செவ்வாய், 29 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 10

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 10


அது ஒரு சுற்றுலாத் தலங்கள் நிறைந்த ஊர். தொழுகைக்கு தனியொரு இடம் இல்லாமல் முஸ்லிம்கள் சிரமப்பட்டனர் அங்குள்ள பெரிய விடுதி உரிமையாளர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை வக்ஃப் செய்து பள்ளிவாசல் கட்ட விரும்புவதாக நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார்.

 ரொம்ப சந்தோஷம் அப்படீன்னா, நான் சொல்வது போல் செய்யுங்கள்! என்று ஒரு ஆலோசனை கொடுத்தார்

 அந்த ஆலோசனை இதுதான்

கீழ் தளத்தில் பள்ளிவாசலும் மேல் தளங்களை (வாடகைக்கு விட) தங்கும் விடுதிகளாகவும் கட்டிவிடலாம். 

தொழுகைக்கு பள்ளி வாசலாச்சி உங்களுக்கு வருமானமுமாச்சி எதையும் யோசனையோடு செய்யனும் நண்பா! பார்த்துக்கோங்க! என்றார்.

நல்ல யோசனைதான் ஆனால் ஷரீஅத் சட்டப்படி அப்படிச் செய்யலாமான்னு தெரிஞ்சுக்கிட்டு செய்வோம் என்றார். 

வெள்ளிக் கிழமை ஜுமுஆ தொழுகைக்கு அருகில் உள்ள ஊருக்கு சென்ற அந்த இருவரும் அங்குள்ள இமாமிடம் விவரத்தைச் சொன்னார்கள்.

அதற்கு அந்த இமாம்

"நீங்கள் கட்டவிருக்கும் அந்த கீழ் தளத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது தொழுகைக்கு அனுமதிக்க (மட்டும்) விரும்புகிறீர்களா?" என்று விபரமாக கேட்டார்.

கண்டிப்பாக "மஸ்ஜிதாக வக்ஃப் செய்யத்தான் விருப்பம்" என்றனர் அவர்கள்.

அப்படியானால் நீங்கள் திட்டமிடுவது போல கீழ் தளத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்து மேல் தளத்தில் வாடகைக்கு விடுதிகள் கட்டி சம்பாதிப்பதோ அல்லது நீங்களே அதில் வீடுகட்டி குடியிருப்பதோ கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதோ (மொத்தத்தில் கீழ் தளத்தை மட்டும் மஸ்ஜிதாக வக்ஃப் செய்து விட்டு மேல் தளங்களை உங்கள் உரிமையில் வைத்துக் கொள்ள) முடியாது.

ஏனென்றால் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப் பட்டுவிட்டால் அந்தப் பகுதியின்

 மண் (ணுக்கு கீழ்) முதல் விண்(ணுக்கு மேல்) வரை உள்ள பகுதியும்  சேர்ந்து மஸ்ஜித் தான் எனவே அதை நீங்களோ அல்லது வேறொருவரோ தனியுரிமை கொண்டாட முடியாது எத்தனை அடுக்குகள் கட்டினாலும் அதுவும் மஸ்ஜித் தான் அவற்றில் வருமானம் ஈட்டுவது என்பது வக்ஃப் செய்து விட்டதில் வருமானம் ஈட்டுவதாக ஆகும் அது தவறு.


 அதேபோல் நீங்கள் கட்ட நினைக்கும் மேல் தளங்களும் ஷரீஅத் பார்வையில் மஸ்ஜித் என்பதால் மஸ்ஜிதுடைய கண்ணியம் பேணப் படாமல் போகும் குற்றச் சுமை உங்களுக்கும் வந்து சேரும். 

எனவே, ஒரே மனதாக உங்களுக்கு சொந்தமான அந்த இடத்தை மஸ்ஜிதாக வக்ஃப் செய்து விட்டு, மேல் தளங்களை எழுப்பி வாடகைக்கு விடும் முடிவை கை விடுங்கள்" என்றார் அந்த இமாம்.

நல்ல தெளிவு கிடைத்த திருப்தியுடன் நன்றி கூறி விடைபெற்றனர் அவ்விருவர்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (5 / 271):


حَاصِلُهُ أَنَّ شَرْطَ كَوْنِهِ مَسْجِدًا أَنْ يَكُونَ سُفْلُهُ وَعُلْوُهُ مَسْجِدًا لِيَنْقَطِعَ حَقُّ الْعَبْدِ عَنْهُ لِقَوْلِهِ تَعَالَى {وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ} [الجن: 18]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக