ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 55

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 55

கேள்வி: தராவீஹ் தொழுகையில் ஏதாவது ஒரு தடவை சப்தமாக பிஸ்மில்லாஹ்  ஓதுவது அவசியமா?

 பதில்: ஆம்! குர்ஆன் முழுமையாக ஓதி தராவீஹ் தொழுகை நடத்துபவர் சூராவின் ஆரம்பத்தில் ஒருமுறையேனும் சப்தமாக பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும்.

அப்போது தான் முழுமையாக குர்ஆன் ஓதுவது, ஓதக் கேட்பது ஆகிய சுன்னத் முழுமை பெறும். 

மெதுவாக இமாம் ஓதிக் கொண்டார் என்றால் இமாம் சுன்னத்தை நிறைவேற்றியவர் ஆவார். ஆனால் பின் பற்றி தொழுபவர்கள் முழுமையாக குர்ஆனை கேட்ட சுன்னத் நிறைவு பெறாமல் போய்விடும்.


"ولو قرأ تمام القرآن في التراويح و لم يقرأ البسملة في ابتداء سورة من السور سوى ما في سورة النمل، لم يخرج عن عهدة السنية، و لو قرأها الإمام سرًّا خرج عن العهدة، و لكن لم يخرج المقتدون عن العهدة". ( مجموعة الرسائل اللكنوي، أحكام القنطرة في أحكام البسملة، ١/ ٧١، ط: ادارة القرآن و العلوم الإسلامية، كراتشي)۔(  امداد الاحکام، ٢/ ٢٤٤، امداد الفتاوی، ١/ ٤٩٥)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக