வியாழன், 27 ஆகஸ்ட், 2015

செல்வம் வரமா? சாபமா?

செல்வம் வரமா? சாபமா?



وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ العاديات: 8
2480 عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ» صحيح البخاري (3 / 136
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனித வாழ்வின் தேவைகளில் செல்வம் முக்கிய இடம் வகிக்கிறது.
உண்ண, பருக, உடை உடுத்த, குடியிருக்க, திருமணம் செய்து குடும்பம் நடத்த என அதிகமான தேவைகள் செல்வத்தைச் சார்ந்து இருக்கிறது.
அது மட்டுமல்ல, பிறரிடம் யாசிக்கும் கேவலம் வராமல் தடுத்து கண்ணியத்தோடு வாழவும் உதவுகிறது.
மேலும் அந்தச்செல்வம் வணக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது.
மனிதன் பொதுவாக செல்வத்தை பிரியப்படுபவன்.  
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا  [الفجر: 20]
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ العاديات: 8
ஆகையால் செல்வத்தின் மீது மோகம் ஏற்படுவது இயல்பு.
அந்த மோகத்தை குறைக்கும் வகையில் எச்சரிக்கையும் அறிவுரையும் மார்க்கத்தில் ஏராளம் இருக்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ  [المنافقون: 9]
. நம்பிக்கையாளர்களே! உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தாம். 63:9
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ  [الأنفال: 28]
அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். 8:28. 
அதற்காக உழைக்காமல் முடமாகி விடக்கூடாது, இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களுக்கு பாரமாகவும் இருந்து விடக்கூடாது. எனவே மனிதனுக்கும் செல்வத்துக்கும் இடையே இருக்க வேண்டிய சீரான, முறையான தொடர்பை இஸ்லாம் வகுத்துக்காட்டுகிறது.
அந்த அடிப்படையில்
1 செல்வத்தின் மதிப்பு
2 அதை தேடுவதற்கு நியாயமான வழிகள்
3 அதை பயன் படுத்த வேண்டிய முறைகள்
இவை அனைத்தையும் தெளிவு படுத்தியுள்ளது.
செல்வத்துக்கு இஸ்லாம் வழங்கிய மதிப்பு
செல்வத்திற்கு மதிப்ப வழங்கியதால்தான் புத்தி குறைவானவர்களிடம் அதை ஒப்படைக்க வேண்டாம் என இஸ்லாம் கூறுகிறது.
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا [النساء: 5 ]
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் 
وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ [النساء: 6 ]
 அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;
ஜகாத், ஹஜ், குர்பானி போன்ற வணக்கங்களின் அடிப்படையே செல்வம்தான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ أَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَى، وَالنَّعِيمِ الْمُقِيمِ، فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ، وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ، فَقَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ؟ وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ» قَالُوا: بَلَى، يَا رَسُولُ اللهِ قَالَ: «تُسَبِّحُونَ، وَتُكَبِّرُونَ، وَتَحْمَدُونَ، دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ مَرَّةً» قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا، فَفَعَلُوا مِثْلَهُ، فَقَالَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ» صحيح مسلم (1 / 416
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, "செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது எவ்வாறு?" என்று கேட்டார்கள். அவர்கள், "(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்( முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்( இயல்)வதில்லை" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர" என்று கூறினார்கள். முஹாஜிர்கள், "ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
)
அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து "செல்வச் சீமான்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவ்வாறே அவர்களும் செய்துவருகின்றனர்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது அல்லாஹ்வின் அருட்கொடை. அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்" என்று சொன்னார்கள். முஸ்லிம்1044. 

செல்வத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால்தான் அதை அநியாயமாக யாரிடமும் இழக்க அனுமதி இல்லை.
2480 عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ» صحيح البخاري (3

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பிறருடைய பொருளை சேதப்படுத்தினால் அதற்கு ஈடு செய்யனும்.
(தவறுதலாக செய்தாலும் வேண்டுமென்றே செய்தாலும் சரிதான்)
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களின் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள ஒரு தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), 'உண்ணுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்தினார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்தார்கள். ஸஹீஹுல் புஹாரி 2481
திருடினால் கை வெட்டனும்
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا قَطْعَ فِيمَا دُونَ عَشَرَةِ دَرَاهِمَ "مسند أحمد ط الرسالة (11 / 502
கடன் கொடுத்தால் எழுதி வைக்கனும்
அடமானம் பெற்றுக்கொள்ளலாம்.
தொழுகை முறிக்கலாம்
போன்ற சட்டங்கள் இருப்பதும் இஸ்லாம் பொருளுக்கு செல்வத்துக்கு வழங்கி இருக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
இஸ்லாத்தை பொருத்தவரை ஒருவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பு அவரின் பொருளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرْمَةُ مَالِ الْمُسْلِمِ كَحُرْمَةِ دَمِهِ» حلية الأولياء وطبقات الأصفياء (7 / 334
: وَمَنْ خَافَ فَوْتَ شَيْءٍ مِنْ مَالِهِ وَسِعَهُ أَنْ يَقْطَعَ صَلَاتَهُ وَيَسْتَوْثِقَ مِنْ مَالِهِ وَكَذَلِكَ إذَا انْقَلَبَتْ سَفِينَتُهُ أَوْ رَأَى سَارِقًا يَسْرِقُ شَيْئًا مِنْ مَتَاعِهِ لِأَنَّ حُرْمَةَ الْمَالِ كَحُرْمَةِ النَّفْسِ فَكَمَا يَسْعَهُ أَنْ يَقْطَعَ صَلَاتَهُ إذَا خَافَ عَلَى نَفْسِهِ مِنْ عَدُوٍّ أَوْ سَبُعٍ فَكَذَلِكَ إذَا خَافَ عَلَى شَيْءٍ مِنْ مَالِهِ وَلَمْ يَفْصِلْ فِي الْكِتَابِ بَيْنَ الْقَلِيلِ وَالْكَثِيرِ وَأَكْثَرُ مَشَايِخِنَا - رَحِمَهُمُ اللَّهُ - قَدَّرُوا ذَلِكَ بِالدِّرْهَمِ فَصَاعِدًا وَقَالُوا مَا دُونَ الدِّرْهَمِ حَقِيرٌ فَلَا يَقْطَعُ الصَّلَاةَ لِأَجْلِهِ  المبسوط للسرخسي (2 / 3
2 நேர்மையான, ஆகுமான வழிகளில் சம்பாதிக்கனும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ [النساء: 29 ]
ஊழல் லஞ்சம் வட்டி மோசடி ஏமாற்று வழிப்பறி திருட்டு போன்றவற்றால் பொருளீட்டுவதை மார்க்கம் தடை செய்கிறது.
பொருளின் மீதுள்ள மோகத்தால் பல பாவங்களில் விழும் அபாயம் இருக்கிறது என்பதால் அது பற்றி கடுமையாக எச்சரிக்கையாக இருக்கச்சொல்கிறது.
ஹலாலான வழியில் வருமானம் பெருகிற ஒருவருக்கு எண்ணம் தவறாக இருந்தால் இறைவனின் கோபம் ஏற்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا اسْتِعْفَافًا عَنِ الْمَسْأَلَةِ، وَسَعْيًا عَلَى أَهْلِهِ، وَتَعَطُّفًا عَلَى جَارِهِ، لَقِيَ اللَّهَ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَمَنْ طَلَبَ الدُّنْيَا مُكَاثِرًا بِهَا حَلَالًا مُرَائِيًا، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»
''பிறரிடம் யாசிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவும், தனது வீட்டாருடைய தேவையைப் பூர்த்தி செய்யவும், அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடம் ஒருவன், ஹலாலான வழியில் பொருள் ஈட்டினால், கியாமத் நாளன்று அவரது முகம் பதினான்காம் நாள் இரவின் பூரணச் சந்திரனைப் போன்று பிரகாசிக்கும் நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார் பெருமை அடையவும், பணக்காரனாகவும், பேரும் புகழும் பெறும் எண்ணத்துடம் ஒருவன் பொருள் சம்பாதித்தால், அவன் ஹலாலான வழியில் சம்பாதித்தாலும், அல்லாஹுதஆலா அவன் மீது கோபம் கொண்ட நிலையில் கியாமத் நாளில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான்''. என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பயன் படுத்தும் வழி
அவசியத்துக்கு செலவிடனும் ஆடம்பரத்துக்கு பயன்படுத்தக்கூடாது
நன்மைக்கு செலவிடனும் நாசப்படுத்தகூடாது
உறவுகளுக்கு செலவிடலாம் ஊதாரித்தனம் செய்யக்கூடாது
படைப்புகளுக்கு பயன் படுத்தலாம் பாவத்தில் போடக்கூடாது.

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ الْعَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَمْرُو ‍‍، اشْدُدْ عَلَيْكَ سِلَاحَكَ وَثِيَابَكَ فَائْتِنِي» قَالَ: فَشَدَدْتُ عَلَيَّ سِلَاحِي وَثِيَابِي ثُمَّ أَتَيْتُهُ فَوَجَدْتُهُ يَتَوَضَّأُ، فَصَعَّدَ فِيَّ الْبَصَرَ وَصَوَّبَهُ، فَقَالَ: «يَا عَمْرُو إِنِّي أُرِيدُ أَنْ أَبْعَثَكَ وَجْهًا يُسَلِّمَكَ اللَّهُ وَيُغْنِمَكَ، فَارْغَبْ لَكَ مِنَ الْمَالِ رَغْبَةً صَالِحَةً» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أُسْلِمْ رَغْبَةً فِي الْمَالِ، إِنَّمَا أَسْلَمْتُ رَغْبَةً فِي الْجِهَادِ وَالْكَيْنُونَةِ مَعَكَ، قَالَ: «يَا عَمْرُو نَعِمَّا بِالْمَالِ الصَّالِحِ لِلرَّجُلِ الصَّالِحِ مصنف ابن أبي شيبة (4 / 467


الجمع والترتيب- محمد يوسف الداودي ودكري