ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நான்கிலிருந்தும் நாயன் நம்மை காத்திட வேண்டும்!


நான்கிலிருந்தும் நாயன் நம்மை காத்திட வேண்டும்!


 

நழுவிப் போன நல்வாய்ப்புகள்


நழுவிப் போன நல்வாய்ப்புகள்


 

நன்மை தரும் காத்திருப்பு

நன்மை தரும் காத்திருப்பு


 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 62

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 62

கேள்வி: ரமலான் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃபில் இருக்கும் போது குளிக்காமல் இருப்பதால் வெப்பம் வியர்வை காரணமாக அலர்ஜி ஏற்படும் என்ற அச்சம் உடையவர், உடலை குளுமைப் படுத்த குளிப்பது கூடுமா?


 பதில்: சுன்னத்தான இஃதிகாஃபில் இருப்பவர், (கடமையான குளிப்பு தவிர) சாதாரண குளிப்புக்காக மஸ்ஜிதை விட்டு வெளியேறினால் இஃதிகாஃப் முறிந்து விடும். (இதில் அதிமானோர் கவனம் செலுத்துவதில்லை)


எனவே இஃதிகாஃபில் இருப்பவர் சாதாரண குளியலுக்காக மஸ்ஜிதின் எல்லையைக் கடந்து வெளியே வரக்கூடாது.


 வெப்பத்தை தணிக்க, வியர்வை நாற்றத்தை போக்க நினைப்பவர் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவைக்காக செல்லும் போது நான்கு ஐந்து கப்புகள் தண்ணீரை மேனியில் ஊற்றி உடலை கழுவிக் கொள்ளலாம் ஆனால் அதில் நீண்ட நேரம் செலவாகாமல், ஒளு செய்வதற்கும் குறைவான நேரத்தில் முடித்துக் கொண்டு, விரைவாக பள்ளிவாசலுக்குள் வந்து விடவேண்டும்.



سوال

اگر اعتکاف میں غسل نہیں کر سکتے تو دس دن گرمی میں  پسینہ بھی آتا ہے،  کچھ لوگوں کو الرجی وغیرہ بھی  پسینہ سے بو بھی آتی، پھر کسی کو الرجی ہو، سر میں دانے نکلتے ہوں روز نہ دھونے سے، وہ کیا کرے اس صورت میں؟


جواب

مسنون اعتکاف میں گرمی کی وجہ  سے مسجد سے باہر نکل کر معتکف کے لیے ٹھنڈک حاصل کرنے کے لیے غسل کرنا جائز نہیں ہے، اس سے اعتکاف فاسد ہوجائے گا، اگر گرمی کی وجہ سے کثرت سے پسینہ آتا ہو اور  غسل کی شدید ضرورت ہو تو  مسجد میں بڑا برتن رکھ کر اس میں بیٹھ کر غسل کرلے اس طور پر کہ  استعمال کیا ہوا پانی  مسجد میں بالکل نہ گرے، یا تولیہ بھگو کر نچوڑ کر  بدن پر مل لے، اس سے بھی ٹھنڈک حاصل ہوجائے گی۔ اس سلسلے میں  مسجد انتظامیہ پورٹ ایبل واش روم کا انتظام بھی کرسکتی ہے کہ اسے مسجد کے اندر رکھ دیا جائے اور پانی مسجد سے باہر گرے، لیکن شدید ضرورت کے بغیر اس کے استعمال کی عادت نہیں بنانی چاہیے۔ اور جہاں مسجد کے آداب اور تقدس کے پامال ہونے کا اندیشہ ہو وہاں پورٹ ایبل واش روم سے بھی اجتناب کیا جائے۔


حاصل یہ ہے کہ   ٹھنڈک کے لیے غسل کی نیت سے مسجد سے باہر جانا معتکف کے لیے جائز نہیں ہے، ہاں یہ ہوسکتا ہے کہ جب پیشاب کا تقاضا ہو تو پیشاب کے ارادے سے باہر نکل کر قضاءِ حاجت سے فارغ ہو کر وہیں غسل خانے میں دو چار لوٹے بدن پر ڈال لے، جتنی دیر میں وضو ہوتا ہے اس سے بھی کم وقت میں بدن پر پانی ڈال کر آجائے، الغرض غسل کی نیت سے مسجد سے باہر جانا جائز نہیں، طبعی ضرورت کے لیے جائیں تو بدن پر پانی ڈال سکتے ہیں۔ لیکن اس دوران  صابن وغیرہ کے استعمال کی اجازت نہیں ہے، کیوں کہ اس میں وضو سے زیادہ وقت صرف ہوگا۔


فتوی نمبر : 144109202906


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 61

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 61

கேள்வி: நான் கடந்த ஆண்டு ரமலான் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃபில் இருந்தேன். (கோவிட்19 பெருந்தொற்று) கட்டுப்பாடு கெடுபிடியால்  இடையில் அதை முறிக்க வேண்டியதாயிற்று அதை களா செய்ய வேண்டும் என்கிறார்களே களா செய்வது எப்படி?


 பதில்: ரமலான் கடைசி பத்தில் சுன்னதான இஃதிகாஃபில் இருப்பவர் ஏதோ ஒரு காரணத்தால் இடையில் முறித்து விட்டால் அந்த ஒருநாள் இஃதிகாபை மட்டும் களா செய்தால் போதும்.

அதன் முறை பின் வருமாறு ஏதாவது ஒரு நாளில் மஃரிபுக்கு முன் பள்ளிவாசலுக்கு சென்று அடுத்த நாள் மஃரிப் வரை (ஒருநாள் முழுவதும்) இஃதிகாஃப் இருக்க வேண்டும். அன்றைய தினம் பகலில் நோன்பும் வைக்க வேண்டும்.


குறிப்பு:- நோன்பு வைப்பது தடுக்கப்பட்ட, ஷவ்வால் பிறை 1, (நோன்பு பெருநாள்) துல் ஹஜ் பிறை 10, (ஹஜ்ஜுப் பெருநாள்) மற்றும் துல் ஹஜ்ஜு பிறை 11,12,13. ஆகிய ஐந்து நாட்களில் இந்த இஃதிகாபை களா செய்ய முடியாது.



سوال

اعتکاف میں ہیضہ ہوا، جس کی وجہ سے روزہ ٹوٹ گیا اور ساتھ  اعتکاف بھی؛  کیوں کہ دواکے لیے ڈاکٹر کے پاس جا نا پڑا،  میں دس دن کے اعتکاف کی نیت سے مسجد میں گیا تھا، اب مجھے کیا کرنا چاہیے کہ میرے اعتکاف کی قضا ہو جاۓ؟


جواب

اگر رمضان المبارک کے آخری عشرہ کامسنون اعتکاف ٹوٹ جائے تو صرف اُس ایک دن کی قضا واجب ہوتی ہے جس دن کا اعتکاف ٹوٹا ہے،  پھر ایک دن کی قضا چاہے رمضان میں کرے یا رمضان کے بعد روزے کے ساتھ کرے دونوں صورتیں صحیح ہیں، ایک دن کی قضا میں رات اور دن دونوں کی قضا لازم ہوگی، لہذا صورتِ مسئولہ میں آپ   کسی دن قضا کی نیت  سے مغرب سے پہلےمسجد میں اعتکاف کرلیں،اور اگلے دن صبح روزہ بھی رکھیں اور مغرب کی نماز کے بعد اعتکاف ختم کرلیں، اس سے اعتکاف کی قضا ہوجائے گی۔


یاد رہے کہ سال بھر میں پانچ دن روزہ رکھنا منع ہے، یعنی عید الفطر (یکم شوال)، عید الاضحیٰ کے تین دن اور اس کے بعد چوتھا دن (10، 11، 12، 13 ذوالحجہ)۔ لہٰذا ان ایام میں اعتکاف کی قضا نہ کی جائےفقط واللہ اعلم


فتوی نمبر : 144109203184


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

கேள்வி: மஃரிப் பாங்கு சொல்லிய பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது முடிக்கும் நேரம் ஜமாஅத் தாமதிப்பது மக்ரூஹ் என்ற சட்டம் துர்ருல் முஹ்தார் கிதாபில் கூறப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் போது ரமலான் மாதத்தின் இஃப்தாருடைய வேளையில் பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது சரியா?


 பதில்: நோன்பாளிகள் நோன்பு திறந்து விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வசதியாக ரமலானில் (மட்டும்) அவ்வாறு பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது தவறில்லை.

ஆனால் சிறப்பு என்னவென்றால் இஃப்தாருடைய நேரம் வந்ததும் நிய்யத் மட்டும் சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்லி அதைத் தொடர்ந்து தொழுகை நடத்துவது மிகச் சிறந்த வழிமுறையாகும்.


سوال:افطار کے بعد فورا اذان دینے کے بعد 10منٹ کی تاخیر سے نماز پڑھانا کیسا ہے؟

جواب نمبر: 171445

بسم الله الرحمن الرحيم


Fatwa:1178-1034/L=11/1440


ماہِ رمضان میں روزہ داروں کی رعایت میں نماز مغرب دس بارہ منٹ کی تاخیرسے ادا کرسکتے ہیں تاکہ روزے دار حضرات افطار سے فارغ ہوکر اطمینان سے جماعت میں شریک ہوسکیں؛البتہ اس صورت میں بہتر ہے کہ افطار کا اعلان پہلے کردیا جائے اور پھر کچھ تاخیر سے اذان دے کر مغرب کی نمازادا کی جائے ۔



واللہ تعالیٰ اعلم



دارالافتاء،

دارالعلوم دیوبند

வடகரை தாவூதி ஆலிம் பதில் 59

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 59

கேள்வி: * * சில நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத சூழலில் ரமலானில் (இஷா ஜமாஅத் நடத்திட மட்டும் அனுமதித்து தராவீஹ் பொது ஜமாஅத் தொழுகையை தவிர்க்கும்படி அரசு உத்தரவிட்டால்) தராவீஹ் தொழுகை ஜமாஅத் நடத்தாமல் வித்ரு ஜமாஅத் நடத்தலாமா?


ரமலானில் வித்ரு ஜமாஅத்தாக தொழுவது சுன்னத் என்பது தராவீஹ் ஜமாஅத் தொழுகையை தழுவிய காரியமாகும்.


எனவே ஏதேனும் காரணத்தால் ரமலானில் தராவீஹ் ஜமாஅத் நடைபெறாத போது வித்ரு தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது சுன்னத்துக்கு மாற்றமாகும்.


 الدر المختار وحاشية ابن عابدين (2 / 47): 


"(ولو لم يصلها) أي التراويح (بالإمام) أو صلاها مع غيره (له أن يصلي الوتر معه) بقي لو تركها الكل هل يصلون الوتر بجماعة؟ فليراجع".


و في الرد:


"(قوله بقي إلخ) الذي يظهر أن جماعة الوتر تبع لجماعة التراويح وإن كان الوتر نفسه أصلاً في ذاته؛ لأن سنة الجماعة في الوتر إنما عرفت بالأثر تابعةً للتراويح، على أنهم اختلفوا في أفضلية صلاتها بالجماعة بعد التراويح، كما يأتي".

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 58

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 58

கேள்வி:  ரமலானில் நோன்பு வைக்காத ஒருவர் தராவீஹ் தொழுகை நடத்தலாமா?


 பதில்: ரமலான் நோன்பை வைக்காமல் இருக்க (பயணம், வியாதி போன்று) மார்க்க அடிப்படையிலான   சலுகை பெற்றவர் மட்டும் நோன்பு வைக்காமல் கூட தராவீஹ் தொழுகை நடத்தலாம் தவறில்லை.

ஆனால் தக்க காரணம் ஏதும் இல்லாமல் நோன்பை விடுபவர், (فاسق) பாவி என்பதால் தராவீஹ் மட்டுமின்றி வேறு எந்த தொழுகையையும் நடத்த தகுதியற்றவர்.

இப்படியான ஒருவரை இமாமாக நிறுத்தி தராவீஹ் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.

 

سوال 

کیا فرماتے ہیں علماء کرام اس مسئلہ کے بارے  میں کہ:


تراویح پڑھانے والا اگر روزہ نہ رکھے تو کیا وہ تراویح پڑھا سکتا ہے؟ روزہ نہ رکھنا اگر مجبوری کی وجہ سے ہو تو کیا حکم ہے؟ اگر بغیر مجبوری کے ہو تو کیا حکم ہے؟


 جواب 

تراویح پڑھانے والا اگر کسی عذر شرعی ( مثلاً سفر یا مرض وغیرہ ) کی وجہ سے روزہ نہ رکھے تو  اس کے تراویح پڑھانے میں کوئی حرج نہیں۔ لیکن اگر وہ بغیر کسی شرعی عذر کے روزہ نہ رکھتا ہو تو شریعت کی نظر میں فاسق ہونے کی وجہ سے وہ کسی بھی قسم کی نماز کی امامت کا اہل نہیں ہے، لہٰذا ایسا شخص جب تک توبہ کرکے روزہ رکھنا شروع نہ کرلے ایسے شخص کو امام بناکر اس کے پیچھے تراویح کی نماز پڑھنا مکروہ تحریمی ہے۔ فقط واللہ اعلم


فتوی نمبر : 143908201142


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 57

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 57

கேள்வி: ரமலானில் இஷா ஜமாஅத் முடிந்ததும் அவசர வேலை இருக்கிறது என்று ஒருவர் வித்ரு தொழுது விட்டார்; அந்த வேலையை வேறொருவர் முடித்து விட்டார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. 

வித்ரு தொழுது விட்ட இவர் தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்ளாமா?


 பதில்: கலந்து கொள்ளலாம். ஏனென்றால் இஷாவுக்குப் பிறகிலிருந்து ஃபஜ்ரு உதயமாகும் வரை தராவீஹ் (தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட) நேரமாகும்.


வித்ரு தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுதால் கூடாது என்று நினைப்பது தவறாகும்.



والصحیح أن وقتہا ما بعد العشاء إلی طلوع الفجر قبل الوتر وبعدہ․ (عالمگیري: ۱/۱۱۵)

வடகரை தாவூதி ஆலிம் பதில் 56

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 56


கேள்வி: எதோ ஒரு காரணத்தால் இஷா (ஃபர்ள்) தொழுகையை தனித் தனியே தொழுது கொண்ட சிலர் மட்டும் ஒன்று கூடி தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழலாமா?


 பதில்: தாராவீஹ் ஜமாஅத்தாக தொழுகை நடத்தப்படும் மஸ்ஜிதில் இஷா (ஃபர்ள்) தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்றிருக்க வேண்டும்.

எனவே இஷாவை ஜமாஅத்தாக தொழாதவர்கள் ஒன்று கூடி தராவீஹை மட்டும் ஜமாஅத்தாக தொழுவது சரியல்ல.


ஆனால் இஷா ஜமாஅத் நடைபெற்ற பள்ளியில் இஷா ஜமாஅத்தை தவறவிட்ட ஒருவர், தனியாக இஷா தொழுதுவிட்டு தராவீஹ் ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாம். 

ஏனென்றால் ஒரு பள்ளியின் தராவீஹ் ஜமாஅத் நடைபெறுவதற்கு இஷா ஜமாஅத் நடைபெற்றிருக்க வேண்டும் அவ்வளவுதான்.


 தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் இஷாவை ஜமாஅத்தாக நிறைவேற்றி இருக்க வேண்டும் என்பதில்லை.


 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 48): 


"أما لو صليت بجماعة الفرض وكان رجل قد صلى الفرض وحده فله أن يصليها مع ذلك الإمام؛ لأن جماعتهم مشروعة فله الدخول فيها معهم لعدم المحذور".


 البحر الرائق (2/ 75) : 


"وفي القنية: صلى العشاء وحده فله أن يصلي التراويح مع الإمام، ولو تركوا الجماعة في الفرض ليس لهم أن يصلوا التراويح جماعة؛ لأنها تبع للجماعة، ولو لم يصل التراويح جماعةً مع الإمام فله أن يصلي الوتر معه، ثم ذكر بعده: أنه لو صلى التراويح مع غيره له أن يصلي الوتر معه، هو الصحيح اهـ".

வடகரை தாவூதி ஆலிம் பதில் 55

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 55

கேள்வி: தராவீஹ் தொழுகையில் ஏதாவது ஒரு தடவை சப்தமாக பிஸ்மில்லாஹ்  ஓதுவது அவசியமா?

 பதில்: ஆம்! குர்ஆன் முழுமையாக ஓதி தராவீஹ் தொழுகை நடத்துபவர் சூராவின் ஆரம்பத்தில் ஒருமுறையேனும் சப்தமாக பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும்.

அப்போது தான் முழுமையாக குர்ஆன் ஓதுவது, ஓதக் கேட்பது ஆகிய சுன்னத் முழுமை பெறும். 

மெதுவாக இமாம் ஓதிக் கொண்டார் என்றால் இமாம் சுன்னத்தை நிறைவேற்றியவர் ஆவார். ஆனால் பின் பற்றி தொழுபவர்கள் முழுமையாக குர்ஆனை கேட்ட சுன்னத் நிறைவு பெறாமல் போய்விடும்.


"ولو قرأ تمام القرآن في التراويح و لم يقرأ البسملة في ابتداء سورة من السور سوى ما في سورة النمل، لم يخرج عن عهدة السنية، و لو قرأها الإمام سرًّا خرج عن العهدة، و لكن لم يخرج المقتدون عن العهدة". ( مجموعة الرسائل اللكنوي، أحكام القنطرة في أحكام البسملة، ١/ ٧١، ط: ادارة القرآن و العلوم الإسلامية، كراتشي)۔(  امداد الاحکام، ٢/ ٢٤٤، امداد الفتاوی، ١/ ٤٩٥)

வடகரை தாவூதி ஆலிம் பதில் 54

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 54

கேள்வி: குர்ஆன் முழுமையாக ஓதி தராவீஹ் நடத்தும் இமாம் மறதியாக ஒரு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டால் திரும்ப தொழுகை நடத்தும் போது அந்த ஒரு ரக்அத்தில் ஓதிய ஆயத்துக்களை மறுபடியும் ஓதனுமா?


 பதில்: ஆம்! ஒரு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டதால் அந்த தொழுகை ஃபஸாத் ஆகிவிடும்  என்பதால் அதில் ஓதியதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது ஆகையால்  ஃபஸாத் ஆகிவிட்ட அந்த தொழுகையை திரும்பத் தொழும்போது ஏற்கனவே (ஒரு ரக்அத்தில்) ஓதிய ஆயத்துக்களை திரும்பவும் ஓதவேண்டும்.


இல்லையெனில் முழு குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்திய சுன்னத் நிறைவேறாது.


 سوال 

اگر تراویح میں ایک رکعت میں سلام پھیر دیا گیا  ہو تو قرأت واپس لوٹانی پڑے گی جو پہلے رکعت میں پڑھی گئی تھی ؟


 جواب 

تراویح میں ایک رکعت پر سلام پھیرنے سے چوں کہ نماز باطل ہوجاتی ہے؛ اس لیے اس رکعت میں کی گئی قرأت بھی کالعدم ہوجائے گی اور  تراویح  میں تکمیل قرآن کے لیے اس رکعت میں کی گئی قرأت کا اعادہ کرنا لازمی ہوگا۔فقط واللہ اعلم


فتوی نمبر : 144109201707


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 53

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 53

கேள்வி: 

1) ஒருவர் ஸவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு வைக்கத் துவங்கினார் 30 வது  நோன்பு மாலை புறப்பட்டு இந்தியா வந்தடைந்தார் (இந்தியாவில் அன்று தான் 30 வது நோன்பு) இப்போது இவர் என்ன செய்வார் நோன்பு வைத்தால் 31 ஆகிவிடுமே? 


2) இதே போல் இந்தியாவிலிருந்து 29 வது நோன்பு காலையில் சவூதி அரேபியாவுக்கு ஒருவர் பயணமானார்  மாலையில் சென்றடைந்தார். ஒருநாள் முன்னதாக அவர்கள் நோன்பை துவக்கி விட்டதால் அப்போது அங்கு 30 வது நோன்பு அடுத்த நாள் சவூதி அரேபியா கணக்கின் படி பெருநாள் இப்போது இவர் என்ன செய்வார் நோன்பு வைப்பாரா? அல்லது பெருநாள் கொண்டாடுவாரா?


 பதில்: 

1) நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்களுக்கு இப்படியான சிக்கல் அதிகம் ஏற்படுவதுண்டு.

 1-வது கேள்வியில் உள்ளபடி ரமலான் கடைசியில் இந்தியாவுக்கு பயணம் வந்தவர் (31 வது நோன்பாக இருந்தாலும்) இந்தியாவின் நிலையை அனுசரித்து அன்றைய தினம் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

அவர் வைத்த 31 நோன்புகளில் 30 ரமலானுடைய ஃபர்ளாக நிறைவேறும் ஒரு நோன்பு மட்டும் தானாகவே நஃபிலாகி விடும்.


2) இவர் அன்றைய தினம் சவூதி அரேபியா நிலையை அனுசரித்து பெருநாள் கொண்டாட வேண்டும் அதன் பின்னர் ஏதாவது ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும்.


(ஃபதாவா ரஹீமிய்யா, ஃபதாவா தாருல் உலூம் தேவ் பந்த்)


 سوال: کسی شخص نے سعودی میں چاند دیکھ کر روزہ شروع کیا، چاند رات کو وہاں سے روانہ ہو کر اپنے ملک ہندوستان آگیا۔ یہاں ابھی روزہ چل رہا ہے ، اب اگر اس نے روزہ رکھا تو اس کے 31/ روزے ہوجائیں گے، وہ کیا کرے؟ براہ کرم۔ اس پر روشنی ڈالیں۔



 جواب نمبر: 22410 

بسم الله الرحمن الرحيم


فتوی(م):871=871-6/1431


صورتِ مسئولہ میں وہ ہندوستان آکر روزہ رکھے گا اور ہندوستان کے مطابق عید کرے گا اور تیس سے زائد روزے اس کے لیے نفل ہوجائیں گے۔




واللہ تعالیٰ اعلم



دارالافتاء،

دارالعلوم دیوبند


----------------------------------------

 سوال: کسی شخص نے ہندوستان میں چاند دیکھ کر روزہ شروع کیا ، پھر عمرہ کی غرض سے سعودی عرب چلاگیا، وہاں شوال کا چاند دیکھ کر عید منائی ۔ اس ملک میں تیس روزے ہوئے ، لیکن اس کے 28/29روزے ہوئے ، کیا مذکورہ بالا صورت میں اس شخص کو روزہ رکھنا ضروری ہوگا یا نہیں؟ براہ کرم ، باحوالہ جواب دیں، کیوں کہ دوسرے مدرسہ سے تشفی بخش جوا ب نہیں ملا۔


 جواب نمبر: 22411 


بسم الله الرحمن الرحيم


فتوی(ب):978=787-6/1431


اس کے ذمہ ایک روزہ رکھنا ضروری ہے۔


واللہ تعالیٰ اعلم


دارالافتاء،

دارالعلوم دیوبند

வடகரை தாவூதி ஆலிம் பதில் 52

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 52

 கேள்வி: நோன்பு வைத்திருப்பவர் மிஸ்வாக் செய்யலாமா? 

மேலும் (Toothpaste) பற்பசை உபயோகிக்கலாமா?


 பதில்:  நோன்பு வைத்திருப்பவர் மிஸ்வாக் செய்யலாம் அதனால் நோன்பு பாதிக்காது.

ஆனால் (Toothpaste) பற்பசை உபயோகித்து பல் துலக்குவது மகரூஹ் ஆகும்.

பற்பசை உபயோகிக்கும்போது தொண்டையில் சென்று விட்டது என்றால் நோன்பு முறிந்து விடும்.


کذا فی الھندیة:

کرہ ذوق شئ ومضغه بلاعذر کذا في الکنز ومن العذر في الأول مالوکان زوج المرأۃ وسیدها سیئ الخق فذاقت المرقة ومن العذر۔ في الثاني: أن لاتجد من یضغ الطعام لصبیہا من حائض أونفساء أو غیرہما ممن لایصوم ولم تجد طبیخا ولالبنا حلیبا۔


 (الهندیة، کتاب الصوم، الباب الثالث فیما یکرہ للصائم ومالایکرہ، مکتبة زکریا دیوبند قدیم۱/۱۹۹، جدید،۱/۲۶۱)

வடகரை தாவூதி ஆலிம் பதில் 51


 வடகரை தாவூதி ஆலிம் பதில் 51

கேள்வி: ஸஹர் வேளையில் (தூங்கி விட்டதால்) ஸஹர் சாப்பிடாமல் நோன்பு வைப்பது கூடுமா?

 பதில்: 

நௌன்பு வைப்பவர் ஸஹர் வேளையில் சாப்பிட்டுவது முஸ்தஹப்பு (விரும்பத்தக்க காரியம்)தான்; ஃபர்ள் அல்லது வாஜிபு அல்ல. எனவே ஃபஜ்ர் நேரத்தில்  கண் விழித்தவர் ஏதும் சாப்பிடாமல் குடிக்காமல் அப்படியே நோன்பு (நிய்யத்) வைப்பது கூடும்.

 

 الدر المختار مع رد المحتار: 


ويستحب السحور


(قوله: ويستحب السحور) لما رواه الجماعة إلا أبا داود عن أنس قال قال رسول الله - صلى الله عليه وسلم - «تسحروا فإن في السحور بركة» قيل المراد بالبركة: حصول التقوي على صوم الغد أو زيادة الثواب۔۔الخ


(ج: 2، ص: 419، ط: دار الفکر)


وفی الھندیۃ:


التسحر مستحب۔۔۔الخ


(ج: 1، ص: 200، ط: دار الفکر)

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 50


வடகரை தாவூதி ஆலிம் பதில் 50

கேள்வி: 

1) பெண்கள் நோன்பு வைத்திருக்கும் போது குழந்தைகளுக்கு பாலூட்டலாமா? 


2) பாலூட்டும் பெண்கள் ரமலான் நோன்பை விட அனுமதி உண்டா?


 பதில்: 

1) நோன்பு வைத்திருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் அதனால் நோன்பு முறியாது.


2) ரமலான் நோன்பு வைப்பதால் குழந்தைக்கு பால் மிக குறைந்து விடும் அதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும் என்று அச்சமுள்ளவர் ரமலானில் நோன்பு வைப்பதை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் களா செய்ய அனுமதி உண்டு.


 السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي - (4 / 261): 

"وَإِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ".


 البحر الرائق شرح كنز الدقائق ـ  (6 / 246) 

"(قوله: وللحامل والمرضع إذا خافتا على الولد أو النفس) أي لهما الفطر؛ دفعًا للحرج 


வடகரை தாவூதி ஆலிம் பதில் 49

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 49

கேள்வி: நோன்பு வைத்திருப்பவர் உடலில் குளுகோஸ் பாட்டில் ஏற்றலாமா?


 பதில்: நோன்பு வைத்திருப்பவர் உடலில் குளுகோஸ் பாட்டில் ஏற்றலாம் அதனால் நோன்பு முறியாது.


ஆனால் நோன்பின் களைப்பு தெரியக்கூடாது என்ற நோக்கத்தில் குளுகோஸ் பாட்டில் ஏற்றினால், அது மக்ரூஹ் ஆகும்.


 سوال 

روزے کی حالت میں گلوکوز کی بوتل جسم میں لگاسکتے ہیں؟

 جواب 

روزے کی حالت میں ڈرپ (گلوکوز کی بوتل) لگانا جائز ہے، البتہ اگرڈرپ صرف اس لیے لگائے کہ اس سے روزہ کا احساس نہ ہو تو ایسا کرنا مکروہ ہے۔فقط واللہ اعلم


فتوی نمبر : 144109202634


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


வடகரை தாவூதி ஆலிம் பதில் 48

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 48

கேள்வி: நோன்பு வைத்திருக்கும் போது (வாய் நிரம்ப) வாந்தி வந்தால் நோன்பு முறியுமா?

வாந்தி ஏற்பட்ட பின்  சாப்பிட்டால் அல்லது குடித்தால் என்ன சட்டம்?

 பதில்: நோன்பு வைத்திருக்கும் போது  தானாக வாந்தி வந்தால் (வாய் நிரம்ப இருந்தாலும்) நோன்பு முறியாது.

இந்த சட்டத்தை அறிந்த நிலையில் ஒருவர் வாந்தி ஏற்பட்ட பின் சாப்பிட்டார் அல்லது குடித்தார் என்றால், நோன்பு முறிந்து விடும் அதற்காக  நோன்பை களாவும் செய்யனும் கஃப்ஃபாராவும் கொடுக்கனும்.

ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் நோன்பு முறிந்து விட்டது என்று தவறாக எண்ணி சாப்பிட்டார் அல்லது குடித்தார் என்றால் இவருடைய நோன்பும் முறிந்து விடும்.

 ஆனால் அவர் அந்த நோன்பை களா மட்டும் செய்தால் போதும்; கஃப்ஃபாரா அவசியமில்லை.


 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 402): 


 وَكَذَا لَوْ ذَرَعَهُ الْقَيْءُ وَظَنَّ أَنَّهُ يُفَطِّرُهُ فَأَفْطَرَ، فَلَا كَفَّارَةَ عَلَيْهِ لِوُجُودِ شُبْهَةِ الِاشْتِبَاهِ بِالنَّظِيرِ فَإِنَّ الْقَيْءَ وَالِاسْتِقَاءَ مُتَشَابِهَانِ؛ لِأَنَّ مَخْرَجَهُمَا مِنْ الْفَمِ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ وَإِنْ عَلِمَ أَنَّ ذَلِكَ لَا يُفَطِّرُهُ فَعَلَيْهِ الْكَفَّارَةُ؛ لِأَنَّهُ لَمْ تُوجَدْ شُبْهَةُ الِاشْتِبَاهِ وَلَا شُبْهَةُ الِاخْتِلَافِ اهـ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 47

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 47

கேள்வி:

 நோன்பு வைத்திருப்பவர் கழிவறை தேவையை பூர்த்தி செய்யும் போது ஆசனவாய் பகுதியில் ஷவர் மூலம் தண்ணீர் பீச்சி கழுவலாமா?

 பதில்: நோன்பு வைத்திருப்பவர் ஆசனவாய் பகுதியின் உள்ளே தண்ணீர் சென்று விடும் அளவுக்கு தண்ணீரை பயன் படுத்தக் கூடாது.

ஏனென்றால் மலவாய் பகுதியின் உள்ளே தண்ணீர் சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்.

ஆகவே தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடிக்கும் முறையிலான ஷவர்களை (அழுத்த) வேகத்தை குறைத்து பயன் படுத்த வேண்டும்.

நோன்பு வைத்திருப்பவர் வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் முறையிலான ஷவர்களை மொத்தத்தில் தவிர்ப்பது பேணுதலாகும்.


 الدر المختار وحاشية ابن عابدين (2 / 397): 


ولو بالغ في الاستنجاء حتى بلغ موضع الحقنة فسد، وهذا قلما يكون ولو كان فيورث داء عظيمًا.

வடகரை தாவூதி ஆலிம் பதில் 46

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 46

 கேள்வி: நோன்பு வைத்திருப்பவர் சூடான தண்ணீரில் (மருந்து ஏதும் கலக்காமல்) ஆவி பிடிக்கலாமா?


 பதில்: ஆவி பிடிக்கும் போது தண்ணீர் நீராவியாக உருமாறி ஆவி பிடிப்பவரின் மூக்கு அல்லது தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்று விடும்.

எனவே நோன்பு வைத்திருப்பவர் ஆவி பிடிக்க அனுமதி இல்லை.

எனவே நோன்பு வைத்திருப்பது ஞாபகமிருக்க (வேண்டுமென்றே) ஆவி பிடித்தால் நோன்பு முறிந்து விடும்.



 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 395): 

وَمُفَادُهُ أَنَّهُ لَوْ أَدْخَلَ حَلْقَهُ الدُّخَانَ أَفْطَرَ أَيَّ دُخَانٍ كَانَ وَلَوْ عُودًا أَوْ عَنْبَرًا لَهُ ذَاكِرًا لِإِمْكَانِ التَّحَرُّزِ عَنْهُ فَلْيُتَنَبَّهْ لَهُ كَمَا بَسَطَهُ الشُّرُنْبُلَالِيُّ.


 مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 245): 

من أدخل بصنعه دخانا حلقه بأي صورة كان الإدخال فسد صومه سواء كان دخان عنبرا أو عودا أو غيرهما حتى من تبخر ببخور فآواه إلى نفسه واشتم دخانه ذاكرا لصومه أفطر لإمكان التحرز عن إدخال المفطر جوفه ودماغه وهذا مما يغفل عنه كثير من الناس


வடகரை தாவூதி ஆலிம் பதில் 45

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 45

கேள்வி: நோன்பு வைத்திருப்பவர், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமா? அப்படி செய்வதால் நோன்பு முறியுமா?


 பதில்: தற்போது நடைமுறையில் இருந்து வரும் விதத்தில் கொரோனா பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது.

ஏனென்றால் பரிசோதனையின் போது, (பரிசோதிக்கப்படுபவரின்) மூக்கு மற்றும் தொண்டையில் செலுத்தப் படும் சாதனத்தில் மருந்துகள் ஏதுமில்லை.

 மூக்கு அல்லது தொண்டையில் அந்த சாதனத்தை செலுத்தி,  ஈரத்தை வெளியாக்கி பரிசோதிக்கப்படுகிறது.

நோன்பு என்பது ஏதும் உள்ளே செல்வதால் தான் முறியும் .


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 396):


"وكذا لو ابتلع خشبةً أو خيطًا ولو فيه لقمة مربوطة إلا أن ينفصل منها شيء. ومفاده أن استقرار الداخل في الجوف شرط للفساد، بدائع".


வடகரை தாவூதி ஆலிம் பதில் 44

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 44

கேள்வி: 

நோன்பு வைத்திருப்பவர் இன்ஹீலர் (Inhaler) உறிஞ்சியை  பயன்படுத்தலாமா?


 பதில்:

இன்ஹீலர் (Inhaler) உறிஞ்சியை பயன்படுத்தும் போது அதில் நிரப்பப்பட்ட மருந்து துகள்கள் உடலில் புகுந்து விடுகின்றன எனவே நோன்பு வைத்திருப்பவர் அதை உபயோகிப்பது சரியல்ல.


அப்படி யாரும் உபயோகித்து விட்டால் அதனால் நோன்பு முறிந்து விடும்.


அவ்வாறு முறிந்த நோன்பை களா செய்தால் மட்டும் போதும்; கஃப்ஃபாரா அவசியமில்லை.



روزہ کی حالت میں انہیلر (inhaler) استعمال کرنا

 سوال 

روزہ کی حالت میں انہیلر (inheler) استعمال کر سکتے ہیں ؟


 جواب 

انہیلر  سے دوائی کے ذرات جسم میں داخل ہوتے ہیں، اس لیے روزے میں انہیلر کا استعمال درست نہیں، اس کے استعمال سے روزہ ٹوٹ جائے گا ،  صرف قضا لازم ہو گی، کفارہ لازم نہیں ہوگا۔ فقط واللہ اعلم


فتوی نمبر : 144109203271


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


வியாழன், 4 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 43

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 43


கேள்வி: ஒரு ரமலானில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தால் எத்தனை "கஃப்ஃபாரா"? எத்தனை நோன்பு களா செய்ய வேண்டும்?


அதுபோலவே இரண்டு மூன்று ரமலான்களில்  பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்திருந்தால் சட்டம் என்ன?


 பதில்: ஒரு ரமலானில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தால், (சாப்பிடுதல், குடித்தல் அல்லது உடலுறவு கொள்ளுதல் இவற்றில் எதன் மூலம் முறித்திருந்தாலும் சரி)

ஒரு "கஃப்ஃபாரா" மட்டும் போதும்.


ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரமலான்களில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்திருந்தால் ஒரு "கஃப்ஃபாரா" போதுமா? அல்லது பல "கஃப்ஃபாரா" வேண்டுமா? என்பது பற்றி விரிவான விபரம் உண்டு.


இதோ அந்த விபரம் வருமாறு


ஒன்றுக்கு மேற்பட்ட ரமலான்களில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தவர், எந்த செயலின் மூலம் முறித்தார்? என்று கவனிக்க வேண்டும்;

சாப்பிடுவது குடிப்பது போன்ற செயல்களால் முறித்திருந்தார் என்றால், பல நோன்புகளுக்கும் சேர்த்து ஒரு "கஃப்ஃபாரா" போதும்.


ஆனால் உடலுறவின் மூலம் முறித்திருந்தார் என்றால், ஒவ்வொரு ரமலானுக்கும் ஒரு "கஃப்ஃபாரா" கொடுக்க வேண்டும்.


களாவை பொருத்தவரை எத்தனை நோன்புகளை முறித்தாரோ அத்தனை நோன்புகளையும் களா செய்ய வேண்டும்.


 கவனிக்கவும் 

ஒருவர் ரமலானில் ஒரு நோன்பை முறித்து விட்டு ரமலானிலேயே அதற்கு "கஃப்ஃபாரா" கொடுத்து விட்டார் அதன் பிறகு வேறொரு நோன்பை முறித்து விட்டார் என்றால் அந்த வேறொரு நோன்புக்கு தனி "கஃப்ஃபாரா" கொடுக்க வேண்டும்.


 குறிப்பு:- 

 நோன்பு முறித்ததற்கான கஃப்ஃபாரா பற்றிய விபரம் 41 வது பதிவில் கூறப்பட்டுள்ளது.



 بدائع الصنائع في ترتيب الشرائع (2/ 101): 

’’ولو جامع في رمضان متعمداً مراراً بأن جامع في يوم ثم جامع في اليوم الثاني ثم في الثالث ولم يكفر فعليه لجميع ذلك كله كفارة واحدة عندنا، ولو جامع في يوم ثم كفر ثم جامع في يوم آخر فعليه كفارة أخرى في ظاهر الرواية، ولو جامع في رمضانين ولم يكفر للأول فعليه لكل جماع كفارة في ظاهر الرواية، وذكر محمد في الكيسانيات أن عليه كفارة واحدة، وكذا حكى الطحاوي عن أبي حنيفة‘‘.


 الدر المختار (2/ 413): 

’’ولو تكرر فطره ولم يكفر للأول يكفيه واحدة ولو في رمضانين عند محمد، وعليه الاعتماد، بزازية ومجتبى وغيرهما، واختار بعضهم للفتوى أن الفطر بغير الجماع تداخل وإلا لا‘‘


 حاشية ابن عابدين (رد المحتار) (2/ 413): 

’’(قوله: وعليه الاعتماد) نقله في البحر عن الأسرار، ونقل قبله عن الجوهرة: لو جامع في رمضانين فعليه كفارتان وإن لم يكفر للأولى، في ظاهر الرواية، وهو الصحيح. قلت: فقد اختلف الترجيح كما ترى ويتقوى الثاني بأنه ظاهر الرواية‘‘.


வடகரை தாவூதி ஆலிம் பதில் 42

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 42

கேள்வி: சர்க்கரை நோயாளிகள் நோன்பு வைத்திருக்கும் போது இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளலாமா?

 பதில்: பொதுவாக  உடலில் சதைப் பகுதியை சென்றடையும் சாதாரண ஊசியை அல்லது நரம்பில் செலுத்தப் படும் ஊசியை(க் கூட) நோன்பாளி போட்டுக் கொள்ள அனுமதியுண்டு.

அப்படி இருக்கும் போது, இன்சுலின் ஊசி மேனியின் தோல் பகுதியில் தான் செலுத்தப் படுகிறது எனவே நோன்பு வைத்திருப்பவர் தாராளமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளலாம்.

அதனால் நோன்பு எந்த விதத்திலும் பாதிக்காது.


 دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن 

1۔روزے کی حالت میں انجکشن لگوانا جائز ہے، خواہ رگ میں لگوایا جائے یا گوشت میں، اسی طرح ضرورت پر خون کی بوتل بھی لگانا جائز ہے؛   کیوں کہ انجکشن کے ذریعہ جو دوا بدن میں پہنچائی جاتی ہے وہ اصلی راستوں (Opening)سے نہیں، بلکہ رگوں یا مسامات کے ذریعہ بدن  میں  جاتی ہے، جب کہ روزہ فاسد ہونے کے لیے ضروری ہے کے بدن کے اصلی راستوں سے کوئی چیز معدے یا دماغ تک پہنچے اور انجکشن یا خون چڑھانے میں ایسا نہیں ہوتا، لہٰذا روزہ کی حالت میں انجکشن لگانے سے روزہ فاسد نہیں ہوتا۔


 سوال 

روزے کی حالت میں انسولین لینے سے روزہ فاسد ہوجائے گا؟


 جواب 

انسولین چوں کہ کھال میں لگانے کا انجکشن ہے اور روزہ کی حالت میں گوشت میں انجکشن لگانے سے روزہ نہیں ٹوٹتا، اس لیے روزہ کی حالت میں انسولین لگانےسے روزہ نہیں ٹوٹے گا۔


 الفقه الميسر  (ص 220) 

لا يفسد الصوم بالإبرة  سواء تعطي بالجلد او تعطي في الشريان


 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 395): 


 قَالَ فِي النَّهْرِ؛ لِأَنَّ الْمَوْجُودَ فِي حَلْقِهِ أَثَرٌ دَاخِلٌ مِنْ الْمَسَامِّ الَّذِي هُوَ خَلَلُ الْبَدَنِ وَالْمُفْطِرُ إنَّمَا هُوَ الدَّاخِلُ مِنْ الْمَنَافِذِ لِلِاتِّفَاقِ عَلَى أَنَّ مَنْ اغْتَسَلَ فِي مَاءٍ فَوَجَدَ بَرْدَهُ فِي بَاطِنِهِ أَنَّهُ لَا يُفْطِرُ

புதன், 3 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 41

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 41


கேள்வி: ரமலான் நோன்பு வைத்திருப்பவர், நோன்பு (நினைவிருக்க) வேண்டுமென்றே சாப்பிட்டு விட்டால் அல்லது எதையேனும் குடித்து விட்டால் அல்லது உடலுறவு கொண்டு விட்டால், நோன்பை களா செய்வதுடன் நோன்பை பாழாக்கிய குற்றத்திற்கு (கஃப்ஃபாரா) பரிகாரமும் செய்யவேண்டும் என்பது தெரிந்த விஷயம்.


ஆனால் ரமலான் அல்லாத வேறு நோன்பு வைத்திருப்பவர் வேண்டுமென்றே சாப்பிட்டு விட்டால் அல்லது எதையேனும் குடித்து விட்டால் அல்லது உடலுறவு கொண்டு விட்டால், அந்த நோன்பை களா செய்வதுடன் (கஃப்ஃபாரா) பரிகாரமும்

செய்யவேண்டுமா?

அல்லது வெறும் நோன்பு களா செய்தால் மட்டும் போதுமா?

 பதில்: ரமலான் அல்லாத வேறு நாட்களில் நோன்பு வைத்திருப்பவர், (ரமலானில் விட்ட நோன்பை களா செய்வதாக இருந்தாலும் சரி அல்லது வேறு வகையான நோன்பாக இருந்தாலும் சரி) நோன்பை முறிக்கும் காரியங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டால் அந்த நோன்பு முறிந்து விடும் என்பதால் வேறொரு நாளில் அந்த நோன்பை களா செய்துதான் ஆக வேண்டும்.

