புதன், 3 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 39

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 39

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் பத்துக்கும் மேற்பட்டோர்  ஒன்றாக தங்கியிருக்கும் வீடு அது.

அவர்களில் ஒரு பெரியவர் மிகவும் பேணுதலும் இறையச்சமும் உள்ளவர்.

இரவில் சீக்கிரமே எழுந்து தஹஜ்ஜுத் தொழும் பழக்கம் கொண்டிருந்தார்.

சில நேரங்களில் மிக உற்சாகமாக சப்தமிட்டு ஓதி தொழுவார்.

அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.

லீவு நாட்களில் பகலில் இஷ்ராக், ளுஹா  தொழுவம் போது கூட அப்படி சப்தமிட்டு  ஓதுவார்.

"பாய்! உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதற்காக சப்தமாக ஓதி, மற்றவர்களுக் இப்படி இடைஞ்சல் கொடுக்கலாமா?" என்று ஆட்சேபித்தனர்  சில நண்பர்கள்.

அதனாலென்ன;  மற்றவர்களுக்கு ஆர்வமூட்டத்தான் நான் இப்படிச் செய்கிறேன்: அதிலொன்றும் தவறில்லையே?" என்றார் அந்த பெரியவர்.

எனக்கென்னவோ அது சரின்னு படல; வேண்டுமானால் நம்ம அலிம்சா ஒருத்தர் இருக்கார் வாங்க அவரிடம்  போய் சட்டம் கேட்போம் என்று கூறி புறப்பட்டனர்.

ஆலிமிடம் சென்ற அவர்கள் நடந்ததை கூறினர்.

அதற்கு அந்த ஆலிம், பெரியவரிடம்

 அப்படி இல்லீங்க ஜீ! 

இதில் கொஞ்சம் விபரம் இருக்கிறது எனவே நான் சொல்வதை நன்றாக கேளுங்கள்!

என்று சொல்லி விட்டு ஆலிம் தொடர்ந்தார்;

(இஷ்ராக், ளுஹா போன்று) பகலில் தொழும் நஃபில் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதாமல் (தனக்கு மட்டும் கேட்கும் அளவு) மெதுவாகத்தான் ஓதவேண்டும் அது வாஜிபு ஆகும். 

(லுஹர், அஸ்ர் தொழுகைகளில் ஓதுகிறீர்களல்லவா அது போல.)

 இரவு நேரத்தைப் பொறுத்தவரை தனியாக தொழும் ஒருவர், (சப்தமிட்டு அல்லது மெதுவாக) இரண்டில் எது விருப்பமோ அப்படி ஓதிக் கொள்ள அனுமதி உண்டு.

ஆனால் சப்தமிட்டு ஓதுவது மற்றவர்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது.


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 95):


"و" الإسرار في "نفل النهار" (اي يجب الاسرار) للمواظبة على ذلك"والمنفرد" بفرض مخير فيما يجهر الإمام فيه ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ "كمتنفل بالليل" فإنه مخير ويكتفي بأدنى الجهر فلا يضر ذلك


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக