ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 53

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 53

கேள்வி: 

1) ஒருவர் ஸவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு வைக்கத் துவங்கினார் 30 வது  நோன்பு மாலை புறப்பட்டு இந்தியா வந்தடைந்தார் (இந்தியாவில் அன்று தான் 30 வது நோன்பு) இப்போது இவர் என்ன செய்வார் நோன்பு வைத்தால் 31 ஆகிவிடுமே? 


2) இதே போல் இந்தியாவிலிருந்து 29 வது நோன்பு காலையில் சவூதி அரேபியாவுக்கு ஒருவர் பயணமானார்  மாலையில் சென்றடைந்தார். ஒருநாள் முன்னதாக அவர்கள் நோன்பை துவக்கி விட்டதால் அப்போது அங்கு 30 வது நோன்பு அடுத்த நாள் சவூதி அரேபியா கணக்கின் படி பெருநாள் இப்போது இவர் என்ன செய்வார் நோன்பு வைப்பாரா? அல்லது பெருநாள் கொண்டாடுவாரா?


 பதில்: 

1) நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்களுக்கு இப்படியான சிக்கல் அதிகம் ஏற்படுவதுண்டு.

 1-வது கேள்வியில் உள்ளபடி ரமலான் கடைசியில் இந்தியாவுக்கு பயணம் வந்தவர் (31 வது நோன்பாக இருந்தாலும்) இந்தியாவின் நிலையை அனுசரித்து அன்றைய தினம் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

அவர் வைத்த 31 நோன்புகளில் 30 ரமலானுடைய ஃபர்ளாக நிறைவேறும் ஒரு நோன்பு மட்டும் தானாகவே நஃபிலாகி விடும்.


2) இவர் அன்றைய தினம் சவூதி அரேபியா நிலையை அனுசரித்து பெருநாள் கொண்டாட வேண்டும் அதன் பின்னர் ஏதாவது ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும்.


(ஃபதாவா ரஹீமிய்யா, ஃபதாவா தாருல் உலூம் தேவ் பந்த்)


 سوال: کسی شخص نے سعودی میں چاند دیکھ کر روزہ شروع کیا، چاند رات کو وہاں سے روانہ ہو کر اپنے ملک ہندوستان آگیا۔ یہاں ابھی روزہ چل رہا ہے ، اب اگر اس نے روزہ رکھا تو اس کے 31/ روزے ہوجائیں گے، وہ کیا کرے؟ براہ کرم۔ اس پر روشنی ڈالیں۔



 جواب نمبر: 22410 

بسم الله الرحمن الرحيم


فتوی(م):871=871-6/1431


صورتِ مسئولہ میں وہ ہندوستان آکر روزہ رکھے گا اور ہندوستان کے مطابق عید کرے گا اور تیس سے زائد روزے اس کے لیے نفل ہوجائیں گے۔




واللہ تعالیٰ اعلم



دارالافتاء،

دارالعلوم دیوبند


----------------------------------------

 سوال: کسی شخص نے ہندوستان میں چاند دیکھ کر روزہ شروع کیا ، پھر عمرہ کی غرض سے سعودی عرب چلاگیا، وہاں شوال کا چاند دیکھ کر عید منائی ۔ اس ملک میں تیس روزے ہوئے ، لیکن اس کے 28/29روزے ہوئے ، کیا مذکورہ بالا صورت میں اس شخص کو روزہ رکھنا ضروری ہوگا یا نہیں؟ براہ کرم ، باحوالہ جواب دیں، کیوں کہ دوسرے مدرسہ سے تشفی بخش جوا ب نہیں ملا۔


 جواب نمبر: 22411 


بسم الله الرحمن الرحيم


فتوی(ب):978=787-6/1431


اس کے ذمہ ایک روزہ رکھنا ضروری ہے۔


واللہ تعالیٰ اعلم


دارالافتاء،

دارالعلوم دیوبند

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக