வியாழன், 17 செப்டம்பர், 2015

குர்பானியினால் அல்லாஹ் நம்மிடம் விரும்புவதென்ன?


குர்பானியினால் அல்லாஹ் நம்மிடம் விரும்புவதென்ன?






وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ (الحج-34)
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الحَجِّ أَفْضَلُ؟ قَالَ «العَجُّ وَالثَّجُّ» الترمذي
``````````````````````````````````````````````````````````````````````````````````````````
குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அல்-குர்ஆன் 22:34
இந்த வசனத்தில் நான்கு விஷயம் கூறப்பட்டிருக்கிறது.
ஒன்று  குர்பானி முந்திய சமுதாயதிலும் நடைமுறையில் இருந்த ஒரு அமல்.
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا
وَالْمَنْسَكُ الذَّبْحُ وَإِرَاقَةُ الدَّمِ، قَالَهُ مُجَاهِدٌ.
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (الصافات 107)
மகத்தானதொரு பிராணியை அவருக்கு பகரமாக்கினோம் அல்-குர்ஆன் 37:107
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ، حَسَنَةٌ» قَالُوا: " فَالصُّوفُ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ، حَسَنَةٌ» ابن ماجه 3127
இரண்டாவது இறைவனை நினைவில் கொள்ளப்ட வேண்டும் என்பது.
لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ
வணக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இறைவனை நினைவு படுத்துவதுதான்.
தொழுகையில்
தொழுகையில் இறைவன் நினைவு கூறப்படுவதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
 وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي (طه 14)
நோன்பில்
அருள் வேதம் குர்ஆன் இரங்கிய மாதம் என்பதால் ரமலானில் நோன்பிருந்து இறைவனை நினைவு கூறுகிறோம்.
அது மட்டுமல்ல ரமலானில்
Ø லா இலாஹ இல்லல்லாஹுவை அதிகமாக கூறுவது.
Ø பாவமன்னிப்பு கேட்பது
Ø சுவனத்தை கேட்பது
Ø நரகை விட்டும் பாதுகாப்பு கேட்பது

ஆகிய நான்கு விஷங்களை அதிகமாக செய்யும்படி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஜகாத்தில்
இறைவன் வழங்கியதில் செலவு செய்கிறேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஜகாத்திலும் இறைவன் நினைவு கூறப்படுகிறான்.
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (2:3)
ஹஜ்ஜில்
ஹஜ்ஜுக்கு முன்னும் பின்னும் ஹஜ்ஜின் போதும் இறைவனை நினைவு கூறப்படுகிறது.
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الحَجِّ أَفْضَلُ؟ قَالَ «العَجُّ وَالثَّجُّ» الترمذي  (العج بالفتح رفع الصوت بالتلبية والثج: سيلان دماء الهدى والأضاحي) 
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا جُعِلَ الطَّوَافُ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَرَمْيُ الْجِمَارِ لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ»
 سنن أبي داود (2 / 179
فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ (2:200)
இறைவன் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?
Ø மனிதன் பாவம் செய்வதை தடுக்கும்.
Ø அல்லது நடந்து விட்ட பாவத்திற்கு இஸ்திஃபார் செய்ய தூண்டும்.
Ø உலகம் அழிவிலிருந்து பாதுகாப்பு பெறுவது இறைவனை நினைவு கூறுவதால்தான்.
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللهُ، اللهُ " مسلم
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.
 என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: முஸ்லிம்
மூன்றாவது இறைவனுக்கு மட்டுமே அடிபணிவது
فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا
என் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் அறிவு ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் எனக்கு பழக்கமான விஷயமானாலும் அப்படி இல்லையென்றாலும் இறவனின் உத்தரவு என்றால் ஏற்பேன் என்ற நிலையில் வாழவேண்டும்.
ஏனென்றால், மனிதர்களில் சிலர் அறிவுக்கு அடிமை.
இன்னும் சிலர் பழக்க வழக்கத்திற்கு அடிமை.
 வேறு சிலர் ஆசைக்கு அடிமை.
           இம்மூன்று வகையினர் போலல்லாமல் முழுக்க முழுக்க யார் தனக்கு மட்டுமே அடிபணிகின்றனர் என்று சோதிக்கிறான்.
எனவே மனிதனுடைய அறிவுக்கு   தூரமான சில கட்டளைகளையும் இடுகிறான்
·       ஹஜ் குர்பானியில் உள்ள அனேக சட்டங்கள் அறிவுக்கு சோதனை
கஃபாவை வலம் வருதல், "ஸஃபா, "மர்வாஎனும் இரு மலைக் குன்றுகளுக்கிடையில் "ஸயீ செய்தல், ஹஜ், உம்ராவுக்காக  நிய்யத் செய்து ]இஹ்ராம் நிலையில்[ இருப்பவர்கள் நறுமணம் பூசுவதை தவிர்த்தல், ஜம்ராத் எனும் ஷைத்தான்களுக்கு கல் எறிதல், குர்பானி கொடுக்க நாட்டம் உள்ளவர் துல்ஹஜ் பிறை பிறந்ததில் இருந்து முடி, நகம் வெட்டுவதை தவிர்த்தல் போன்ற விஷயங்கள் அறிவுக்கு புலப்படாததாக தோன்றும்.
عَنْ أُمِّ سَلَمَةَ، تَرْفَعُهُ، قَالَ: «إِذَا دَخَلَ الْعَشْرُ وَعِنْدَهُ أُضْحِيَّةٌ يُرِيدُ أَنْ يُضَحِّيَ، فَلَا يَأْخُذَنَّ شَعْرًا، وَلَا يَقْلِمَنَّ ظُفُرًا» مسلم

(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: முஸ்லிம் 3997. 

வழமைக்கு மாறான சில கட்டளைகளையும் இடுகிறான்.
·        மதிய தொழுகையில் கடமையான ரக்அத் நான்கு என்றிருந்தும் சிறப்புமிக்க ஜுமுஆ நாளன்று கடமையான ரக்அத் இரண்டு என்பதும், அன்றாட வழமையான தொழுகைகளில் பாங்கு இகாமத் உண்டு. ஆனால் சிறப்பான பெருநாள் தொழுகைக்கு அது கிடையாது என்பதும், வெள்ளிக்கிமைகளில் குத்பாவுக்குப்பின் தொழுகை, இருபெருநாட்களில் மட்டும் தொழுகைக்குப்பிறகுதான் குத்பா போன்றவைகளும் நாம் பழக்க வழக்கத்திற்கு அடிமை இல்லை இறைவனுக்குத்தான் அடிமை என்பதை வெளிப்படுத்துபவைகள்.

மனிதனின் மன விருப்பத்திற்கும் ஆசைக்கும் எதிரான சில கட்டளைகளையும் பிறப்பிக்கிறான்.

·       வட்டி, லஞ்சம், மது, விபச்சாரம் போன்ற மனது ஆசைப்படுகின்ற பல விஷயங்கள் தடை செய்யப்பட்டிருப்பது ஆசைக்கு அடிமையா? இறைவனுக்கு அடிமையா? என்பதை சோதிப்பதாகும்.
நபித்தோழர்களிடம் இருந்த அடிபணியும் தன்மை
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّهُ زَوَّجَ أُخْتَهُ رَجُلًا مِنَ المُسْلِمِينَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَتْ عِنْدَهُ مَا كَانَتْ، ثُمَّ طَلَّقَهَا تَطْلِيقَةً لَمْ يُرَاجِعْهَا حَتَّى انْقَضَتِ العِدَّةُ، فَهَوِيَهَا وَهَوِيَتْهُ، ثُمَّ خَطَبَهَا مَعَ الخُطَّابِ، فَقَالَ لَهُ: «يَا لُكَعُ أَكْرَمْتُكَ بِهَا وَزَوَّجْتُكَهَا فَطَلَّقْتَهَا، وَاللَّهِ لَا تَرْجِعُ إِلَيْكَ أَبَدًا آخِرُ مَا عَلَيْكَ» ، قَالَ: «فَعَلِمَ اللَّهُ حَاجَتَهُ إِلَيْهَا، وَحَاجَتَهَا إِلَى بَعْلِهَا» ، فَأَنْزَلَ اللَّهُ: تَبَارَكَ وَتَعَالَى {وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ} [البقرة: 231]- إِلَى قَوْلِهِ - {وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ} [البقرة: 216] فَلَمَّا سَمِعَهَا مَعْقِلٌ قَالَ: «سَمْعًا لِرَبِّي وَطَاعَةً» ، ثُمَّ دَعَاهُ فَقَالَ: «أُزَوِّجُكَ وَأُكْرِمُكَ» الترمذي
நான்காவது உள்ளச்சம் மற்றும் பணிவுடன் வாழ்வது.
وَبَشِّرِ الْمُخْبِتِينَ



الجمع - والترتيب محمد يوسف الداودي  ودكري