திங்கள், 25 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 38

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 38

மிக அருமையாக கிராஅத் ஓதும் ஆலிம் ஒருவர், கிராஅத் அரங்கில் பங்கேற்க சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு பயணமானார். 


மஃரிப் தொழுகைக்கு பின் புறப்பட்ட அவர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இஷா தொழுகைக்கு சென்றடைந்தார்.


அழகான கிராஅத் ஓதும் அந்த ஆலிமைப் பார்த்த பள்ளிவாசலின் செயலாளர் இமாமிடம் சென்று ஹஜ்ரத்! அன்றைக்கு ஃபஜ்ர் தொழுகை நடத்திய ஆலிம் வந்திருக்காங்க அவங்க குரலும் ஓதுதலும் மிக அழகாக இருந்துச்சு இன்றைக்கு (இஷா-ஜமாஅத்) அவங்கள தொழுகை நடத்தச் சொல்லுங்களேன் என்றார்.


அதற்கு அந்த இமாம், அவங்க பயணத்தில் இருக்கிறார்கள் எனவே இரண்டு ரக்அத்துகள் தான் தொழ வைக்க முடியும்; மீதமுள்ள இரண்டு ரக்அத்துகளை மக்கள் தாங்களாக எழுந்து நிறைவு செய்ய வேண்டும் அது பற்றி மக்களுக்கு விபரம் சொல்ல வேண்டும் (பெருந்திரளாக மக்கள் கூடும் இந்த பள்ளியில்) ஏன் அந்த ரிஸ்க்? 

அடுத்து எப்பொழுதாவது மஃரிப் அல்லது ஃபஜ்ரில் வந்தால் தொழுகை நடத்தச் சொல்லுவோம் என்றார் இமாம்.


அப்போது செயலாளர் குறுக்கிட்டு, "ஆமா ஊரிலிருந்து இப்பத்தான் புறப்பட்டு போறாங்க; 15 கிலோமீட்டர் தான் பயணம் செய்து வந்திருக்காங்க; 77 கிலோமீட்டர் கடநது தானே கஸ்ர் செய்யனும்?" என்று கேட்டார்.


அதற்கு அந்த இமாம், 

அப்படி இல்லீங்க ஜீ!


77 கிலோமீட்டர் அல்லது அதைவிட அதிகமான தொலைவில்  இருக்கும் ஊரை நாடி பயணம் புறப்பட்டவர், சொந்த ஊரின் எல்லையை கடந்து விட்டாலே கஸ்ரு தான் செய்ய வேண்டும்.


கஸ்ர் செய்து தொழுவதற்கு  பயணத்தின் இலக்கு குறைந்தது 77 கிலோமீட்டராவது இருக்க வேண்டும் அவ்வளவுதான். 77 கிலோமீட்டர் கடந்துருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று விளக்கினார் இமாம்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 138):


(قَوْلُهُ مَنْ جَاوَزَ بُيُوتَ مِصْرِهِ مُرِيدًا سَيْرًا وَسَطًا ثَلَاثَةَ أَيَّامٍ فِي بَرٍّ أَوْ بَحْرٍ أَوْ جَبَلٍ قَصَرَ الْفَرْضَ الرُّبَاعِيَّ) بَيَانٌ لِلْمَوْضِعِ الَّذِي يُبْتَدَأُ فِيهِ الْقَصْرُ وَلِشَرْطِ الْقَصْرِ وَمُدَّتِهُ وَحُكْمِهُ أَمَّا الْأَوَّلُ فَهُوَ مُجَاوَزَةُ بُيُوتِ الْمِصْرِ لِمَا صَحَّ عَنْهُ - عَلَيْهِ السَّلَامُ - «أَنَّهُ قَصَرَ الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ» وَعَنْ عَلِيٍّ أَنَّهُ خَرَجَ مِنْ الْبَصْرَةِ فَصَلَّى الظُّهْرَ أَرْبَعًا ثُمَّ قَالَ: إنَّا لَوْ جَاوَزْنَا هَذَا الْخُصَّ لَصَلَّيْنَا رَكْعَتَيْنِ وَالْخُصُّ بِالْخَاءِ الْمُعْجَمَةِ وَالصَّادِ الْمُهْمَلَةِ بَيْتٌ مِنْ قَصَبٍ كَذَا ضَبَطَهُ فِي السِّرَاجِ الْوَهَّاجِ وَيَدْخُلُ فِي بُيُوتِ الْمِصْرِ رَبَضُهُ، وَهُوَ مَا حَوْلَ الْمَدِينَةِ مِنْ بُيُوتٍ وَمَسَاكِنَ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 37

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 37

சுமார் 200 அடிகள் அகலத்தில், பிரம்மாண்டமாக, கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் அது.


அந்தப் பள்ளிவாசலின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள, சில நண்பர்களுடன் சென்றிருந்தார் தர்ம சிந்தனையுள்ள ஒரு செல்வந்தர்.


தன் ஊரிலும் ஒரு பள்ளிவாசல் கட்டவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது; எனவே அந்த புதிய பள்ளிவாசலின் அமைப்பு ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனித்தார்.


ஒவ்வொரு ஸஃப்புக்கும் நான்கு அடிகள் இடைவெளி என்ற கணக்கில் துல்லியமாக அடையாளம் போடப்பட்டிருந்தது.


ஆனால் முதல் ஸஃப்பிற்கு  முன்னால் (அதாவது பள்ளியின் முன் சுவற்றிர்க்கும் முதல் ஸஃப்பின் நான்கு அடிகளுக்குமிடையே) கூடுதலாக இரண்டு அடிகளும் கடைசி ஸஃப்பின் பின்னால் கூடுதலாக இரண்டு அடிகளும் சும்மா காலியாக விடப்பட்டிருப்பதைப்பார்த்து, எல்லாம் சரிதான் ஆனால், முன்னாலும் பின்னாலும் இரண்டிரண்டு அடிகளை காலியாக விட்டிருக்க கூடாது


முன்னால்  இரண்டு அடிகளை விடாமல் (மிஹ்ராபுக்கு அடுத்து) முதல் ஸஃப்பை துவங்கி இருந்தால், அந்த இரண்டு அடிகளை கடைசியில் உள்ள இரண்டு அடிகளோடு சேர்த்து  ஒரு ஸஃப்பு கூடுதலாக கிடைத்திருக்கும் என்றார்.


அப்போது எதிர்ப்பட்ட இமாமை அழைத்து, "ஏன் இப்படி முன்னும் பின்னும் இரண்டிரண்டு அடிகளை காலியாக விட்டு ஒரு ஸஃப்பை வேஸ்ட் பண்ணிட்டாங்க?" என்று கேட்டார்.


அதற்கு இமாம், அவரிடம் 

அப்படி இல்லீங்க ஜீ!


"ஒரு சட்டச் சிக்கலையும் இடைஞ்சலையும் தவிர்க்கத் தான் இப்படி இரண்டிரண்டு அடிகள் காலியாக விடப்பட்டுள்ளது.


அது என்ன என்பதை விபரமாக சொல்கிறேன் கேளுங்கள்!" என்று சொல்லி விட்டு பின் வருமாறு விளக்கினார்.


மிஹ்ராபுக்கு அடுத்து இரண்டு அடிகளை (காலியாக) விடாமல் போயிருந்தால், 

 (மக்கள் முதல் ஸஃப்பில் நின்று தொழும்போது) இமாம் முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்த வேண்டி வரும் அப்படி முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்துவது மக்ரூஹ் ஆகிவிடும்.


ஆனால் இமாம் மிஹ்ராபுக்கு வெளியே (பாதங்கள் இருக்குமாறு) நின்று தொழுகை நடத்தி ஸஜ்தாவை மிஹ்ராபில் செய்கிறார் என்றால், அது மக்ரூஹ் அல்ல.


எனவே மக்கள் பள்ளியின் முதல் ஸஃப்பில் தொழ வேண்டிய அவசியம் ஏற்படும் போது இமாம் (பாதம் உட்பட) முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்தும் மக்ரூஹான நிலையை தவிர்க்கத் தான் மிஹ்ராபுக்கும் முதல் ஸஃபுக்குமிடையில் இரண்டு அடிகள் விடப்பட்டுள்ளது (ஒரு அடி மட்டும் விட்டிருந்தாலும் அது போதுமானது தான்)


 ஆனால் ஒன்று; இமாம், மிஹ்ராபுக்கு நேராக (பள்ளியின்) முதல் ஸஃப்பில் நின்று தொழுகை நடத்த, மக்கள் (பள்ளியின்) இரண்வது ஸஃப்பில் நின்று தொழும்போது இந்த பிரச்சினை வராது ஏனென்றால் இமாம் முழுமையாக மிஹ்ராபுக்கு வெளியே தான் நிற்பார். 


மேலும் குர்ஆன் அலமாரிகள், ரேஹால்கள், தொழுகையாளிகளின் உடமைகள் ஆகியவற்றை வைக்கவும் எடுக்கவும் அந்த இடைவெளி கூடுதலாக பயன்படும்.


 அதேபோல் கடைசி ஸஃப்பின் பின்னால் இரண்டு அடிகள் இல்லாமல் போனால், சட்டச் சிக்கல் ஒன்றுமில்லை.


ஆனால் அந்தக் கடைசி ஸஃப்பில் நின்று தொழுபவர்கள், ருகூஃ மற்றும் ஸஜுக்கு செல்லும் போது (பின்னாலிருந்து சுவர் தட்டுவதால்) இடைஞ்சலாக இருக்குமல்லவா அதைத் தவிர்க்கவும் உள் பள்ளியின் கதவுகளை திறந்து நிறுத்தி வைக்கும் போது கடைசி ஸஃப்பில் நின்று தொழுபவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சலை தவிர்க்கவும் இந்த இடைவெளி உதவுமல்லவா? அதற்காகத்தான்."

என்று விளக்கினார் இமாம்.


ஓ அப்படியா...! அப்ப சரிதான்…! 


அப்ப நாம் கட்ட இருக்கும் பள்ளிவாசலையும் இந்த அம்சத்தில் தான் கட்டவேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டார்.

 


 குறிப்பு:- 


ஒரு பள்ளிவாசல் மேல் சொன்ன அமைப்பில் கட்டப்படவில்லை; மாறாக (மிஹ்ராபுக்கும் பள்ளியின் முதல் ஸஃப்பிற்கும் இடையில்  இடைவெளி இல்லாமல்) மிஹ்ராபுக்கு அடுத்து முதல் ஸஃப்பு துவங்கி விடும் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது அதில் மக்ரூஹை தவிர்க்க வேண்டும் என்றால் இமாம் எங்கு எப்படி நிற்பார்? என்று கேட்டால்,  அதற்கான பதில் இதோ!


அது போன்ற பள்ளிகளில்

 தொழுகையாளிகள் குறைவாக இருக்கும் (சாதாரண) சூழ்நிலையில் இமாம் , பள்ளியின் முதல் ஸஃப்பில் (மிஹ்ராபுக்கு நேராக உள்ள பகுதியில்) நின்று தொழுகை நடத்த மக்கள், இரண்டாவது ஸஃப்பில் நின்று தொழுது கொள்ள வேண்டும்.


 இதன் மூலம் மக்ரூஹ் தவிர்க்கப்படும்.


ஆனால் தொழும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது; இமாம் முன் ஸஃப்பில் நின்று தொழுகை நடத்தினால், சிலருக்கு இடம் கிடைக்காது என்ற சூழலில் (மட்டும்) இமாம் முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்துவது மக்ரூஹ் அல்ல என்று ஃபத்வாக்களில் கூறப்பட்டுள்ளது.


درر الحكام شرح غرر الأحكام (1 / 108):


(وَقِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ ۔۔۔۔۔۔۔۔۔)۔۔۔۔۔۔۔۔۔۔ يَعْنِي يُكْرَهُ قِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ وَحْدَهُ؛ لِأَنَّهُ تَشَبُّهٌ بِأَهْلِ الْكِتَابِ لَا قِيَامُهُ فِي الْخَارِجِ وَسُجُودُهُ فِيهِ لِانْتِفَاءِ سَبَبِ الْكَرَاهَةِ،


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 645):


(وَقِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ لَا سُجُودُهُ فِيهِ) وَقَدَمَاهُ خَارِجَة لِأَنَّ الْعِبْرَةَ لِلْقَدَمِ


الفتاوى الهندية (1 / 108):


وَيُكْرَهُ قِيَامُ الْإِمَامِ وَحْدَهُ فِي الطَّاقِ وَهُوَ الْمِحْرَابُ وَلَا يُكْرَهُ سُجُودُهُ فِيهِ إذَا كَانَ قَائِمًا خَارِجَ الْمِحْرَابِ هَكَذَا فِي التَّبْيِينِ وَإِذَا ضَاقَ الْمَسْجِدُ بِمَنْ خَلْفَ الْإِمَامِ فَلَا بَأْسَ بِأَنْ يَقُومَ فِي الطَّاقِ. كَذَا فِي الْفَتَاوَى الْبُرْهَانِيَّةِ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 36

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 36


ஒரு மாநாட்டில் இரவு சிறப்புரை நிகழ்த்தி விட்டு வாடகை காரில்  ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அந்த பிரபலமான ஆலிம்.

ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்ல அரை மணிநேரத்திற்கு முன்பு ஒரு ஊருக்குள் இருக்கும் பள்ளிவாசலை அடையாளம் சொல்லி அங்கு சென்றடைந்தனர்.

"வாருங்கள் நேரம் இருக்கிறது தஹஜ்ஜுத் தொழுது கொள்ளலாம்" என்று ஓட்டுனரை அழைத்தார் அந்த ஆலிம்.

அதற்கவர், "ஜீ! நான் இரவு புறப்படும் முன் இஷா தொழுத போது, வித்ரு தொழுகையும் முடித்து விட்டேனே;

வித்ரு தொழுத பிறகு எப்படி (தஹஜ்ஜுத்) நஃபில் தொழுவது? கூடாதுன்னு சொல்லுவாங்களே?" என்று பேச்சை வளர்த்தார் அவர்.

இமாம், அவரிடம் "வாங்க முதலில் தொழுவோம் பிறகு வந்து பேசுவோம்" என்று கூறி அழைத்துச் சென்றார்.

தொழுகை முடிந்த பிறகு இமாம், ஓட்டுனரிடம் ஜீ!

நல்லா தெரிஞ்சுக்கோங்க!

இஷாவுக்குப் பிறகிலிருந்து ஃபஜ்ருக்கு முன்னர் வரை இரவு தொழும் தொழுகைகளில் வித்ரு தொழுகையை கடைசியாக தொழுவது, (முஸ்தஹப்பான) விரும்பத்தக்க ஒரு காரியம் அவ்வளவுதான்.

அதற்காக; வித்ரு தொழுது விட்டால் அதன் பிறகு நஃபில் ஏதும் தொழக் கூடாது என்பது தவறாகும்.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு விழித்திடுவோம் என்ற உறுதி உள்ளவர் தஹஜ்ஜுத் தொழுது விட்டு வித்ரு தொழுது கொள்ள வேண்டும்.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு விழிக்காமல் போய்விடுவோமோ என்று அச்சப்படுபவர் தூங்கும் முன்பே வித்ரு தொழுது கொள்ள வேண்டியது.

அப்படி முன் கூட்டியே வித்ரு தொழுது (முடித்து) விட்டவர் தஹஜ்ஜுத் வேளையில் கண் விழித்தார் என்றால் தாராளமாக தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றலாம்.

"ஓ அப்படியா என்னுடைய தவறான புரிதலால் நிறைய நாட்கள் தஹஜ்ஜுத் தவறிவிட்டது இனி நான் அந்த வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்வேன்" என்றார் நன்றியுடன் அந்த ஓட்டுனர்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 369):


(وَ) تَأْخِيرُ (الْوِتْرِ إلَى آخِرِ اللَّيْلِ لِوَاثِقٍ بِالِانْتِبَاهِ) وَإِلَّا فَقَبْلَ النَّوْمِ، فَإِنْ فَاقَ وَصَلَّى نَوَافِلَ وَالْحَالُ أَنَّهُ صَلَّى الْوِتْرَ أَوَّلَ اللَّيْلِ فَإِنَّهُ الْأَفْضَلُ.


 (قَوْلُهُ: وَتَأْخِيرُ الْوِتْرِ إلَخْ) أَيْ يُسْتَحَبُّ تَأْخِيرُهُ، لِقَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «مَنْ خَافَ أَنْ لَا يُوتِرَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ» ) رَوَاهُ مُسْلِمٌ وَالتِّرْمِذِيُّ وَغَيْرُهُمَا وَتَمَامُهُ فِي الْحِلْيَةِ. وَفِي الصَّحِيحَيْنِ «اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ وِتْرًا» وَالْأَمْرُ لِلنَّدْبِ بِدَلِيلِ مَا قَبْلَهُ بَحْرٌ.


(قَوْلُهُ: فَإِنْ فَاقَ إلَخْ) أَيْ إذَا أَوْتَرَ قَبْلَ النَّوْمِ ثُمَّ اسْتَيْقَظَ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، وَلَا كَرَاهَةَ فِيهِ بَلْ هُوَ مَنْدُوبٌ، وَلَا يُعِيدُ الْوِتْرَ، لَكِنْ فَاتَهُ الْأَفْضَلُ الْمُفَادُ بِحَدِيثِ الصَّحِيحَيْنِ إمْدَادٌ

சனி, 23 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 35

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 35

கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்திய பின், நோய் தொற்று பரவலில் இருந்து ஓரளவு மீண்டு விட்ட நாடு அது.

மெல்ல மெல்ல தளர்வுகளை அறிவித்தது.

 தொழுகையில் (மாஸ்க்) முகக் கவசம் அவசியமில்லை என்பதும் அவற்றில் ஒன்று.

நோய் தொற்று பயமின்றி மக்கள் இயல்பாக தங்கள் அலுவல்களில் ஈடுபட்டனர். 

அதன்படி தொழுகையில் மாஸ்க் அணிவதையும் முற்றாக தவிர்த்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு குளிர் ஆரம்பித்தது. அப்போது தொழுகைக்கு வரும் சில வாலிபர்கள் துண்டு, மஃப்ளர் போன்றவற்றால் தங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொண்டு தொழுதனர்.

அவர்களைக் கவனித்த இமாம், "ஏன் எல்லோரும் சாதாரணமாக தொழுகைக்கு வரும் போது, நீங்கள் மட்டும் முகத்தை மறைத்துக் கொண்டு வந்து தொழுகிறீர்கள்?

கொரோனா பயம் இன்னும் போகலையா?" என்று கேட்டார்.

"இல்லீங்க! இமாம்! சும்மா..! குளிருதுன்னு மூடி இருக்கோம்; கொரானா பயம் எல்லாம் போயி ரொம்ப நாளாச்சு".என்றனர் அவர்கள்.

அப்படி இல்லீங்க தம்பிங்களா!

 "நோய் பரவல் பயம் இருந்த போது மாஸ்க் போட்டு முகத்தை மறைத்து தொழுவதற்கு அனுமதி இருந்தது.

ஆனால் (அது போன்ற தக்க காரணம் இல்லாமல்) குளிர் போன்ற சாதாரண விஷயத்துக்காக முகத்தை மறைத்து தொழுவது மக்ரூஹ் ஆகும். ஆகவே அப்படிச் செய்யாதீர்கள்!" என்று கூறினார்.

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 652):


يُكْرَهُ اشْتِمَالُ الصَّمَّاءِ وَالِاعْتِجَارُ وَالتَّلَثُّمُ وَالتَّنَخُّمُ وَكُلُّ عَمَلٍ قَلِيلٍ بِلَا عُذْرٍ؛


(قَوْلُهُ وَالتَّلَثُّمُ) وَهُوَ تَغْطِيَةُ الْأَنْفِ وَالْفَمِ فِي الصَّلَاةِ لِأَنَّهُ يُشْبِهُ فِعْلَ الْمَجُوسِ حَالَ عِبَادَتِهِمْ النِّيرَانَ زَيْلَعِيٌّ.


வெள்ளி, 22 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 34

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 34


மிகவும் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளது அந்தப் பள்ளிவாசல்.

ஒருநாள் இமாம் ஜுமுஆ பயான் செய்து கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்கு வெளியே ஒரே கூச்சல்.

 தொழுகைக்குப் பின், என்ன பிரச்சினை? என்று விசாரித்தில், பள்ளிவாசல் வாயிலில் ஒருவர் அத்தர், தொப்பி, தஸ்பீஹ், மிஸ்வாக் வியாபாரம் செய்துள்ளார்.  

அப்போது சிலர், "பாங்கு சொல்லிய பின்  வியாபாரம் செய்யக் கூடாது." என்றும் 

"பள்ளி வாசல் அருகில் தானே வியாபாரம் செய்கிறார்; (இமாம் குத்பா ஓதும் வரை செய்து விட்டு) அவரும் தொழத்தான் போகிறார். இதில்  என்ன பிரச்சினை?" என்று வேறு சிலரும் விவாதித்துக் கொண்டனர்; அதனால் தான் அந்தக் கூச்சல் என்பதை அறிந்து கொண்டார் இமாம்.

எனவே அந்த தொப்பி வியாபாரியை அழைத்து "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கவர், தொழுகைக்கு முன் வியாபாரம் நல்லா இருந்திச்சி எனவே குத்பா பாங்கு சொல்லும் வரை செய்யலாம் என்று நினைத்தேன் என்றார்.

அதற்கு இமாம்,

 அப்படி இல்லீங்க ஜீ!

 "ஜுமுஆ நாளன்று முதல் பாங்கு சொல்லியதிலிருந்து தொழுகை முடியும் வரை வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் பள்ளிவாசலுக்குள் செய்வது கூடுதல் குற்றமாகி விடும்.

எனவே இனிமேல் தொழுகைக்கு முன் (ஜுமுஆ முதல் பாங்கு சொல்லிய பின்) வியாபாரம் செய்யாதீர்கள்!." என்று தெளிவு படுத்தினார்.




الفتاوى الهندية (3/ 211):

وكره البيع عند أذان الجمعة والمعتبر الأذان بعد الزوال، كذا في الكافي.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 161):

(ووجب سعي إليها وترك البيع) ولو مع السعي، في المسجد أعظم وزراً (بالأذان الأول) في الأصح، وإن لم يكن في زمن الرسول بل في زمن عثمان. وأفاد في البحر صحة إطلاق الحرمة على المكروه تحريماً۔

(قوله: ووجب سعي) لم يقل افترض مع أنه فرض للاختلاف في وقته هل هو الأذان الأول أو الثاني؟ أو العبرة لدخول الوقت؟ بحر.

وحاصله أن السعي نفسه فرض والواجب كونه في وقت الأذان الأول،

(قوله: وفي المسجد) أو على بابه، بحر (قوله: في الأصح) قال في شرح المنية: واختلفوا في المراد بالأذان الأول، فقيل: الأول باعتبار المشروعية، وهو الذي بين يدي المنبر؛ لأنه الذي كان أولاً في زمنه  عليه الصلاة والسلام  وزمن أبي بكر وعمر حتى أحدث عثمان الأذان الثاني على الزوراء حين كثر الناس. والأصح أنه الأول باعتبار الوقت، وهو الذي يكون على المنارة بعد الزوال. اهـ.


வடகரை தாவூதி ஆலிம் பதில் 33

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 33

ஆலிமகள் நிறைந்த ஊர் அது. 

ஒருநாள் அதி காலையில் (ஃபஜ்ர் தொழுகைக்கு) எழுந்ததும் ஒரு  தகவல் தங்கள் மொபைலில் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர் ஊர் மக்கள்.

பலநூறு ஆலிம்களுக்கு ஆசிரியராகவும் பொது மக்களிடம் பெருமதிப்பு பெற்றவருமான 'ஆலிம்' ஒருவரின் வஃபாத் செய்திதான் அது.

ஃபஜ்ர் தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலில்  உலமாக்களும் உமராக்களும் ஒன்று கூடி, குர்ஆன் ஓதி, துஆ செய்தனர். 

மஜ்லிஸ் இடையே ஒரு சிலர் தாங்கள் குர்ஆனில் ஓதிய 'ஸஜ்தா' ஆயத்துக்காக 'ஸஜ்தா திலாவத்' செய்வதைப் பார்த்து, "ஃபஜ்ர் மற்றும் அஸ்ருக்குப்பிறகு 'ஸஜ்தா திலாவத்' செய்யக் கூடாதுல்ல?" என்று சந்தேகமாக கேட்டார் ஒருவர்.

அருகிலிருந்த இன்னொருவர், அப்படி இல்லீங்க ஜீ!  

ஃபஜ்ர் மற்றும் அஸ்ருக்குப் பிறகு, நஃபில் தொழுவது தான் தடுக்கப்பட்டுள்ளது; 'ஸஜ்தா திலாவத்' தாராளமாக செய்யலாம்.

ஆனால் சூரிய உதயம், சூரிய உச்சம் மற்றும் சூரிய மறைவு நேரங்களில் ஸஜ்தா திலாவத் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 குறிப்பு:- ஸஜ்தாவுடைய ஆயத்தை குறித்த அந்த மூன்று (சூரிய உதயம், சூரிய உச்சம் மற்றும் சூரிய மறைவு) நேரங்களில் தான் ஓதினார் என்றால், அந்த நேரத்தில் 'ஸஜ்தா திலாவத்' செய்வது அவருக்கு மக்ரூஹ் அல்ல.



مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 74):


(وَ) مُنِعَ (عَنْ التَّنَفُّلِ وَرَكْعَتِي الطَّوَافِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَالْعَصْرِ)

لِمَا ثَبَتَ أَنَّ النَّبِيَّ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - نَهَى عَنْ الصَّلَاةِ فِي هَذَيْنِ الْوَقْتَيْنِ (لَا عَنْ قَضَاءِ فَائِتَةٍ وَسَجْدَةِ تِلَاوَةٍ وَصَلَاةِ جِنَازَةٍ) ؛


درر الحكام شرح غرر الأحكام (1 / 53):


(لَا تَصِحُّ صَلَاةٌ وَسَجْدَةُ تِلَاوَةٍ كَانَتْ) تِلْكَ التِّلَاوَةُ (فِي) الْوَقْتِ (الْكَامِلِ وَصَلَاةُ جِنَازَةٍ حَضَرَتْ قَبْلَ) أَيْ قَبْلَ الْأَوْقَاتِ 

الَّتِي ذُكِرَتْ بِقَوْلِهِ (حَالَ الطُّلُوعِ، وَالِاسْتِوَاءِ، وَالْغُرُوبِ) وَهُوَ ظَرْفٌ لِقَوْلِهِ لَا تَصِحُّ (إلَّا عَصْرَ يَوْمِهِ)


درر الحكام شرح غرر الأحكام (1 / 53):

قَالُوا الْمُرَادُ بِسَجْدَةِ التِّلَاوَةِ مَا تَلَاهَا قَبْلَ هَذِهِ الْأَوْقَاتِ لِأَنَّهَا وَجَبَتْ كَامِلَةً فَلَا تَتَأَدَّى بِالنَّاقِصِ وَأَمَّا إذَا تَلَاهَا فِيهَا فَجَازَ أَدَاؤُهَا فِيهَا بِلَا كَرَاهَةٍ.


வடகரை தாவூதி ஆலிம் பதில் 32

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 32

ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள அதிகாலை நான்கு மணிக்கே நண்பர்கள் சிலர் காரில் புறப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து, வாகனம் ஓட்டுபவர், அழகாக குர்ஆன் ஓதும் காரி ஒருவரின் ஒலிப்பதிவை ஆன் செய்தார்.

30- வது ஜுஸ்வு முழுவதையும் ஓதக்கேட்டனர்.

 ஃபஜ்ர் தொழுகைக்காக ஒரு பள்ளிவாசலை நெருங்கிய போது,

 "ஆமா! இப்ப இரண்டு இடத்தில் ஸஜ்தா ஆயத்துக்களை ஓதக்கேட்டுள்ளோம் அதனால் நாம் 'ஸஜ்தா திலாவத்' செய்ய வேண்டுமா?" என்று கேட்டார் ஒரு நண்பர்.

அதற்கு அந்த ஓட்டுனர், 

அப்படி இல்லீங்க ஜீ!

இதைப்பற்றி ஏற்கனவே நான் நம்ம இமாமிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.

"பதிவுகள் மூலம் ஓதக் கேட்பது, எதிரொலி போலத்தான். அதனால் 'ஸஜ்தா திலாவத்' வாஜிபு ஆகாது."

என்று கூறியிருக்கிறார்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 129):


 وَكَذَا تَجِبُ عَلَى السَّامِعِ بِتِلَاوَةِ هَؤُلَاءِ إلَّا الْمَجْنُونِ لِعَدَمِ أَهْلِيَّتِهِ لِانْعِدَامِ التَّمْيِيزِ كَالسَّمَاعِ مِنْ الصَّدَى كَذَا فِي الْبَدَائِعِ وَالصَّدَى مَا يُعَارِضُ الصَّوْتَ فِي الْأَمَاكِنِ الْخَالِيَةِ،

வடகரை தாவூதி ஆலிம் பதில் 31

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 31


தன் தாய் வழி பாட்டனார் வஃபாத்துக்கு ஊர் சென்றிருந்தார் மத்ரஸாவில் ஓதும் பட்ட வகுப்பு மாணவர்.

குறித்த நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்த மக்கள் தயாராகி விட்டார்கள் ஆனால் வெளியூர் சென்றிருந்த இமாம் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

சிறிது நேரம் எதிர்பார்த்த பின் உறவினர் சிலர், "இறந்து போனவரின் பேரன், அஸரத்து தானே; அவர் ஜனாஸா தொழுகை நடத்தட்டும்!" என்று கூறி அவரை முன் நிறுத்தி விட்டார்கள்.

பதற்றத்துடன் தொழுகை நடத்திய அவர், மூன்று தக்பீர்களுடன் சலாம் கொடுத்து விட்டார்.

தொழுகை கூடுமா?  கூடாதா? என்ற விவாதங்கள் துவங்கின. 

வந்து கொண்டிருக்கும் இமாமிடம் போன் செய்த முத்தவல்லி நடந்த நிகழ்வைக் கூறி, "ஒரு தக்பீர்தானே விடு பட்டது தொழுகை கூடிவிடும்தானே ஹஜ்ரத்!" என்று கேட்டார்.

அதற்கு அந்த இமாம்,

அப்படி இல்லீங்க ஜீ!

ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் ஃபர்ள் ஆகும். எனவே ஒன்று குறைந்தாலும் தொழுகை கூடாது. திரும்பத் தொழுகை நடத்துவது அவசியம் என்றார்.

அதன் படி மறுபடியும் ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

குறிப்பு:- மறதியாக மூன்றாவது தக்பீருக்குப் பின் ஸலாம் கொடுக்கும் போது பின்னால் தொழுபவர்கள் தஸ்பீஹ் கூறி ஞாபகப் படுத்த, இமாம் நான்காவது தக்பீர் சொல்லி (பிறகு ஸலாம் கொடுத்து) விட்டார் என்றால் தொழுகை கூடிவிடும்.

திரும்பவும் தொழுகை நடத்த வேண்டியதில்லை.


الفتاوى الهندية (1 / 164):

وَصَلَاةُ الْجِنَازَةِ أَرْبَعُ تَكْبِيرَاتٍ وَلَوْ تَرَكَ وَاحِدَةً مِنْهَا لَمْ تَجُزْ صَلَاتُهُ، هَكَذَا فِي الْكَافِي.


الفتاوى الهندية (1 / 165):

وَلَوْ سَلَّمَ الْإِمَامُ بَعْدَ الثَّالِثَةِ نَاسِيًا كَبَّرَ الرَّابِعَةَ وَيُسَلِّمُ، 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 30

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 30

கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வந்து தொழும் பள்ளிவாசல் அது.

இரு கண்களையும் மூடிக்கொண்டு மிக உள்ளச்சத்துடன் தொழுது கொண்டிருந்தார் ஒரு வாலிபர்.

இதைப் பார்த்த இரண்டு மாணவர்கள்,  தொழுகையில் கண்களை மூடிக் கொள்வது பற்றி தங்களுக்குள் தர்க்கம் செய்து கொண்டனர்.

ஒருவர் அப்படி தொழக் கூடாது என்றார்; மற்றவர் அதனால் ஒன்றுமில்லை தொழுவலாம் என்றார்.

இருவரும் இஷா தொழுகைக்கைக்குப்பின் இமாமை அணுகி தங்கள் கருத்துக்களை சொல்லி, எது சரி? என்று கேட்டனர்.

"சாதாரணமாக கண் மூடி தொழுவது மக்ரூஹ் ஆகும்.

 ஆனால் ஒருவருக்கு தொழுகையில் கண்களை மூடினால் தான் கவனம் மற்றும் மன ஓர்மை ஏற்படுகிறது என்றால்   (அவர், அந்த நோக்கத்தில் அப்படிச் செய்வது) தவறில்லை." என்றார் இமாம்.


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 130):

و" يكره "تغميض عينه" إلا لمصلحة لقوله صلى الله عليه وسلم: "إذا قام في الصلاة فلا يغمض عينيه" لأنه يفوت النظر للمحل المندوب ولكل عضو وطرف حظ من العبادة


مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 124):

(وَتَغْمِيضُ عَيْنَيْهِ) لِلنَّهْيِ عَنْهُ إلَّا إذَا قَصَدَ قَطْعَ النَّظَرِ عَنْ الْأَغْيَارِ وَالتَّوَجُّهَ إلَى جَنَابِ الْمَلِكِ السَّتَّارِ،

வடகரை தாவூதி ஆலிம் பதில் 29

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 29


வெளியூரில் இமாமாக வேலை செய்யும் ஆலிம் ஒருவர் தன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அந்த ஊரில் மூன்று பள்ளிவாசல்கள். அனைத்து பள்ளிவாசல்களின் பாங்கு சப்தமும் அவர் வீட்டில் இருப்பவர் காதில் விழும்.

 கண்பார்வை இழந்த அவரின் தந்தை, சில நாட்களாக வீட்டிலேயே தொழுகையை நிறைவேற்றி வந்தார். 

அனைத்து பள்ளிவாசல்களின் பாங்கும் சொல்லப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் பதில் கூறிய பின்னரே தொழுகையை நிறைவேற்றும் பழக்கம் கொண்டிருந்தார் அவர். 

அதைக் கவனித்த அந்த ஆலிம் "நீங்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை.  முதல் பாங்கிற்கு மட்டும் பதில் சொன்னால் போதும் அடுத்து நீங்கள் தொழுது கொள்ளலாம்." என்று விளக்கமளித்தார்.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 202):


 "وإذا تعدد الأذان يجيب الأول" مطلقا سواء كان مؤذن مسجده أم لا لأنه حيث سمع الأذان ندبت له الإجابة ثم لا يتكرر عليه في الأصح ذكره الشهاب في شرح الشفاء

வடகரை தாவூதி ஆலிம் பதில் 28

   வடகரை தாவூதி ஆலிம் பதில் 28

சில நாட்களாக கடுமையான சளி, இருமலால் சிரமப்பட்டார் அந்த முஅத்தின்.

சிகிச்சைக்காக ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின் மறுபடியும் பாங்கு சொல்ல  "மைக்" முன் போய் நின்றார்.

பாங்கின் சில வாக்கியங்களைத்தான் சொல்லி இருப்பார்; அதற்குள் விடா இருமல் தொற்றிக் கொண்டது. 

அடுத்த வாக்கியம் சொல்ல முடியாமல் திணறினார்.

இதை உணர்ந்த அவர் மகன், அவரை விலக்கி விட்டு, (பாங்கின்) மீதமுள்ள வாக்கியங்களை சொல்லி ஒரு வழியாக பாங்கை நிறைவு செய்தார்.

தன் அறையில் இருந்து வெளியே வந்த இமாம், முஅத்தின் மகனை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அதன் பின்னர், "நல்லா தெரிஞ்சுக்கோங்க!

பாங்கு சொல்பவர், ஏதேனும் காரணத்தால் தொடரமுடியாமல் போனால், இன்னொருவர் சென்று, பாங்கை (ஆரம்பத்தில் இருந்து) புதிதாக சொல்ல வேண்டும். மாறாக அவர் விட்டதிலிருந்து (மட்டும்) சொன்னால் பாங்கு (சொல்லிய சுன்னத்) நிறைவேறாது." என்று சட்ட விளக்கம் தந்தார்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 393):


أَقُولُ: يَظْهَرُ لِي أَنَّ الْمُرَادَ بِالْوُجُوبِ اللُّزُومُ فِي تَحْصِيلِ سُنَّةِ الْأَذَانِ، وَأَنَّ الْمُرَادَ أَنَّهُ إذَا عَرَضَ لِلْمُؤَذِّنِ مَا يَمْنَعُهُ عَنْ الْإِتْمَامِ وَأَرَادَ آخَرُ أَنْ يُؤَذِّنَ يَلْزَمُهُ اسْتِقْبَالُ الْأَذَانِ مِنْ أَوَّلِهِ إنْ أَرَادَ إقَامَةَ سُنَّةِ الْأَذَانِ، فَلَوْ بَنَى عَلَى مَا مَضَى مِنْ أَذَانِ الْأَوَّلِ لَمْ يَصِحَّ فَلِذَا قَالَ فِي الْخَانِيَّةِ: لَوْ عَجَزَ عَنْ الْإِتْمَامِ اسْتَقْبَلَ غَيْرهُ. اهـ. أَيْ لِئَلَّا يَكُونَ آتِيًا بِبَعْضِ الْأَذَانِ.


வடகரை தாவூதி ஆலிம் பதில் 27

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 27

வெள்ளிக் கிழமை ஒரு ஜனாஸாவில்  கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தார் ஒரு பெரியவர். 

அப்படியே ஜுமுஆ தொழுகை முடிந்ததும் ஊர் திரும்பலாம் என்று முடிவு செய்து முதல் நபராக முன் ஸஃப்பில் வந்து அமர்ந்து கொண்டார்.

முதல் பாங்கு மற்றும் பயான் முடிந்து, (குத்பாவுக்காக) இரண்டாம் பாங்கு சொல்லும் போது, ஒவ்வொரு வாக்கியத்திற்கும் (அருகில் இருப்பவர்கள் காதில் விழும்படி) பதில்கள் கூறிக் கொண்டே இருந்தார்.

அருகில் இருந்த இன்னொரு இமாம் இதை கவனித்துக் கொண்டார்.

தொழுகை முடிந்ததும் அவரிடம் "பாய்! ஜுமுஆ நாளன்று சொல்லப்படும் இரண்டாவது பாங்கிற்கு நாவால் பதில் சொல்வது கூடாது; மனதால் மட்டும் சொல்வதே போதும்." என்று பக்குவமாய் எடுத்துச் சொன்னார்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 399):


 وَيَنْبَغِي أَنْ لَا يُجِيبَ بِلِسَانِهِ اتِّفَاقًا فِي الْأَذَانِ بَيْنَ يَدَيْ الْخَطِيبِ


வியாழன், 14 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 26

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 26


அந்தப் பள்ளிவாசலுக்கு புதிதாக பணியில் சேர்ந்த முஅத்தின் அவர்.

ஒரு நாள் அஸ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லி முடித்ததும் முத்தவல்லி அவரை அழைத்து, ஹவ்ளில் தண்ணீர் மிக குறைந்திருந்தது என்பதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பது பற்றியும் இல்லாவிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பது பற்றியும் விபரமாக சொல்லிக் கொண்டிருந்தார். 

 ஜமாஅத் தொழுகைக்கு நேரம் நெருங்கியது, இகாமத் சொல்ல வேண்டும் முஅத்தின் இல்லை என்பதால், முன் ஸஃப்பில் இருந்த வேறொருவர் இகாமத் சொல்ல, தொழுகை நடந்து முடிந்தது.

 அடுத்து நாள் லுஹர் தொழுகைக்கு பாங்கு சொன்ன முஅத்தின், "இகாமத்" நேரத்தை எதிர்பார்த்து நிற்கும் சூழலில், நேற்று அஸ்ரில் இகாமத் சொன்னவர், சட்டென்று எழுந்து இகாமத் சொல்லி விட்டார்.


தொழுகை முடிந்த பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

"பாங்கு சொன்ன நான் தானே "இகாமத்" சொல்லனும்" என்று முஅத்தின் கூற, "ஏன்? நேற்று நான் "இகாமத்" சொன்னேன்; இமாம் கூட ஒன்றும் சொல்லவில்லையே" என்று இவர் கூற, முடிவில்லாமல் பேச்சு நீண்டது.

"இகாமத்" என்பது பாங்கு சொன்னவரின் உரிமை. 

எனவே அவர் இல்லாத சூழலில்  அல்லது அவர் அனுமதியுடன் அல்லது அவர், (அனுமதியின்றி சொன்னாலும்) மனம் வருத்தம் அடையமாட்டார் என்ற சூழலில் மற்றவர் "இகாமத்" சொல்லலாம்.

மாறாக "பாங்கு" சொன்னவர் "இகாமத்" சொல்ல ஆர்வமாகவும் தயாராகவும் இருக்கும் சூழலில் வேறொருவர் "இகாமத்" சொல்வது மக்ரூஹ் ஆகும்.

எனவே, முதல் நாள் முஅத்தின் இல்லாத போது "இகாமத்" சொன்னது தவறில்லை.

இரண்டாம் நாள் (முஅத்தின்) அவர் தயாராக காத்திருக்கும் போது நீங்கள் அவசரமாக எழுந்து சொன்னது தவறு. 

இனி அப்படி சொல்ல விருப்பமிருந்தால் முஅத்தினிடம் அனுமதி வாங்கி சொல்லலாம் தவறில்லை. என்று பஞ்சாயத்து செய்தார் இமாம்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 395):


(أَقَامَ غَيْرُ مَنْ أَذَّنَ بِغَيْبَتِهِ) أَيْ الْمُؤَذِّنِ (لَا يُكْرَهُ مُطْلَقًا) وَإِنْ بِحُضُورِهِ كُرِهَ إنْ لَحِقَهُ وَحْشَةٌ،

வடகரை தாவூதி ஆலிம் பதில் 25

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 25


அந்த நகரின் எல்லையில் பெரிய (ஃபர்னிச்சர்) கடை வைத்திருக்கும் இளைஞர் அவர்.

ஊரடங்கின் காரணமாக பள்ளிவாசலில் பொது ஜமாஅத் அனுமதிக்கப்படாத காலத்தில், தானும் தன் வேலையாட்களும் தொழுத விதங்கள் பற்றி இமாமிடம் நினைவு கூர்ந்தார்.

நாங்கள் கடையிலேயே ஜமாஅத்தாக தொழுது கொண்டோம். என்ன ஒரு மனக்குறை என்றால், வேலை செய்யும் ஒருத்தரும் இகாமத் சொல்ல முன் வருவதில்லை. இவர், அவரை "கை" காட்டுவார். அவர், இவரை "கை" காட்டுவார்; கடைசியில் நானே இகாமத் சொல்லி நானே இமாமாக நின்று தொழுகையும் நடத்துவேன். 

இப்படி செய்தது மட்டும்தான் குழப்பமாகவும் மனதுக்கு வருத்தமாகவும் இருக்கிறது என்று கூறினார். 

அப்போது இமாம் குறுக்கிட்டு "இகாமத் சொல்ல வேறொருவர் (தயாராக) இல்லாத சூழலில் இமாமாக நிற்பவர் இகாமத் சொல்வது ஒன்றும் தவறில்லை தாராளமாக தொழுகை கூடிவிடும் குழப்பமும் வேண்டாம் வருத்தமும் வேண்டாம்" என்று கூறி அவரை ஆறுதல் படுத்தினார்.


الفتاوى الهندية (1 / 57):


 وَإِنْ كَانَ الْمُؤَذِّنُ وَالْإِمَامُ وَاحِدٌ فَإِنْ أَقَامَ فِي الْمَسْجِدِ فَالْقَوْمُ لَا يَقُومُونَ مَا لَمْ يَفْرُغْ مِنْ الْإِقَامَةِ


                                                                                                                                      مصنف ابن أبي شيبة (6 / 146):


عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَلَمَّا طَلَعَ الْفَجْرُ أَذَّنَ وَأَقَامَ، ثُمَّ أَقَامَنِي عَنْ يَمِينِهِ۔۔۔۔

வடகரை தாவூதி ஆலிம் பதில் 24

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 24

"பொது நடமாட்டக் கட்டுப்பாடு" முடிவுக்கு வந்த பிறகு பள்ளிவாசல்களில் இயல்பாக தொழும் வாய்ப்பு ஏற்பட்டு, சில நாட்கள்தான் ஆகியிருக்கும். 

ஹிஃபளு மத்ரஸா மாணவரான 10 வயது பேரனை இமாமிடம் அழைத்து வந்து,  "பள்ளிவாசலில் இமாமாக நின்று தொழுகை நடத்த இவருக்கு ஒரு நேரம் வாய்ப்பு கொடுங்களேன்! 

பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர்தான் வீட்டில் இமாமாக நின்று தொழுகை நடத்தினார். 

நல்ல பயிற்சி எடுத்துள்ளார், அழகாகவும் ஓதுவார் என் பேரன்" என்றார் ஒரு பெரியவர்.

இமாமத் என்பது நீங்க நினைக்கிற மாதிரி இல்லை ஜீ!

பருவ வயதை அடையாதவர் ஃபர்ள் தொழுகைக்கு இமாமாக ஆகமுடியாது ஏனென்றால், சிறுவர்கள் மீது தொழுகை கடமை இல்லை. எனவே அவர்கள் ஃபர்ள் தொழுதாலும் அவர்களுக்கு அது நஃபில் ஆகும்; நஃபில் தொழுபவர் இமாமாகவும் ஃபர்ள் தொழுபவர் அவரை பின்பற்றுபவராகவும் இருப்பது முறையல்ல. 

நீங்கள் வீட்டில் அவரை இமாமாக நிறுத்தி தொழுதது சரியல்ல என்று பக்குவமாய் உணர்த்தினார் இமாம.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (1 / 380):


وَأَمَّا إمَامَةُ الصَّبِيِّ فَلِأَنَّ صَلَاتَهُ نَفْلٌ لِعَدَمِ التَّكْلِيفِ فَلَا يَجُوزُ بِنَاءُ الْفَرْضِ عَلَيْهِ لِمَا سَيَأْتِي،


فتاوی تاتارخانیه :


"ولا تجوز إمامة الصبي في صلاۃ الفرض." (251/2)

வடகரை தாவூதி ஆலிம் பதில் 23

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 23

பெரும் வியாதியில் பாதிக்கப்பட்டு, பல சிரமங்களை கடந்து, இறையருளால் சுகம் பெற்று மறுபடியும் மத்ரஸா வந்திருந்தார் ஒரு (தஹ்ஸீல்) பட்ட வகுப்பு மாணவர்.

 ஃபர்ள் தொழுகை முடிந்ததும் சிறிது நேரம் தனியாக ஸஜ்தா மட்டும் செய்து அமர்வதை கவனித்த வகுப்புத் தோழர் ஒருவர், "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளார். 

"அபாய கட்டத்தில் இருந்த என்னைக் காப்பாற்றிய அல்லாவுஹ்க்கு நன்றி செலுத்த வேண்டாமா? அதான் "ஸஜ்தா ஷுக்ர்" செய்கின்றேன், இதிலொன்றும் தவறு இல்லையே" என்று பதில் கூறினார் அந்த மாணவர்.

 இறைவனுக்கு நன்றி செலுத்த, இரண்டு ரக்அத்துகள் (நஃபில்) தொழுங்கள்! அது மிகச் சிறப்பு இல்லாவிடில் "ஸஜ்தா ஷுக்ரை" (ஃபர்ள் தொழுகை முடிந்ததும் உடனே செய்யாமல்) சற்று தாமதமாக தனியாக செய்து கொள்ளுங்கள்! 

நீங்கள் செய்வது போல் தொழுகைக்குப் பின் "ஸஜ்தா ஷுக்ர்" செய்வது மக்ரூஹ் ஆகும்.

ஏனென்றால் விபரம் இல்லாத மக்கள் நீங்கள் செய்வதைப் பார்த்து, தொழுகைக்குப் பின் இப்படிச் செய்வது வாஜிப் என்றோ சுன்னத் என்றோ விளங்கிக் கொள்ள வழி ஏற்படலாம் என்று ஃபிக்ஹ் கிதாபில் நாம் படித்தது ஞாபகமில்லையா? என்றார் அந்தத் தோழர்.

அட ஆமால்ல! என்று கூறி, அன்றிலிருந்து அவ்வாறு செய்வதை  தவிர்த்துக் கொண்டார்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 120):


وَسَجْدَةُ الشُّكْرِ: مُسْتَحَبَّةٌ بِهِ يُفْتَى،

لَكِنَّهَا تُكْرَهُ بَعْدَ الصَّلَاةِ لِأَنَّ الْجَهَلَةَ يَعْتَقِدُونَهَا سُنَّةً أَوْ وَاجِبَةً وَكُلُّ مُبَاحٍ يُؤَدِّي إلَيْهِ فَمَكْرُوهٌ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 119):


 (قَوْلُهُ وَسَجْدَةُ الشُّكْرِ)....... وَهِيَ لِمَنْ تَجَدَّدَتْ عِنْدَهُ نِعْمَةٌ ظَاهِرَةٌ أَوْ رَزَقَهُ اللَّهُ تَعَالَى مَالًا أَوْ وَلَدًا أَوْ انْدَفَعَتْ عَنْهُ نِقْمَةٌ وَنَحْوُ ذَلِكَ يُسْتَحَبُّ لَهُ أَنْ يَسْجُدَ لِلَّهِ تَعَالَى شُكْرًا مُسْتَقْبِلَ الْقِبْلَةِ يَحْمَدُ اللَّهَ تَعَالَى فِيهَا وَيُسَبِّحُهُ ثُمَّ يُكَبِّرُ فَيَرْفَعُ رَأْسَهُ كَمَا فِي سَجْدَةِ التِّلَاوَةِ سِرَاجٌ


ஞாயிறு, 10 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 22

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 22

நீண்ட காலம் முஅத்தினாக பணிபுரியும் பெரியவர் அவர். தொழுகை "களா" என்பது அவருக்கு ஏற்பட்டதே இல்லை. 

அருகிலுள்ள ஒரு ஊரில் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  மகளைப் பார்க்க சென்று வந்தாலும் ரயிலிலேயே நேரத்திற்கு தொழுது விடும் வழமை கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் ரயிலில் கடுமையான நெரிசல் மற்றும் தாமதத்தின் காரணமாக (லுஹர் தொழுகை தவறிய நிலையில்) அஸ்ர் பாங்கு சொல்லிய பின்புதான் வந்து சேர்ந்தார்.

தினமும் அஸ்ர் தொழுகை முடிந்ததும் இமாமுக்கு "டீ" இவர்தான் வாங்கி வருவார். 

எனவே இமாமிடம் சென்று லுஹர் களாவாகி விட்டது தொழுது விட்டு "டீ" வாங்கி தருகிறேன் என்று சொல்லிச் சென்றவர், 20 நிமிடங்கள் கழித்து இமாமிடம் வந்து நின்றார்.

"இவ்வளவு நேரம் என்னங்க செஞ்சீங்க?" என்றார் இமாம்.

ஏங்க, 12 ரக்அத் தொழுவனும்னா இவ்வளவு நேரம் ஆகாதுங்களா? என்றார் அவர்.

சரியாப்போச்சு என்று கூறிய இமாம் அவரை உட்கார வைத்து "களா" தொழுகை பற்றி சிறிது நேரம் பாடம் நடத்தினார்.

இதோ அந்தப் பாடத்தின் சுருக்கம்.

முதல் விஷயம்:- "அஸ்ர் தொழுகைக்கு பிறகு சுன்னத், நஃபில் தொழுகை ஏதும் தொழக் கூடாது." சரிங்களா?

அடுத்து "களா" என்பது (ஃபர்ள் மற்றும் வாஜிபுகளுக்கு மட்டும் தான்)

சுன்னத், நஃபில்களுக்கு களா இல்லை.

ஃபஜ்ர் தொழுகையில் மட்டும் ஃபர்ள் தொழுகையும் சேர்ந்து தவறிப் போனால் அதுவும் அன்றைய (ஜவால்) சூரிய உச்சிப் பொழுதுக்கு முன்பே "களா" செய்தால் மட்டும் முதலில் "சுன்னத்" பிறகு "ஃபர்ள்" என "களா" செய்ய வேண்டும். 

அதை விட தாமதமாக "களா" செய்தாலோ அல்லது நாட்கள் கடந்து "களா" செய்தாலோ வெறும் ஃபர்ள் மட்டுமே "களா" செய்ய வேண்டும்.

ஃபஜ்ரில் சுன்னத் மட்டும் தவறிப் போனது என்றால்

"இஷ்ராக்" வக்து துவங்கியதிலிருந்து அன்றைய (ஜவால்) சூரிய உச்சிப் பொழுதுக்கு முன்னால் "களா" செய்ய அனுமதி உண்டு.

அதை விட தாமதமாக ஃபஜ்ருடைய சுன்னத் (ஆனாலும்) தனியாக "களா" செய்ய அனுமதி இல்லை.

லுஹர் தொழுகையின் அல்லது ஜுமுஆவின் முன் சுன்னத் தவறி விட்டால் ஃபர்ள் முடிந்த பிறகு வக்துக்குள்ளாக மட்டும் "களா" செய்ய அனுமதி உண்டு.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 453):

"ولم تقض سنة الفجر إلا بفوتها مع الفرض" إلى الزوال وقال محمد رحمه الله تقضى منفردة بعد الشمس قبل الزوال فلا قضاء لها قبل الشمس ولا بعد الزوال اتفاقا وسواء صلى منفردا أو بجماعة "وقضى السنة التي قبل الظهر" في الصحيح "في وقته قبل" صلاة "شفعة" على المفتي به كذا في شرح الكنز للعلامة المقدسي وفي فتاوى العتابي المختار تقديم الاثنتين على الأربع


سنن الترمذي ت شاكر (2 / 291):

عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلَّاهُنَّ بَعْدَهَا»


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 59):


 (وَلَا يَقْضِيهَا إلَّا بِطَرِيقِ التَّبَعِيَّةِ ل) قَضَاءِ (فَرْضِهَا قَبْلَ الزَّوَالِ لَا بَعْدَهُ فِي الْأَصَحِّ) لِوُرُودِ الْخَبَرِ بِقَضَائِهَا فِي الْوَقْتِ الْمُهْمَلِ، بِخِلَافِ الْقِيَاسِ فَغَيْرُهُ عَلَيْهِ لَا يُقَاسُ (بِخِلَافِ سُنَّةِ الظُّهْرِ) وَكَذَا الْجُمُعَةُ (فَإِنَّهُ) إنْ خَافَ فَوْتَ رَكْعَةٍ (يَتْرُكُهَا) وَيَقْتَدِي (ثُمَّ يَأْتِي بِهَا) عَلَى أَنَّهَا سُنَّةٌ (فِي وَقْتِهِ) أَيْ الظُّهْرِ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 21

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 21

சொந்தமாக தொழில் செய்யும் திறமையான ஆலிம் அவர்.

சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு சொந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

செல்லும் வழியில் சாலை ஓரமாக ஒரு சிறிய பள்ளிவாசலைப் பார்த்ததும் லுஹர் தொழுகையை தொழுது விடலாம் என்று உள்ளே சென்றார்.

அந்தப் பள்ளிவாசலுக்கு தனி இமாம் கிடையாது. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் முஸ்லிம் சகோதரர்கள் மூவர் மட்டும் வந்து தனியாக தொழுது விட்டுச் செல்வர்.

ஆகவே இந்த ஆலிமை பார்த்த அந்த மூவருக்கும் இன்று ஜமாஅத்தாக தொழப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி.

ஆலிம் ஷா! இந்த பள்ளிவாசலுக்கு இமாம் கிடையாது நீங்கள் இமாமாக நின்று எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்  என்றனர் அந்த மூவர்.

அப்படியா?அப்படியானால், நான் "முஸாஃபிர்" அதாவது, பயணத்தில் இருக்கிறேன் எனவே  இரண்டு ரக்அத்தில் நான் ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக் கொள்வேன். 

நீங்கள் ஸலாம் கொடுக்காமல் எழுந்து, (நிலை நிற்கும்போது ஏதும் ஓதாமல்) இமாமுடனே தொழுவது போல தொழுது மீதம் இரண்டு ரக்அத்துகளை நிறைவு செய்யுங்கள் என்று ஆலிம் கூறினார். 

அதன் படியே அந்த மூவரும் தொழுது முடித்தனர்.


"وصح اقتداء المقیم بالمسافر في الوقت، وبعده فإذا قام المقیم إلی الإتمام لایقرأ، ولایسجد للسهو في الأصح؛ لأنه کاللاحق "․  (ردالمحتار علی الدرالمختار، كتاب الصلاة ، باب صلاة المسافر ۲/۱۲۹ط: سعید)


வியாழன், 7 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 20

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 20

ஜுமுஆ தொழுகை முடிந்ததும் இமாமின் கையை பற்றிக் கொண்டார், அந்தப் பள்ளிவாசலின் முன்னாள் முத்தவல்லி.  

 ஹஜ்ரத்! நான் எபவுமே (வெள்ளிக்கிழமை ஜுமுஆ) பயான் ஆரம்பிக்கும் முன்பே சூரத்துல் கஹ்ஃப் ஓதி முடித்திடுவேன்.


"ஆனால் இன்று பள்ளிவாசலுக்குள் வரும்போதே நிர்வாக ஆஃபீஸ் ரூமில் இருந்து நிர்வாகிகள் அழைத்தார்கள் ஒரு முக்கிய விஷயம் தொடர்பாக பேசிக்கொண்டே  நேரம் கடந்து விட்டது  சூரத்துல் கஹ்ஃப் ஓதும் வாய்ப்பு இந்த வாரம் தவறி விட்டது என்று வருத்தப்பட்டுக்கொண்டார்" அதற்கு இமாம் அவரிடம்


 அப்படி இல்லீங்க ஜீ!


ஜுமுஆவுக்கு முன்பே சூரத்துல் கஹ்ஃப் ஓதி முடித்தால் தான் அதன் சிறப்பை அடைய முடியும் என்பதில்லை ஜுமுஆ நாளன்று மஃரிபு(க்கு முன்பு) வரை ஓதினாலும் அந்தச் சிறப்பை அடைய முடியும்.


உங்களுக்கு இன்னொன்று சொல்லவா?  என்று தொடர்ந்த இமாம், வெள்ளிக் கிழமை பகலில் ஓதினால் தான் அந்தச் சிறப்பை அடைய முடியும் என்பதுமில்லை. மாறாக வியாழன் (பின்னேரம்) மஃரிபிலிருந்து அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மஃரிப் வரை இரவு, பகல் எப்போதுஓதினாலும் இந்தச் சிறப்பு கிடைக்கும்.

ஏனென்றால்  வெள்ளிக்கிழமை  பகலில் சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி ஹதீஸில் வந்திருப்பது போல, இரவில் ஓதுவதற்கும் ஹதீஸில் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. அப்படியா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என்று சொன்னவாறு நன்றியும் கூறி விடை பெற்றார்.


فيض القدير (6/ 199):

"(من قرأ سورة الكهف يوم الجمعة أضاء له من النور ما بينه وبين البيت العتيق) قال الحافظ ابن حجر في أماليه: كذا وقع في روايات يوم الجمعة وفي روايات ليلة الجمعة ويجمع بأن المراد اليوم بليلته والليلة بيومها".



سنن الدارمي (4 / 2143):

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ لَيْلَةَ الْجُمُعَةِ، أَضَاءَ لَهُ مِنَ النُّورِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ»

[تعليق المحقق] إسناده صحيح إلى أبي سعيد وهو موقوف عليه


المستدرك على الصحيحين للحاكم (2 / 399):

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 19

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 19


"கோவிட்19" தொற்று பரவிக் கொண்டிருந்த காலம் அது.

எனவே பள்ளிவாசலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக சொந்த தொழுகை விரிப்பு எடுத்து வரவேண்டும் என்ற நடைமுறையை அனைவரும் பின்பற்றினர்.


ஒரு நாள் இமாம், ஜமாஅத் தொழுகையை முடித்ததும் முதல் ஸஃப்பின் வலது ஓரத்தில் சிறிய சலசலப்பு.


என்னவென்று இமாம் கவனித்தார்; அப்போதுதான், ஒருவர் தொழுகை விரிப்பை மடித்த நிலையிலேயே வைத்து அதன் மீது ஸஜ்தா செய்துள்ளார் என்பதும் அப்படித் தொழுதால் தொழுகை கூடாது என்று இன்னொருவரும் பேசிக்கொண்டது தெரிய வந்தது.


உடனே இமாம் தலையிட்டு, அவர்களை அமைதி படுத்தி, தொழுகை விரிப்பு போன்றவைகளை மடித்து வைத்து, ஸஜ்தா செய்தால் தலை (அங்குமிங்கும் புரளாமல்) நிலை கொள்ளும் என்ற சூழலில்  தொழுகை கூடி விடும்.



 ஏனென்றால், கால் இருக்கும் இடத்தை விட ஸஜ்தா செய்யும் இடத்தின் உயரம் அரை முழம் (முக்கால் அடிக்குள்) இருக்கும் வரை பிரச்சனை இல்லை தொழுகை கூடிவிடும். 


அதைவிட அதிகமான உயரமுள்ள பொருட்கள் மீது (தகுந்த காரணமின்றி) ஸஜ்தா செய்து தொழுதால் தான் கூடாது.


 ஆனால் குறிப்பிட்ட அந்த அளவைவிட குறைவான உயரம் இருக்கும் போது தொழுகை கூடிவிடும் என்றாலும் அப்படிச் செய்வது சிறப்பான காரியமல்ல.


 ஏனெனில், தொழக்கூடியவரின் தலை எந்தளவு பூமிக்கு நெருக்கமாக இருக்குமோ அநதளவு சிறப்பு.


 குறிப்பு:- (காற்று அடைக்கப்பட்ட பலூன், விளையாட்டு பொம்மைகள் போன்று) தரையில் தலையை நிலைகொள்ள விடாமல் அங்குமிங்கும் புரளச் செய்யும்படியான பொருட்கள் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடாது.

 


تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 117):


وَلَوْ ارْتَفَعَ مَوْضِعُ السُّجُودِ عَنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ قَدْرَ لَبِنَةٍ أَوْ لَبِنْتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ لَا إنْ زَادَ.


 


                                                                                                                                    البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (1 / 338):


 وَكَذَا إذَا أَلْقَى الْحَشِيشَ فَسَجَدَ عَلَيْهِ إنْ وَجَدَ عَلَيْهِ حَجْمَهُ جَازَ وَإِلَّا فَلَا، وَكَذَا فِي التِّبْنِ وَالْقُطْنِ وَمِنْ هُنَا يُعْلَمُ جَوَازُ أَدَاءِ الصَّلَاةِ عَلَى الطَّرَّاحَةِ الْقُطْنِ، فَإِنْ وَجَدَ الْحَجْمَ جَازَ وَإِلَّا فَلَا وَهَذَا الْقَيْدُ لَا بُدَّ مِنْهُ فِي السُّجُودِ عَلَى كَوْرِ الْعِمَامَةِ وَطَرَفِ الْقَلَنْسُوَةِ كَمَا صَرَّحَ بِهِ فِي الْمُجْتَبَى، وَفِي مُنْيَةِ الْمُصَلِّي، وَلَوْ أَنَّ مَوْضِعَ السُّجُودِ أَرْفَعُ مِنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ مِقْدَارَ لَبِنَتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ، وَإِنْ كَانَ أَكْثَرَ لَا يَجُوزُ أَرَادَ لَبِنَةَ بُخَارَى، وَهُوَ رُبْعُ ذِرَاعٍ. اهـ    


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 502):

 وَأَمَّا عَلَى الْخِرْقَةِ وَنَحْوِهَا فَالصَّحِيحُ عَدَمُ الْكَرَاهَةِ، فَفِي الْحَدِيثِ الصَّحِيحِ «أَنَّهُ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - كَانَ تُحْمَلُ لَهُ الْخِمْرَةُ فَيَسْجُدُ عَلَيْهَا» وَهِيَ حَصِيرٌ صَغِيرَةٌ مِنْ الْخُوصِ؟ وَيُحْكَى عَنْ الْإِمَامِ أَنَّهُ سَجَدَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى الْخِرْقَةِ فَنَهَاهُ رَجُلٌ، فَقَالَ لَهُ الْإِمَامُ مِنْ أَيْنَ أَنْتَ؟ فَقَالَ: مِنْ خُوَارِزْمَ، فَقَالَ الْإِمَامُ: جَاءَ التَّكْبِيرُ مِنْ وَرَائِي: أَيْ تَتَعَلَّمُونَ مِنَّا ثُمَّ تُعَلِّمُونَا، هَلْ تُصَلُّونَ عَلَى الْبَوَارِي فِي بِلَادِكُمْ؟ قَالَ نَعَمْ، فَقَالَ: تُجَوِّزُ الصَّلَاةَ عَلَى الْحَشِيشِ وَلَا تُجَوِّزُهَا عَلَى الْخِرْقَةِ.

وَالْحَاصِلُ أَنَّهُ لَا كَرَاهَةَ فِي السُّجُودِ عَلَى شَيْءٍ مِمَّا فُرِشَ عَلَى الْأَرْضِ مِمَّا لَا يَتَحَرَّكُ بِحَرَكَةِ الْمُصَلِّي بِالْإِجْمَاعِ إلَخْ. اهـ. وَلَكِنَّ الْأَفْضَلَ عِنْدَنَا السُّجُودُ عَلَى الْأَرْضِ أَوْ عَلَى مَا تُنْبِتُهُ كَمَا فِي نُورِ الْإِيضَاحِ وَمُنْيَةِ الْمُصَلِّي (قَوْلُهُ لِأَنَّهُ أَقْرَبُ لِلتَّوَاضُعِ) أَيْ لِقُرْبِهِ مِنْ الْأَرْضِ.


புதன், 6 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரில் நடைபெறவிருந்தது 

ஒரு மாபெரும் மார்க்க நிகழ்வு. 

அதில் கலந்து கொள்ள பயணம் செய்தனர் நான்கு பெரியவர்கள்.

செல்லும் வழியில் தொழுகைக்காக பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளிவாசலை சென்றடைந்தனர்.

அப்போது அந்தப் பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருந்தது இவர்கள் தயாராகி ஜமாஅத்தில் சேரும்போது இரண்டு ரக்அத்துகள் முடிந்திருந்தது.

 மூன்றாம் ரக்அத்தில் இணைந்த இவர்களில் ஒருவர் (மட்டும்) இமாமுடனே சலாம் கொடுத்து தொழுகையை முடித்துவிட்டார்.

மற்ற மூன்று பேரும் நான்கு ரக்அத்துகள் நிறைவு செய்து தொழுகையை முடித்தனர்.

இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுதவரிடம் மற்றவர்கள், ஏன் இரண்டு ரக்அத்துகளிலே சலாம் கொடுத்து முடித்து விட்டீர்கள்? என்று கேட்டதற்கு பயணத்தில் (ளுஹர் போன்ற நான்கு ரக்அத் தொழுகைகளில்) இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுது சுருக்கிக் கொள்ள அனுமதி உண்டுதானே அதுவும் நாம் சரியாக இரண்டு ரக்அத்துகள் முடிந்த பிறகு தான் வந்து சேர்ந்தோம் அதனால்தான் என்றார்.

அதற்கு அவர்கள் அப்படி இல்லீங்க ஜீ!

"ஒரு முஸாஃபிர் தனியாக தொழுதால் அல்லது முஸாஃபிரான இமாமைப் பின்பற்றி தொழுதால் தான் இரண்டு ரக்அத்துகளோடு சுருக்கிக் கொள்ள வேண்டும்.

முகீமாக உள்ள இமாம் நடத்தும் ஜமாஅத்தில் இணைந்து தொழுதால், கண்டிப்பாக நான்கு ரக்அத்துகள் தான் தொழ வேண்டும். நாம் ஆரம்பத்திலேயே இணைந்தாலும் நடுவில் இணைந்தாலும் கடைசி அத்தஹிய்யாத் அமர்வில் இணைந்தாலும் சட்டம் ஒன்றுதான்."

என்றனர்.

"சரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார் அவர்.

"இமாமுடன் நீங்கள் தொழுத ஃபர்ள் (சலாம் கொடுத்த பிறகு பேசி விட்டதால்) ஃபஸாத் ஆகிவிட்டது எனவே புதிதாக தொழவேண்டும்.

ஆனால் ஒன்று புதிதாக (தனியாக) தொழும்போது இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழவேண்டும்" என்றனர் அவர்கள் 

குறிப்பு:- ஷரீஅத் பார்வையில், (77 கிலோமீட்டர் அல்லது அதை விட அதிக தூரம்) பிரயாணம் செய்யும் ஒருவர், ஒரு ஊரில் சென்று 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வரும் வரை முஸாஃபிர் ஆவார். 

ஒரு ஊரை சென்றடைந்தது 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வந்து விட்டவர் அல்லது பயணம் மேற்கொள்ளாமல் சொந்த ஊரிலேயே இருப்பவர் முகீம் ஆவார்.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 427):


"وإن اقتدى مسافر بمقيم" يصلي رباعية ولو في التشهد الأخير "في الوقت صح" اقتداؤه "وأتمها أربعا"


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 145):


(قَوْلُهُ: وَلَوْ اقْتَدَى مُسَافِرٌ بِمُقِيمٍ فِي الْوَقْتِ صَحَّ وَأَتَمَّ) ؛ لِأَنَّهُ يَتَغَيَّرُ فَرْضُهُ إلَى الْأَرْبَعِ لِلتَّبَعِيَّةِ كَمَا تَتَغَيَّرُ نِيَّةُ الْإِقَامَةِ لِاتِّصَالِ الْمُغَيَّرِ بِالسَّبَبِ، وَهُوَ الْوَقْتُ وَفَرْضُ الْمُسَافِرِ قَابِلٌ لِلتَّغَيُّرِ حَالَ قِيَامِ الْوَقْتِ كَنِيَّةِ الْإِقَامَةِ فِيهِ وَإِذَا كَانَ التَّغْيِيرُ لِضَرُورَةِ الِاقْتِدَاءِ فَلَوْ أَفْسَدَهُ صَلَّى رَكْعَتَيْنِ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

காட்டுப் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தனர் 

மூன்று சகோதரர்கள்.

அவர்களில் விபரமுள்ள ஒருவர் இமாமாக நிற்க ஜமாஅத்தாக தொழுதனர். 

முதல் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போது, "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" வுக்கு பதிலாக (தவறுதலாக) "அல்லாஹ் அக்பர்" என்று கூறிவிட்டார் தொழுகை நடத்தியவர். 

தொழுகை முடிந்த பிறகு "ஏன் ஸஜ்தா ஸஹ்வு செய்யவில்லை?" எனக் கேட்டார் மற்றொருவர்.

 தொழுகை நடத்தியவர், பின் வரும் விளக்கத்தை அளித்தார்.

"தொழுகையில் ஒரு வாஜிபை விட்டால் அல்லது ஒரு வாஜிபையோ ருக்னாக உள்ள காரியத்தையோ தாமதப்படுத்தினால் அல்லது ஒரு ருக்னை திரும்பவும் (இரண்டாம் தடவையாக) செய்து விட்டால் அல்லது ஒரு ருக்னை முன் பின்னாக செய்து விட்டால் அல்லது ஒரு வாஜிபின் தன்மையில் மாற்றம் செய்து விட்டால் அப்போது தான்

ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜாபாகும்.

தொழுகையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போது சொல்லப்டும் தக்பீர்கள் வாஜிபு அல்ல. மாறாக, சுன்னத் தான் எனவே ஒருவர் ருகூஃவிலிந்து தலையை உயர்த்தும் போது தவறுதலாக "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி விட்டால் (அல்லது ஒன்றுமே சொல்லாமல் விட்டாலும்) அதனால் ஸஜ்தா ஸஹ்வு செய்யனும் என்று அவசியமில்லை. 


"وَلَا يَجِبُ السُّجُودُ إلَّا بِتَرْكِ وَاجِبٍ أَوْ تَأْخِيرِهِ أَوْ تَأْخِيرِ رُكْنٍ أَوْ تَقْدِيمِهِ أَوْ تَكْرَارِهِ أَوْ تَغْيِيرِ وَاجِبٍ بِأَنْ يَجْهَرَ فِيمَا يُخَافَتُ، وَفِي الْحَقِيقَةِ وُجُوبُهُ بِشَيْءٍ وَاحِدٍ وَهُوَ تَرْكُ الْوَاجِبِ، كَذَا فِي الْكَافِي. وَلَا يَجِبُ بِتَرْكِ التَّعَوُّذِ وَالْبَسْمَلَةِ فِي الْأُولَى وَالثَّنَاءِ وَتَكْبِيرَاتِ الِانْتِقَالَاتِ". 


الفتاوى الهندية

(الْبَابُ الثَّانِي عَشَرَ فِي سُجُودِ السَّهْوِ، ١/ ١٢٦)

திங்கள், 4 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

தொழுகைக்காக பள்ளி வாசலுக்குள் வரும்போது (ஃபர்ள்) ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிந்தால் சுன்னத் தொழவேண்டுமா? அல்லது ஜமாஅத்தில் இணைய வேண்டுமா? என்று கேள்வி கேட்டு மத்ரஸாவிற்கு தபால் அனுப்பி இருந்தார் வெளியூர் உதவியாளர் ஒருவர்.

அதற்கு, மத்ரஸாவின் முதல்வர் அனுப்பி வைத்த பதிலின் சுருக்கம் கீழே..

 (ஃபஜ்ரைத் தவிர்த்து) ளுஹர், அஸ்ர், இஷா ஆகிய வக்துகளில் ஃபர்ள் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் போது சுன்னத் தொழுகையை ஆரம்பிப்பது கூடாது.

ஒருவர் இகாமத் சொல்லப்படுவதற்கு சற்று முன்புதான் சுன்னத் தொழுகையை ஆரம்பித்தார் சிறிது நேரத்தில் இகாமத் சொல்லப்படுகிறது என்றால், அவர் (நான்கு ரக்அத்துகள் நிய்யத் செய்திருந்தாலும்) இரண்டு ரக்அத்துகளை மட்டும் விரைவாக தொழுது விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.


(நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழுவதற்காக நிய்யத் செய்த(அ)வர் மூன்றாவது ரக்அத்துக்கு எழுந்த பிறகு தான் இகாமத் சொல்லப்பட்டது என்றால், நான்கு ரக்அத்துகளையும் நிறைவு செய்து விட்டுத் தான் ஜமாஅத்தில் இணைய வேண்டும்.

ஆனால் ஃபஜ்ர் தொழுகையில் மட்டும் சட்டம் வேறுபடும் அது வருமாறு 

இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும் போது வருபவர், அல்லது தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது வருபவர்கள் கூட கண்டிப்பாக சுன்னத் தொழுது விட்டுத்தான் ஜமாஅத் தொழுகையில் இணைய வேண்டும். (அந்தளவுக்கு ஃபஜ்ருடைய சுன்னத் வலியுறுத்தப்பட்டுள்ளது) ஆனால், சுன்னத் தொழுகையை ஆரம்பித்து நாம் அதை முடிக்கும் முன்பே இமாம் சலாம் கொடுத்து விடுவார் என்ற அச்சம் இருந்தால் அப்போது (மட்டும்) சுன்னத் தொழாமலே ஜமாஅத் தொழுகையில் இணைந்து கொள்ள வேண்டும்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 377)

''(وكذا يكره تطوع عند إقامة صلاة مكتوبة) أي إقامة إمام مذهبه ؛ لحديث: «إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة» (إلا سنة فجر إن لم يخف فوت جماعتها) ولو بإدراك تشهدها، فإن خاف تركها أصلاً۔


(قوله: إلا سنة فجر)؛ لما روى الطحاوي وغيره عن ابن مسعود: أنه دخل المسجد وأقيمت الصلاة فصلى ركعتي الفجر في المسجد إلى أسطوانة، وذلك بمحضر حذيفة وأبي موسى، ومثله عن عمر وأبي الدرداء وابن عباس وابن عمر، كما أسنده الحافظ الطحاوي في شرح الآثار، ومثله عن الحسن ومسروق والشعبي شرح المنية.

(قوله: ولو بإدراك تشهدها) مشى في هذا على ما اعتمده المصنف والشرنبلالي تبعاً للبحر، لكن ضعفه في النهر، واختار ظاهر المذهب من أنه لا يصلي السنة إلا إذا علم أنه يدرك ركعة، وسيأتي في باب إدراك الفريضة، ح. قلت: وسنذكر هناك تقوية ما اعتمده المصنف عن ابن الهمام وغيره''.


مصنف عبد الرزاق الصنعاني (2/ 437)

'' عن ابن جريج، عن عطاء قال: «إذا أقيمت الصلاة فلا صلاة، فإن خرج الإمام وأنت راكع، فاركع إليها ركعةً أخرى خفيفةً، ثم سلم»''


வடகரை தாவூதி ஆலிம் பதில் 15


வடகரை தாவூதி ஆலிம் பதில் 15

தஹஜ்ஜுத்" தொழுககையை அனுதினமும்  தவறாமல் நிறைவேற்றும் பெரியவர் அவர்.

அன்றொரு நாள் வெளியூர் சென்று வந்ததால், நீண்ட நேரம் தூக்கம் கெட்டு  தாமதமாகத் தான் கண் விழித்தார் அவசரமாக தேவைகளை முடித்து தஹஜ்ஜுத் தொழ நின்றார். 

ஒரு ரக்அத் தான் நிறைவு செய்திருப்பார் அதற்குள் ஃபஜ்ர் பாங்கு சப்தம் கேட்டது தொடர்ந்து தொழுது முடித்தவருக்கு இது கூடுமா? கூடாதா? என்று சந்தேகம் ஏற்பட்டது. 

காரணம்; "ஃபஜ்ர் வக்த் வந்த பின், ஃபஜ்ருடைய சுன்னத் (இரண்டு ரக்அத்துகள்) தவிர வேறு நஃபில் தொழுகை தொழுவது தடுக்கப்பட்டதாகும்" என்பதை சில தினங்களுக்கு முன்னர் தான்   ஒரு பயானில்  ஹஜ்ரத் சொல்லக் கேட்டிருந்தார். 

ஆகவே, ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின்பும்  தஹஜ்ஜுத் தொழுகையை தொடர்ந்து தொழுது முடித்தது சரிதானா? என்று தெளிவு பெற இமாமை அணுகி, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விவரித்தார்.

இமாம் கூறிய பதில் வருமாறு,

ஆம்! ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தவிர வேறு எந்த வகையான நஃபில் தொழுகையும் (ஆரம்பித்து) தொழுவது (ஹதீஸில்) தடுக்கப்பட்டதாகும். எனவே அப்படித் தொழுவது மக்ரூஹ்.

ஆயினும் நீங்கள் செய்ததைப் போன்று ஃபஜ்ர் வக்துக்கு முன்பே (தஹஜ்ஜுத் வேளையில்) துவங்கி விட்ட நஃபில் தொழுகையை  ஃபஜ்ர் வக்து வந்த பின்  தொடர்(ந்து நிறைவு செய்)வது அப்படி மக்ரூஹ் அல்ல. 

அதே சமயம் தினமும் ஸஹ்ரின் கடைசி நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகையை ஆரம்பித்து ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் நிறைவு செய்யும் இந்த முறையை வழமையாக்கிக் கொள்வது நல்லது இல்லை.

 ஏனென்றால் அது முழுமையான தஹஜ்ஜுத் தொழுகையாக ஆகாது.


قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ 


(حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) 

قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ (حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) ۔


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 14

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 14

வாரம் ஒருமுறை மக்களுக்குத் தேவையான ஃபிக்ஹ் சட்டங்களை விளக்கித் தருவார் அந்த இமாம்.

அதன் படி அன்றும் சுப்ஹ் தொழுகை முடிந்ததும் மக்களை நோக்கி அமர்ந்த  இமாம்,

இன்று தொழுகை தொடர்பான ஒரு முக்கியமான சட்டத்தை உங்களுக்கு விளக்கப்போகிறேன் எல்லோரும் அமர்ந்து கவனமாகக் கேளுங்கள்!

என்று கூறி  ஆரம்பித்தார்.

இமாம், (முதல்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது, ஒருவர் வந்து தொழுகையில் இணைந்து (உட்கார்ந்து) கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்!;

வந்து இணைந்தவர், அத்தஹிய்யாத் ஓதி முடிக்கவில்லை, அதற்குள் இமாம் அடுத்த ரக்அத்துக்கு எழுந்து விட்டார்  என்றால் இமாமுடனேயே இவரும் (அத்தஹிய்யாத்தை ஓதி முடிக்காமலே) எழுந்து நின்று கொள்வது அதிகம் நடக்கிறது இப்படிச் செய்வது (வாஜிபை விட்ட குற்றமாகும்) கூடாது. 

மாறாக சற்று விரைவாக அத்தஹிய்யாத் ஓதி முடித்து விட்டுத்தான் எழுந்து, இமாமுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்பது சட்டம்.

இமாம் கடைசி அமர்வில் இருக்கும் போது, கடைசியாக வந்து இணைந்தவரும் இப்படித்தான் (அத்தஹிய்யாத் ஓதி முடியாவிட்டாலும் இமாம் ஸலாம் கொடுத்த உடனேயே மீதி தொழுகையை நிறைவேற்ற எழுந்து விடுகிறார்கள் இதுவும் தவறாகும் கூடாது.


மாறாக இமாம் ஸலாம் கொடுத்த பின் உடனே எழுந்து விடாமல் அத்தஹிய்யாத்தை முடித்து விட்டுத்தான் மீதமுள்ள ரக்அத்தை நிறைவு செய்ய எழுந்திருக்க வேண்டும் என்பது சட்டம்.


ஆனால் மேல் சொன்ன சட்டத்திற்கு மாறாக (அத்தஹிய்யாத் ஓதி முடிக்காமலே) ஒருவர் எழுந்து விட்டார் என்றால் (அது தவறு தான் ஆனாலும்) அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்வதோ அல்லது திரும்ப தொழுக வேண்டும் என்பதோ கிடையாது.


ஏனென்றால் இவர்  இமாமைப் பின் பற்றி தொழும் "முக்ததீ" ஆவார்; முக்ததீயிடம் தவறு ஏற்பட்டால் அதற்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் என்பதோ அல்லது திரும்ப தொழுக வேண்டும் என்பதோ கிடையாது.


என்று அழுத்தம் திருத்தமாக விளக்கி முடித்தார் இமாம்.


அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே...! என்று அனேகம் பேர் பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்.


الفتاوى الهندية (1/ 90):


"إذا أدرك الإمام في التشهد وقام الإمام قبل أن يتم المقتدي أو سلم الإمام في آخر الصلاة قبل أن يتم المقتدي التشهد فالمختار أن يتم التشهد. كذا في الغياثية وإن لم يتم أجزأه"



الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 470):


"والحاصل أن متابعة الإمام في الفرائض والواجبات من غير تأخير واجبة، فإن عارضها واجب لا ينبغي أن يفوته بل يأتي به ثم يتابع، كما لو قام الإمام قبل أن يتم المقتدي التشهد فإنه يتمه ثم يقوم لأن الإتيان به لا يفوت المتابعة بالكلية، وإنما يؤخرها، والمتابعة مع قطعه تفوته بالكلية، فكان تأخير أحد الواجبين مع الإتيان بهما أولى من ترك أحدهما بالكلية، بخلاف ما إذا عارضها سنة كما لو رفع الإمام قبل تسبيح المقتدي ثلاثا فالأصح أنه يتابعه لأن ترك السنة أولى من تأخير الواجب اهـ 



الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 496):


"(بخلاف سلامه) أو قيامه لثالثة (قبل تمام المؤتم التشهد) فإنه لا يتابعه بل يتمه لوجوبه، ولو لم يتم جاز؛ ولو سلم والمؤتم في أدعية التشهد تابعه لأنه سنة والناس عنه غافلون.


 (قوله: فإنه لا يتابعه إلخ) أي ولو خاف أن تفوته الركعة الثالثة مع الإمام كما صرح به في الظهيرية، وشمل بإطلاقه ما لو اقتدى به في أثناء التشهد الأول أو الأخير، فحين قعد قام إمامه أو سلم، ومقتضاه أنه يتم التشهد ثم يقوم ولم أره صريحا، ثم رأيته في الذخيرة ناقلا عن أبي الليث: المختار عندي أنه يتم التشهد وإن لم يفعل أجزأه اهـ ولله الحمد (قوله: لوجوبه) أي لوجوب التشهد كما في الخانية وغيرها، ومقتضاه سقوط وجوب المتابعة كما سنذكره وإلا لم ينتج المطلوب فافهم (قوله ولو لم يتم جاز) أي صح مع كراهة التحريم كما أفاده ح، ونازعه ط والرحمتي، وهو مفاد ما في شرح المنية حيث قال: والحاصل أن متابعة الإمام في الفرائض والواجبات من غير تأخير واجبة فإن عارضها واجب لا ينبغي أن يفوته بل يأتي به ثم يتابعه لأن الإتيان به لا يفوت المتابعة بالكلية وإنما يؤخرها، والمتابعة مع قطعه تفوته بالكلية، فكان تأخير أحد الواجبين مع الإتيان بهما أولى من ترك أحدهما بالكلية، بخلاف ما إذا عارضتها سنة لأن ترك السنة أولى من تأخير الواجب. اهـ.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

சவூதியில் உள்ள  நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞர் அவர்.

 வெள்ளிக் கிழமை விடுமுறை என்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட, நண்பர் ஒருவரை நலம் விசாரித்து விட்டு, ஜுமுஆ தொழுகைக்கு சென்றிருக்கிறார்.

 இவர் போய்ச் சேரும் போது இமாம் (அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தார் அவசரமாக அவர் தக்பீர் தஹ்ரீமா கூறி ஜமாஅத்தில் இணைந்து கொண்டார். 

இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து இரண்டு ரக்அத்துகளை நிறைவு செய்திருக்கிறார்.

அருகில் தொழுத வெளிநாட்டவர் நீ (இமாமுடன் ஒரு ரக்அத்தைக் கூட அடையாததால்) நான்கு ரக்அத்துகள் லுஹராக தொழுதிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்டு குழம்பிய அவர் ஊரில் உள்ள நெருங்கிய ஆலிம் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கூறினார்.

அதற்கு அந்த ஆலிம்,

நீங்கள் தொழுத இரண்டு ரக்அத்துகள் (ஜுமுஆ) கூடிவிடும்.

ஹனஃபீ மத்ஹபு சட்டப்படி அது சரிதான். 

மற்ற மூன்று மத்ஹபுகளிலும் ஜுமுஆவில் இமாமுடன் ஒரு ரக்அத்தையாவது பெற்றிருப்பவர் தான் மீதமுள்ள ஒரு ரக்அத்தை பூர்த்தி செய்து ஜுமுஆவாக தொழ முடியும்.

இமாமுடன் ஒரு ரக்அத்தைக்கூட அடையாத நிலையில் (இமாம் இரண்டாம் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து எழுந்த பின்) இணைந்தவர்கள் நான்கு ரக்அத்துகள் (லுஹராக) நிறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

உங்கள் அருகில் தொழுதவர் வேறு மத்ஹபு சட்டத்தின் படி தொழுபவராக இருந்திருப்பார் என்று விளக்கமளித்தார்.


تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 222):

وَمَنْ أَدْرَكَهَا فِي التَّشَهُّدِ أَوْ فِي سُجُودِ السَّهْوِ أَتَمَّ جُمُعَةً


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 199):

"ومن أدركها" أي الجمعة "في التشهد أو" في "سجود السهو" وتشهده "أتم جمعة" لما رويناه: "وما فاتكم فاقضوا