வியாழன், 14 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 23

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 23

பெரும் வியாதியில் பாதிக்கப்பட்டு, பல சிரமங்களை கடந்து, இறையருளால் சுகம் பெற்று மறுபடியும் மத்ரஸா வந்திருந்தார் ஒரு (தஹ்ஸீல்) பட்ட வகுப்பு மாணவர்.

 ஃபர்ள் தொழுகை முடிந்ததும் சிறிது நேரம் தனியாக ஸஜ்தா மட்டும் செய்து அமர்வதை கவனித்த வகுப்புத் தோழர் ஒருவர், "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளார். 

"அபாய கட்டத்தில் இருந்த என்னைக் காப்பாற்றிய அல்லாவுஹ்க்கு நன்றி செலுத்த வேண்டாமா? அதான் "ஸஜ்தா ஷுக்ர்" செய்கின்றேன், இதிலொன்றும் தவறு இல்லையே" என்று பதில் கூறினார் அந்த மாணவர்.

 இறைவனுக்கு நன்றி செலுத்த, இரண்டு ரக்அத்துகள் (நஃபில்) தொழுங்கள்! அது மிகச் சிறப்பு இல்லாவிடில் "ஸஜ்தா ஷுக்ரை" (ஃபர்ள் தொழுகை முடிந்ததும் உடனே செய்யாமல்) சற்று தாமதமாக தனியாக செய்து கொள்ளுங்கள்! 

நீங்கள் செய்வது போல் தொழுகைக்குப் பின் "ஸஜ்தா ஷுக்ர்" செய்வது மக்ரூஹ் ஆகும்.

ஏனென்றால் விபரம் இல்லாத மக்கள் நீங்கள் செய்வதைப் பார்த்து, தொழுகைக்குப் பின் இப்படிச் செய்வது வாஜிப் என்றோ சுன்னத் என்றோ விளங்கிக் கொள்ள வழி ஏற்படலாம் என்று ஃபிக்ஹ் கிதாபில் நாம் படித்தது ஞாபகமில்லையா? என்றார் அந்தத் தோழர்.

அட ஆமால்ல! என்று கூறி, அன்றிலிருந்து அவ்வாறு செய்வதை  தவிர்த்துக் கொண்டார்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 120):


وَسَجْدَةُ الشُّكْرِ: مُسْتَحَبَّةٌ بِهِ يُفْتَى،

لَكِنَّهَا تُكْرَهُ بَعْدَ الصَّلَاةِ لِأَنَّ الْجَهَلَةَ يَعْتَقِدُونَهَا سُنَّةً أَوْ وَاجِبَةً وَكُلُّ مُبَاحٍ يُؤَدِّي إلَيْهِ فَمَكْرُوهٌ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 119):


 (قَوْلُهُ وَسَجْدَةُ الشُّكْرِ)....... وَهِيَ لِمَنْ تَجَدَّدَتْ عِنْدَهُ نِعْمَةٌ ظَاهِرَةٌ أَوْ رَزَقَهُ اللَّهُ تَعَالَى مَالًا أَوْ وَلَدًا أَوْ انْدَفَعَتْ عَنْهُ نِقْمَةٌ وَنَحْوُ ذَلِكَ يُسْتَحَبُّ لَهُ أَنْ يَسْجُدَ لِلَّهِ تَعَالَى شُكْرًا مُسْتَقْبِلَ الْقِبْلَةِ يَحْمَدُ اللَّهَ تَعَالَى فِيهَا وَيُسَبِّحُهُ ثُمَّ يُكَبِّرُ فَيَرْفَعُ رَأْسَهُ كَمَا فِي سَجْدَةِ التِّلَاوَةِ سِرَاجٌ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக