வியாழன், 20 நவம்பர், 2014

நாணம் இழப்பதுதான் நாகரிகமா?



நாணம் இழப்பதுதான் நாகரிகமா?


إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (النحل 90)
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا، وَخُلُقُ الْإِسْلَامِ الْحَيَاءُ»  ابن ماجه 4181
·       மிகச்சிறந்த மனிதப் பண்பாட்டை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்.
·       மனிதனையும் மற்ற படைப்புகளையும் படைத்து பரிபாலித்து நிர்வாகம் செய்யக்கூடியவனான அல்லாஹ் அமைத்துத் தந்த மார்க்கம் இஸ்லாம்.
·       ஒரு பொருள் எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பது அதை தயாரித்தவனுக்குத்தான் நன்றாக தெரியும் அவன் கூறும் முறைப்படி பயன்படுத்துவதுதான் அந்த பொருளுக்கு பாதுகாப்பானது அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற போதுமானதுமாகும்
·       படைப்புகளில்  மனிதன் மரியாதை மிக்கவன் என்று கூறும் இஸ்லாம் அவன் மரியாதை கெடாமல் இருக்க பல சிறந்த பண்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் போதிக்கிறது இஸ்லாம். அவைகளைப் பேணுமளவு மனிதனுக்கு - மனித இனத்துக்கு மரியாதை இருக்கும் அதை தவறும்போது மரியாதை கெடும்.
·       இஸ்லாம் வலியுறுத்தும் பண்புகளில் மிக மிக முக்கியமானது வெட்கம், நாணம் இழக்காமல் வாழ்வது.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (النحل 90)
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا، وَخُلُقُ الْإِسْلَامِ الْحَيَاءُ»  ابن ماجه 4181
·       நாணம் பேணுவதில் மனிதன் அழகு பெறுகிறான். நாணம் இழப்பதில் மனிதன்அசிங்கப்படுகிறான்.
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كَانَ الفُحْشُ فِي شَيْءٍ إِلَّا شَانَهُ، وَمَا كَانَ الحَيَاءُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ الترمذي 1974
·       பெண்களிடம் ஏற்படும் இயற்கையான வெட்க உணர்வு அவர்களுக்கு மேலும் அழகூட்டி மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும் நாணத்தால் ஒதுங்கி நிற்கும் பெண்ணைக் காணும் எந்த ஒரு நல்ல ஆண்மகனும் அந்த பெண்ணிற்கு மதிப்பளிக்காமல் போகமாட்டான் என்பதே உண்மை. 
ஒரு கவிஞன் கூறுகிறான்
வெட்க்கித் தலை குனியுங்கள் 
வெட்கமறியா மலர்களே ! 
எத்துனை அழகு தெரியுமா 
வெட்கத்தில் என் சகோதரி ! 
·       எனவேதான் மனித வாழ்க்கைக்கு முன்மாதிரியாக வந்த நம் தலைவர் முஹம்மது நபி ஸல் அவர்கள் நாணம் பேணினார்கள் நாணம் பேணும்படி உபதேசிக்கவும் செய்தார்கள்.
عَنْ مَوْلَى أَنَسٍ - قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي عُتْبَةَ - سَمِعْتُ أَبَا سَعِيدٍ، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنَ العَذْرَاءِ فِي خِدْرِهَا» البخاري 6119

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அபீ உத்பா(ரஹ்) அறிவித்தார். புஹாரி6119. . 
قَالَ أَبُو أَيُّوبَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: التَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ، وَالْحَيَاءُ احمد
                               இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
மூஸா(அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; 'இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்" என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். 'கல்லே என் துணி! கல்லே என் துணி!' என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள். 
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: 
அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான், 'இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்" என்றும் (திருக்குர்ஆன் 33:69) இறைவசனம் குறிக்கிறது.  3404.  புஹாரி
عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ بِلَا إِزَارٍ، فَصَعَدَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ» ابوداود 4012

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ» البخاري 9
'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 9.  
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ» البخاري 24
. 'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புஹாரி 24 
عَنْ أَبِي السَّوَّارِ العَدَوِيِّ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الحَيَاءُ لاَ يَأْتِي إِلَّا بِخَيْرٍ» فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ: " مَكْتُوبٌ فِي الحِكْمَةِ: إِنَّ مِنَ الحَيَاءِ وَقَارًا، وَإِنَّ مِنَ الحَيَاءِ سَكِينَةً " فَقَالَ لَهُ عِمْرَانُ: «أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ» البخاري 6117
·       நாணம் தவறுவது பற்றி நபி ஸல் அவர்களின் கடுமையான எச்சரிக்கை
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قِلَّةُ الْحَيَاءِ كُفْرٌ» مصنف ابن ابي شيبة
عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى: إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ " البخاري 6120
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பதும். 
என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். புஹாரி 6120. 
وقال ابن حجر: الحَياء: خُلُق يبعث صاحبه على اجتناب القبيح، ويمنع مِن التقصير في حقِّ ذي الحقِّ
( أنواع الحياء ) 
قال أبو الحسن الماوردي في كتابه " أدب الدنيا والدين ":- 
والثاني:الحياء في الإنسان قد يكون من ثلاثة أوجه: أحدها: حياؤه من الله تعالى. والثاني : حياؤه من الناس . والثالث: حياؤه من نفسه. 
فأما حياؤه من الله تعالى فيكون بامتثال أوامره والكف عن زواجره.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَحْيُوا مِنَ اللَّهِ حَقَّ الحَيَاءِ» . قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَسْتَحْيِي وَالحَمْدُ لِلَّهِ، قَالَ: «لَيْسَ ذَاكَ، وَلَكِنَّ الِاسْتِحْيَاءَ مِنَ اللَّهِ حَقَّ الحَيَاءِ أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى، وَالبَطْنَ وَمَا حَوَى، وَلْتَذْكُرِ المَوْتَ وَالبِلَى، وَمَنْ أَرَادَ الآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ اسْتَحْيَا مِنَ اللَّهِ حَقَّ الحَيَاءِ» الترمذي 2458
وأما حياؤه من الناس: فيكون بكف الأذى وترك المجاهرة بالقبيح,
 وقد روى عن النبي صلى الله عليه وسلم أنه قال: " من تقوى الله اتقاء الناس " وروى أن حذيفة بن اليمان أتى الجمعة فوجد الناس قد انصرفوا, فتنكب الطريق عن الناس, وقال: لا خير فيمن لا يستحي من الناس. 

وأما حياؤه من نفسه, فيكون بالعفة وصيانة الخلوات
இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில்  மக்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.
இஸ்லாத்தின் தனித் தன்மைகளில் ஒன்றான வெட்க உணர்வு தற்போது முஸ்லிம் குடும்பங்களிலிருந்தும் கொஞ்ஞம் கொஞ்ஞமாக விடைவெறத் துவங்கி விட்டது சில குடும்பங்களில் முழுக்க தொலைந்து விட்டது.
ஊடகங்களினால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவும் அதிவேக பாதிப்பும்  இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது.
அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவதற்குப் பெயர் நாகரிகமாம்.?
பிறமனிதனின் உணர்வை கிள்ளிப்பார்க்கும் விதம் இருவர் ஆபாசமாக நடந்து கொள்வது தனி மனித சுதந்திரமாம். அரைகுறை ஆடையில் அநாகரிகமாக திரிவதற்குகுப் பெயர் முற்போக்காம்...?
 

الجمع والترتيب - محمد يوسف الداودي
 ودكري