ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்







காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ " صحيح البخاري (8 / 88
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வலக வாழ்வில் லாபம் அடைந்தவர்கள்  நஷ்டம் அடைந்தவர்கள் என இரு சாரார் இருக்கின்றனர்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை). அல்-குர்ஆன்
காலம் தொடர்பான மூன்று விஷயங்களை நாம் தெரிந்தாக வேண்டும்
1) நேரத்தின் முக்கியத்துவம், 
2)
நேரம் வீணாவதற்கான காரணங்கள்
3)
நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

நேரத்தின் முக்கியத்துவம்:
92 இடங்களில் சத்தியம் செய்து சொல்லும் அல்லாஹ் 18 இடஙகளில் காலத்தின்மீது மட்டும் சத்தியம் செய்திருக்கிறான்.
அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
மறுமையின் பாக்கியங்களையும் பதவிகளையும் அடைவதற்கு காலம்தான் மூலப்பொருள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ " صحيح البخاري (8 / 88
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ، إِلَّا دَخَلَ الْجَنَّةَ» صحيح مسلم 2 / 713

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள். முஸ்லிம் 1865. 

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை:
 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய்,
 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி
ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போது அவர்களின் பைகளில் 24 மணி நேரம் நிரப்பப்படுகின்றது.

உலகில் உள்ள அனைவருக்கும் செல்வம், ஆரோக்கியம், அதிகாரம் ஆகியவற்றில் வேறுபாடு உண்டு. ஆனால் நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் முதல், சாதாரண மனிதன்வரை அனைவருக்கும் பொதுவானது நேரம் மட்டுமே.
காலத்தின் அருமை உணரப்படவேண்டும்
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.
எந்தப் பெருவீரனுக்கும் காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லை
எந்தப் பேரரசனுக்கும் காலத்தை கட்டிப்போடும் ஆளுமை இல்லை.
எந்தச் பெரும் செல்வந்தருக்கும் ரொக்கமாகவோ கடனாகவோ  காலத்தைவாங்கும் வசதி இல்லை.
அனைவரும் காலத்தின் ஆட்சிக்கு அடங்கியே ஆக வேண்டும். காலம் என்ற வட்டத்திலிருந்து மரணம் மட்டுமே நம்மை விடுவிக்கும்.
 “காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராதுஎன்பது ஆங்கிலப்பழமொழி.
ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாதுஎன்பது சீனப்பழமொழி.
காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றதுஎன்பது தமிழகப் பழமொழி.

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.

II. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
நேரவிரயமும் கூடாது என்பதை புரியவேண்டும்
 பொதுவாக, உணவில் 20 சதவீதத்தையும், பணத்தில் 30 சதவீதத்தையும், திறமையில் 40 சதவீதத்தையும், நேரத்தில் 60 சதவீதத்தையும் வீணடிக்கிறோம் என ஓர் ஆய்வு கூறுகிறது.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ، فَقَالَ: " مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ؟ " قَالَ: أَفِي الْوُضُوءِ سَرَفٌ (1) ؟ قَالَ: " نَعَمْ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ "
مسند أحمد ط الرسالة (11 / 637
"إن اغتممت بما ينقص من مالك فابكِ على ما ينقص من عمرك" . وقال السري بن المفلس

லட்சியம் இல்லாமை, சோம்பல், அரட்டை, தொ(ல்)லைத் தொடர்பு சாதனங்களின் அனாவசிய பயன்பாடு,   
ஒத்தி போடும் பழக்கம்
وقال لقمان لابنه: يا بني، لا تؤخر التوبة، فإن الموت يأتي بغتة، ومن ترك المبادرة إلى التوبة بالتسويف، كان بين خطرين عظيمين،
أحدهما : أن تتراكم الظلمة على قلبه من المعاصي، حتى يصير رينا وطبعا فلا يقبل المحو،
الثاني: أن يعاجله المرض أو الموت فلا يجد مهلة للاشتغال بالمحو .
மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்என்று கேட்டார் போப். ஆறு மாதம்என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறைஅதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்”. போப்பாண்டவர் சிரித்தபடி ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்று அழகான விளக்கம் அளித்தார்.
பிறகு”, “பிறகுஎன்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
முதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.

செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடிக்கவேண்டும்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தான் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் அதற்கொப்ப நேரங்களை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ  وَإِلَى رَبِّكَ فَارْغَبْ الشرح: 7، 8
وقال ابن مسعود : "ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزدد فيه عملي" .
, عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ " شعب الإيمان (12 / 476
வாழ்வு ஒரு சந்தரப்பம்
‘‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’’
நெற்கதிர்களை அறுத்து அதனைக் களத்தில் அடித்துப் பதரினைப் போக்கக் காற்றுவீசும்போது தூற்றுதல் வேண்டும். அவ்வாறு தூற்றினால் பதறினைக் காற்று அடித்துத் தூரத்தில் கொண்டுசென்று போட்டுவிடும். நல்ல நெல்மணிகள் தனியாக ஒதுங்கும்.
காற்றடிக்காத போது நெல்லைத் தூற்றினால் பதரானது அப்படியே நல்ல நெல்மணிகளுடன் கலந்து அப்படியே இருக்கும். அதுபோலவே
  காற்றாகிய வாய்ப்புகள் கிடைக்கிறபோது அதனைப் பயன்படுத்தி நம்வாழ்வின்போது அதனைப் பயன்படுத்தி நம் வாழ்வில் பல முன்னேற்றங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது.
2 தீவினையை அகற்றுதல்
     நம்முடம்பில் மூச்சுக்காற்றுள்ளபோது நல்லனவற்றைச் செய்து தீமைகளை விட்டொழித்து நன்மையை தேடிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு வழங்ககின்றது.
3 இறைவனது நாமத்தைக் கூறுதல்
     நமது உடலில் மூச்சுக் காற்று உள்ளபோது இறைவனது பெயரைக் கூறி நமது பாவங்களை, தூற்றிக் கொள்ள வேண்டும். அதாவது போக்கிக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு தருகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا مِنْ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَبْلَ أَنْ يُحَالَ بَيْنَكُمْ وَبَيْنَهَا» مسند أبي يعلى الموصلي (11 / 8
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا القصص: 77
 "(உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்களித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! 
லாபமடைந்தவர்கள்
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக