வியாழன், 31 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 12

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 12

அந்த வட்டார உலமாக்கள் ஏற்பாட்டில், பள்ளிவாசல் வளாகத்தில், சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது  "மஸாயில் மஜ்லிஸ்"

அனுபவமும் ஆழ்ந்த ஞானமும் மிகுந்த ஆலிம் ஒருவர் (மார்க்கம் தொடர்பான) மக்களின் கேள்விகளுக்கு அழகாகவும் ஆணித்தரமாகவும் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

மஜ்லிஸ் நிறைவை எட்டும் தருணம் ஒருவர் எழுந்து எனக்கு சில கேள்விகள் உண்டு அதற்கு மட்டும் பதிலளித்து (முடித்து) விடுங்கள்! என்றார்.

சரி சொல்லுங்கள் என்று பொறுமையாக கேட்டு தெளிவாக பதிலுரைத்தார் அந்த ஆலிம்.

இதோ அந்தக் கேள்விகளும் பதில்களும்

 கேள்வி:- தொழுகைக்கு வரும்போது ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று வச்சுக்கோங்க!  இமாம் ருகூஃவுக்குச் சென்று விட்டார் அப்ப நாம ஜமாஅத்தில் இணையலாமா? இணைந்தால் அந்த ரக்அத் கணக்கில் சேருமா?

அப்படி இணையும்போது தக்பீர் கூறி கைகளைக் கட்டி, அவூது, பிஸ்மி ஓதிவிட்டுத் தான் நாம் ருகூஃ செய்யனுமா?

அதேபோல இமாம் ஸஜ்தவில் இருக்கும் போது வருபவர் அப்போதே ஜமாஅத் தொழுகையில் இணையலாமா?

 பதில்:- இமாம் ருகூவில் இருக்கும் போதும் ஜமாஅத்தில் இணையலாம். இமாம் தலையை உயர்த்தும் முன்பே இமாமுடன் (ஒரு வினாடியேனும்)  ருகூஃவை அடைந்து விட்டார் என்றால் அந்த ரக்அத்தை அடைந்து விட்டதாக கருத வேண்டும்.


இமாம் ருகூஃவில் இருக்கும் போது வருபவர் தக்பீர் தஹ்ரீமா சொல்லி நிற்கிறார், அதற்குள் இமாம் தலையை உயர்த்தி விட்டாலோ அல்லது இவர் ருகூஃவிற்கு குனியும்போது இமாம் தலையை உயர்த்தி விட்டாலோ அந்த ரக்அத்தை அடைந்தவராக ஆகமாட்டார்.

இமாம் ருகூஃவில் இருக்கும் போது ஜமாஅத் தொழுகையில் சேருபவர் தக்பீர் தஹ்ரீமா சொல்லி சிறிது நேரம் கூட நிற்காமல், கைகளையும் கட்டாமல் "அவூது", "பிஸ்மி"  ஓதாமல் (அடுத்த தக்கபீர் சொல்லிக்கொண்டே) ருகூஃவுக்கு சென்று விடவேண்டும்.

நின்று கை கட்டிய பின் தான் ருகூஃ செய்யனும் என்று எண்ணுவது தவறாகும்.

ஏனென்றால் தக்பீர் தஹ்ரீமாவுக்காக நின்றதே அந்த ரக்அத்தின் (கியாம்) நிலை நிற்க்குதலுக்கு போதுமாகிவிடும்.

இமாம் ஸஜ்தவில் இருக்கும் போதும் (தாமதமாக) வருபவர் ஜமாஅத்தில் இணையலாம்.

 (சிலர் நினைப்பது போல) இமாம் எழுந்திரிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஆனால் அந்த ரக்அத்தை அவர் அடைந்தவராக ஆகமாட்டார்.

 

سنن أبي داود (1 / 236):

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا، وَلَا تَعُدُّوهَا شَيْئًا، وَمَنْ أَدْرَكَ الرَّكْعَةَ، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

 وفي إعلاء السنن: قال ابن عبد البر في شرح الاستذکار: قال: جمہور الفقہاء: من أدرک الإمام راکعًا، فکبر ورَکع وأمکن یدیه من رکبتیه قبل أن یرفع الإمام رأسه فقد أدرک الرکعة ومن لم یدرک ذلک فقد فاتته الرکعة، ومن فاتته الرکعة فقد فاتته السجدة أي لا یعتد بھا․ (إعلاء السنن، 305/4)

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 489):

(فَيَأْتِي بِهِ الْمَسْبُوقُ عِنْدَ قِيَامِهِ لِقَضَاءِ مَا فَاتَهُ) لِقِرَاءَتِهِ (لَا الْمُقْتَدِي) لِعَدَمِهَا

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 444):

فَلَوْ كَبَّرَ قَائِمًا فَرَكَعَ وَلَمْ يَقِفْ صَحَّ لِأَنَّ مَا أَتَى بِهِ الْقِيَامُ إلَى أَنْ يَبْلُغَ الرُّكُوعَ يَكْفِيهِ قُنْيَةٌ

مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 143):

(وَمَنْ أَدْرَكَ الْإِمَامَ) حَالَ كَوْنِهِ (رَاكِعًا فَكَبَّرَ وَوَقَفَ حَتَّى رَفَعَ) الْإِمَامُ (رَأْسَهُ لَمْ يُدْرِكْ) تِلْكَ (الرَّكْعَةَ) وَكَذَا لَوْ لَمْ يَقِفْ بَلْ انْحَطَّ فَرَفَعَ الْإِمَامُ مِنْهُ قَبْلَ رُكُوعِ الْمُقْتَدِي لَا يَصِيرُ مُدْرِكًا لِفَوْتِ الْمُشَارَكَةِ فِيهِ الْمُسْتَلْزِمُ لِفَوْتِ الرَّكْعَةِ

செவ்வாய், 29 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 11

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 11


ஊருக்குள் நுழைந்ததும்  நம்மை மகிழ்விக்கும் விதமாய் அமைந்திருந்தது (சிறியதாய், அழகாய்)  அந்த ஊர் பள்ளிவாசல்.


 சனத் தொகை அதிகரிப்பு காரணமாக விரிவான பெரிய பள்ளிவாசல் ஒன்று கட்ட திட்டமிட்டனர் அந்த ஊர் மக்கள்.


"பழைய பள்ளிவாசலை ஷஹீதாக்கி (இடித்து) விட்டு அந்த இடத்தையும் உள்ளடக்கி பிரம்மாண்டமான புதிய பள்ளிவாசலை அமைக்கலாம்" என்பது சிலரின் யோசனை.


"இல்லீங்க! பழைய பள்ளிவாசல் தெருவைப் பார்த்தவாறு இருப்பதால் அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடலாம் அதனால் வருமானம் கிடைக்கும் பல செலவுகளை சமாளிக்கலாம்

புதிய பள்ளிவாசலை உள்ளே தள்ளி தனியாக அமைத்துக் கொள்ள தாராளமாக இடம்தான் இருக்கிறதே" என்பது நிர்வாகம் உள்ளிட்ட பலரின் கருத்து.


 பெருவாரியான மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய கருத்துக் கேட்பு  கூட்டம் நடந்தது.


 இமாம் தவிர்த்து (இன்ஜினியர் உட்பட) அனைவரும் அதில் பங்கு பெற்றனர் 

ஜமாஅத் தலைவர் தான் செய்ய விரும்பும் காரியத்தையும் அதனால் கிடைக்கும் வருமானத்தையும் அழகாய் ஜோடித்து சொன்னார். 


வருமானம் கிடைக்கும் அதன் மூலம் பள்ளிவாசலுக்கு சந்தா கொடுக்கும் சிரமம் நீங்கும் எனக்கருதி  வெகுஜன மக்கள் அந்த (விபரீத) முடிவுக்கு மௌனமாய் சம்மதித்தனர்.


நிர்வாகத்தின் இந்த ஆபத்தான முடிவு பற்றி அறிந்த இமாம் கடுமையாக ஆட்சேபனை செய்தார்; தன் ஆட்சேபனைக்கு காரணத்தையும் நிர்வாகத்திடம் பின் வருமாறு விளக்கினார்.


ஒரு இடத்தில் பள்ளிவாசல் (ஷரீஅத் பார்வையில் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்டு) உருவாகி விட்டால் அது உலக அழிவு நாள் வரை பள்ளிவாசலாகத்தான் நீடி(த்து நிலை)க்கும்  அதை வேறொன்றாக மாற்ற  யாருக்கும் உரிமை இல்லை. 


அதை நிர்வாகம் செய்ய நினைத்தாலும் சரி ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்தாலும் சரி  ஏன் வக்ஃப் செய்தவரே வந்து சொன்னாலும் சரி பள்ளிவாசலை கடைகளாக மாற்ற முடியாது அப்படி செய்வது கூடவே கூடாது.


(வருமானத்திற்கு வேறு வழியை யோசிக்கலாம்)


பள்ளிவாசல் இருந்த இடத்தை கடைகளாக மாற்றினாலும் அல்லாஹ்வுடைய கணக்கில் அது பள்ளிவாசல் தான் எனவே அந்த கடைகளில் நடைபெறும் (பள்ளிவாசலின்) விதி மீறிய செயல்கள் பாவமாகும். 

எனவே பழைய பள்ளிவாசல் இருந்த இடத்தையும் உள்ளடக்கியதாக புதிய பள்ளிவாசலை கட்டுங்கள்!

அதன் மூலம் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் பாவம் தவிர்க்கப்படும் என எச்சரித்தார் இமாம்.



சரியான நேரத்தில் உறுதியான கருத்தை எடுத்துரைத்ததற்காக மக்கள் வெகுவாக பாராட்டியதுடன் துஆவும் செய்தனர். 



درر الحكام شرح غرر الأحكام (2 / 135):

(قَوْلُهُ وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ وَاسْتَغْنَى عَنْهُ يَبْقَى مَسْجِدًا عِنْدَ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ) هُوَ الْمُفْتَى بِهِ لِمَا قَالَ فِي الْحَاوِي الْقُدْسِيِّ قَالَ أَبُو يُوسُفَ هُوَ مَسْجِدٌ أَبَدًا إلَى قِيَامِ السَّاعَةِ لَا يَعُودُ مِيرَاثًا وَلَا يَجُوزُ نَقْلُهُ وَنَقْلُ مَالِهِ إلَى مَسْجِدٍ آخَرَ سَوَاءٌ كَانُوا يُصَلُّونَ فِيهِ أَوْ لَا وَهُوَ الْفَتْوَى اهـ.

وَفِي خِزَانَةِ الْمُفْتِينَ هُوَ مَسْجِدٌ أَبَدًا وَهُوَ الْأَصَحُّ فَلَوْ بَنَى أَهْلُ الْمَحَلَّةِ مَسْجِدًا آخَرَ فَاجْتَمَعُوا عَلَى بَيْعِ الْأَوَّلِ لِيَصْرِفُوا ثَمَنَهُ إلَى الثَّانِي فَالْأَصَحُّ أَنَّهُ لَيْسَ لَهُمْ ذَلِكَ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4 / 358):

(وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ وَاسْتُغْنِيَ عَنْهُ يَبْقَى مَسْجِدًا عِنْدَ الْإِمَامِ وَالثَّانِي) أَبَدًا إلَى قِيَامِ السَّاعَةِ (وَبِهِ يُفْتِي) حَاوِي الْقُدْسِيِّ


(قَوْلُهُ: وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ) أَيْ وَلَوْ مَعَ بَقَائِهِ عَامِرًا وَكَذَا لَوْ خَرِبَ وَلَيْسَ لَهُ مَا يُعْمَرُ بِهِ وَقَدْ اسْتَغْنَى النَّاسُ عَنْهُ لِبِنَاءِ مَسْجِدٍ آخَرَ (قَوْلُهُ: عِنْدَ الْإِمَامِ وَالثَّانِي) فَلَا يَعُودُ مِيرَاثًا وَلَا يَجُوزُ نَقْلُهُ وَنَقْلُ مَالِهِ إلَى مَسْجِدٍ آخَرَ، سَوَاءٌ كَانُوا يُصَلُّونَ فِيهِ أَوْ لَا وَهُوَ الْفَتْوَى حَاوِي الْقُدْسِيِّ، وَأَكْثَرُ الْمَشَايِخِ عَلَيْهِ مُجْتَبَى وَهُوَ الْأَوْجَهُ فَتْحٌ. اهـ.

வடகரை தாவூதி ஆலிம் பதில் 10

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 10


அது ஒரு சுற்றுலாத் தலங்கள் நிறைந்த ஊர். தொழுகைக்கு தனியொரு இடம் இல்லாமல் முஸ்லிம்கள் சிரமப்பட்டனர் அங்குள்ள பெரிய விடுதி உரிமையாளர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை வக்ஃப் செய்து பள்ளிவாசல் கட்ட விரும்புவதாக நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார்.

 ரொம்ப சந்தோஷம் அப்படீன்னா, நான் சொல்வது போல் செய்யுங்கள்! என்று ஒரு ஆலோசனை கொடுத்தார்

 அந்த ஆலோசனை இதுதான்

கீழ் தளத்தில் பள்ளிவாசலும் மேல் தளங்களை (வாடகைக்கு விட) தங்கும் விடுதிகளாகவும் கட்டிவிடலாம். 

தொழுகைக்கு பள்ளி வாசலாச்சி உங்களுக்கு வருமானமுமாச்சி எதையும் யோசனையோடு செய்யனும் நண்பா! பார்த்துக்கோங்க! என்றார்.

நல்ல யோசனைதான் ஆனால் ஷரீஅத் சட்டப்படி அப்படிச் செய்யலாமான்னு தெரிஞ்சுக்கிட்டு செய்வோம் என்றார். 

வெள்ளிக் கிழமை ஜுமுஆ தொழுகைக்கு அருகில் உள்ள ஊருக்கு சென்ற அந்த இருவரும் அங்குள்ள இமாமிடம் விவரத்தைச் சொன்னார்கள்.

அதற்கு அந்த இமாம்

"நீங்கள் கட்டவிருக்கும் அந்த கீழ் தளத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது தொழுகைக்கு அனுமதிக்க (மட்டும்) விரும்புகிறீர்களா?" என்று விபரமாக கேட்டார்.

கண்டிப்பாக "மஸ்ஜிதாக வக்ஃப் செய்யத்தான் விருப்பம்" என்றனர் அவர்கள்.

அப்படியானால் நீங்கள் திட்டமிடுவது போல கீழ் தளத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்து மேல் தளத்தில் வாடகைக்கு விடுதிகள் கட்டி சம்பாதிப்பதோ அல்லது நீங்களே அதில் வீடுகட்டி குடியிருப்பதோ கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதோ (மொத்தத்தில் கீழ் தளத்தை மட்டும் மஸ்ஜிதாக வக்ஃப் செய்து விட்டு மேல் தளங்களை உங்கள் உரிமையில் வைத்துக் கொள்ள) முடியாது.

ஏனென்றால் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப் பட்டுவிட்டால் அந்தப் பகுதியின்

 மண் (ணுக்கு கீழ்) முதல் விண்(ணுக்கு மேல்) வரை உள்ள பகுதியும்  சேர்ந்து மஸ்ஜித் தான் எனவே அதை நீங்களோ அல்லது வேறொருவரோ தனியுரிமை கொண்டாட முடியாது எத்தனை அடுக்குகள் கட்டினாலும் அதுவும் மஸ்ஜித் தான் அவற்றில் வருமானம் ஈட்டுவது என்பது வக்ஃப் செய்து விட்டதில் வருமானம் ஈட்டுவதாக ஆகும் அது தவறு.


 அதேபோல் நீங்கள் கட்ட நினைக்கும் மேல் தளங்களும் ஷரீஅத் பார்வையில் மஸ்ஜித் என்பதால் மஸ்ஜிதுடைய கண்ணியம் பேணப் படாமல் போகும் குற்றச் சுமை உங்களுக்கும் வந்து சேரும். 

எனவே, ஒரே மனதாக உங்களுக்கு சொந்தமான அந்த இடத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்து விட்டு, மேல் தளங்களை எழுப்பி வாடகைக்கு விடும் முடிவை கை விடுங்கள்" என்றார் அந்த இமாம்.

நல்ல தெளிவு கிடைத்த திருப்தியுடன் நன்றி கூறி விடைபெற்றனர் அவ்விருவர்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (5 / 271):


حَاصِلُهُ أَنَّ شَرْطَ كَوْنِهِ مَسْجِدًا أَنْ يَكُونَ سُفْلُهُ وَعُلْوُهُ مَسْجِدًا لِيَنْقَطِعَ حَقُّ الْعَبْدِ عَنْهُ لِقَوْلِهِ تَعَالَى {وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ} [الجن: 18]


திங்கள், 28 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 09

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 09


அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு (இமாம் இல்லாததால்) தொழுகை நடத்தச் சென்றுள்ளார் மூன்றாம் (ஜும்ரா)  வகுப்பு ஹாஃபிழ், மாணவர். 

அந்தப் பள்ளிவாசல் நிர்வாகியிடமிருந்து  காலையிலேயே மத்ரஸா முதல்வருக்கு ஃபோன் வந்தது. 

ஸலாம் சொல்லி நலம் விசாரித்த பின் ஹஜ்ரத்! உங்க மாணவர் ஃபஜ்ர் தொழுகையில்  குர்ஆனிலுள்ள  வரிசை முறையில் தலைகீழாக மாற்றி ஓதி விட்டார் ஸஜ்தா ஸஹ்வும் செய்யல.  அதனால தொழுகை கூடாது திரும்பவும் தொழனும்னு சொல்லி ஒரே பிரச்சனையாக இருக்குது நீங்க என்ன சொல்றீங்க?

என்றார் அவர்.

திரும்ப தொழனும்கிற தேவையில்லீங்க ஜீ!

ஸஜ்தா ஸஹ்வு செய்யாமலே தொழுகை கூடி விடும்  என்று பதிலுரைத்தார் அந்த முதல்வர்.

ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா?

 ஃபர்ளான தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் அல்ஹம்து சூராவுக்குப் பின் ஓதப்படும் குர்ஆனுடைய வசனங்களில் வரிசை முறையைப் பேணுவது கட்டாயம் (வாஜிபு)தான்.

எனவேதான் முதல் ரக்அத்தில் (உதாரணமாக) "வல்ஃபஜர்" சூரா ஓதினார் என்றால் இரண்டாவது ரக்அத்தில் அதற்கு பின்னால் உள்ள ஏதேனும் ஒரு சூராவைத்தான்  ஓதனும் முன்னால் உள்ள சூராவையோ வசனங்களையோ ஓதக்கூடாது என்று சட்டம் உள்ளது.

அதே சமயம் அப்படி ஓதி விட்டார் என்றால் ஸஜ்தா ஸஹ்வு செய்யனுமா என்றால் செய்யவேண்டிதில்லை. 

ஏனென்றால், 

தொழுகையின் வாஜிபுகளில் ஒன்றை விட்டால்தான் ஸஜ்தா ஸஹ்வு செய்யனும்.

குர்ஆனிலுள்ள வரிசை முறையை பேணுவது தொழுகையின் வாஜிபுகளில் இல்லை. மாறாக கிராஅத்து (ல் குர்ஆனு)க்குத்தான் வாஜிபு.

(குர்ஆன் மனனம் செய்கிற அல்லது பயில்கிற மாணவர்களுக்கு இதில் விலக்கு உண்டு.)

அதேபோல் தொழுகையில் குர்ஆன் கதம் செய்கிறார் என்றால் முதல் ரக்அத்தில் "குல் அவூது பிரப்பில் ஃபலக்" மற்றும் "குல் அவூது பிரப்பின்னாஸ்" இரு சூராக்களையும் முதல் ரக்அத்தில் ஓதி இரண்வது ரக்அத்தில் அல் பகராவின் ஆரம்ப ஆயத்துக்களை ஓதினார் என்றால் (அவருக்கும் விலக்கு உண்டு ஆகவே( தவறு இல்லை.

சுன்னத், நஃபில் தொழுகையின் ரக்அத்களில் குர்ஆனில் உள்ள வரிசை முறையில் (ஓதாமல்) மாற்றி ஓதினால் தவறு இல்லை. 

காரணம் ஃபர்ள் தொழுகையில் இல்லாத பல சலுகைகள் சுன்னத் நஃபில் தொழுகைகளில் உண்டு.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 546)

 "ويكره الفصل بسورة قصيرة وأن يقرأ منكوساً، إلا إذا ختم فيقرأ من البقرة. وفي القنية: قرأ في الأولى "الكافرون" وفي الثانية "ألم تر"  أو " تبت" ،  ثم ذكر يتم، وقيل: يقطع ويبدأ، ولا يكره في النفل شيء من ذلك،

 (قوله: وأن يقرأ منكوساً) بأن يقرأ في الثانية "سورة أعلى" مما قرأ في الأولى؛ لأن ترتيب السور في القراءة من واجبات التلاوة؛ وإنما جوز للصغار تسهيلاً لضرورة التعليم ط (قوله: إلا إذا ختم إلخ) قال في شرح المنية: وفي الولوالجية: من يختم القرآن في الصلاة إذا فرغ من المعوذتين في الركعة الأولى يركع ثم يقرأ في الثانية بالفاتحة وشيء من سورة البقرة، لأن النبي صلى الله عليه وسلم قال: «خير الناس الحال المرتحل»، أي الخاتم المفتتح اهـ (قوله: وفي الثانية) في بعض النسخ: وبدأ في الثانية، والمعنى عليها (قوله: ألم تر أو تبت) أي نكس أو فصل بسورة قصيرة ط (قوله: ثم ذكر يتم) أفاد أن التنكيس أو الفصل بالقصيرة إنما يكره إذا كان عن قصد، فلوسهواً فلا، كما في شرح المنية. وإذا انتفت الكراهة فإعراضه عن التي شرع فيها لا ينبغي. وفي الخلاصة: افتتح سورة وقصده سورة أخرى، فلما قرأ آية أو آيتين أراد أن يترك تلك السورة ويفتتح التي أرادها يكره اهـ. وفي الفتح: ولو كان أي المقروء حرفاً واحداً (قوله: ولا يكره في النفل شيء من ذلك) عزاه في الفتح إلى الخلاصة، ثم قال: وعندي في هذه الكلية نظر؛ «فإنه صلى الله عليه وسلم  نهى بلالاً - رضي الله عنه - عن الانتقال من سورة إلى سورة، وقال له: إذا ابتدأت سورة فأتمها على نحوها، حين سمعه يتنقل من سورة إلى سورة في التهجد» . اهـ.

واعترض ح أيضاً بأنهم نصوا بأن القراءة على الترتيب من واجبات القراءة؛ فلو عكسه خارج الصلاة يكره، فكيف لا يكره في النفل؟ تأمل! وأجاب ط بأن النفل؛ لاتساع بابه نزلت كل ركعة منه فعلاً مستقلاً، فيكون كما لو قرأ إنسان سورةً، ثم سكت، ثم قرأ ما فوقها، فلا كراهة فيه".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 457)

"وكذا كل صلاة أديت مع كراهة التحريم تجب إعادتها.

قالوا: يجب الترتيب في سور القرآن، فلو قرأ منكوساً أثم، لكن لا يلزمه سجود السهو؛ لأن ذلك من واجبات القراءة لا من واجبات الصلاة، كما ذكره في البحر في باب السهو".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 80)

"(بترك) متعلق بيجب (واجب) مما مر في صفة الصلاة (سهواً)

 (قوله: بترك واجب) أي من واجبات الصلاة الأصلية، لا كل واجب؛ إذ لو ترك ترتيب السور لا يلزمه شيء مع كونه واجباً، بحر"

சனி, 26 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 07,08.

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 07

இமாமும் நண்பர் ஒருவரும் பயணத்தில் ஒரு சிறிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுது முடித்து அவசரமாக கிளம்பினார்கள்.


 அப்போது நண்பர் தொழுது கொண்டிருந்த ஒருவருக்கு முன்னால் (சற்று விலகி) குறுக்கே கடந்து வந்தார்.


அவரிடம்  ஏங்க தொழுது கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் (குறுக்கே) வந்தீங்க?  என்று கேட்டார் இமாம்.


 அதற்கவர், நம்ம பள்ளி வாசலில் ஒருநாள் நீங்கள் அப்படித்தான் (தொழுது கொண்டிருப்பவரை தாண்டி) வந்தீர்கள் ஏன் என்று கேட்டதற்கு   அவர் ஸஜ்தா செய்யும் இடம் அல்லது அதற்கு நெருக்கமாகத்தான் வரக்கூடாது. சற்று விலகி கடந்து வரலாம்னு சொன்னீங்களே இமாம் என்றார் அவர்.


 "அப்படி இல்லீங்க ஜீ!"


 என்று கூறிய இமாம் அவரிடம் கீழ் வரும் முறைப்படி சட்டத்தை விளக்கினார்.


நாம் தொழுகையை நிறைவேற்றும் பள்ளிவாசல்கள் ஷரீஅத் பார்வையில் இரு வகைப்படும்.


 (இரண்டிலும் சில சட்டங்கள் வேறுபடும்)

 

1) பெரிய பள்ளிவாசல். 


அது நாற்பது முழம் (சுமார் 60 அடிகள் அல்லது அதை விட அதிகமாக) நீளம் கொண்டதாக இருக்கும்.



2)சிறிய பள்ளிவாசல்


அது நாற்பது முழம் (சுமார் 60 அடிகளை) விட குறைவான நீளம் கொண்டதாக இருக்கும்.


 பெரிய பள்ளிவாசலில்  தொழுது கொண்டிருப்பவரை குறுக்கே கடப்பது தவறு என்பது  (திரையோ தடுப்போ இல்லாமல்) தொழுபவருக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் போது தான்.


சுமார் இரண்டு ஸஃப்புகள் தாண்டி கடந்து செல்வது தவறில்லை. 


(நம்ம பள்ளிவாசல் பெரிய பள்ளிவாசல் எனவே நான் அங்கு நடந்து கொண்டது தவறில்லை.)


ஆனால் சிறிய பள்ளிவாசலில், தெழுது கொண்டிருப்பவரின் குறுக்கே (திரையோ தடுப்போ இல்லாமல்) கடந்து செல்வது குற்றமாகும் அது தொழுகையாளிக்குநெருமாக இருந்தாலும் சரி இரண்டு மூன்று ஸஃப்புகள் முன்னால் விலகி கடந்தாலும் சரி.  

ஆனால் திரை, தூண் போன்ற தடுப்பு இருந்தால் அதற்கு அப்பால் உள்ள பகுதியில் கடந்து செல்லலாம் தவறில்லை.


(இப்போது நாம் தொழுத) இது சிறிய பள்ளிவாசல். என்றார் இமாம்.


"அப்படீங்களா ஜீ!" என்று கேட்டுக் கொண்டார் அந்த நண்பர்.


المسجد الکبیر ہو أن یکون أربعین فأکثر وقیل ستین فأکثر والصغیر بعکسہ۔ إلی قولہ أفاد أن المختار الأول (طحطاوی علی المراقی: ۳۴۲، اشرفی) ومسجد صغیر ہو أقل من ستین ذراعاً وقیل أربعین وہو المختار کما أشار إلیہ فی الجوہر۔ (شامی زکریا: ۲/۳۹۸)



فَحَاصِلُ الْمَذْهَبِ عَلَى الصَّحِيحِ أَنَّ الْمَوْضِعَ الَّذِي يُكْرَهُ الْمُرُورُ فِيهِ هُوَ أَمَامَ الْمُصَلِّي فِي مَسْجِدٍ صَغِيرٍ وَمَوْضِعُ سُجُودِهِ فِي مَسْجِدٍ كَبِيرٍ أَوْ فِي الصَّحْرَاءِ


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 18):


شریعت کے بعض احکام میں جو مسجد کبیر اور مسجد صغیر کا فرق ہے، ان میں مسجد کبیر سے مراد وہ مسجد ہے جو ۴۰/ ذراع ہو، یعنی: ۶۰/ فٹ (۱۸/ میٹر)ہو۔ اور مفتی بہ قول کے مطابق اس میں صرف لمبائی کا اعتبار ہوتا ہے، چوڑائی کا اعتبار نہیں ہوتا(امداد الاحکام، ۱: ۴۴۴،مطبوعہ: مکتبہ دار العلوم کراچی)؛ لہٰذا جو مسجد ۱۸/میٹر لمبی ہو، وہ شرعاً مسجد کبیر ہے اور جس کی لمبائی اس سے کم ہو وہ مسجد صغیر ہے۔

دار العلوم دیوبند


வடகரை தாவூதி ஆலிம் பதில் 08

ஒரு ஊரிலுள்ள இரு பள்ளிவாசல்களின் இமாம்கள்  அவ்வப்போது சந்தித்து ஃபிக்ஹ் மஸாயில் பற்றி உரையாடுவர்.

அப்படி ஒரு நாள் நடந்த உரையாடல் இது:

 இமாம்-1: ஃபர்ள் தொழுபவர் இறுதி (அத்தஹிய்யாத்தில்) அமர்வில் உட்கார்ந்து, ஸலாம் கொடுக்காமல், மறதியாக (அதிகப்படியான ரக்அத்துக்கு) எழுந்து நின்று விட்டால் சட்டம் என்ன தெரியுமா?

 இமாம்-2: அந்த அதிகப்படியான ரக்அத்தில் ஸஜ்தா செய்யும் முன்பே ஞாபகம் வந்து விட்டால் உடனே அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்து ஸஜ்தா ஸஹ்வு செய்து தொழுகையை நிறைவு செய்யனும். 

ஆனால் அந்த அதிகப்படியான ரக்அத்துக்கு ஸஜ்தா செய்த பிறகுதான் (தவறுதலாக எழுந்து விட்டோம் என்று)  ஞாபகம் வந்தது என்றால் அந்த ஒரு ரக்அத்துடன் இன்னும் ஒரு ரக்அத்தை சேர்த்து தொழுது இறுதியில் ஸஜ்தா ஸஹ்வு செய்திட வேண்டும். 

அப்போது (ஃபர்ள் தொழுகையின் ரக்அத்களை விட) அதிகமாக தொழுத இரண்டு ரக்அத்துகள் நஃபிலாகி விடும்.

 இமாம்-1: அப்படியானால் நீங்கள் சொல்லும் இந்த வழிமுறை ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஒத்து வராதே? ஏனென்றால் ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஃபர்ள் தொழுத பிறகு நஃபில் தொழுவது மக்ரூஹ் ஆச்சே?

 இமாம்-2 

 அப்படி இல்லீங்க ஜீ! 

ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஃபர்ள் தொழுத பிறகு,  மக்ரூஹான நேரம் என்ற நினைவிருக்க (திட்டமிட்டு) நஃபில் தொழுகையை ஆரம்பிப்பது தான் மக்ரூஹ்.

ஆனால் கவனமில்லால் மறதியாக ஒருவர் நஃபில் தொழுகையை துவங்கி விட்டார் என்றால் (ஞாபகம் வந்த பிறகும்) அவர் அதை தொடர்வது மக்ரூஹ் அல்ல.

எனவே  மேலே குறிப்பிட்ட அந்தச் சட்டம் ஃபஜ்ர், அஸ்ர்  உட்பட அனைத்து ஃபர்ளான தொழுகைகளுக்கும் பொருந்தும்.


 இமாம்-1 ஓ..!அப்படீங்களா ஜீ!!


الجوهرة النيرة على مختصر القدوري (1 / 70):

 وَيُكْرَهُ أَنْ يَتَنَفَّلَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ) يَعْنِي قَصْدًا أَمَّا لَوْ قَامَ فِي الْعَصْرِ بَعْدَ الْأَرْبَعِ 

سَاهِيًا أَوْ فِي الْفَجْرِ لَا يُكْرَهُ وَيُتِمُّ؛ لِأَنَّهُ مِنْ غَيْرِ قَصْدٍ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 87):

(وَإِنْ قَعَدَ فِي الرَّابِعَةِ) مَثَلًا قَدْرَ التَّشَهُّدِ (ثُمَّ قَامَ عَادَ وَسَلَّمَ) وَلَوْ سَلَّمَ قَائِمًا صَحَّ؛ ثُمَّ الْأَصَحُّ أَنَّ الْقَوْمَ يَنْتَظِرُونَهُ، فَإِنْ عَادَ تَبِعُوهُ (وَإِنْ سَجَدَ لِلْخَامِسَةِ سَلَّمُوا) لِأَنَّهُ تَمَّ فَرْضُهُ، إذْ لَمْ يَبْقَ عَلَيْهِ إلَّا السَّلَامُ (وَضَمَّ إلَيْهَا سَادِسَةً) لَوْ فِي الْعَصْرِ، وَخَامِسَةً فِي الْمَغْرِبِ: وَرَابِعَةً فِي الْفَجْرِ بِهِ يُفْتَى (لِتَصِيرَ الرَّكْعَتَانِ لَهُ نَفْلًا) وَالضَّمُّ هُنَا آكَدُ، وَلَا عُهْدَةَ لَوْ قَطَعَ، وَلَا بَأْسَ بِإِتْمَامِهِ فِي وَقْتِ كَرَاهَةٍ عَلَى الْمُعْتَمَدِ (وَسَجَدَ لِلسَّهْوِ)


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 87):

(قَوْلُهُ لَوْ فِي الْعَصْرِ إلَخْ) أَشَارَ إلَى أَنَّهُ لَا فَرْقَ فِي مَشْرُوعِيَّةِ الضَّمِّ بَيْنَ الْأَوْقَاتِ الْمَكْرُوهَةِ وَغَيْرِهَا لِمَا مَرَّ أَنَّ التَّنَفُّلَ فِيهَا إنَّمَا يُكْرَهُ لَوْ عَنْ قَصْدٍ وَإِلَّا فَلَا، وَهُوَ الصَّحِيحُ زَيْلَعِيٌّ وَعَلَيْهِ الْفَتْوَى مُجْتَبَى، وَإِلَى أَنَّهُ كَمَا لَا يُكْرَهُ فِي الْعَصْرِ لَا يُكْرَهُ فِي الْفَجْرِ 


الجوهرة النيرة على مختصر القدوري (1 / 78):

(قَوْلُهُ: وَإِنْ قَعَدَ فِي الرَّابِعَةِ قَدْرَ التَّشَهُّدِ ثُمَّ قَامَ إلَى الْخَامِسَةِ وَلَمْ يُسَلِّمْ يَظُنُّهَا الْقَعْدَةَ الْأُولَى عَادَ إلَى الْقُعُودِ مَا لَمْ يَسْجُدْ فِي الْخَامِسَةِ وَيُسَلِّمُ وَيَسْجُدُ لِلسَّهْوِ)

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 06

வடகரை தாவூதி ஆலிம் பதில் 06


நேற்று நான் குளித்து விட்டு (உளூ செய்யாமல்)  அப்படியே தொழுது விட்டேன் "தொழுகை கூடாது  உளு செய்து மறுபடியும் தொழ வேண்டும்" என்று நண்பர் ஒருவர் சொல்றாரே ஹஜ்ரத்! சட்டம் அப்படித்தானா?  


இது போன்ற கேள்வியை எதிர் கொண்டவரா நீங்கள்? 

 அப்ப இத படிங்க


குளித்து விட்டுத் தொழப்போகும் ஒருவர், தொழுகைக்கு தனியாக உளூ செய்துதான் ஆக வேண்டும் என்று கருதுவது தவறாகும்.



(கடமையான குளிப்பாக இருந்தாலும்கூட) குளித்து விட்ட பின்  (உளூவை முறிக்கும் காரியங்கள் ஏதும் ஏற்படாத வரை) உளூ செய்யாமல் தொழுதாலும் (அந்த தொழுகை உளூவுடனே நிறைவேறி விடும்) கூடிவிடும். 

 

ஏன்னா, 

சுன்னத்தான முறையில் குளிப்பவராக இருந்தால் ஆரம்பமாக உளூ செய்திருப்பார் 

 இல்லையெனில் கட்டாயம் உடல் உறுப்புகள் அனைத்தையும் கழுவி இருப்பார் அப்படியானால் உளூவையும் உள்ளடக்கிய காரியம்தான் குளிப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆகவே குளித்து விட்ட  பின் தொழுகைக்கு தனியாக உளூ அவசியமில்லை. 


குறிப்பு:- வாய் கொப்பளிப்பதும் மூக்கில் தண்ணீர் செலுத்தி நாசியை சுத்தம் செய்வதும் குளிப்பு முழுமை பெற  கட்டாயமாகும். 


எனவே கடமையான குளிப்பு குளிப்பவர் அதை கவனமுடன் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழுகை கூடாமல் போய்விடும்.


"و يقول القاضي في العارضة: لم يختلف أحد من العلماء في أن الوضوء داخل في الغسل..."الخ


 (أبواب الطهارة، باب الوضوء بعد الغسل، ١/ ٣٦٨، معارف السنن)


مشکاة شریف: (ص۴۸) میں ہے: عن عائشة قالت: کان رسول اللہ صلی اللہ علیہ وسلم: لا یتوضأ بعد الغسل رواہ الترمذي وأبوداوٴد والنسائي وابن ماجة اھ اور مرقات شرح مشکاة (۲/۱۳۶، ۱۳۷ مطبوعہ دارالکتب العلمیة) میں ہے: ”کان النبي صلی اللہ علیہ وسلم لا یتوضأ بعد الغسل“ أي: اکتفاء بوضوئہ الأول في الغسل وهو سنة أو باندراج ارتفاع الحدث الأصغر تحت ارتفاع الأکبر بإیصال الماء إلی جمیع أعضائہ وهو رخصة․․․ قال ابن حجر: وقالوا: ولا یشرع وضوءان اتفاقا للخبر الصحیح: ”کان علیہ الصلاة والسلام لا یتوضأ بعد الغسل من الجنابة“ اھ․

புதன், 23 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 05

வடகரை தாவூதி ஆலிம் பதில் 05


ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது நான்காவது ரக்அத்களில் அல்ஹம்து சூரா மட்டும் தானே ஓதனும்? ஆனால் நான் (அல்ஹம்து சூராவுக்குப் பின்) மறதியாக ஒரு சூராவை ஓதி விட்டேன். "அப்ப நான் ஸஜ்தா ஸஹ்வு செய்திருக்கனும் தானே?" என்று ஒருவர் கேட்டார். 


அதே சந்தேகம் உங்களுக்கும் உண்டா? 


 அப்ப இத படிங்க 


ஃபர்ளான தொழுகையின் மூன்றாவது நான்காவது ரக்அத்களில் (அல்ஹம்து மட்டும் ஓதி நிறுத்திக் கொள்வதும்) மற்ற சூரா ஏதும் ஓதாமல் இருப்பதும் சுன்னத் ஆகும் (வாஜிபு ஒன்றும் இல்லை) எனவே ஒருவர் தவறுதலாக ஓதி விட்டால் சுன்னத்துக்கு மாற்றம் செய்தவராவார். (அவ்வளவுதான்) தொழுகையில் சுன்னத்தான காரியங்களை விடுவதால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை.


 குறிப்பு:- வாஜிப் மற்றும் சுன்னத், நஃபில் தொழுகைகளின் அனைத்து ரக்அத்களிலும் அல்ஹம்து சூராவுக்குப் பின் ஒரு சூரா, அல்லது மூன்று சிறிய ஆயத்துக்கள், இல்லையெனில் ஒரு பெரிய ஆயத் ஓதுவது வாஜிபாகும்.



ولو قرأ في الأخریین الفاتحة والسورة، لایلزم السہو وہو الأصح الخ (ہندیہ)


 (وَاكْتَفَى) الْمُفْتَرِضُ (فِيمَا بَعْدَ الْأُولَيَيْنِ بِالْفَاتِحَةِ) فَإِنَّهَا سُنَّةٌ عَلَى الظَّاهِرِ، وَلَوْ زَادَ لَا بَأْسَ بِهِ 


(قَوْلُهُ وَاكْتَفَى الْمُفْتَرِضُ) قُيِّدَ بِهِ لِأَنَّهُ فِي النَّفْلِ وَالْوَاجِبِ تَجِبُ الْفَاتِحَةُ وَالسُّورَةُ أَوْ نَحْوِهَا


(قَوْلُهُ وَلَوْ زَادَ لَا بَأْسَ) أَيْ لَوْ ضَمَّ إلَيْهَا سُورَةً لَا بَأْسَ بِهِ لِأَنَّ الْقِرَاءَةَ فِي الْأُخْرَيَيْنِ مَشْرُوعَةٌ مِنْ غَيْرِ تَقْدِيرٍ وَالِاقْتِصَارُ عَلَى الْفَاتِحَةِ مَسْنُونٌ لَا وَاجِبٌ فَكَانَ الضَّمُّ خِلَافَ الْأَوْلَى وَذَلِكَ لَا يُنَافِي الْمَشْرُوعِيَّةَ،


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 511):




சன்மார்க்கப் பார்வையில் சத்தான உணவுகள்


 

செவ்வாய், 22 டிசம்பர், 2020

தொழுகையின் தனித் தன்மை


தொழுகையின் தனித் தன்மை


 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 04

வடகரை தாவூதி ஆலிம் பதில் 04

தொழுது கொண்டிருக்கும் போது  தாய் அல்லது தந்தை யாரேனும் அழைத்தால் தொழுகையை விட்டு விட்டு அவர்கள் அழைப்புக்கு பதில் தர வேண்டுமா? என்று ஒருவர் கேட்டார் என்றால், "அதெல்லாம் கூடாது தொழுகையை முடித்து விட்டுத்தான் பதிலளிக்க வேண்டும்" என்று பதில் கூறுபவரா நீங்கள்?

 அப்ப இத படிங்க

ஃபர்ள் தொழுது கொண்டிருக்கும் போது தாய் அல்லது தந்தை  யாரேனும் மிகவும் அவசியமான அவசரமான உதவிக்காக  அழைத்தால் தொழுகையை (முறித்து) நிறுத்தி விட்டு பதிலளித்து உதவ வேண்டும்.

சாதாரணமாக அழைத்தால் ஃபர்ள் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிப்பது அனுமதி இல்லை.

ஆனால் நஃபில் தொழுது கொண்டிருக்கும் போது, (நாம் தொழுகிறோம் என்பதை அறியாமல்) சாதாரணமாக அழைத்தாலும் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிக்க வேண்டும்.

நாம் தொழுகிறோம் என்பதை அறிந்தே அழைத்தால் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிக்க வேண்டியதில்லை.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 51):

 وَلَوْ دَعَاهُ أَحَدُ أَبَوَيْهِ فِي الْفَرْضِ لَا يُجِيبُهُ إلَّا أَنْ يَسْتَغِيثَ بِهِ. وَفِي النَّفْلِ إنْ عَلِمَ أَنَّهُ فِي الصَّلَاةِ فَدَعَاهُ لَا يُجِيبُهُ وَإِلَّا أَجَابَهُ

திங்கள், 21 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 03

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 03

 ஹஜ்ரத்! நேற்று இஷா  ஜமாஅத் தொழுகையில் முதல் ரக்அத் தவறிடுச்சு இரண்டாம் ரக்அத்தில் தான் உங்களுடன் இணைந்தேன்; ஆனா நீங்க ஸலாம் கொடுக்கும் போது, மறதியாக நானும் ஒருபக்கம் ஸலாம் சொல்லி திரும்பி விட்டேன். உடனே ஞாபகம் வந்து, மீதமுள்ள ரக்அத்தை நிறைவு செய்தேன் நான் "ஸஜ்தா ஸஹ்வு" செய்திருக்கனுமா?

 என்று ஒருவர் கேட்டார் என்றால் "ஆம்" என்று பொதுவாக பதில் கூறுபவரா நீங்கள்?

 

 அப்ப இத படிங்க

 

அந்த மஸ்பூக், இமாமுக்கு முந்தி அஸ்ஸலாமு என்ற வார்த்தையை சொல்லி திரும்பி இருந்தாலோ

அல்லது இமாமுடன் சேர்ந்தே அஸ்ஸலாமு சொல்லி திரும்பி இருந்தாலோ இவ்விரு நிலைகளிலும் அந்த மஸ்பூக் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த மஸ்பூக் மறந்து சலாம் கொடுக்கும் வேளையில் முக்ததீயாக (இமாமை பின் தொடர்பவராக)த்தான் இருக்கிறார் ஒரு முக்ததீயிடம் ஏற்படும் மறதிக்கு ஸஜ்தா ஸஹ்வு தேவை இல்லை.

 ஆனால் இமாம் அஸ்ஸலாமு என்ற வார்த்தையை முடித்த பிறகு  அந்த மஸ்பூக் மறதியாக ஸலாம் சொல்லி திரும்பி இருந்தால் அப்போது ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இமாம் ஸலாம் சொல்லி முடித்ததும் இந்த மஸ்பூக் முக்ததீ என்ற நிலையில் இருந்து முன்ஃபரித் (தனியாக தொழுபவர்) என்ற நிலைக்கு மாறிவிடுகிறார் தனியாக தொழுபவரிடம் மறதியால் ஏற்படும் குறையை நிவர்த்தி செய்ய ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

 

تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 195):

 

وَلَوْ سَلَّمَ الْمَسْبُوقُ مَعَ الْإِمَامِ يَنْظُرُ فَإِنْ سَلَّمَ مُقَارِنًا لِسَلَامِ الْإِمَامِ أَوْ قَبْلَهُ فَلَا سَهْوَ عَلَيْهِ؛ لِأَنَّهُ مُقْتَدٍ بِهِ،

وَإِنْ سَلَّمَ بَعْدَهُ يَلْزَمُهُ السَّهْوُ؛ لِأَنَّهُ مُنْفَرِدٌ

 

 குறிப்பு:-

 மேல் கூறப்பட்ட விபரம் மஸ்பூக் மறதியாக ஸலாம் சொல்லி விட்டார் என்றால் தான். வேண்டுமென்றே ஸலாம் கொடுத்திருந்தால் தொழுகை ஃபஸாத் ஆகிவிடும்.

வடகரை தாவூதி ஆலிம் பதில் 02

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 02

ஒருவர் தொழுது முடித்ததும் தன் உடையில் (முரட்டு) கொசு ஒன்று நசுங்கி அதன் இரத்தம் படர்ந்திருப்பதைக் கண்டார் அவர் ஆடையை சுத்தம் செய்து தொழுகையை திரும்பத் தொழுவது அவசியமா? என்றொரு கேள்வி முன்வைக்கப் பட்டால் "ஆம்! அதுதான் (இரத்தம்) கடுமை நிறைந்த நஜீஸ் ஆச்சே ஒரு திர்ஹம் விட அதிகமாக ஆடையில் பட்டால் தொழுகை கூடாது (ஒரு திர்ஹமை விட குறைவாக இருந்தால் பொருத்துக் கொள்ளப்படும்)"

என்று பதில் கூறுபவரா நீங்கள்?

 அப்ப இத படிங்க!

ஓடும் தன்மையுள்ள இரத்தம்( دم مسفوح) தான் கடினம் நிறைந்த நஜீஸ். ஓடும் தன்மையில் இல்லாத இரத்தம் கடினம் நிறைந்த நஜீஸ் அல்ல  என்பதையும் தாண்டி அது தாஹிர் (நஜீஸே இல்லை) என்று ஃபிக்ஹ் கிதாப்களில் வந்துள்ளது.


الفتاوى الهندية (1/ 46):

"ودم البق والبراغيث والقمل والكتان  طاهر وإن كثر، كذا في السراج الوهاج".

 

கொரோனா கொடுத்த பாடமும் படிப்பினையும்


கொரோனா கொடுத்த பாடமும் படிப்பினையும்


 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 01

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 01

 

ஒரு இமாம் லுஹர் தொழுகை நடத்தி இருக்கிறார் நான்காவது ரக்அத்தில் ஒரு ஸஜ்தா (மட்டும்) செய்து விட்டு (இரண்டாம் ஸஜ்தாவை மறந்து)  அத்தஹிய்யாத்தில் அமர்ந்து விட்டார் (அவரைப் பின்பற்றி) தொழுபவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று கூறி இரண்டாம் ஸஜ்தாவை ஞாபகப் படுத்த, அவர் ஸஜ்தாவை செய்யாமல் ஐந்தாவது ரக்அத்துக்கு எழுந்து நின்று கொண்டார் அப்போதும் தொழுகையாளிகள் "அல்லாஹ் அக்பர்" கூறி அவரை நிற்க விடவில்லை.

 

"என்ன செய்வது" என்று யோசித்த இமாம் மறுபடியும் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து, ஸஜ்தா ஸஹ்வு செய்து, ஒரு வழியாக தொழுகையை முடித்தார்.

 

இந்த தொழுகை கூடுமா? என்பது கேள்வி

 

"ஆமாம்! அதான் ஸஜ்தா ஸஹ்வு செய்திட்டாருல்ல  தொழுகை கூடிப் போயிடும் தானே" என்று எண்ணுபவரா நீங்கள்?

அப்ப இத படிங்க!

 

அந்த தொழுகை கூடாது திரும்பத் தொழுவது அவசியம்.

ஏன்னா

"ஒவ்வொரு ரக்அத்திலும் இரு ஸஜ்தாக்கள் செய்வது ஃபர்ளாகும்"

ஃபர்ள் விடுபட்டால் தொழுகை கூடாது; அதனால் ஏற்படும் குறையை ஸஜ்தா ஸஹ்வு மூலம் நிவர்த்தி செய்யவும் முடியாது.

வாஜிபான காரியங்கள் ஏதாவது விடுபட்டால் தான் ஸஜ்தா ஸஹ்வு மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.

 

قال فی الہندیة: ومنہا السجود السجود الثانی فرض کالأول باجماع الأمة کذا فی الزاہدی ۔ (الہندیہ: ۱/۶۸)