வியாழன், 29 அக்டோபர், 2015

இறையறிவை தூண்டும் சிந்தனை வேண்டும்

بسم الله الرحمن الرحيم


பாகம் -1


பாகம்-2


قَالَ اللَّهُ تَعَالَى: وَفِي الأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ  وَفِي أَنْفُسِكُمْ أَفَلا تُبْصِرُونَ  الذاريات:21،20
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ، وَلَا تَتَفَكَّرُوا فِي اللَّهِ» المعجم الأوسط ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ் ஒருவன்தான் ஏகஇறைவன்என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டதே இஸ்லாம் எனவே அல்லாஹ்வையும் அவன் நம்பும்படி கட்டளையிட்டவையும் ஏற்றுக்கொள்பவரே முஸ்லிமாக இருக்கமுடியும்.
இஸ்லாமிய கோட்பாடின் மையப்புள்ளியாக விளங்குவது ஏகஇறைவன் அல்லாஹ்வை நம்புவதாகும்  ஆனால் அவனை நாம் யாரும் பார்த்ததில்லை. இவ்வுலகில் பார்க்கவும் முடியாது.
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ (الانعام103)
அல்லாஹ்வை காணமுடிவதில்லை என்பதனால் அவனை மறுக்ககூடாது.
இந்த உலகில் எத்தனையோ பல விஷயங்களை நாம் கண்ணால் காணாமலேயே ]அடையாளம், அத்தாட்சி, விளைவு ஆகியவற்றைக்கொண்டு[ ஏற்கிறோம்.
உதாரணமாக, காற்று என்று ஒன்று உண்டு என்பதில் மாற்றுக்கருத்து நமக்கில்லை. ஆனால் காற்றை நாம் யாரும் பார்த்ததில்லை.
உயிரின் உஜூதில் நமக்கு சந்தேகமில்லை ஆனால் உயிரை எவரும் பார்த்ததில்லை.
மின்சாரம், அலைவரிசை இதுபோன்ற இன்ன பல நவீன சாதனங்கள் அனைத்தும் விளைவின் மூலம் மட்டுமே தன் இருப்பைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தனியாக அவைகளை காணமுடிவதில்லை.
அதேபோலதான் உலகமும் உலகிலுள்ளவைகளும் அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறியத்தருகின்றன. அப்படி இறைவனை அறியத்தருவதனாலதான் உலகிற்கு العالم [அறியப்பயன்படுபவை] என்று பெயரானது.
والعالم اسم لما يعلم به، كالخاتم والقالب، غلب فيما يعلم به الصانع تعالى، وهو كل ما سواه من الجواهر والأعراض، فإنها لإمكانها وافتقارها إلى مؤثر واجب لذاته تدل على وجوده، تفسير البيضاوي
எனவே இந்த உலகையும் அதில் உள்ள பேரதிசயங்களையும் சிந்திக்க சிந்திக்க இறைவனைப்பற்றிய அறிவு மேலோங்கும். அவ்விதமாக நம்சிந்தனை அமைய வேண்டும் என்பதால் அல்-குர்ஆன் படைப்புகள் பற்றி சிந்திக்க தூண்டுகிறது.
قَالَ اللَّهُ تَعَالَى: وَفِي الأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ  وَفِي أَنْفُسِكُمْ أَفَلا تُبْصِرُونَ  الذاريات:21،20
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (فصلت 53)
وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ (يوسف 105)
قُلِ انْظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ (يونس 101)
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (ال عمران 191)

மேலுள்ள வசனங்களை ஆராயும்போது மெஞ்ஞான வழியில் நம்சிந்தனை மூன்று நிலைகளில் இருக்கலாம்.
1-    நம்மிலிருந்து தூரமாக இருக்கும் வானவியல் பற்றி சிந்திப்பது
சூரியன் அதன் குடும்பமாகிய மற்ற கோள்கள் ஒவ்வொன்றின் பலன்கள், பிரமாண்டங்கள், அவைகளின் சீர்குலையாத இயக்கங்கள் அனைத்தும் இறைவனின் அத்தாட்சிகளாக ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன.
2-    நம் அருகில் இருக்கும் பூமியிலுள்ளவற்றைப்பற்றி சிந்திப்பது.
கோடான கோடி உயிரிணங்கள் வகைவகயான தாவரங்கள் கனிம வளங்கள் மனித வாழ்வின் அடிப்படைத்தேவைகளுக்கு அவசியமானவை சுகபோக வாழ்க்கைக்கு தேவையானவை என்று என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாமே ஓசையில்லாமல் ஓரிறைவனின் ஆற்றலை ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
3-    நமக்குள்ளே அடங்கி இருக்கும் இறைவனின் பேராற்றலை சிந்திப்பது.
வானத்திலும் பூமியிலுமாக நமக்கு வெளியிலிருக்கும் பேரதிசயங்களின் சாரம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது.
உதாரணமாக
Ø  அண்டத்தில் சூரியன் ஒளி தருவது போல மனித பிண்டத்தில் கண் ஒளி தந்து கொண்டிருக்கிறது.
Ø  பூமியின் சில பகுதி இருக்கமானது சக்தி வாய்ந்த இயந்திரங்களால் மட்டுமே துளையிட முடியும். இன்னும் சில பகுதி இளகலானது கால் பதித்து நிற்பதுகூட கடினம். இன்னும் சில பகுதி நடுத்தரமானது.
இதே போல மனித உடலிலும் நகம் குதிங்கால் போன்று இறுக்கமானவைகளும் உண்டு. கண் போல ஒரு தூசு படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மென்மையானதும் உண்டு. இவ்விரண்டுக்கும்இடைப்பட்டதும் உண்டு.
Ø  பூமியில் மரங்களுக்கு ஒப்பாக உடலில் முடிகள், மலைகளுக்கு ஒப்பாக எலும்புகள், ஆறுகளுக்கு ஒப்பாக நரம்புகள், மழைக்கு ஒப்பாக வியர்வைகள், உயிரிணங்களுக்கு ஒப்பாக பேன்கள் அல்லது கண்களுக்கு தெரியாத கிருமிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதைப்பற்றித்தான் அரபிக்கவிதை இப்படி கூறும்
وتزعم أنك جرم صغير ===  وفيك انطوى العالم الأكبر
உன்னை நீ ஒரு சிறிய உடல் என்று எண்ணிக்கொள்கிறாய்
ஆனால் உனக்குள் பேரண்டமே சுருண்டிருக்கிறது

அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமு மொன்றே

அறிந்து தான் பார்க்கும் போதே

என்று சித்தர் பாடுகிறார்.
சிந்திப்பவர்களை புகழ்ந்து அல்லது சிந்திக்க தூண்டி அல்-குர்ஆனில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வசனம் வருகிறது.
இறைவனின் வல்லமையை அறியத்தரும் விதம், படைப்புகளைச் சிந்தனை செய்வதும் ஒரு வணக்கம்.
عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: تَفَكُّرُ سَاعَةٍ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةٍ " الزهد لأحمد بن حنبل
وَعَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ أَنَّهُ قَالَ: تَفَكُّر سَاعَة خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةٍ. تفسير ابن كثير
எனவேதான் ஹதீஸ்களிலும் அதுபற்றி அதிகம் வலியுறுத்தப்படுகிறது.
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ، وَلَا تَتَفَكَّرُوا فِي اللَّهِ» المعجم الأوسط
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَمَرَنِي رَبِّي بِتِسْعٍ: خَشْيَةِ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ وَكَلِمَةِ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَى وَالْقَصْدِ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِي وَأُعْطِي مَنْ حَرَمَنِي وَأَعْفُو عَمَّنْ ظَلَمَنِي وَأَنْ يَكُونَ صَمْتِي فِكْرًا وَنُطْقِي ذِكْرًا وَنَظَرِي عِبْرَةً وَآمُرُ بِالْعُرْفِ «وَقِيلَ» بِالْمَعْرُوفِ " رَوَاهُ رزين- مشكاة المصابيح
நம்பார்வை, பார்க்கும் பொருளோடு மட்டும் முடிந்து விடாமல், அது வேறொன்றை அறிய பயன்படுமானால் அதுதான் படிப்பினைக்குறிய பார்வை.
إِذَا الْمَرْءُ كَانَتْ لَهُ فكْرَةٌ ... فِفِي كُلِّ شَيْءٍ لَهُ عبرَة
عَنْ وَكِيعِ بْنِ حُدَسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ، أَكُلُّنَا يَرَى رَبَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ؟ وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ فَقَالَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَلَيْسَ كُلُّكُمْ يَنْظُرُ إِلَى الْقَمَرِ مُخْلِيًا بِهِ؟ " قَالَ: بَلَى، قَالَ: " فَاللهُ أَعْظَمُ "
قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ كَيْفَ يُحْيِي اللهُ الْمَوْتَى؟ وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: " أَمَا مَرَرْتَ بِوَادِي أَهْلِكَ مَحْلًا؟ " قَالَ: بَلَى، قَالَ: " أَمَا مَرَرْتَ بِهِ يَهْتَزُّ خَضِرًا؟ " قَالَ: قُلْتُ: بَلَى قَالَ: " ثُمَّ مَرَرْتَ بِهِ مَحْلًا؟ " قَالَ: بَلَى قَالَ: " فَكَذَلِكَ يُحْيِي اللهُ الْمَوْتَى وَذَلِكَ آيَتُهُ فِي خَلْقِهِ مسند أحمد
مَحْل  என்றால் வறண்ட நிலம்
عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ , عَنْ أُمَّهِ , أَنَّ امْرَأَةً دَخَلَتْ بَيْتَ عَائِشَةَ فَصَلَّتْ عِنْدَ بَيْتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَحِيحَةٌ , فَلَمْ تَرْفَعْ رَأْسَهَا حَتَّى مَاتَتْ , قَالَتْ عَائِشَةُ: " الْحَمْدُ لِلَّهِ الَّذِي يُحْيِي وَيُمِيتُ , إِنَّ هَذَا لَعِبْرَةً لِي فِي أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ , وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ رَقَدَ فِي مَقِيلٍ قَالَ: فَذَهَبُوا يُوقِظُونَهُ فَوَجَدُوهُ قَدْ مَاتَ , فَدَخَلَ نَفْسَ عَائِشَةَ تُهْمَةٌ أَنْ يَكُونَ صُنِعَ بِهِ شَيْءٌ , أَوْ عُجِلَ عَلَيْهِ , فَدُفِنَ وَهُوَ حَيٌّ , فَرَأَتْ أَنَّهَا عِبْرَةٌ لَهَا , وَذَهَبَ مَا كَانَ فِي نَفْسِهَا " شعب الإيمان
وَعَنْ عِيسَى، عَلَيْهِ السَّلَامُ، أَنَّهُ قَالَ: طُوبَى لِمَنْ كَانَ قِيلُه تَذَكُّرًا، وصَمْته تَفكُّرًا، ونَظَره عِبَرًا. تفسير ابن كثير

அதையும் தாண்டி வணக்கங்களிலெல்லாம் மிகச்சிறப்பானதும்கூட.
وفى التفضيل وجهان. أحدهما ان التفكر يوصلك الى الله والعبادة توصلك الى ثواب الله والذي يوصلك الى الله خير مما يوصلك الى غير الله. والثاني ان التفكر عمل القلب والطاعة عمل الجوارح والقلب اشرف من الجوارح فكان عمل القلب اشرف من عمل الجوارح. روح البيان
அதே கருத்தை ஹதீஸிலும் காணமுடிகிறது
 عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ لِلْحَسَنِ ابْنِهِ: يَا بُنَيَّ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا مَالَ أَعْوَزُ مِنَ الْعَقْلِ، وَلَا فَقْرَ أَشَدُّ مِنَ الْجَهْلِ، وَلَا وَحْدَةَ أَشَدُّ مِنَ الْعَجَبِ، وَلَا مُظَاهَرَةَ أَوْثَقُ مِنَ الْمُشَاوَرَةِ، وَلَا عَقْلَ كَالتَّدْبِيرِ، وَلَا حَسَبَ كَحُسْنِ الْخُلُقِ، وَلَا وَرَعَ كَالْكَفِّ، وَلَا عِبَادَةَ كَالتَّفَكُّرِ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ شعب الإيمان

உடல் உறுப்புகளின் வணக்கங்களில் ஈடுபடும் நாம் உள்ளத்தின் வணக்கமாகிய இறைச்சிந்தனையிலும் கவனம் செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக