வியாழன், 28 ஏப்ரல், 2016

தட்டுங்கள் திறக்கப்படும்

بسم الله الرحمن الرحيم
தட்டுங்கள் திறக்கப்படும்

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ - غافر: 60
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ் மனிதனுக்கு பல தேவைகளை வைத்துள்ளான் அவைகளை அடைய சுய சிந்தனை, ஆலோசனை, உழைப்பு, முயற்ச்சி என பல காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் பிரார்த்தனையாகும் அதைத்தான் அரபியில் دعاء என்கின்றோம். 
دعاء என்பது மனிதனோடும் மனித வாழ்வோடும் மனித வாழ்க்கைத் தேவையோடும் மிக நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கறது.
      பிறப்பதற்கு முந்தியும் இறந்ததற்குப் பிறகும் நமக்கு அவசியப்படுகிற ஒரு காரியமாகும்.
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தைப் பேறு குறித்து, அதன் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் குறித்து, பெற்றோர்களால், உறவினர்களால், நண்பர்களால், நல்லோர்களால் எவ்வளவு துஆ செய்யப்பட்டது என்று அந்த குழந்தைக்கு தெரியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனக்கு பிறக்கவிருந்த மக்களுக்காக பிறப்பதற்கு முன்பிருந்தே கேட்டு வந்த துஆ.
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ - الصافات: 100
ஜகரிய்யா அலை அவர்கள் கேட்ட துஆ
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ - آل عمران: 38
தங்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தை பற்றி அக்கறையுடன் உடலுறவுக்கு முன்பே துஆ செய்யச் சொன்னார்கள் நபி ஸல் அவர்கள்.
 عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ، وَقَالَ: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَرُزِقَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ " - صحيح البخاري 3271


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, 'பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் திருப்பெயரால் - இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்" என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்யமாட்டான். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 3271. 
இறப்பிற்குப் பிறகும் துஆ நம்மை வந்து அடைகிறது.
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ [الحشر: 10]
மரணித்து விட்ட தன் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளில் முக்கியமானது துஆவாகும்.
عَنْ أَبِي أُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا؟ قَالَ: «نَعَمْ، الصَّلَاةُ عَلَيْهِمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا» - سنن ابن ماجه
ஹஜ்ரத் அபூஉஸைத் மாலிகிப்னு ரபீஆ ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனீஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, யாரஸூலல்லாஹ், என்னுடைய பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும் வழியுள்ளதா?'' எனக் கேட்டார்.ஆம்!'' அவர்களுக்காக துஆச் செய்வது, அல்லாஹுதஆலாவிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களுடைய மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் நூல்: இப்னு மாஜா
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ لَهُ الدَّرَجَةُ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ؟، فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ "-مصنف ابن أبي شيبة
ஜனாஸாவில் கேட்கப்படும் துஆவும் ஒரு எடுத்துக்காட்டு.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»
  سنن ابن ماجه


எனவே துஆ நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய இடம் வகிக்கிறது என்றால், அதன் தொடர்பை நாம் பிறக்கும் முன்பே பெற்று விடுகிறோம் இறந்த பின்பும் அதன் பலனை பெற இருக்கிறோம் இடைப்பட்ட காலத்திலும் துஆவின் தேவையில் இருக்கிறோம்.

துஆதான் நமது பலம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان
மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஷுஅபுல் ஈமான்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துஆவின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கலாமா? தயங்கலாமா?
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ - غافر: 60
عَنْ أَبِي صَالِحٍ الْخُوزِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَسْأَلْهُ يَغْضَبْ عَلَيْهِ» - الأدب المفرد
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ» سنن الترمذي
மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்.
கேட்டது கிடைக்கும் அல்லது துஆவின் பலன் மறுமையில் நன்மையாக கிடைக்கும் அல்லது அதற்கு பகரமாக நமக்கு நடக்கவிருந்த ஆபத்து நீக்கப்படும்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِإِثْمٍ وَلَا بِقَطِيعَةِ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السوء مثلها) قال: إذا يكثر؟ قال: (الله أكثر) - الأدب المفرد

ஏற்கப்படும் அதிக வாய்ப்புள்ள நேரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "- صحيح البخاري 1145


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ1145.


عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، قَالَ: «تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ دُعَاءُ الْمُسْلِمِ عِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ زَحْفِ الصُّفُوفِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ»- المعجم الكبير للطبراني

துன்யாவுடைய நலனை மட்டும் கேட்டு நிறுத்தி விடக் கூடாது. மறுமை நலனையும் கேட்கனும்.  நபி ஸல் அவர்கள் அதிகம் கேட்ட துஆ...
عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» - صحيح البخاري 6389
        அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் ஃபில் ஆம்ரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்' என்றே அதிகமாகப் பிரார்த்தித்துவந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக் மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக  நூல்: ஸஹீஹுல் புஹாரீ 6389. 


புதன், 20 ஏப்ரல், 2016

லஞ்சமும் மதுவும் இரு சமூகத் தீமைகள்


بسم الله الرحمن الرحيم
லஞ்சமும் மதுவும் இரு சமூகத் தீமைகள்
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ  [البقرة: 188]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي» سنن أبي داود
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களாக அறியப்படுபவர்களும் மது ஒழிப்பு மற்றும் லஞ்சம்&ஊழலற்ற ஆட்சி பற்றி பரவலாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். வெகுஜனங்கள் மதுவின் பாதிப்பை உணர்ந்துள்ளதாகவும் பார்க்க முடிகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை மார்க்கமான இஸ்லாம், சமூக கொள்ளிகளான மது, லஞ்சம் பற்றியும் அதன் தீமைகள் பற்றியும் எவ்வளவு கடுமையாக எச்சரித்துள்ளது என்பதை நினைவு படுத்துவது அவசியம்.
லஞ்சத்தின் பாதிப்பு
லஞ்சம் பலமுறைகளில் பெறப்படுகிறது.
சட்டத்திற்கு புறம்பாக அங்கீகாரம் தருவதற்காக பெறப்படும் லஞ்சம்.
சிலகால அவகாசத்திற்குப் பிறகு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் உடனடியாக கிடைப்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம்.
அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கமால் போக கொடுக்கப்படும் லஞ்சம்.
பதவி அல்லது வேலை வாய்ப்பு அளிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம்.
படிப்பிற்கு அல்லது வேலைக்கு அல்லது வேறொன்றுக்கு பரிந்துரைக்க பெறப்படும் லஞ்சம்.
சட்டப்படியான தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு கொடுக்கப்படும் லஞ்சம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடைபெறும் கொடுமை என்னவென்றால் சட்ட விதிப்படி கிடைக்க வேண்டிய பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட உரிமைகளை பெறுவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியள்ளது. இது நமக்கும் நம்நாட்டுக்கும் பேராபத்தாகும்.
ஒரு சமூகத்தில் லஞ்சம் பெருகும்போது அது பலரின் உரிமைகள் பாதிக்க காரணமாகிறது. அநியாயங்கள் பெருகிட காரணமாகிறது. நாட்டின் சட்டங்களின் மீது மக்களுக்கு இருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் சரிந்து விடுகிறது. தொடர்ந்து பாதிக்கப்படும் சமுதாயத்தின் மனங்களில் வெறுப்பையும் விரக்தியயையும் வளர்த்து விடுகிறது


وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ  [البقرة: 188]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي» سنن أبي داود
 நபி [ஸல்] அவர்களின் எச்சரிக்கை
عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَفَعَ لِأَخِيهِ بِشَفَاعَةٍ، فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا، فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا» سنن أبي داود (3 / 292
எவர், தன் முஸ்லிம் சகோதரருக்கு ஏதேனும் காரியத்திற்காக) பரிந்துரைத்து, பிறகு அவர் பரிந்து பேசியவருக்கு (பரிந்து பேசியதற்குப் பகரமாக) ஏதேனும் ஒரு பொருளை அன்பளிப்பாக  தந்து, அதை அவர் பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் வாசல்களுள் பெரியதொரு வாசலுக்குள் நுழைந்துவிட்டார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூதாவூத்

2597 - عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الأَزْدِ، يُقَالُ لَهُ ابْنُ الأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي، قَالَ: «فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لاَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ القِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ» ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ: «اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ، اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ» ثَلاَثًا صحيح البخاري (3 / 160

அபூஹுமைத் அஸ்ஸா இதீ(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2597. 


நபி [ஸல்] அவர்கள் உருவாக்கிய பண்பான அதிகாரிகள்.

عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبْعَثُ عَبْدَ اللهِ بْنَ رَوَاحَةَ فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَ يَهُوَدَ , قَالَ: فَجَمَعُوا لَهُ حُلِيًّا مِنْ حُلِيِّ نِسَائِهِمْ , فَقَالُوا: هَذَا لَكَ وَخَفِّفْ عَنَّا وَتَجَاوَزْ فِي الْقَسْمِ , فَقَالَ عَبْدُ اللهِ بْنُ رَوَاحَةَ رَضِيَ اللهُ عَنْهُ: يَا مَعْشَرَ يَهُوَدَ , وَاللهِ إِنَّكُمْ لَمِنْ أَبْغَضِ خَلْقِ اللهِ إِلَيَّ وَمَا ذَلِكَ بِحَامِلِي عَلَى أَنْ أَحِيفَ عَلَيْكُمْ، فَأَمَّا الَّذِي عَرَّضْتُمْ مِنَ الرِّشْوَةِ فَإِنَّهَا سُحْتٌ وَإِنَّا لَا نَأْكُلُهَا. قَالُوا: بِهَذَا قَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ
السنن الكبرى للبيهقي (4 / 206)
மதுவினால் ஏற்படும் தீமைகள்
மது விலக்கு அமுலுக்கு வந்த நிகழ்வு
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது "மக்களே! அல்லாஹ் மது(விலக்கு) குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகின்றான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே, தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று, அதன் மூலம் பயனடைந்துகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.

சிறிது காலம்கூடக் கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டான். எனவே, தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால், மதுவை அவர் அருந்தவும் வேண்டாம்; விற்கவும் வேண்டாம்" என்று சொன்னார்கள். உடனே, மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டி விட்டனர். நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3219. 
மது அருந்துவது இஸ்லாத்தில் தண்டனைக்குரிய குற்றம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்தேன். அப்போது மக்களில் ஒருவர், "எங்களுக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார். நான் "யூசுஃப்" எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை" என்று கூறினார். நான், "உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறுதான்) நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்"என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். "மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது" என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன். நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 1467. 

மதுவை மையப்படுத்தி பத்து வகையினர் நபியின் சாபத்துக்குள்ளானவர்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: " لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالمَحْمُولَةُ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالمُشْتَرِي لَهَا، وَالمُشْتَرَاةُ لَهُ "سنن الترمذي ت شاكر (3 / 581
மது தயாரிப்பவர், பெறுபவர்,  அருந்துபவர், தூக்கி செல்பவர், எவரிடம் தூக்கி செல்லப்படுமோ அவர், ஊற்றிக்கொடுப்பவர், விற்பவர், அதன் வருமானத்தை சாப்பிடுபவர், வாங்குபவர், எவருக்காக வாஹ்கப்படுகிறதோ அவர், ஆகிய 10 வகையினரை இறைத்தூதர் ஸல் அவர்கள் சபித்துள்ளார்கள்.
இவ்வளவு கடுமையாக தடுக்க காரணம்?
ஒழுக்கக் கேடு, உயிருக்கு சேதம், பொருளில் நஷ்டம், கண்ணியத்திற்கு இழுக்கு, அறிவுக்கு பாதிப்பு, உடல் நலம் பாதிப்பு போன்ற பல துன்பங்களுக்கு காரணியாகிறது மதுப்பழக்கம்.

عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَشْرَبِ الْخَمْرَ، فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ» سنن ابن ماجه (2 / 1119

 மது என்பதன் ஆரம்பம் முடிவு து இரண்டுக்கும் இடையில் எதுவுமே இல்லை. அதாவது மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடிகிறது இடையில் நடைபெறும் அவலங்களைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று பொருள். எவ்வளவு பொருத்தமான பெயர்.
  மது என்பது தீமைகளின் தாய் அது பெற்றெடுக்கும் பிள்ளைகள் நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
நடுரோட்டில் வேஷ்டி அவிழ்வது கூட தெரிவதில்லை, சாக்கடைக்கும் தண்ணீருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்களுக்கு குடி போதையில் மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை, இது பற்றி நபி ஸல் அவர்கள் எவ்வளவு தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْخَمْرُ أُمُّ الْفَوَاحِشِ، وَأَكْبَرُ الْكَبَائِرِ، مَنْ شَرِبَهَا وَقَعَ عَلَى أُمِّهِ وَخَالَتِهِ وَعَمَّتِهِ» المعجم الأوسط (3 / 276
நாட்டுக்கும் வீட்டுக்கும் உடல் நலத்துக்கும் கேடு மது
عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ، ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ، فَقَالَ لَهُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهَا دَوَاءٌ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، وَلَكِنَّهَا دَاءٌ»سنن أبي داود (4 / 7
குடிப்பதால் குடிப்பவர்க்கு ஏற்படும் பிரச்சனைகள் :

வயிறு: 
இங்கு முதலில் சென்றடையும் மது உணவு குழாயை அறிக்கின்றது.
ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது.அதனால் வயிற்றில் புண் ஏற்படுகின்றது இதுவே புற்று நோய்க்கு மூல காரணமாக அமைகின்றது.
கல்லீரல்:
தடினமான கல்லீரல் உருவாகின்றது. 
மஞ்சள் காமாலை நோய் எற்பட காரணமாகின்றது.


நிரந்திரமாக கல்லீரலின் வேலையை செய்ய விடாமல் செயலிழக்கச் செய்கின்றது.
மூளை:
           மூளையின்  செயல் திறன் குறைகின்றது.
            மறதி அதிகமாகின்றது.
            மன ஒரு நிலைப்படுதுதல் குறைகின்றது. 
இதயம்

   
சீரான இதய துடிப்பு மாறுகின்றது.              
   ரத்த குழாய்கள் சேதமடைவதால் இதயத்தை வலுவிழக்க  செய்கிறது.
    இதயம் ஊதி பெரிதாகின்றது .
ஆரோக்கியத்தை மட்டும் அழிப்பதில்லை நம் நன்மைகளையும் அரிக்கின்றது.
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الخَمْرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، فَإِنْ عَادَ الرَّابِعَةَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ لَمْ يَتُبِ اللَّهُ عَلَيْهِ، وَسَقَاهُ مِنْ نَهْرِ الخَبَالِ» قِيلَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ: وَمَا نَهْرُ الخَبَالِ؟ قَالَ: نَهْرٌ مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ، سنن الترمذي


நம்நாடு வளம்பெற, மனித சமூகம் மேம்பட மதுவிலக்கு மற்றும் லஞ்ச ஒழிப்பின் மீது மக்களின் உள்ளங்களை அல்லாஹ் ஒன்றிணைக்கவும் அதற்கேற்ற வலுவான அரசியல் சூழல் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம்.!