வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 48

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 48

கேள்வி: நோன்பு வைத்திருக்கும் போது (வாய் நிரம்ப) வாந்தி வந்தால் நோன்பு முறியுமா?

வாந்தி ஏற்பட்ட பின்  சாப்பிட்டால் அல்லது குடித்தால் என்ன சட்டம்?

 பதில்: நோன்பு வைத்திருக்கும் போது  தானாக வாந்தி வந்தால் (வாய் நிரம்ப இருந்தாலும்) நோன்பு முறியாது.

இந்த சட்டத்தை அறிந்த நிலையில் ஒருவர் வாந்தி ஏற்பட்ட பின் சாப்பிட்டார் அல்லது குடித்தார் என்றால், நோன்பு முறிந்து விடும் அதற்காக  நோன்பை களாவும் செய்யனும் கஃப்ஃபாராவும் கொடுக்கனும்.

ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் நோன்பு முறிந்து விட்டது என்று தவறாக எண்ணி சாப்பிட்டார் அல்லது குடித்தார் என்றால் இவருடைய நோன்பும் முறிந்து விடும்.

 ஆனால் அவர் அந்த நோன்பை களா மட்டும் செய்தால் போதும்; கஃப்ஃபாரா அவசியமில்லை.


 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 402): 


 وَكَذَا لَوْ ذَرَعَهُ الْقَيْءُ وَظَنَّ أَنَّهُ يُفَطِّرُهُ فَأَفْطَرَ، فَلَا كَفَّارَةَ عَلَيْهِ لِوُجُودِ شُبْهَةِ الِاشْتِبَاهِ بِالنَّظِيرِ فَإِنَّ الْقَيْءَ وَالِاسْتِقَاءَ مُتَشَابِهَانِ؛ لِأَنَّ مَخْرَجَهُمَا مِنْ الْفَمِ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ وَإِنْ عَلِمَ أَنَّ ذَلِكَ لَا يُفَطِّرُهُ فَعَلَيْهِ الْكَفَّارَةُ؛ لِأَنَّهُ لَمْ تُوجَدْ شُبْهَةُ الِاشْتِبَاهِ وَلَا شُبْهَةُ الِاخْتِلَافِ اهـ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக