வியாழன், 14 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 26

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 26


அந்தப் பள்ளிவாசலுக்கு புதிதாக பணியில் சேர்ந்த முஅத்தின் அவர்.

ஒரு நாள் அஸ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லி முடித்ததும் முத்தவல்லி அவரை அழைத்து, ஹவ்ளில் தண்ணீர் மிக குறைந்திருந்தது என்பதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பது பற்றியும் இல்லாவிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பது பற்றியும் விபரமாக சொல்லிக் கொண்டிருந்தார். 

 ஜமாஅத் தொழுகைக்கு நேரம் நெருங்கியது, இகாமத் சொல்ல வேண்டும் முஅத்தின் இல்லை என்பதால், முன் ஸஃப்பில் இருந்த வேறொருவர் இகாமத் சொல்ல, தொழுகை நடந்து முடிந்தது.

 அடுத்து நாள் லுஹர் தொழுகைக்கு பாங்கு சொன்ன முஅத்தின், "இகாமத்" நேரத்தை எதிர்பார்த்து நிற்கும் சூழலில், நேற்று அஸ்ரில் இகாமத் சொன்னவர், சட்டென்று எழுந்து இகாமத் சொல்லி விட்டார்.


தொழுகை முடிந்த பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

"பாங்கு சொன்ன நான் தானே "இகாமத்" சொல்லனும்" என்று முஅத்தின் கூற, "ஏன்? நேற்று நான் "இகாமத்" சொன்னேன்; இமாம் கூட ஒன்றும் சொல்லவில்லையே" என்று இவர் கூற, முடிவில்லாமல் பேச்சு நீண்டது.

"இகாமத்" என்பது பாங்கு சொன்னவரின் உரிமை. 

எனவே அவர் இல்லாத சூழலில்  அல்லது அவர் அனுமதியுடன் அல்லது அவர், (அனுமதியின்றி சொன்னாலும்) மனம் வருத்தம் அடையமாட்டார் என்ற சூழலில் மற்றவர் "இகாமத்" சொல்லலாம்.

மாறாக "பாங்கு" சொன்னவர் "இகாமத்" சொல்ல ஆர்வமாகவும் தயாராகவும் இருக்கும் சூழலில் வேறொருவர் "இகாமத்" சொல்வது மக்ரூஹ் ஆகும்.

எனவே, முதல் நாள் முஅத்தின் இல்லாத போது "இகாமத்" சொன்னது தவறில்லை.

இரண்டாம் நாள் (முஅத்தின்) அவர் தயாராக காத்திருக்கும் போது நீங்கள் அவசரமாக எழுந்து சொன்னது தவறு. 

இனி அப்படி சொல்ல விருப்பமிருந்தால் முஅத்தினிடம் அனுமதி வாங்கி சொல்லலாம் தவறில்லை. என்று பஞ்சாயத்து செய்தார் இமாம்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 395):


(أَقَامَ غَيْرُ مَنْ أَذَّنَ بِغَيْبَتِهِ) أَيْ الْمُؤَذِّنِ (لَا يُكْرَهُ مُطْلَقًا) وَإِنْ بِحُضُورِهِ كُرِهَ إنْ لَحِقَهُ وَحْشَةٌ،

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக