வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 47

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 47

கேள்வி:

 நோன்பு வைத்திருப்பவர் கழிவறை தேவையை பூர்த்தி செய்யும் போது ஆசனவாய் பகுதியில் ஷவர் மூலம் தண்ணீர் பீச்சி கழுவலாமா?

 பதில்: நோன்பு வைத்திருப்பவர் ஆசனவாய் பகுதியின் உள்ளே தண்ணீர் சென்று விடும் அளவுக்கு தண்ணீரை பயன் படுத்தக் கூடாது.

ஏனென்றால் மலவாய் பகுதியின் உள்ளே தண்ணீர் சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்.

ஆகவே தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடிக்கும் முறையிலான ஷவர்களை (அழுத்த) வேகத்தை குறைத்து பயன் படுத்த வேண்டும்.

நோன்பு வைத்திருப்பவர் வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் முறையிலான ஷவர்களை மொத்தத்தில் தவிர்ப்பது பேணுதலாகும்.


 الدر المختار وحاشية ابن عابدين (2 / 397): 


ولو بالغ في الاستنجاء حتى بلغ موضع الحقنة فسد، وهذا قلما يكون ولو كان فيورث داء عظيمًا.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக