திங்கள், 21 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 03

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 03

 ஹஜ்ரத்! நேற்று இஷா  ஜமாஅத் தொழுகையில் முதல் ரக்அத் தவறிடுச்சு இரண்டாம் ரக்அத்தில் தான் உங்களுடன் இணைந்தேன்; ஆனா நீங்க ஸலாம் கொடுக்கும் போது, மறதியாக நானும் ஒருபக்கம் ஸலாம் சொல்லி திரும்பி விட்டேன். உடனே ஞாபகம் வந்து, மீதமுள்ள ரக்அத்தை நிறைவு செய்தேன் நான் "ஸஜ்தா ஸஹ்வு" செய்திருக்கனுமா?

 என்று ஒருவர் கேட்டார் என்றால் "ஆம்" என்று பொதுவாக பதில் கூறுபவரா நீங்கள்?

 

 அப்ப இத படிங்க

 

அந்த மஸ்பூக், இமாமுக்கு முந்தி அஸ்ஸலாமு என்ற வார்த்தையை சொல்லி திரும்பி இருந்தாலோ

அல்லது இமாமுடன் சேர்ந்தே அஸ்ஸலாமு சொல்லி திரும்பி இருந்தாலோ இவ்விரு நிலைகளிலும் அந்த மஸ்பூக் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த மஸ்பூக் மறந்து சலாம் கொடுக்கும் வேளையில் முக்ததீயாக (இமாமை பின் தொடர்பவராக)த்தான் இருக்கிறார் ஒரு முக்ததீயிடம் ஏற்படும் மறதிக்கு ஸஜ்தா ஸஹ்வு தேவை இல்லை.

 ஆனால் இமாம் அஸ்ஸலாமு என்ற வார்த்தையை முடித்த பிறகு  அந்த மஸ்பூக் மறதியாக ஸலாம் சொல்லி திரும்பி இருந்தால் அப்போது ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இமாம் ஸலாம் சொல்லி முடித்ததும் இந்த மஸ்பூக் முக்ததீ என்ற நிலையில் இருந்து முன்ஃபரித் (தனியாக தொழுபவர்) என்ற நிலைக்கு மாறிவிடுகிறார் தனியாக தொழுபவரிடம் மறதியால் ஏற்படும் குறையை நிவர்த்தி செய்ய ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

 

تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 195):

 

وَلَوْ سَلَّمَ الْمَسْبُوقُ مَعَ الْإِمَامِ يَنْظُرُ فَإِنْ سَلَّمَ مُقَارِنًا لِسَلَامِ الْإِمَامِ أَوْ قَبْلَهُ فَلَا سَهْوَ عَلَيْهِ؛ لِأَنَّهُ مُقْتَدٍ بِهِ،

وَإِنْ سَلَّمَ بَعْدَهُ يَلْزَمُهُ السَّهْوُ؛ لِأَنَّهُ مُنْفَرِدٌ

 

 குறிப்பு:-

 மேல் கூறப்பட்ட விபரம் மஸ்பூக் மறதியாக ஸலாம் சொல்லி விட்டார் என்றால் தான். வேண்டுமென்றே ஸலாம் கொடுத்திருந்தால் தொழுகை ஃபஸாத் ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக