வியாழன், 26 மே, 2016

செவ்வாய், 10 மே, 2016

பலவீனர்களின் பலம்

بسم الله الرحمن الرحيم
பலவீனர்களின் பலம்




وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ - الكهف: 28
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رُبَّ أَشْعَثَ، مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ» صحيح مسلم
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒரு தந்தையின் மக்கள் என்பது எதார்த்தம் என்றாலும் எல்லோரும் ஒரே தரத்தில் ஒரே தகுதியல் இல்லை மனித படைப்பு பல வகையிலும் பாகுபடுத்தி பார்க்கப்படுகிறது. பலசாலி - பலவீனர், சாதைனையாளர் – சாமானியர், பட்டதாரி – பாமரர், வசதியானவர் – வசதியற்றவர், செல்வாக்கு மிக்கவர் – செல்லா காசு என்று பல அடுக்குகளில் பாகுபடுத்தி பார்க்கிறோம்.
மனித சமுதாயம் இத்தகைய பாகுபடுத்தலுக்கு உட்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்றாலும் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கீழ் மட்டத்தில் இருப்பவர்களைப்பற்றி எந்த மதிப்பும் அற்றவர்கள் என்று கருதுவதும் அவர்களை அவமதிப்பதும் வேறு ஏதேனும் ஒருவகையில் அவர் தன்னை விட சிறந்தவராக இருக்கலாம் என்று எண்ண தவறுவதும் ஏற்க முடியாதது.

Ø தங்கத்தை விட தகரம் தாழ்ந்ததுதான் அதற்காக தகரத்தை பயன் படுத்தவேண்டிய இடத்தில் தங்கத்தை பயன்டுத்த முடியாது.

Ø கடப்பாறையை விட ஊசி பலவீனமானதூதான் ஆனால் ஊசியால் செய்ய வேண்டிய வேலையை கடப்பாறையால் செய்ய முடியாது.

Ø பாலை விட தண்ணீர் மட்டமானதுதான் அதற்காக தண்ணீரை பயன் படுத்தவேண்டிய இடத்தில் பாலை பயன்படுத்த முடியாது.


அதுபோல மனிதர்களில் ஒவ்வொரு தரப்பினரிடமும் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கும் என்பதால் யாரையும் ஏளனமாக கருதக்கூடாது.

விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். வழியில், காரின் டயர் பஞ்சர் ஆகி விட்டது.. அந்த பகுதியில் பஞ்சர் ஒட்டும் கடை ஏதும் இல்லை. எனவே, அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்களையும் கழட்டி விட்டு, “ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டிய போது, கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள், அருகிலுள்ள ஒரு சாக்கடை குட்டையில், சிதறி விழுந்து விட்டது.. 

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார், விஞ்ஞானி. அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு?” என்று கேட்டான். விஞ்ஞானியோ, “இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது ?” என்று சிந்தித்த போதும், “இந்த சாக்கடை குட்டையில் இறங்கி, சாக்கடையில் விழுந்துள்ள போல்ட்களை எடுத்துத்தா., உனக்கு பணம் தருகிறேன்என்று கூறினார்.
உடனே, அந்த வழிப்போக்கன், “ஒ.. இது தான் உங்கள் பிரச்சினையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி போல்ட்களை எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை.. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறதுஎன்று கூறினான்.
உடனே விஞ்ஞானி,” என்ன சுலப வழி?” என்று கேட்டார். உடனே, அந்த சாதாரண மனிதன், மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு, மெதுவாக காரை ஓட்டிச்செல்லுங்கள்., அங்கு 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள்என்றாரே பார்க்கலாம்.

நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதேஎன்று வேதனைப்பட்டார், அந்த விஞ்ஞானி!!!
யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்பதே, இதிலுள்ள நீதி!!!
வெளித்தோற்றத்தை வைத்து மட்டும் ஒருவரை நாம் தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது.

عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ، وَقَالَ: «إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ» مسلم

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رُبَّ أَشْعَثَ، مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ» صحيح مسلم
5116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(
புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம்

5091. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் 
ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழைமனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'  புஹாரீ

عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ: كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ "- صحيح البخاري
6657. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப்போன்றே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர். புஹாரீ
3241. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். 
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். புஹாரீ
ஏனெனில் சுவனத்தில் சேர்க்கும் காரியங்களில் முன்னணியில் இருப்பவர்கள் ஏழைகளே.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ - الكهف: 28
நூஹ் நபியின் சமுதாயம் சொன்ன வார்த்தை..
قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ - الشعراء: 111

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ابْغُونِي ضُعَفَاءَكُمْ، فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ»سنن الترمذي
 اي اطلبوا رضاي في احسان الفقراء والضعفاء


தன் திறமையை வைத்து மற்றவர்களை குறைவாக எடை போடக்கூடாது.


2896 - عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ»- صحيح البخاري

[تعليق مصطفى البغا]
2739 (3/1061) -[ش (رأى) ظن. (فضلا) زيادة منزلة بسبب شجاعته وغناه ونحو ذلك. (بضعفائكم) ببركتهم ودعائهم لصفاء ضمائرهم وقلة تعلقهم بزخرف الدنيا فيغلب عليهم الإخلاص في العبادة ويستجاب دعاؤهم]
2896. முஸ்அப் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 
(
என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், 'உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது" என்று கூறினார்கள். புஹாரீ
இதே நிகழ்வு குறித்து இன்னொரு அறிவிப்பில் .....

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ ظَنَّ أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَنْصُرُ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ بِضَعِيفِهَا، بِدَعْوَتِهِمْ وَصَلَاتِهِمْ وَإِخْلَاصِهِمْ»- سنن النسائي 


பொது காரியத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் உயர் மட்டத்தில் இருப்பவர்களை மட்டும் கவனத்தில் கொண்டு நலிந்தவர்களை புறக்கணித்தல் கூடாது.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَلِيَ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ شَيْئًا فَاحْتَجَبَ عَنْ ضَعَفَةِ الْمُسْلِمِينَ احْتَجَبَ اللهُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ»-  المعجم الكبير للطبراني (20 / 152

5177 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ كَانَ يَقُولُ: «شَرُّ الطَّعَامِ طَعَامُ الوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»- صحيح البخاري
5177. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 
ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.  புஹாரீ