வியாழன், 29 அக்டோபர், 2015

இறையறிவை தூண்டும் சிந்தனை வேண்டும்

بسم الله الرحمن الرحيم


பாகம் -1


பாகம்-2


قَالَ اللَّهُ تَعَالَى: وَفِي الأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ  وَفِي أَنْفُسِكُمْ أَفَلا تُبْصِرُونَ  الذاريات:21،20
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ، وَلَا تَتَفَكَّرُوا فِي اللَّهِ» المعجم الأوسط ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ் ஒருவன்தான் ஏகஇறைவன்என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டதே இஸ்லாம் எனவே அல்லாஹ்வையும் அவன் நம்பும்படி கட்டளையிட்டவையும் ஏற்றுக்கொள்பவரே முஸ்லிமாக இருக்கமுடியும்.
இஸ்லாமிய கோட்பாடின் மையப்புள்ளியாக விளங்குவது ஏகஇறைவன் அல்லாஹ்வை நம்புவதாகும்  ஆனால் அவனை நாம் யாரும் பார்த்ததில்லை. இவ்வுலகில் பார்க்கவும் முடியாது.
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ (الانعام103)
அல்லாஹ்வை காணமுடிவதில்லை என்பதனால் அவனை மறுக்ககூடாது.
இந்த உலகில் எத்தனையோ பல விஷயங்களை நாம் கண்ணால் காணாமலேயே ]அடையாளம், அத்தாட்சி, விளைவு ஆகியவற்றைக்கொண்டு[ ஏற்கிறோம்.
உதாரணமாக, காற்று என்று ஒன்று உண்டு என்பதில் மாற்றுக்கருத்து நமக்கில்லை. ஆனால் காற்றை நாம் யாரும் பார்த்ததில்லை.
உயிரின் உஜூதில் நமக்கு சந்தேகமில்லை ஆனால் உயிரை எவரும் பார்த்ததில்லை.
மின்சாரம், அலைவரிசை இதுபோன்ற இன்ன பல நவீன சாதனங்கள் அனைத்தும் விளைவின் மூலம் மட்டுமே தன் இருப்பைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தனியாக அவைகளை காணமுடிவதில்லை.
அதேபோலதான் உலகமும் உலகிலுள்ளவைகளும் அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறியத்தருகின்றன. அப்படி இறைவனை அறியத்தருவதனாலதான் உலகிற்கு العالم [அறியப்பயன்படுபவை] என்று பெயரானது.
والعالم اسم لما يعلم به، كالخاتم والقالب، غلب فيما يعلم به الصانع تعالى، وهو كل ما سواه من الجواهر والأعراض، فإنها لإمكانها وافتقارها إلى مؤثر واجب لذاته تدل على وجوده، تفسير البيضاوي
எனவே இந்த உலகையும் அதில் உள்ள பேரதிசயங்களையும் சிந்திக்க சிந்திக்க இறைவனைப்பற்றிய அறிவு மேலோங்கும். அவ்விதமாக நம்சிந்தனை அமைய வேண்டும் என்பதால் அல்-குர்ஆன் படைப்புகள் பற்றி சிந்திக்க தூண்டுகிறது.
قَالَ اللَّهُ تَعَالَى: وَفِي الأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ  وَفِي أَنْفُسِكُمْ أَفَلا تُبْصِرُونَ  الذاريات:21،20
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (فصلت 53)
وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ (يوسف 105)
قُلِ انْظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ (يونس 101)
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (ال عمران 191)

மேலுள்ள வசனங்களை ஆராயும்போது மெஞ்ஞான வழியில் நம்சிந்தனை மூன்று நிலைகளில் இருக்கலாம்.
1-    நம்மிலிருந்து தூரமாக இருக்கும் வானவியல் பற்றி சிந்திப்பது
சூரியன் அதன் குடும்பமாகிய மற்ற கோள்கள் ஒவ்வொன்றின் பலன்கள், பிரமாண்டங்கள், அவைகளின் சீர்குலையாத இயக்கங்கள் அனைத்தும் இறைவனின் அத்தாட்சிகளாக ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன.
2-    நம் அருகில் இருக்கும் பூமியிலுள்ளவற்றைப்பற்றி சிந்திப்பது.
கோடான கோடி உயிரிணங்கள் வகைவகயான தாவரங்கள் கனிம வளங்கள் மனித வாழ்வின் அடிப்படைத்தேவைகளுக்கு அவசியமானவை சுகபோக வாழ்க்கைக்கு தேவையானவை என்று என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாமே ஓசையில்லாமல் ஓரிறைவனின் ஆற்றலை ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
3-    நமக்குள்ளே அடங்கி இருக்கும் இறைவனின் பேராற்றலை சிந்திப்பது.
வானத்திலும் பூமியிலுமாக நமக்கு வெளியிலிருக்கும் பேரதிசயங்களின் சாரம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது.
உதாரணமாக
Ø  அண்டத்தில் சூரியன் ஒளி தருவது போல மனித பிண்டத்தில் கண் ஒளி தந்து கொண்டிருக்கிறது.
Ø  பூமியின் சில பகுதி இருக்கமானது சக்தி வாய்ந்த இயந்திரங்களால் மட்டுமே துளையிட முடியும். இன்னும் சில பகுதி இளகலானது கால் பதித்து நிற்பதுகூட கடினம். இன்னும் சில பகுதி நடுத்தரமானது.
இதே போல மனித உடலிலும் நகம் குதிங்கால் போன்று இறுக்கமானவைகளும் உண்டு. கண் போல ஒரு தூசு படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மென்மையானதும் உண்டு. இவ்விரண்டுக்கும்இடைப்பட்டதும் உண்டு.
Ø  பூமியில் மரங்களுக்கு ஒப்பாக உடலில் முடிகள், மலைகளுக்கு ஒப்பாக எலும்புகள், ஆறுகளுக்கு ஒப்பாக நரம்புகள், மழைக்கு ஒப்பாக வியர்வைகள், உயிரிணங்களுக்கு ஒப்பாக பேன்கள் அல்லது கண்களுக்கு தெரியாத கிருமிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதைப்பற்றித்தான் அரபிக்கவிதை இப்படி கூறும்
وتزعم أنك جرم صغير ===  وفيك انطوى العالم الأكبر
உன்னை நீ ஒரு சிறிய உடல் என்று எண்ணிக்கொள்கிறாய்
ஆனால் உனக்குள் பேரண்டமே சுருண்டிருக்கிறது

அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமு மொன்றே

அறிந்து தான் பார்க்கும் போதே

என்று சித்தர் பாடுகிறார்.
சிந்திப்பவர்களை புகழ்ந்து அல்லது சிந்திக்க தூண்டி அல்-குர்ஆனில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வசனம் வருகிறது.
இறைவனின் வல்லமையை அறியத்தரும் விதம், படைப்புகளைச் சிந்தனை செய்வதும் ஒரு வணக்கம்.
عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: تَفَكُّرُ سَاعَةٍ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةٍ " الزهد لأحمد بن حنبل
وَعَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ أَنَّهُ قَالَ: تَفَكُّر سَاعَة خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةٍ. تفسير ابن كثير
எனவேதான் ஹதீஸ்களிலும் அதுபற்றி அதிகம் வலியுறுத்தப்படுகிறது.
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ، وَلَا تَتَفَكَّرُوا فِي اللَّهِ» المعجم الأوسط
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَمَرَنِي رَبِّي بِتِسْعٍ: خَشْيَةِ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ وَكَلِمَةِ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَى وَالْقَصْدِ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِي وَأُعْطِي مَنْ حَرَمَنِي وَأَعْفُو عَمَّنْ ظَلَمَنِي وَأَنْ يَكُونَ صَمْتِي فِكْرًا وَنُطْقِي ذِكْرًا وَنَظَرِي عِبْرَةً وَآمُرُ بِالْعُرْفِ «وَقِيلَ» بِالْمَعْرُوفِ " رَوَاهُ رزين- مشكاة المصابيح
நம்பார்வை, பார்க்கும் பொருளோடு மட்டும் முடிந்து விடாமல், அது வேறொன்றை அறிய பயன்படுமானால் அதுதான் படிப்பினைக்குறிய பார்வை.
إِذَا الْمَرْءُ كَانَتْ لَهُ فكْرَةٌ ... فِفِي كُلِّ شَيْءٍ لَهُ عبرَة
عَنْ وَكِيعِ بْنِ حُدَسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ، أَكُلُّنَا يَرَى رَبَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ؟ وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ فَقَالَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَلَيْسَ كُلُّكُمْ يَنْظُرُ إِلَى الْقَمَرِ مُخْلِيًا بِهِ؟ " قَالَ: بَلَى، قَالَ: " فَاللهُ أَعْظَمُ "
قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ كَيْفَ يُحْيِي اللهُ الْمَوْتَى؟ وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: " أَمَا مَرَرْتَ بِوَادِي أَهْلِكَ مَحْلًا؟ " قَالَ: بَلَى، قَالَ: " أَمَا مَرَرْتَ بِهِ يَهْتَزُّ خَضِرًا؟ " قَالَ: قُلْتُ: بَلَى قَالَ: " ثُمَّ مَرَرْتَ بِهِ مَحْلًا؟ " قَالَ: بَلَى قَالَ: " فَكَذَلِكَ يُحْيِي اللهُ الْمَوْتَى وَذَلِكَ آيَتُهُ فِي خَلْقِهِ مسند أحمد
مَحْل  என்றால் வறண்ட நிலம்
عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ , عَنْ أُمَّهِ , أَنَّ امْرَأَةً دَخَلَتْ بَيْتَ عَائِشَةَ فَصَلَّتْ عِنْدَ بَيْتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَحِيحَةٌ , فَلَمْ تَرْفَعْ رَأْسَهَا حَتَّى مَاتَتْ , قَالَتْ عَائِشَةُ: " الْحَمْدُ لِلَّهِ الَّذِي يُحْيِي وَيُمِيتُ , إِنَّ هَذَا لَعِبْرَةً لِي فِي أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ , وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ رَقَدَ فِي مَقِيلٍ قَالَ: فَذَهَبُوا يُوقِظُونَهُ فَوَجَدُوهُ قَدْ مَاتَ , فَدَخَلَ نَفْسَ عَائِشَةَ تُهْمَةٌ أَنْ يَكُونَ صُنِعَ بِهِ شَيْءٌ , أَوْ عُجِلَ عَلَيْهِ , فَدُفِنَ وَهُوَ حَيٌّ , فَرَأَتْ أَنَّهَا عِبْرَةٌ لَهَا , وَذَهَبَ مَا كَانَ فِي نَفْسِهَا " شعب الإيمان
وَعَنْ عِيسَى، عَلَيْهِ السَّلَامُ، أَنَّهُ قَالَ: طُوبَى لِمَنْ كَانَ قِيلُه تَذَكُّرًا، وصَمْته تَفكُّرًا، ونَظَره عِبَرًا. تفسير ابن كثير

அதையும் தாண்டி வணக்கங்களிலெல்லாம் மிகச்சிறப்பானதும்கூட.
وفى التفضيل وجهان. أحدهما ان التفكر يوصلك الى الله والعبادة توصلك الى ثواب الله والذي يوصلك الى الله خير مما يوصلك الى غير الله. والثاني ان التفكر عمل القلب والطاعة عمل الجوارح والقلب اشرف من الجوارح فكان عمل القلب اشرف من عمل الجوارح. روح البيان
அதே கருத்தை ஹதீஸிலும் காணமுடிகிறது
 عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ لِلْحَسَنِ ابْنِهِ: يَا بُنَيَّ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا مَالَ أَعْوَزُ مِنَ الْعَقْلِ، وَلَا فَقْرَ أَشَدُّ مِنَ الْجَهْلِ، وَلَا وَحْدَةَ أَشَدُّ مِنَ الْعَجَبِ، وَلَا مُظَاهَرَةَ أَوْثَقُ مِنَ الْمُشَاوَرَةِ، وَلَا عَقْلَ كَالتَّدْبِيرِ، وَلَا حَسَبَ كَحُسْنِ الْخُلُقِ، وَلَا وَرَعَ كَالْكَفِّ، وَلَا عِبَادَةَ كَالتَّفَكُّرِ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ شعب الإيمان

உடல் உறுப்புகளின் வணக்கங்களில் ஈடுபடும் நாம் உள்ளத்தின் வணக்கமாகிய இறைச்சிந்தனையிலும் கவனம் செலுத்துவோம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

முத்தான முஹர்ரம் பத்தாம் நாள்

بسم الله الرحمن الرحيم
முத்தான முஹர்ரம் பத்தாம் நாள்

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (البقرة 50)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ» معجم ابن الأعرابي
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
கண்ணியமிக்க நான்கு மாதங்களில் ஒன்று முஹர்ரம்.
இம்மாதத்தின் பத்தாம் தேதி ஆஷுரா என அறியப்படுகிறது.

அந்த நாள் குறித்து يوم صالح  என்றும்  يوم عظيم என்றும் யூதர்கள் சிலாகித்து கூறியதை நபி ஸல் அவர்கள் ஆமோதித்திருக்கிறார்கள். அதன் மூலம் அந்த நாள் மற்ற நாட்கள் போலல்லாமல் ஒரு விஷேசமான நாள் என்பதை அறிகிறோம். பார்க்க.. [கீழ்வரும்] ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்:  3397, ஹதீஸ் எண்: 2004 .
பல அற்புத நிகழ்வுகளின் நினைவு தினமாகவும் ஆஷுரா திகழ்கிறது.
v மூஸா நபி [அலை] அவர்கள் சமூகத்தைச் சார்ந்த பனீ இஸ்ராயீலர்களை கொடுங்கோலன் பிர்அவ்னின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக செங்கடல் பிளந்தது...  இந்த நாளில்தான்.
3397 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ صحيح البخاري
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்" என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3397. 

2004 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَرَأَى اليَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: «مَا هَذَا؟» ، قَالُوا: هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى، قَالَ: «فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ» ، فَصَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ صحيح البخاري
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள்  'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2004


قَوْلُهُ تَعَالَى: وَجاوَزْنا بِبَنِي إِسْرائِيلَ الْبَحْرَ، قَالَ الْكَلْبِيُّ: عَبَرَ بِهِمْ مُوسَى الْبَحْرَ يَوْمَ عَاشُورَاءَ بَعْدَ مَهْلِكِ فِرْعَوْنَ وَقَوْمِهِ فَصَامَهُ شُكْرًا لِلَّهِ عَزَّ وَجَلَّ، تفسير البغوي
v மூஸா நபி [அலை] அவர்கள் ஸாஹிரீன்களிடம் களமிறங்கி வெற்றி கொண்ட அந்த நாளும் ஆஷூரா நாள்தான் என்பது இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களின் கருத்து.
{قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ الاية}
قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: فَحَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ: أَنَّ يَوْمَ الزِّينَةِ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ وَالسَّحَرَةِ، هُوَ يَوْمُ عَاشُورَاءَ. تفسير ابن كثير
قوله تعالى: {يَوْمُ الزِّينَةِ} فيه أربعة أقاويل: أحدها: أنه يوم عيد كان لهم , قاله مجاهد وابن جريج والسدي وابن زيد وابن إسحاق. الثاني: يوم السبت , قاله الضحاك. الثالث: عاشوراء , قاله ابن عباس. الرابع: أنه يوم سوق كانوا يتزينون فيها , قاله قتادة. تفسير 
الماوردي = النكت والعيون
v ஆதம் [அலை] அவர்களின் நீண்ட கால தவ்பா ஏற்கப்பட்டதும் இந்த நாளில் என்று தஃப்ஸீரில் காணமுடிகிறது.

وَرُوِيَ أَنَّ اللَّهَ تَعَالَى تَابَ عَلَى آدَمَ فِي يَوْمِ عَاشُورَاءَ البحر المحيط في التفسير

v ஆறு மாத காலம் வெள்ளத்தில் சிக்குண்டு தவித்த நூஹ் நபி [அலை]  அவர்களின் கப்பல் ஜூதி மலையில் நிலை கொண்டதும் இந்த நாளில் என்று ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர்களில் காணமுடிகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُنَاسٍ مِنَ الْيَهُودِ قَدْ صَامُوا يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: " مَا هَذَا مِنَ الصَّوْمِ؟ " قَالُوا: هَذَا الْيَوْمُ الَّذِي نَجَّى اللهُ مُوسَى وَبَنِي إِسْرَائِيلَ مِنَ الْغَرَقِ، وَغَرَّقَ فِيهِ فِرْعَوْنَ، وَهَذَا يَوْمُ اسْتَوَتْ فِيهِ السَّفِينَةُ عَلَى الْجُودِيِّ، فَصَامَ نُوحٌ وَمُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَا أَحَقُّ بِمُوسَى، وَأَحَقُّ بِصَوْمِ هَذَا الْيَوْمِ "، فَأَمَرَ أَصْحَابَهُ بِالصَّوْمِ احمد

عَن عبد الْعَزِيز بن عبد الغفور عَن أَبِيه قَالَ: قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم: فِي أول يَوْم من رَجَب ركب نوح السَّفِينَة فصَام هُوَ وَجَمِيع من مَعَه وَجَرت بهم السَّفِينَة سِتَّة أشهر فَانْتهى ذَلِك إِلَى الْمحرم فأرست السَّفِينَة على الجودي يَوْم عَاشُورَاء فصَام نوح وَأمر جَمِيع من مَعَه الدر المنثور
قَالَ عِكْرِمَةُ: رَكِبَ نُوحٌ عَلَيْهِ السَّلَامُ فِي الْفُلْكِ لِعَشْرٍ خَلَوْنَ مِنْ رَجَبٍ، وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ لِعَشْرٍ خَلَوْنَ من المحرم، فذلك ستة أشهر، وقال قَتَادَةُ وَزَادَ، وَهُوَ يَوْمُ عَاشُورَاءَ، فَقَالَ لِمَنْ كَانَ مَعَهُ: مَنْ كَانَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ، وَمَنْ لَمْ يَكُنْ صَائِمًا فَلْيَصُمْهُ. وَذَكَرَ الطَّبَرِيُّ فِي هَذَا حَدِيثًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ نُوحًا رَكِبَ فِي السَّفِينَةِ أَوَّلَ يَوْمٍ مِنْ رَجَبٍ، وَصَامَ الشَّهْرَ. أَجْمَعَ، وَجَرَتْ بِهِمُ السَّفِينَةُ إِلَى يَوْمِ عَاشُورَاءَ، فَفِيهِ أَرْسَتْ عَلَى الْجُودِيِّ، فَصَامَهُ نُوحٌ وَمَنْ مَعَهُ         تفسير القرطبي
قوله عز وجل: {وقال اركبوا فيها بِاسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيمٌ} قال قتادة: ركب نوح عليه السلام في السفينة في اليوم العاشر من رجب , ونزل منها في اليوم العاشر من المحرم , وهو يوم عاشوراء , فقال لمن معه: من كان صائماً فليتم صومه , ومن لم يكن صائماً فليصمه. 
تفسير الماوردي
v யூனுஸ் நபி [அலை]  அவர்களின் சமூகத்தாருக்கு இறங்க இருந்த வேதனை விலக்கிக்கொள்ளப்பட்டது இந்த நாளில் என்று அலி [ரலி] கூறியதாக தஃப்ஸீரில் வருகிறது.

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (يونس 98)
وَعَن عَليّ - رَضِي الله عَنهُ - قَالَ: الحذر لَا يرد الْقدر، وَالدُّعَاء يرد الْقدر؛ فَإِن الله تَعَالَى كشف الْعَذَاب عَن قوم يُونُس بِالدُّعَاءِ. وَعَن عَليّ - أَيْضا - أَنه قَالَ: كَانَ كشف الْعَذَاب يَوْم عَاشُورَاء. تفسير السمعاني

وروي عن علي بن أبي طالب رضي الله عنه أنه قال: إن الحذر لا يرد القدر , وإن الدعاء يرد القدر , وذلك أن الله تعالى يقول: {إِلاَّ قَوْمَ يُونُسَ لَمَّاءَامَنُواْ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ} قال عليّ رضي الله عنه ذلك يوم عاشوراء. تفسير الماوردي

v யாகூப் நபி [அலை]  தன்பிள்ளைகள் செய்த தவறுக்கு இஸ்திஃபார் செய்வேன் என வாக்களித்து காத்திருந்து பிறகு இஸ்திஃபார் செய்தது இந்த நாளில் என்று தஃப்ஸீர்களில் வருகிறது.
قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ  قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ  يوسف
قَوْلُهُ تَعَالَى: (قالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي) قَالَ ابْنُ عَبَّاسٍ: أَخَّرَ دُعَاءَهُ إِلَى السَّحَرِ. وَقَالَ الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ طَاوُسٍ قَالَ: سَحَرُ لَيْلَةِ الْجُمْعَةِ، وَوَافَقَ ذَلِكَ لَيْلَةَ عَاشُورَاءَ. تفسير القرطبي
وقال طاوس: أخّر إلى السحر من ليلة الجمعة فوافق ذلك ليلة عاشوراء. تفسير الثعلبي

இப்படி பல அற்புதங்களின் நினைவு நாளாக ஆஷூரா திகழும் அதேவேளை இஸ்லாமிய வரலாற்றில் நீங்காத ஒரு வடுவை ஏற்படுத்திய, அக்கிரமத்தின் நினைவு நாளாகவும் ஆஷூரா அமைந்து விட்டது.
அதுதான் கர்பலாவில் நபி ஸல் அவர்களின் அருமை பேரர் ஹுஸைன் ரலி அவர்களின் ஷஹாதத்۔
இந்த கோரமான நிகழ்வு எந்தவொரு முஃமினையும் நிச்சயமாக கலக்கமடையச்செய்யும். ஆனால் தன்பேரப்பிள்ளைக்கு இப்படி ஒரு சோதனை காத்திருக்கிறது என்பதை நபி ஸல் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள்.

عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّهَا دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَأَيْتُ حُلْمًا مُنْكَرًا اللَّيْلَةَ، قَالَ: «مَا هُوَ؟» قَالَتْ: إِنَّهُ شَدِيدٌ، قَالَ: «مَا هُوَ؟» قَالَتْ: رَأَيْتُ كَأَنَّ قِطْعَةً مِنْ جَسَدِكَ قُطِعَتْ وَوُضِعَتْ فِي حِجْرِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتِ خَيْرًا، تَلِدُ فَاطِمَةُ إِنْ شَاءَ اللَّهُ غُلَامًا، فَيَكُونُ فِي حِجْرِكِ» فَوَلَدَتْ فَاطِمَةُ الْحُسَيْنَ فَكَانَ فِي حِجْرِي كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلْتُ يَوْمًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حِجْرِهِ، ثُمَّ حَانَتْ مِنِّي الْتِفَاتَةٌ، فَإِذَا عَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُهْرِيقَانِ مِنَ الدُّمُوعِ، قَالَتْ: فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا لَكَ؟ قَالَ: «أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَأَخْبَرَنِي أَنَّ أُمَّتِي سَتَقْتُلُ ابْنِي هَذَا» فَقُلْتُ: هَذَا؟ فَقَالَ: «نَعَمْ، وَأَتَانِي بِتُرْبَةٍ مِنْ تُرْبَتِهِ حَمْرَاءَ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ " المستدرك على الصحيحين للحاكم
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ مَلَكَ الْمَطَرِ اسْتَأْذَنَ رَبَّهُ أَنْ يَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنَ لَهُ، فَقَالَ لِأُمِّ سَلَمَةَ: «امْلِكِي عَلَيْنَا الْبَابَ، لَا يَدْخُلْ عَلَيْنَا أَحَدٌ» ، قَالَ: وَجَاءَ الْحُسَيْنُ لِيَدْخُلَ فَمَنَعَتْهُ، فَوَثَبَ فَدَخَلَ فَجَعَلَ يَقْعُدُ عَلَى ظَهَرِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مَنْكِبِهِ، وَعَلَى عَاتِقِهِ، قَالَ: فَقَالَ الْمَلَكُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُحِبُّهُ؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: أَمَا إِنَّ أُمَّتَكَ سَتَقْتُلُهُ، وَإِنْ شِئْتَ أَرَيْتُكَ الْمَكَانَ الَّذِي يُقْتَلُ فِيهِ، فَضَرَبَ بِيَدِهِ فَجَاءَ بِطِينَةٍ حَمْرَاءَ، فَأَخَذَتْهَا أُمُّ سَلَمَةَ فَصَرَّتْهَا فِي خِمَارِهَا قَالَ: قَالَ ثَابِتٌ: «بَلَغَنَا أَنَّهَا كَرْبَلَاءُ» مسند أحمد

அப்படி இருந்தும் அதை தவிர்க்கும்படி இறைவனிடம் கேட்கவுமில்லை மக்களிடம் கட்டளையிடவுமில்லை. நபி ஸல் அவர்கள் சகித்துக்கொண்டார்கள்.அவர்களின் சகிப்புத்தன்மையை முன்மாதிரியாக கொண்டு முஃமின்கள் நடந்து கொள்கிறார்கள். நடக்கவும் வேண்டும்.
ஆஷூரா குறித்து நபி ஸல் அவர்கள் கூறிய இன்னொரு விஷயம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ ". " هَذِهِ الْأَسَانِيدُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَهِيَ إِذَا ضُمَّ بَعْضُهَا إِلَى بَعْضٍ أَخَذَتْ قُوَّةً، وَاللهُ أَعْلَمُ " شعب الإيمان
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ» معجم ابن الأعرابي