ஞாயிறு, 31 ஜனவரி, 2016

அவசியமான ஒப்பீடும் அனாவசியமான ஒப்பீடும்


                   அவசியமான ஒப்பீடும்
                                  அனாவசியமான ஒப்பீடும்

وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ [الزخرف: 32]
  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»صحيح البخاري

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதில் சமம் என்றாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலைகளை கவனிக்கும்போது ஏற்றத்தாழ்வை காணுகிறோம்.
நம்மில் பலருக்கும் இது உறுத்தலாக இருப்பதுண்டு ஆனால் அது தேவையில்லாதது.
ஏனெனில் இது அல்லாஹ்வின் வழிமுறையாக இருந்து வருகிறது
[وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ [البقرة: 245
மற்ற படைப்பினங்களைவிட மனிதனை மேன்மை படுத்தி இருப்பதை நாம் அறிவோம்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا [الإسراء: 70]
மற்ற படைப்பினங்களிலும் அந்த ஏற்ற வித்தியாசம் இருக்கிறது.
கற்கள் பல வகை உள்ளன. அவற்றில் மாணிக்க கற்கள், ரத்தினங்கள், வைரங்கள், சாதாரண உபயோக கற்கள், உபயோகமற்ற கற்கள் என பல வகை இருக்கிறது.
இப்படியே திரவங்கள், தாவரங்கள், உயிரிணங்கள் என எல்லாவற்றிலும் இது போன்ற ஏற்றத்தாழ்வு இருக்கவே செய்கிறது.
ஒரே தண்ணீர் பாய்ச்சப்படும் தோட்டங்களில் கிடைக்கும் கனிகளில் கூட சுவைகளில் வேறுபாடு இருக்கிறது. என்பதை பின் வரும் வசனம் எடுத்துரைக்கிறது.
وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَى بِمَاءٍ وَاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الْأُكُلِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ [الرعد: 4]
அந்த வகையில் மனிதர்களிலும் ஏற்ற வித்தியாசம் இருக்கிறது.
மனிதர்களிடையே உள்ள ஏற்ற வித்தியாசங்களை இரு வகையாக பிரிக்கலாம்.
1 உலகம் சார்ந்த விஷயங்களில் உள்ள ஏற்ற வித்தியாசம்.
وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ [النحل: 71]
v சிலருக்கு கையழுத்து போடக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலைப்பளுவை சுமந்தும் குறைவான வருமானம் பார்க்கின்றனர்.
v இன்னும் சிலர் கையழுத்து போடுவதால் மட்டுமே கை நிறைய வருமானம் பெறும் நிலையில் இருக்கின்றனர்.
v சிலர் வீட்டில் இருந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
v இன்னும் சிலர் வீட்டுக்கு வரக்கூட நேரமில்லாத அளவுக்கு பாடுபட்டும் குறைவான வருமானமே பெறுகின்ற நிலையில் இருக்கின்றனர்.

வருமானத்தில் மட்டுமில்லாமல் உடல் வலிமையில், ஆரோக்கியத்தில், அறிவாற்றலில் என்று பல விஷயங்களில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.


2- மறுமை சார்ந்த விஷயங்களை கவனித்து ஏற்றத்தாழ்வு
v முஃமின் அல்லாதவர்களைவிட முஃமின்களுக்கு சிறப்பு
أَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ (18) أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ (19) وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ (20)
قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ [الرعد: 16]
v முஃமின்களிலும்  ஸாலிஹீன் எனும் நல்லவர்களுக்கு சிறப்பு
أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ (162) هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ  [آل عمران: 163]
அதைவிட ஷுஹதாக்கள் சிறப்பானவர்கள்
அவர்களை விட சித்தீகீன்கள் சிறப்பானவரக்கள்
அவர்களைவிட நபிமாரக்ள் அவர்களில் உலுல் அஜ்ம் எனும் உறுதி மிக்க ஐவர் சிறப்பானவர்கள்.
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ  الأحقاف: 35
அவர்களிலும் கலீலாகிய இருவர்.
அவ்விருவரிலும் முஹம்மது நபி ஸல் அவர்கள் அதிக அந்தஸ்துக்குரியவர்கள்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ  البقرة: 253
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ، وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ، وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ» صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 4575. 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ النَّاسِ يَشْفَعُ فِي الْجَنَّةِ وَأَنَا أَكْثَرُ الْأَنْبِيَاءِ تَبَعًا» صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 330. 
இப்படி இருவகையான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.
பொதுவாக நாம் நம்முடைய தராதரத்தை பிறருடைய தராதரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றோம்.
அவற்றில் அவசியமான ஒப்பீடும் இருக்கின்றது அனாவசியமான ஒப்பீடும் இருக்கின்றது.
1 துன்யாவுடைய விஷயத்தில் நம்மைவிட கீழ் நிலையில் இருப்பவர்களோடு நம் நிலையை ஒப்பீடு செய்து  பார்ப்பது அவசியமானதாகும். ஏனெனில் அது நன்றியுணர்வை வளர்க்கும்.
மேல் நிலையில் உள்ளவர்களோடு நம் நிலையை ஒப்பிட்டு அவருக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என வயிற்றெரிச்சல் கொள்வது அனாவசியமானது. மேலும் நன்றி கெட்ட தன்மையை உருவாக்கும்.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ النساء: 32
 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 6490. 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ» سنن الترمذي

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.

அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன.அங்கே வசித்த

மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக் கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு,

யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும். இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத் துவங்கியது.

அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத் துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.

மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது,

மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா,

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்அது என்னஎன்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும். அதை விட்டு எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.  
நன்றி eluthu.com

http://eluthu.com/kavithai/234820.html

"எனக்கு செருப்பில்லையே என கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன் கால் இல்லாதவனைப் பார்க்கும் வரை" என்று ஒரு அறிஞர் கூறுவார்.

2 தீனுடைய விஷயத்தில் தன்னை விட மேல் நிலையில் இருப்பவர்களை பார்த்து ஆவல் கொண்டு நன்மையை அதிகரிக்க வேண்டும். இது அவசியமான ஒப்பீடு
தன்னை விட கீழ் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து சமாதானம் கொள்வது, அவருக்கு நாம் பரவாயில்லை என ஆறுதல் கொள்வது கூடாது. அது அனாவசியமான ஒப்பீடாகும்.

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَصْلَتَانِ مَنْ كَانَتَا فِيهِ كَتَبَهُ اللَّهُ شَاكِرًا صَابِرًا، وَمَنْ لَمْ تَكُونَا فِيهِ لَمْ يَكْتُبْهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَابِرًا، مَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ فَوْقَهُ فَاقْتَدَى بِهِ، وَنَظَرَ فِي دُنْيَاهُ إِلَى مَنْ هُوَ دُونَهُ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا فَضَّلَهُ بِهِ عَلَيْهِ كَتَبَهُ اللَّهُ شَاكِرًا وَصَابِرًا، وَمَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ دُونَهُ، وَنَظَرَ فِي دُنْيَاهُ إِلَى مَنْ 
هُوَ فَوْقَهُ فَأَسِفَ عَلَى مَا فَاتَهُ مِنْهُ لَمْ يَكْتُبْهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَابِرًا» . سنن الترمذي


 எவரிடம் இரு குணங்கள் இருக்குமோ, அவரை நன்றி செலுத்துபவர்கள் மற்றும் பொறுமையாளர்கள் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பான். எவரிடம் இவ்விரு குணமும் இல்லையோ அவரை நன்றி செலுத்துவோர், பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் கணிக்கமாட்டான். எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தனக்கு மேலுள்ளவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றி, உலக காரியங்களில் தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து (அல்லாஹ் தனது அருளாலேயே) அவரை விடச் சிறந்த நிலையில் தன்னை வைத்துள்ளான் என்று கருதி, அவனுக்கு நன்றி செலுத்தவும் செய்கிறாரோ, அவரை நன்றி செலுத்துபவர் மற்றும் பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் எழுதிவிடுகிறான், எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தன்னைவிடக் குறைந்தவரைக் கண்டும், உலக காரியங்களில் தன்னைவிட மேலானவர்களைப் பார்த்தும், தனக்கு உலகம் குறைவாகக் கிடைத்ததற்காகக் கைசேதப்படுவாரோ, அவரை அல்லாஹ் பொறுமையாளர்களிலும் கணிக்கமாட்டான், நன்றியாளர்களிலும் கணிக்கமாட்டான்’’ என்று அருமை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: திர்மிதீ