சனி, 20 பிப்ரவரி, 2016

முன்மாதிரி முதர்ரிஸ்

بسم الله الرحمن الرحيم

முன்மாதிரி முதர்ரிஸ்


 ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நிறைவு செய்ய முடியாத குறையாகும். அவர் தம் மரணத்தின் காரணமாக ஒளியிழந்த நட்சத்திரமாக ஆகிவிடுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தை விட ஒரு கோத்திரத்தார் அனைவரின் மரணம் மிகச் சாதாரணமானது  என நபி (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள். நூல்: பைஹகீ  [முன்தகபுல் அஹாதீஸ்]

ஆலிம்களை உருவாக்கும் அரபிக்கல்லூரி பேராசிரியரை முதர்ரிஸ் என்போம்.
தரமான ஆலிம்களை உருவாக்குவதில் முதர்ரிஸின் பங்கு மகத்தானனது.
அந்த வகையில் தன் பொருப்புணர்ந்து செயலாற்றுவதில் என் மனதில் தனியொரு இடம் பிடித்த பெருந்தகை, சமீபத்தில் காலஞ்சென்ற அருமை ஆசான், உயர்வு நிறைந்த உஸ்தாத், மௌலானா, அல்-ஹாஜ், P.M ஜியாவுத்தீன் தாவூதி, ஃபாஜில் பாகவி, ஹள்ரத் அவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹள்ரத் அவர்களுக்கு மங்ஃபிரத் செய்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் தங்க வைப்பானாக!

தனித்தன்மை

v அவர்கள் ஒரு பாடத்தை  பொறுப்பெடுத்து நடத்தி, தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிர்ணய அளவை எட்டமுடியாமல் போய் விடுமாயின், அளவு நிர்ணயம் குறித்து மறு பரிசீலனை செய்ய வைக்கும் அளவுக்கு பாடத்திட்டத்திற்கு அளவுகோலாக விளங்கியவர் ஹளரத் பெருந்தகை அவர்கள்.
v முறையான [முதாலஆ] முன் தயாரிப்பு, வகுப்பறைக்கு சரியான நேரத்தில் ஆஜராகி பாடம் நடத்த ஆரம்பித்து, உரிய நேரத்தில் முடித்து விடல்.
v தான் ஏற்றிருக்கும் பாடங்களை அது எந்த கலையானாலும் நிதானமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும்  நடத்தி, பதற்றமின்றி இலக்கை எட்டுதல்.
v மத்ரஸா நிர்வாகம் தரும் வருடத்திற்கான பாட அளவுக்கு ஏற்றார்போல் சுயமாக தினசரி பாட அளவை திட்டமிடல்.
v அவசியமான சேவையாகிய த்ரீஸுக்கு இடையூறு அளிக்கும் வெளி அலுவல்களை தவிர்த்தல்.
v மாணவர்களுடனான தொடர்பை மிகச்சரியாக வரையறுத்தல்.
v மாணவர்களின் பாடங்களையோ சுய தேவைகளையோ பாதிக்கும் வகையில் வேலை வாங்குவதை தவிர்த்தல்.  
ஹள்ரத் பெருந்தகையிடம் ஆறு வருடஙகளாக எட்டு கிதாப்களை ஒன்பது வகுப்புகளில் பயின்ற மாணவன், ஏழு வருடங்களுக்கு மேலாக ஹள்ரத் பெருந்தகையுடன் முதர்ரிஸாகவும் பணி புரிந்தவன் என்ற முறையில்  நான் கண்ட தனித்தன்மைகளே இவை.
மனசாட்சியுள்ள எந்த மாணவரும் இதை மிகையாக கருத மாட்டார் என்ற பணிவு கலந்த உத்திரவாதத்துடன்......


எஸ். முஹம்மது யூஸுப் தாவூதி, ஃபாஜில் ரஷாதி, வடகரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக