செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வாக்குறுதியும் ஒரு கடனே!

بسم الله الرحمن الرحيم




வாக்குறுதியும் ஒரு கடனே!
وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا [الإسراء: 34]


عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعِدَةُ دَيْنٌ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொது வாழ்விலும் தனி மனித வாழ்விலும் வாக்குறுதி அளிப்பதும் வாக்குறுதியை நம்புவதும் நடைமுறையில் இருந்துவரும் விஷயமாகும்.
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தரும் வாக்குறுதி, முதலாளி தொழிலாளியிடம் அளிக்கும் வாக்குறுதி, வியாபாரி வாடிக்கையாளரிடம் தரும் வாக்குறுதி, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் வாக்காளர்களிடம் அள்ளி வீசும் வாக்குறுதி என மனித சமுதாயத்தின் பல மட்டங்களிலும் வாக்குறுதி அளிப்பதும் ஏற்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த தருணத்தில் வாக்குறுதி பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று கவனிக்க வேண்டும்.
உண்மை முஃமினின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பல இடங்களில் பல விஷயங்களை இறைவன் கூறுகிறான்.
அதில் முக்கியமான ஒரு பண்பு வாக்குறுதி நிறைவேற்றல்
இன்று வீட்டளவிலும் நாட்டளவிலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு பெரிதும் காரணம் வாக்குறுதி நிறைவேற்றாமைதான்.
வாக்குறுதி பேணுவது நபிமார்களின் பண்பு
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا [مريم: 54]

صحيح البخاري (3 / 180
2681 عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ قَالَ: أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ؟ فَزَعَمْتَ: «أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ، وَالصِّدْقِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ» ، قَالَ: وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ

நூல்: ஸஹீஹுல் புஹாரி 2681. 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்: 
(
ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, 'உம்மிடம், 'அவர் (முஹம்மது - ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டேன். நீர், 'அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்' என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்" என்று கூறினார்.
صحيح البخاري (3 / 180
2683 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: لَمَّا مَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَ أَبَا بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ العَلاَءِ بْنِ الحَضْرَمِيِّ، فَقَالَ أَبُو بَكْرٍ: «مَنْ كَانَ لَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ، فَلْيَأْتِنَا» ، قَالَ جَابِرٌ: فَقُلْتُ: وَعَدَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْطِيَنِي هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا، فَبَسَطَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ، قَالَ جَابِرٌ: فَعَدَّ فِي يَدِي خَمْسَ مِائَةٍ، ثُمَّ خَمْسَ مِائَةٍ، ثُمَّ خَمْسَ مِائَةٍ
நூல்: ஸஹீஹுல் புஹாரி 2683. 
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்" என்று கூறினேன். - 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்" என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூ பக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள். 
வாக்குறுதி பேணுதல் வெற்றி மற்றும் சுவனத்துக்கு வழியாகும்.
مسند أحمد
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ "
வாக்குறுதி பற்றியும் விசாரணை உண்டு
وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا [الإسراء: 34]
நம்மில் பலரும் உறவினர்களிடம், நண்பர்களிடம் ஆர்வத்தில் வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி விடுகிறோம் பிறகு அதை நிறைவேற்ற முடியாமல் திணறுகின்றோம். அல்லது அலட்சியம் செய்கின்றோம். அவ்வாறில்லாமல் நம்மால் முடியமான விஷயங்களை வாக்குறுதி தரவேண்டும். தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அக்கறை வேண்டும். என மேலுள்ள வசனம் அறிவுறுத்துகிறது.
مثل فرنسي
عطاء بدون وعد خير من وعد بدون وفاء
நிறைவேற்றப்படாத வாக்குறுதியை விட வாக்குறுதியற்ற அன்பளிப்பு மேலாகும் என்று ஒரு பிரஞ்சு பழமொழி கூறுகிறது.
வாக்குறுதி பேணுதலுக்கு நபி ஸல் அவர்கள் அளித்த முக்கியத்துவம்.
سنن أبي داود (4 / 299
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ، قَالَ: بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ، فَنَسِيتُ، ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ، فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ، فَقَالَ: «يَا فَتًى، لَقَدْ شَقَقْتَ عَلَيَّ، أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ

صحيح مسلم (3 / 1414
حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، قَالَ: مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ، قَالَ: فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ، قَالُوا: إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا، فَقُلْنَا: مَا نُرِيدُهُ، مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ، فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ، وَلَا نُقَاتِلُ مَعَهُ، فَأَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ، فَقَالَ: «انْصَرِفَا، نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ، وَنَسْتَعِينُ اللهَ عَلَيْهِمْ»
 ஸஹீஹ் முஸ்லிம் 3661. 
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் "நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது" என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள். 
வாக்குறுதி கடன் போன்றது
المعجم الأوسط (4 / 23
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعِدَةُ دَيْنٌ»
கடன் அன்பை முறிக்கும் என்பார்கள் அது போலவே வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாவிட்டாலும் பகமை உண்டாகும்
مثل عربي
وعد بلا وفاء عداوة بلا سبب
நிறைவேற்றும் எண்ணத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதி சந்தர்ப்ப சூழ்நிலையால் நிறைவேற்ற முடியாமல் போனால் அது குற்றமல்ல.
    سنن أبي داود (4 / 299
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ، وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلَمْ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ»
வாக்குறுதி மீறல் தண்டிப்புக்கும் கண்டிப்புக்கும் உரியது.
صحيح البخاري (1 / 16
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ"
நூல்: ஸஹீஹுல் புஹாரி 33 
'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.
இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.

 “வாக்குறுதியை பொருத்த மட்டில் ஒவ்வொருவரும் கோடீஸ்வரனே என்றார் ஓவிட்.
குறைவாக வாக்களிப்பவனுக்கு நீ வாக்களித்தால் குறைவாகவே ஏமாற்றப்படுவாய் என்றார் ஒரு அறிஞர்.
எனவே தற்காலிக ஆட்சி அதிகாரத்துக்காக வைக்கப்படும் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி விடாமல், அது தொடர்பான வாதம் பிரதி வாதங்களில் ஈடுபட்டு நம் பொன்னான கால நேரங்களை வீணடித்து விடாமல் (வாக்குறுதியில்) வாய்மையாளனாகிய அல்லாஹ்வின் வாக்குறுதிகளை அடைவதையே லட்சியமாக கொள்வோம்.
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ  [الرعد: 31]
وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ  التوبة: 111
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ [النور: 55]
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ  المائدة: 9
وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ  [التوبة: 72]  

يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ فاطر: 5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக