வெள்ளி, 22 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 31

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 31


தன் தாய் வழி பாட்டனார் வஃபாத்துக்கு ஊர் சென்றிருந்தார் மத்ரஸாவில் ஓதும் பட்ட வகுப்பு மாணவர்.

குறித்த நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்த மக்கள் தயாராகி விட்டார்கள் ஆனால் வெளியூர் சென்றிருந்த இமாம் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

சிறிது நேரம் எதிர்பார்த்த பின் உறவினர் சிலர், "இறந்து போனவரின் பேரன், அஸரத்து தானே; அவர் ஜனாஸா தொழுகை நடத்தட்டும்!" என்று கூறி அவரை முன் நிறுத்தி விட்டார்கள்.

பதற்றத்துடன் தொழுகை நடத்திய அவர், மூன்று தக்பீர்களுடன் சலாம் கொடுத்து விட்டார்.

தொழுகை கூடுமா?  கூடாதா? என்ற விவாதங்கள் துவங்கின. 

வந்து கொண்டிருக்கும் இமாமிடம் போன் செய்த முத்தவல்லி நடந்த நிகழ்வைக் கூறி, "ஒரு தக்பீர்தானே விடு பட்டது தொழுகை கூடிவிடும்தானே ஹஜ்ரத்!" என்று கேட்டார்.

அதற்கு அந்த இமாம்,

அப்படி இல்லீங்க ஜீ!

ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் ஃபர்ள் ஆகும். எனவே ஒன்று குறைந்தாலும் தொழுகை கூடாது. திரும்பத் தொழுகை நடத்துவது அவசியம் என்றார்.

அதன் படி மறுபடியும் ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

குறிப்பு:- மறதியாக மூன்றாவது தக்பீருக்குப் பின் ஸலாம் கொடுக்கும் போது பின்னால் தொழுபவர்கள் தஸ்பீஹ் கூறி ஞாபகப் படுத்த, இமாம் நான்காவது தக்பீர் சொல்லி (பிறகு ஸலாம் கொடுத்து) விட்டார் என்றால் தொழுகை கூடிவிடும்.

திரும்பவும் தொழுகை நடத்த வேண்டியதில்லை.


الفتاوى الهندية (1 / 164):

وَصَلَاةُ الْجِنَازَةِ أَرْبَعُ تَكْبِيرَاتٍ وَلَوْ تَرَكَ وَاحِدَةً مِنْهَا لَمْ تَجُزْ صَلَاتُهُ، هَكَذَا فِي الْكَافِي.


الفتاوى الهندية (1 / 165):

وَلَوْ سَلَّمَ الْإِمَامُ بَعْدَ الثَّالِثَةِ نَاسِيًا كَبَّرَ الرَّابِعَةَ وَيُسَلِّمُ، 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக