புதன், 3 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 40

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 40

மஃரிப் தொழுகை நடத்தி விட்டு வழமையான அவ்ராதுகளை ஓதி முடித்து வீட்டுக்கு வந்தார் இமாம்.

அப்போது வீட்டில்   வெளியூரிலிருந்து வந்திருந்த அக்காவும் மச்சானும் (வக்து முடியப் போவதை அறிந்து) இருவரும் ஜமாஅத் தொழுகை நடத்த தயாராக நின்றனர்.

தனக்கு வலது புறத்தில் அக்காவை நிற்க சொல்லிக் கொண்டிருந்தார் மச்சான்.

அப்போது ஸலாம் சொல்லி உள்ளே சென்ற இமாம், மச்சான்! மச்சான்!! கொஞ்சம் நில்லுங்கள்! என்று சொல்லி அக்காவை மச்சானுக்கு பின்னால் நிற்க வைத்து விட்டு "தொழுகை நடத்தி முடிங்க!  மற்றதை அப்புறம் பேசலாம்" என்று சொன்னார்.

தொழுகை முடிந்ததும் "அன்றைக்கு நாம் இரண்டு பேர் மட்டும் தொழும்போது என்னை உங்கள் வலது பக்கத்தில் தானே நிற்கச் சொன்னீர்கள்? அதான் உங்க அக்காவையும் அப்படி நிற்கச் சொன்னேன்" என்றார் மச்சான்.

அதற்கு இமாம்,

 அப்படி இல்லீங்க ஜீ! 

 என்று கூறி பின் வருமாறு விளக்கிச்சொன்னார்.

இமாமை ஒருவர் மட்டும் பின் பற்றி தொழும் போது அவர் பருவமடைந்த ஆணாக இருந்தாலும் அல்லது சிறிய பையனாக இருந்தாலும் இமாமுக்கு வலது பக்கமாக நிற்பது சரியான முறையாகும்; மாறாக இமாமுக்கு நேர் பின்னாலோ அல்லது இடது பக்கமாகவோ நின்றால் அது மக்ரூஹ் ஆகும்.

பின்பற்றி தொழும் அந்த ஒரு நபர் பெண்ணாக இருந்தால் பின்னால் நிற்பது தான் சரியான முறையாகும்.

மேலும் ஒரு ஆண் இமாமாக நின்று தொழுகை நடத்த பின் பற்றி தொழுபவர், மனைவி அல்லது சகோதரி, தாய் போன்ற திருமணம் தடுக்கப்பட்ட (மஹ்ரம்களில் ஒரு)வராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 566):

(وَيُكْرَهُ حُضُورُهُنَّ الْجَمَاعَةَ) وَلَوْ لِجُمُعَةٍ وَعِيدٍ وَوَعْظٍ (مُطْلَقًا) وَلَوْ عَجُوزًا لَيْلًا (عَلَى الْمَذْهَبِ) الْمُفْتَى بِهِ لِفَسَادِ الزَّمَانِ، وَاسْتَثْنَى الْكَمَالُ بَحْثًا الْعَجَائِزَ وَالْمُتَفَانِيَةَ (كَمَا تُكْرَهُ إمَامَةُ الرَّجُلِ لَهُنَّ فِي بَيْتٍ لَيْسَ مَعَهُنَّ رَجُلٌ غَيْرُهُ وَلَا مَحْرَمٌ مِنْهُ) كَأُخْتِهِ (أَوْ زَوْجَتُهِ أَوْ أَمَتُهِ، أَمَّا إذَا كَانَ مَعَهُنَّ وَاحِدٌ مِمَّنْ ذُكِرَ أَوْ أَمَّهُنَّ فِي الْمَسْجِدِ لَا) يُكْرَهُ بَحْرٌ (وَيَقِفُ الْوَاحِدُ) وَلَوْ صَبِيًّا، أَمَّا الْوَاحِدَةُ فَتَتَأَخَّرُ (مُحَاذِيًا) أَيْ مُسَاوِيًا (لِيَمِينِ إمَامِهِ) عَلَى الْمَذْهَبِ، وَلَا عِبْرَةَ بِالرَّأْسِ بَلْ بِالْقَدَمِ، فَلَوْ صَغِيرًا فَالْأَصَحُّ مَا لَمْ يَتَقَدَّمْ أَكْثَرُ قَدَمِ الْمُؤْتَمِّ لَا تَفْسُدُ، فَلَوْ وَقَفَ عَنْ يَسَارِهِ كُرِهَ (اتِّفَاقًا وَكَذَا) يُكْرَهُ (خَلْفُهُ عَلَى الْأَصَحِّ) لِمُخَالَفَةِ السُّنَّةِ (وَالزَّائِدُ) يَقِفُ (خَلْفَهُ) فَلَوْ تَوَسَّطَ اثْنَيْنِ كُرِهَ تَنْزِيهًا وَتَحْرِيمًا لَوْ أَكْثَرَ،

 

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 571):


وَهَذَا بِخِلَافِ الْمَرْأَةِ الْوَاحِدَةِ فَإِنَّهَا تَتَأَخَّرُ مُطْلَقًا كَالْمُتَعَدِّدَاتِ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக