சனி, 7 ஜனவரி, 2023

விரோதிகள் மகிழும் வீழ்ச்சி வேண்டாம் இறைவா!

 விரோதிகள் மகிழும் வீழ்ச்சி வேண்டாம் இறைவா!




إِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئاً إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيط ٌ (آل عمران:120)

6616 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ» صحيح البخاري

 

நபிகள் நாயகம் ஸல்] அவர்கள் கேட்ட முக்கிய துஆக்களில் ஒன்று

اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

عَنْ أَبِي هُرَيْرَةَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ صحيح البخاري 6347 »

          6616 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ» صحيح البخاري

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 26 

ஸஹீஹ் புகாரி : 6616. 

 

எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் மனிதனுக்கு பெரும் கஷ்டமானது என்பதை இந்த துஆவிலே தெரிகிறோம்

 

அய்யூப் நபி அவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வேதனை எது? என்றபோது எனக்கு ஏற்பட்ட சோதனை கண்டு எதிரிகள் மகிழ்ந்தது என்று பதில் கூறினார்கள்.

 

وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ-  الأنبياء: 83

 

الرَّابِعَ عَشَرَ- أَنَّ مَعْنَى:" مَسَّنِيَ الضُّرُّ" مِنْ شَمَاتَةِ الْأَعْدَاءِ، وَلِهَذَا قِيلَ لَهُ: مَا كَانَ أَشَدَّ عَلَيْكَ فِي بَلَائِكَ؟ قَالَ شَمَاتَةُ الْأَعْدَاءِ - تفسير القرطبي.

 

அரபி கவிதையும் அதை உறுதி படுத்துகிறது

كُلُّ الْمَصَائِبِ قَدْ تَمُرُّ عَلَى الْفَتَى ... فَتَهُونُ غَيْرَ شَمَاتَةِ الْأَعْدَاءِ

الآداب الشرعية والمنح المرعية

 

முற்காலத்திலிருந்தே இருந்து வரும் இயல்பான குணம்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: جَاءَ أَبُو مُوسَى إِلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَعُودُهُ، وَكَانَ شَاكِيًا، فَقَالَ لَهُ عَلِيٌّ: عَائِدًا جِئْتَ، أَمْ شَامِتًا؟، فَقَالَ: لَا، بَلْ عَائِدًا - مصنف ابن أبي شيبة

ஹாரூன் நபி மூஸா நபி அலை அவர்களிடம் கேட்டுக்கொண்டது

 

وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلا تُشْمِتْ بِيَ الأَعْدَاءَ وَلا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ) الأعراف:150)

இங்கு இரண்டு விஷயம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

ஒன்று நமக்கு ஏற்படும் வீழ்ச்சி கண்டு எதிரிகள் மகிழ்ச்சி அடையும் சூழ் நிலை விட்டும் பாதுகாப்பு தேடவேண்டும்

இன்னொன்று நம் எதிரிகளுக்கு ஏற்படும் சரிவு கண்டு நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் 

عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيكَ فَيَرْحَمَهُ اللَّهُ وَيَبْتَلِيكَ» سنن الترمذي

ஏன் வெளிப்படுத்தக்கூடாது என்பதற்கு காரணம்

இந்த உலகில் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மாறிமாறி வரக்கூடியது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் கொள்ள வேண்டும்

َنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ. قَالَ وَحَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا الْفَزَارِيُّ وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسٍ قَالَ كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تُسَمَّى الْعَضْبَاءَ، وَكَانَتْ لاَ تُسْبَقُ، فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَهَا، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ وَقَالُوا سُبِقَتِ الْعَضْبَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْفَعَ شَيْئًا مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ

 

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள்.90

ஸஹீஹ் புகாரி : 6501.

 

 

المعجم الكبير للطبراني (3 / 91):

عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: كَانَتْ عَائِشَةُ بِنْتُ خَلِيفَةَ الْخَثْعَمِيَّةُ عِنْدَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، فَلَمَّا أُصِيبَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ وَبُويِعَ لِلْحَسَنِ رَضِيَ اللهُ عَنْهُ بِالْخِلَافَةِ، دَخَلَ عَلَيْهَا، فَقَالَتْ: لِتُهْنِكَ الْخِلَافَةُ. فَقَالَ لَهَا: أَتُظْهِرِينَ الشَّمَاتَةَ بِقَتْلِ عَلِيٍّ، انْطَلِقِي فَأَنْتِ طَالِقٌ ثَلَاثًا. فَتَقَنَّعَتْ بِسَاجٍ لَهَا، وَجَلَسَتْ فِي نَاحِيَةِ الْبَيْتِ، وَقَالَتْ: أَمَا وَاللهِ مَا أَرَدْتُ مَا ذَهَبْتَ إِلَيْهِ. فَأَقامَتْ حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، ثُمَّ تَحَوَّلَتْ عَنْهُ، فَبَعَثَ إِلَيْهَا بِبَقِيَّةٍ بَقِيَتْ لَهَا مِنْ صَدَاقِهَا عَلَيْهِ، وبِمُتْعَةٍ عَشَرَةِ آلَافٍ، فَلَمَّا جَاءَهَا الرَّسُولُ بِذَلِكَ قَالَتْ: مَتَاعٌ قَلِيلٌ مِنْ حَبِيبٍ مَفَارِقٍ. فَلَمَّا رَجَعَ الرَّسُولُ إِلَى الْحَسَنِ فَأَخْبَرَهُ بِمَا قَالَتْ، بَكَى الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، وَقَالَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ جَدِّي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ جَدِّي أَنَّهُ قَالَ: «إِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ ثَلَاثًا عِنْدَ الْأَقْرَاءِ، أَوْ طَلَّقَهَا ثَلَاثًا مُبْهَمَةً؛ لَمْ تَحِلَّ لَهُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ» ؛ لَراجَعْتُهَا -المعجم الكبير للطبراني

 

 

சுவைத் பின் ஙஃப்லா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. ஹசன் (ரலி) அவர்களின் மனைவி ஆயிஷா கஸ்அமிய்யா (ரஹ்) அவர்கள் (தனது மாமனார்) ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தியை செவியுற்றதும் தனது கணவர் ஹசன் (ரலி) அவர்களிடம் "உங்களுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்துவிட்டதற்காக நான் வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சொன்னார்.

 

துக்க நேரத்தில் இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ஹசன் (ரலி) அவர்கள், (أتظهرين الشماتَةَ بِقَتلِ عليٍّ، أنتِ طَالِقٌ ثلاثًا ) “(எனது  தந்தை  ஜனாதிபதி) அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீ சந்தோசப்படுகிறாயா? இப்பொழுது உனக்கு மூன்று  தலாக் கொடுத்து முழுமையாக மணவிலக்கு அளித்துவிட்டேன்" என்று கூறினார்கள். அந்த பெண்மணி அங்கேயே இத்தாவை (காத்திருப்புக் காலத்தை) முழுமைப்படுத்திவிட்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

பிறகு ஹசன் (ரலி) அவர்கள் அந்த பெண்ணுக்கு சேரவேண்டிய மீதத் தொகை மற்றும் 10,000 திர்ஹம் கொடுத்து அனுப்பினார்கள். அந்த பணத்தை கொண்டு போய் கொடுத்தவரிடம் ( مَتَاعٌ قَلِيلٌ مِنْ حَبِيبٍ مُفَارِقٍ ) "என்னை விட்டுப் பிரிந்த என்னுடைய நேசரின் இந்த பணம் மிகக் குறைவானது தான்  (இந்த பெரும் தொகையைவிட என்னை விட்டு பிரிந்த எனது கணவரே எனக்கு மிக உவப்பானவர்)" என்று தனது கணவரின் பிரிவைக் கைசேதமாக அப்பெண்மணி கூறினார்.

 

இந்த செய்தியை செவியுற்ற ஹசன் (ரலி) அவர்கள் அப்பெண்மணியின் நிம்மதியற்ற மனநிலையை உணர்ந்தும், பாசத்திற்குரிய அப்பெண்ணை மீண்டும் மனைவியாக மீட்டிக் கொள்ள முடியாதவாறு முத்தலாக் சொல்லி விட்டதையும் எண்ணி அழுது விட்டார்கள்.     நூல்:- தாரகுத்னீ-4017, சுனனுல் குப்ரா

 

 

قال ابن الدورقي: اجتمع الكسائي واليزيدي عند الرشيد، فحضرت صلاة الجهر فقدموا الكسائي، فصلى بهم، فأرتج عليه في قراءة:] قل يا أيها الكافرون [فلما سلم، قال اليزيدي: قارئ أهل الكوفة يرتج عليه في] قل يا أيها الكافرون [! فحضرت صلاة الجهر، فتقدم اليزيدي فصلى فأرتج عليه في سورة الحمد، فلما سلم قال:

احفظ لسانك لا تقول فتبتلى ... إن البلاء موكل بالمنطق.

نزهة الألباء في طبقات الأدباء