓதி இன்று ஹதியா செய்யுங்கள்.. உங்கள் நல் அமல்களின் நன்மைகள் ஸதக்கத்துல் ஜாரியாவாக என் தந்தையை சென்றடையட்டும்...




சனி, 20 பிப்ரவரி, 2016

முன்மாதிரி முதர்ரிஸ்

بسم الله الرحمن الرحيم

முன்மாதிரி முதர்ரிஸ்


 ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நிறைவு செய்ய முடியாத குறையாகும். அவர் தம் மரணத்தின் காரணமாக ஒளியிழந்த நட்சத்திரமாக ஆகிவிடுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தை விட ஒரு கோத்திரத்தார் அனைவரின் மரணம் மிகச் சாதாரணமானது  என நபி (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள். நூல்: பைஹகீ  [முன்தகபுல் அஹாதீஸ்]

ஆலிம்களை உருவாக்கும் அரபிக்கல்லூரி பேராசிரியரை முதர்ரிஸ் என்போம்.
தரமான ஆலிம்களை உருவாக்குவதில் முதர்ரிஸின் பங்கு மகத்தானனது.
அந்த வகையில் தன் பொருப்புணர்ந்து செயலாற்றுவதில் என் மனதில் தனியொரு இடம் பிடித்த பெருந்தகை, சமீபத்தில் காலஞ்சென்ற அருமை ஆசான், உயர்வு நிறைந்த உஸ்தாத், மௌலானா, அல்-ஹாஜ், P.M ஜியாவுத்தீன் தாவூதி, ஃபாஜில் பாகவி, ஹள்ரத் அவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹள்ரத் அவர்களுக்கு மங்ஃபிரத் செய்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் தங்க வைப்பானாக!

தனித்தன்மை

v அவர்கள் ஒரு பாடத்தை  பொறுப்பெடுத்து நடத்தி, தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிர்ணய அளவை எட்டமுடியாமல் போய் விடுமாயின், அளவு நிர்ணயம் குறித்து மறு பரிசீலனை செய்ய வைக்கும் அளவுக்கு பாடத்திட்டத்திற்கு அளவுகோலாக விளங்கியவர் ஹளரத் பெருந்தகை அவர்கள்.
v முறையான [முதாலஆ] முன் தயாரிப்பு, வகுப்பறைக்கு சரியான நேரத்தில் ஆஜராகி பாடம் நடத்த ஆரம்பித்து, உரிய நேரத்தில் முடித்து விடல்.
v தான் ஏற்றிருக்கும் பாடங்களை அது எந்த கலையானாலும் நிதானமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும்  நடத்தி, பதற்றமின்றி இலக்கை எட்டுதல்.
v மத்ரஸா நிர்வாகம் தரும் வருடத்திற்கான பாட அளவுக்கு ஏற்றார்போல் சுயமாக தினசரி பாட அளவை திட்டமிடல்.
v அவசியமான சேவையாகிய த்ரீஸுக்கு இடையூறு அளிக்கும் வெளி அலுவல்களை தவிர்த்தல்.
v மாணவர்களுடனான தொடர்பை மிகச்சரியாக வரையறுத்தல்.
v மாணவர்களின் பாடங்களையோ சுய தேவைகளையோ பாதிக்கும் வகையில் வேலை வாங்குவதை தவிர்த்தல்.  
ஹள்ரத் பெருந்தகையிடம் ஆறு வருடஙகளாக எட்டு கிதாப்களை ஒன்பது வகுப்புகளில் பயின்ற மாணவன், ஏழு வருடங்களுக்கு மேலாக ஹள்ரத் பெருந்தகையுடன் முதர்ரிஸாகவும் பணி புரிந்தவன் என்ற முறையில்  நான் கண்ட தனித்தன்மைகளே இவை.
மனசாட்சியுள்ள எந்த மாணவரும் இதை மிகையாக கருத மாட்டார் என்ற பணிவு கலந்த உத்திரவாதத்துடன்......


எஸ். முஹம்மது யூஸுப் தாவூதி, ஃபாஜில் ரஷாதி, வடகரை.

உதாரணம் காட்டலுக்கு ஓர் உதாரணம்

بسم الله الرحمن الرحيم
உதாரணம் காட்டலுக்கு ஓர் உதாரணம்


ஆலிம்கள் கடலிலும், தரையிலும் வழி தெரிந்து கொள்ள இருளில் உதவும் நட்சத்திரங்களுக்கு ஒப்பாவர். நட்சத்திரங்கள் ஒளியிழந்து விடுமாயின் நடந்து செல்வோர் வழி தவறிவிடலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: அஹ்மத்
சமீபத்தில் மறைந்த மாமேதை, ஷைகுல் ஹதீஸ், மவ்லானா, அல்ஹாஜ், சித்தீக் அலி ஹள்ரத் பாகவி, ஃபாஜில் தேவ்பந்த் ஹள்ரத் அவர்களின் மறைவு நம் யாவர்க்கும் துயரமான செய்தியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹள்ரத் அவர்களுக்கு மங்ஃபிரத் செய்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் தங்க வைக்க போதுமானவன்.
ஹள்ரத் பெருந்தகை அவர்களிடம்  ஒரு மாணவராய் நான் கண்ட தனித்தன்மைகள்.
சிக்கலான விஷயத்தையும் உதாரணங்களின் மூலம் எளிதாக விளக்குல்.

அவற்றில் என் ஞாபகத்தில் உள்ள சில...

இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன், நம்மீது காலம் கடக்கும் ஆனால் அல்லாஹ்வின் மீது காலம் கடக்காது என்பது கருத்து
உ-ம் ஆற்றோரம் நாம் இருக்கிறோம் என்று வைத்துக்கொண்டால் மீன்களின் மீது தண்ணீர் கடக்கிறது ஆனால் நம்மீது  தண்ணீர் கடப்பதில்லை என்பதைப்போல....

மறுமையில் ஈமான் இருந்தால்தான் அல்லாஹ்விடம் மதிப்பு ஈமான் இல்லாதவர்களை நரக குழியில் போட்டு விடுவான் என்பது கருத்து.

உ-ம் பிறக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்போம் உயிரில்லாமல் பிறந்த குழந்தைக்கு நம்மிடம் எந்த மதிப்பும் இல்லை குழி தோண்டி புதைத்து விடுவோமல்லவா...?

நல்லவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று நாம் எல்லோரும் நம்புகிறோம்.

அது இப்போதே தயார் செய்ப்பட்டு விட்டதா அல்லது இனிமேல்தான் தயார் செய்யப்படுமா என்றொரு விவாதம் அகாயித் [கொள்கையியல்] நூல்களில் வரும்

அதில் சுன்னத் வல் ஜமாஅத்தினராகிய நம்முடைய கொள்கை சொர்க்கம் இப்பொழுதே உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது என்பதுதான். அதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் ஆதாரங்களை கூறிய பின் ஒரு உதாரணமும் கூறுவார்கள்.

சுவனம் என்பது நல்லவர்களுக்கான விருந்து
ஒருவரை வீட்டுக்கு வாருங்கள்,  சாப்பிட்டு வருவோம் என விருந்துக்கு அழைக்கிறோம் என்றால் உணவு தயார் நிலையில் இருந்து அழைப்பதுதான் பொருத்தமாகும் வாருங்கள் என்று அழைத்துச் சென்று பிறகு சமைப்பது பொருத்தமாகாது என்பதைப்போல சொர்க்கத்தின் பால் அழைத்துவிட்ட இறைவன் இனிமேல்தான் சொர்கத்தை படைப்பான் எனக்கூறுவது பொருத்தமாகாது.

ஒரு மனிதன் தான் மட்டும் நன்மை செய்பவனாக இருத்தல் போதாது மாறாக மற்றவர்களையும் நற்காரியத்தின் பால் தூண்டுபவனாக இருக்க வேண்டும் என்பது கருத்து.

உ-ம் அணைக்கட்டிலிருந்து வெளியேரும் தண்ணீர் தானும் இயங்கி வேறொன்றையும் இயக்குவதன் பலனாக மின்சாரம் தயாராகி அதன் மூலம் வெகுஜனங்கள் வெளிச்சம் பெருகின்றனர் இன்ன பல பலன்களை அடைகின்றனர்.
[இது பவானி சாகர் அணையில் வைத்து மாணவர்களிடம் சொன்ன படிப்பினைக்குறிய விஷயம்] 

Ø  அதட்டிக்கொள்ளாமல் பாடம் நடத்துதல்.
Ø  மாணவரக்ளிடம் வெளிப்படும் திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்துதல்.
Ø  எளிய நடையில் மக்களுக்கு உபதேசம் செய்தல்
Ø  முன்வரிசையில் நின்று இமாம் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுதல்
Ø  நஃபிலான வணக்கங்களில் அதிக ஈடுபாடு கொள்ளுதல்
Ø  சிரமத்திலிருப்பவர் உதவி கேட்டு வந்தால் உதவுதல்
Ø  ஏழை எளிய மக்களுடனும் இனிதாக பழகுதல்
Ø  நகர் மற்றும் கிராமப்புறங்களில் முஸ்லிம் மஹல்லாக்களை உருவாக்கி இறையில்லம் பெருகிடவும் இஸ்லாமிய செழுமை உண்டாகவும் பாடுபடுதல்.
Ø  பல்வேறு மஹல்லா நிர்வாகிகளுக்கு நல்ல பல ஆலோசனைகள் வழங்குதல்.
Ø  புதிதாக இஸ்லாத்தில் இணைய விரும்பியவருக்கு ஆர்வமாக வழிகாட்டுதல்.

இத்தனை தனித்தன்மைகளை தன்னுள் கொண்டிருந்த ஹள்ரத் அவர்களின் மறைவு நம் தாவூதிய்யாவுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்ப்பட்ட பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.
பணிவுடன்......

-          எஸ். முஹம்மது யூஸுப் தாவூதி, ஃபாஜில் ரஷாதி, வடகரை.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

வலது பக்கம் அது வெற்றியின் பக்கம்

بسم الله الرحمن الرحيم
வலது பக்கம் அது வெற்றியின் பக்கம்

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا الانشقاق: 9
168 - عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ»صحيح البخاري
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிஃராஜ் நிகழ்வு பற்றிய ஒரு நீண்ட அறிவிப்பில் ஒரு தகவல்.......
3342 - ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ، فَلَمَّا جَاءَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ: افْتَحْ، قَالَ مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ قَالَ: مَعَكَ أَحَدٌ قَالَ: مَعِي مُحَمَّدٌ، قَالَ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ فَافْتَحْ، فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا إِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا آدَمُ وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ صحيح البخاري
3342. அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்" என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார்.
(பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!" என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள் ………….. ஸஹீஹுல் புஹாரி

        நாம் ஒவ்வொரு நாளும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் அவை வணக்கம் என்ற முறையிலும் இருக்கிறது வழக்கம் என்ற முறையிலும் இருக்கிறது. சேவை முறையில் செய்யப்படுபவையாகவும் இருக்கிறது. சுயதேவை என்ற அடிப்படையில் செய்யப்படுபவையும் இருக்கிறது.

        எதுவாக இருப்பினும் அவற்றில் அதிகமான காரியங்களில் வலது பக்கத்துக்கு அல்லது வலது உறுப்புக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தரப்படுகிறது.
         காலை தூங்கி எழுந்து முதல் இரவு தூங்கச்செல்லும் வரை அல்லது பிறந்தது முதல் இறக்கும் வரை இல்லை இறந்த பின்னரும் கூட வலது பக்கத்துக்கு அல்லது வலது உறுப்புக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தரப்படுகிறது.
عَنْ حُسَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وُلِدَ لَهُ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ» مسند أبي يعلى الموصلي

167 - عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُنَّ فِي غَسْلِ ابْنَتِهِ: «ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ
الوُضُوءِ مِنْهَا»صحيح البخاري

உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலான நடவடிக்கைகளில் வலது பக்கத்துக்கு அல்லது வலது உறுப்புக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தரப்படுகிறது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مِنًى، فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا، ثُمَّ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ، ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الْأَيْمَنِ، ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ جَعَلَ يُعْطِيهِ النَّاسَ» صحيح مسلم

5855 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ» صحيح البخاري
உண்ணுதல், பருகுதல், உடை உடுத்துதல், உளு செய்தல்,  கொடுக்குதல், வாங்குதல் என அனைத்து உபயோகங்களும் வலது பக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டுமென மார்க்கம் அறிவுறுத்துகிறது.

168 - عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ»صحيح البخاري

5376 - عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ صحيح البخاري

عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِمَالِهِ، فَقَالَ: «كُلْ بِيَمِينِكَ» ، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «لَا اسْتَطَعْتَ» ، مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ، قَالَ: فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ صحيح مسلم
4110. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. 
பங்கு வைப்பதிலும் வலது பக்கமாக...
5620 - عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ، وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ: «أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ؟» فَقَالَ الغُلاَمُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا، قَالَ: فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ صحيح البخاري
5620. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், '(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான்விட்டுத் தரமாட்டேன்' என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.
ஏன்?
1 ஷைத்தானுக்கு மாறு செய்வது
عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ» ، صحيح مسلم
4108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِيَأْكُلْ أَحَدُكُمْ بِيَمِينِهِ، وَلْيَشْرَبْ بِيَمِينِهِ، وَلْيَأْخُذْ بِيَمِينِهِ، وَلْيُعْطِ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ، وَيُعْطِي بِشِمَالِهِ، وَيَأْخُذُ بِشِمَالِهِ» سنن ابن ماجه

2 மக்களுடன் மரியாதையான நடத்தையை மேற்கொள்வது
ஏனென்றால் வலது கையால் கொடுப்பது திருப்தியின் அடையாளம் இடது கையால் கொடுப்பது அதிருப்தியின் அடையாளம்
உ – ம்  பள்ளியில் நுழைவது கழிப்பிடத்தில் நுழைவது

3 வலது பக்கத்தை விரும்பி, வலது பக்கமாக கையாண்டு அதன் பலனாக இறைவன் வலது கையில் பட்டோலை பெறும் கூட்டத்தில் சேர்த்தருள வேண்டும் என்ற நற்குறியாகவும் எடுத்துக்கொள்வது.
 வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். [அரபியிலும் பரக்கத் என்று பொருள்.]
http://www.pannaiyar.com/2013/08/page/2/
https://ta.wikipedia.org/wiki/%

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا الانشقاق:
எதை பழக்கத்தில் கொள்கிறோமோ அதுவே முடிவாகவும் அமைந்து விடுவதுண்டு