ஆனால் (கஃப்ஃபாரா) குற்றப் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.

காரணம் (நோன்பை முறித்ததற்கான) கஃப்ஃபாரா என்பது ரமலான் நோன்புக்கே உரித்தானது.

அதன் மூலம் ரமலான் நோன்பின் மகிமை உணர்த்தப்படுகிறது.

 குறிப்பு:- 

ரமலான் மாத நோன்பை பாழாக்கிய குற்றத்திற்கு கஃப்ஃபாரா பரிகாரம் வருமாறு

ஒரு அடிமையை உரிமை விடுவது.

அது முடியவில்லை என்றால்,

இரண்டு மாதங்கள் இடைவிடாது (தொடர்ந்து) நோன்பு வைப்பது.

(அவ்வாறு வைக்கும் இரண்டு மாத நோன்புகளில் இரு பெருநாட்கள் மற்றும் துல் ஹஜ் பிறை 11,12,13, ஆகிய நாட்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.)


அதுவும் முடியாவிட்டால், தன் குடும்பத்தினருக்கு வழங்கும் உணவில் நடுத்தர வகை உணவை அறுபது ஏழைகளுக்கு அளிப்பது.


 بدائع الصنائع في ترتيب الشرائع (2 / 97): 

وَأَمَّا وُجُوبُ الْكَفَّارَةِ فَيَتَعَلَّقُ بِإِفْسَادٍ مَخْصُوصٍ وَهُوَ الْإِفْطَارُ الْكَامِلُ بِوُجُودِ الْأَكْلِ أَوْ الشُّرْبِ أَوْ الْجِمَاعِ صُورَةً وَمَعْنًى مُتَعَمِّدًا مِنْ غَيْرِ عُذْرٍمُبِيحٍ وَلَا مُرَخِّصٍ وَلَا شُبْهَةَ الْإِبَاحَةِ،


 بدائع الصنائع في ترتيب الشرائع (2 / 102): 


وَأَمَّا صِيَامُ غَيْرِ رَمَضَانَ فَلَا يَتَعَلَّقُ بِإِفْسَادِ شَيْءٍ مِنْهُ وُجُوبُ الْكَفَّارَةِ، لِأَنَّ وُجُوبَ الْكَفَّارَةِ بِإِفْسَادِ صَوْمِ رَمَضَانَ عُرِفَ بِالتَّوْقِيفِ، وَأَنَّهُ صَوْمٌ شَرِيفٌ فِي وَقْتٍ شَرِيفٍ لَا يُوَازِيهِمَا غَيْرُهُمَا مِنْ الصِّيَامِ وَالْأَوْقَاتِ فِي الشَّرَفِ وَالْحُرْمَةِ، فَلَا يَلْحَقُ بِهِ فِي وُجُوبِ الْكَفَّارَةِ.


وَأَمَّا وُجُوبُ الْقَضَاءِ فَأَمَّا الصِّيَامُ الْمَفْرُوضُ: فَإِنْ كَانَ الصَّوْمُ مُتَتَابِعًا كَصَوْمِ الْكَفَّارَةِ وَالْمَنْذُورِ مُتَتَابِعًا فَعَلَيْهِ الِاسْتِقْبَالُ لِفَوَاتِ الشَّرَائِطِ وَهُوَ التَّتَابُعُ، وَلَوْ لَمْ يَكُنْ مُتَتَابِعًا كَصَوْمِ قَضَاءِ رَمَضَانَ وَالنَّذْرِ الْمُطْلَقِ عَنْ الْوَقْتِ وَالنَّذْرِ فِي وَقْتٍ بِعَيْنِهِ فَحُكْمُهُ أَنْ لَا يَعْتَدَّ بِهِ عَمَّا عَلَيْهِ وَيَلْحَقُ بِالْعَدَمِ، وَعَلَيْهِ مَا كَانَ قَبْلَ ذَلِكَ فِي قَضَاءِ رَمَضَانَ وَالنَّذْرِ الْمُطْلَقِ وَفِي الْمَنْذُورِ فِي وَقْتٍ بِعَيْنِهِ، عَلَيْهِ قَضَاءُ مَا فَسَدَ.


وَأَمَّا صَوْمُ التَّطَوُّعِ: فَعَلَيْهِ قَضَاؤُهُ عِنْدَنَا


 الدرالمختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 404): 


(قَوْلُهُ: أَوْ أَفْسَدَ) أَيْ وَلَوْ بِأَكْلٍ أَوْ جِمَاعٍ (قَوْلُهُ: غَيْرَ صَوْمِ رَمَضَانَ) صِفَةٌ لِمَوْصُوفٍ مَحْذُوفٍ دَلَّ عَلَيْهِ الْمَقَامُ أَيْ صَوْمًا غَيْرَ صَوْمِ رَمَضَانَ فَلَا يَشْمَلُ مَا لَوْ أَفْسَدَ صَلَاةً أَوْ حَجًّا وَعِبَارَةُ الْكَنْزِ صَوْمُ غَيْرِ رَمَضَانَ وَهِيَ أَوْلَى أَفَادَهُ ح (قَوْلُهُ: أَدَاءً) حَالٌ مِنْ صَوْمٍ وَقَيَّدَ بِهِ لِإِفَادَةِ نَفْيِ الْكَفَّارَةِ بِإِفْسَادِ قَضَاءِ رَمَضَانَ لَا لِنَفْيِ الْقَضَاءِ أَيْضًا بِإِفْسَادِهِ


 مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 241): 

(وَلَا كَفَّارَةَ بِإِفْسَادِ صَوْمٍ غَيْرِ رَمَضَانَ) ؛ لِأَنَّهُ لَمْ يَهْتِكْ حُرْمَةَ الشَّهْرِ فَعَلَى هَذَا لَا تَلْزَمُ الْكَفَّارَةُ عَلَى قَضَاءِ رَمَضَانَ


 مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 250): 

والكفارة: تحرير رقبة ولو كانت غير مؤمنة فإن عجز عنه صام شهرين متتابعين ليس فيهما يوم عيد ولا أيام التشريق فإن لم يستطع الصوم أطعم ستين مسكينا يغديهم ويعشيهم غداء وعشاء مشبعين أو غداءين أو عشاءين أو عشاء وسحورا أو يعطي كل فقير نصف صاع من بر أو دقيقه أو سويقه أو صاع تمر أو شعير أو قيمته


வடகரை தாவூதி ஆலிம் பதில் 40

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 40

மஃரிப் தொழுகை நடத்தி விட்டு வழமையான அவ்ராதுகளை ஓதி முடித்து வீட்டுக்கு வந்தார் இமாம்.

அப்போது வீட்டில்   வெளியூரிலிருந்து வந்திருந்த அக்காவும் மச்சானும் (வக்து முடியப் போவதை அறிந்து) இருவரும் ஜமாஅத் தொழுகை நடத்த தயாராக நின்றனர்.

தனக்கு வலது புறத்தில் அக்காவை நிற்க சொல்லிக் கொண்டிருந்தார் மச்சான்.

அப்போது ஸலாம் சொல்லி உள்ளே சென்ற இமாம், மச்சான்! மச்சான்!! கொஞ்சம் நில்லுங்கள்! என்று சொல்லி அக்காவை மச்சானுக்கு பின்னால் நிற்க வைத்து விட்டு "தொழுகை நடத்தி முடிங்க!  மற்றதை அப்புறம் பேசலாம்" என்று சொன்னார்.

தொழுகை முடிந்ததும் "அன்றைக்கு நாம் இரண்டு பேர் மட்டும் தொழும்போது என்னை உங்கள் வலது பக்கத்தில் தானே நிற்கச் சொன்னீர்கள்? அதான் உங்க அக்காவையும் அப்படி நிற்கச் சொன்னேன்" என்றார் மச்சான்.

அதற்கு இமாம்,

 அப்படி இல்லீங்க ஜீ! 

 என்று கூறி பின் வருமாறு விளக்கிச்சொன்னார்.

இமாமை ஒருவர் மட்டும் பின் பற்றி தொழும் போது அவர் பருவமடைந்த ஆணாக இருந்தாலும் அல்லது சிறிய பையனாக இருந்தாலும் இமாமுக்கு வலது பக்கமாக நிற்பது சரியான முறையாகும்; மாறாக இமாமுக்கு நேர் பின்னாலோ அல்லது இடது பக்கமாகவோ நின்றால் அது மக்ரூஹ் ஆகும்.

பின்பற்றி தொழும் அந்த ஒரு நபர் பெண்ணாக இருந்தால் பின்னால் நிற்பது தான் சரியான முறையாகும்.

மேலும் ஒரு ஆண் இமாமாக நின்று தொழுகை நடத்த பின் பற்றி தொழுபவர், மனைவி அல்லது சகோதரி, தாய் போன்ற திருமணம் தடுக்கப்பட்ட (மஹ்ரம்களில் ஒரு)வராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 566):

(وَيُكْرَهُ حُضُورُهُنَّ الْجَمَاعَةَ) وَلَوْ لِجُمُعَةٍ وَعِيدٍ وَوَعْظٍ (مُطْلَقًا) وَلَوْ عَجُوزًا لَيْلًا (عَلَى الْمَذْهَبِ) الْمُفْتَى بِهِ لِفَسَادِ الزَّمَانِ، وَاسْتَثْنَى الْكَمَالُ بَحْثًا الْعَجَائِزَ وَالْمُتَفَانِيَةَ (كَمَا تُكْرَهُ إمَامَةُ الرَّجُلِ لَهُنَّ فِي بَيْتٍ لَيْسَ مَعَهُنَّ رَجُلٌ غَيْرُهُ وَلَا مَحْرَمٌ مِنْهُ) كَأُخْتِهِ (أَوْ زَوْجَتُهِ أَوْ أَمَتُهِ، أَمَّا إذَا كَانَ مَعَهُنَّ وَاحِدٌ مِمَّنْ ذُكِرَ أَوْ أَمَّهُنَّ فِي الْمَسْجِدِ لَا) يُكْرَهُ بَحْرٌ (وَيَقِفُ الْوَاحِدُ) وَلَوْ صَبِيًّا، أَمَّا الْوَاحِدَةُ فَتَتَأَخَّرُ (مُحَاذِيًا) أَيْ مُسَاوِيًا (لِيَمِينِ إمَامِهِ) عَلَى الْمَذْهَبِ، وَلَا عِبْرَةَ بِالرَّأْسِ بَلْ بِالْقَدَمِ، فَلَوْ صَغِيرًا فَالْأَصَحُّ مَا لَمْ يَتَقَدَّمْ أَكْثَرُ قَدَمِ الْمُؤْتَمِّ لَا تَفْسُدُ، فَلَوْ وَقَفَ عَنْ يَسَارِهِ كُرِهَ (اتِّفَاقًا وَكَذَا) يُكْرَهُ (خَلْفُهُ عَلَى الْأَصَحِّ) لِمُخَالَفَةِ السُّنَّةِ (وَالزَّائِدُ) يَقِفُ (خَلْفَهُ) فَلَوْ تَوَسَّطَ اثْنَيْنِ كُرِهَ تَنْزِيهًا وَتَحْرِيمًا لَوْ أَكْثَرَ،

 

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 571):


وَهَذَا بِخِلَافِ الْمَرْأَةِ الْوَاحِدَةِ فَإِنَّهَا تَتَأَخَّرُ مُطْلَقًا كَالْمُتَعَدِّدَاتِ

வடகரை தாவூதி ஆலிம் பதில் 39

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 39

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் பத்துக்கும் மேற்பட்டோர்  ஒன்றாக தங்கியிருக்கும் வீடு அது.

அவர்களில் ஒரு பெரியவர் மிகவும் பேணுதலும் இறையச்சமும் உள்ளவர்.

இரவில் சீக்கிரமே எழுந்து தஹஜ்ஜுத் தொழும் பழக்கம் கொண்டிருந்தார்.

சில நேரங்களில் மிக உற்சாகமாக சப்தமிட்டு ஓதி தொழுவார்.

அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.

லீவு நாட்களில் பகலில் இஷ்ராக், ளுஹா  தொழுவம் போது கூட அப்படி சப்தமிட்டு  ஓதுவார்.

"பாய்! உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதற்காக சப்தமாக ஓதி, மற்றவர்களுக் இப்படி இடைஞ்சல் கொடுக்கலாமா?" என்று ஆட்சேபித்தனர்  சில நண்பர்கள்.

அதனாலென்ன;  மற்றவர்களுக்கு ஆர்வமூட்டத்தான் நான் இப்படிச் செய்கிறேன்: அதிலொன்றும் தவறில்லையே?" என்றார் அந்த பெரியவர்.

எனக்கென்னவோ அது சரின்னு படல; வேண்டுமானால் நம்ம அலிம்சா ஒருத்தர் இருக்கார் வாங்க அவரிடம்  போய் சட்டம் கேட்போம் என்று கூறி புறப்பட்டனர்.

ஆலிமிடம் சென்ற அவர்கள் நடந்ததை கூறினர்.

அதற்கு அந்த ஆலிம், பெரியவரிடம்

 அப்படி இல்லீங்க ஜீ! 

இதில் கொஞ்சம் விபரம் இருக்கிறது எனவே நான் சொல்வதை நன்றாக கேளுங்கள்!

என்று சொல்லி விட்டு ஆலிம் தொடர்ந்தார்;

(இஷ்ராக், ளுஹா போன்று) பகலில் தொழும் நஃபில் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதாமல் (தனக்கு மட்டும் கேட்கும் அளவு) மெதுவாகத்தான் ஓதவேண்டும் அது வாஜிபு ஆகும். 

(லுஹர், அஸ்ர் தொழுகைகளில் ஓதுகிறீர்களல்லவா அது போல.)

 இரவு நேரத்தைப் பொறுத்தவரை தனியாக தொழும் ஒருவர், (சப்தமிட்டு அல்லது மெதுவாக) இரண்டில் எது விருப்பமோ அப்படி ஓதிக் கொள்ள அனுமதி உண்டு.

ஆனால் சப்தமிட்டு ஓதுவது மற்றவர்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது.


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 95):


"و" الإسرار في "نفل النهار" (اي يجب الاسرار) للمواظبة على ذلك"والمنفرد" بفرض مخير فيما يجهر الإمام فيه ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ "كمتنفل بالليل" فإنه مخير ويكتفي بأدنى الجهر فلا يضر ذلك