வியாழன், 4 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 43

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 43


கேள்வி: ஒரு ரமலானில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தால் எத்தனை "கஃப்ஃபாரா"? எத்தனை நோன்பு களா செய்ய வேண்டும்?


அதுபோலவே இரண்டு மூன்று ரமலான்களில்  பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்திருந்தால் சட்டம் என்ன?


 பதில்: ஒரு ரமலானில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தால், (சாப்பிடுதல், குடித்தல் அல்லது உடலுறவு கொள்ளுதல் இவற்றில் எதன் மூலம் முறித்திருந்தாலும் சரி)

ஒரு "கஃப்ஃபாரா" மட்டும் போதும்.


ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரமலான்களில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்திருந்தால் ஒரு "கஃப்ஃபாரா" போதுமா? அல்லது பல "கஃப்ஃபாரா" வேண்டுமா? என்பது பற்றி விரிவான விபரம் உண்டு.


இதோ அந்த விபரம் வருமாறு


ஒன்றுக்கு மேற்பட்ட ரமலான்களில் பல நோன்புகளை வேண்டுமென்றே முறித்தவர், எந்த செயலின் மூலம் முறித்தார்? என்று கவனிக்க வேண்டும்;

சாப்பிடுவது குடிப்பது போன்ற செயல்களால் முறித்திருந்தார் என்றால், பல நோன்புகளுக்கும் சேர்த்து ஒரு "கஃப்ஃபாரா" போதும்.


ஆனால் உடலுறவின் மூலம் முறித்திருந்தார் என்றால், ஒவ்வொரு ரமலானுக்கும் ஒரு "கஃப்ஃபாரா" கொடுக்க வேண்டும்.


களாவை பொருத்தவரை எத்தனை நோன்புகளை முறித்தாரோ அத்தனை நோன்புகளையும் களா செய்ய வேண்டும்.


 கவனிக்கவும் 

ஒருவர் ரமலானில் ஒரு நோன்பை முறித்து விட்டு ரமலானிலேயே அதற்கு "கஃப்ஃபாரா" கொடுத்து விட்டார் அதன் பிறகு வேறொரு நோன்பை முறித்து விட்டார் என்றால் அந்த வேறொரு நோன்புக்கு தனி "கஃப்ஃபாரா" கொடுக்க வேண்டும்.


 குறிப்பு:- 

 நோன்பு முறித்ததற்கான கஃப்ஃபாரா பற்றிய விபரம் 41 வது பதிவில் கூறப்பட்டுள்ளது.



 بدائع الصنائع في ترتيب الشرائع (2/ 101): 

’’ولو جامع في رمضان متعمداً مراراً بأن جامع في يوم ثم جامع في اليوم الثاني ثم في الثالث ولم يكفر فعليه لجميع ذلك كله كفارة واحدة عندنا، ولو جامع في يوم ثم كفر ثم جامع في يوم آخر فعليه كفارة أخرى في ظاهر الرواية، ولو جامع في رمضانين ولم يكفر للأول فعليه لكل جماع كفارة في ظاهر الرواية، وذكر محمد في الكيسانيات أن عليه كفارة واحدة، وكذا حكى الطحاوي عن أبي حنيفة‘‘.


 الدر المختار (2/ 413): 

’’ولو تكرر فطره ولم يكفر للأول يكفيه واحدة ولو في رمضانين عند محمد، وعليه الاعتماد، بزازية ومجتبى وغيرهما، واختار بعضهم للفتوى أن الفطر بغير الجماع تداخل وإلا لا‘‘


 حاشية ابن عابدين (رد المحتار) (2/ 413): 

’’(قوله: وعليه الاعتماد) نقله في البحر عن الأسرار، ونقل قبله عن الجوهرة: لو جامع في رمضانين فعليه كفارتان وإن لم يكفر للأولى، في ظاهر الرواية، وهو الصحيح. قلت: فقد اختلف الترجيح كما ترى ويتقوى الثاني بأنه ظاهر الرواية‘‘.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக