புதன், 3 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 41

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 41


கேள்வி: ரமலான் நோன்பு வைத்திருப்பவர், நோன்பு (நினைவிருக்க) வேண்டுமென்றே சாப்பிட்டு விட்டால் அல்லது எதையேனும் குடித்து விட்டால் அல்லது உடலுறவு கொண்டு விட்டால், நோன்பை களா செய்வதுடன் நோன்பை பாழாக்கிய குற்றத்திற்கு (கஃப்ஃபாரா) பரிகாரமும் செய்யவேண்டும் என்பது தெரிந்த விஷயம்.


ஆனால் ரமலான் அல்லாத வேறு நோன்பு வைத்திருப்பவர் வேண்டுமென்றே சாப்பிட்டு விட்டால் அல்லது எதையேனும் குடித்து விட்டால் அல்லது உடலுறவு கொண்டு விட்டால், அந்த நோன்பை களா செய்வதுடன் (கஃப்ஃபாரா) பரிகாரமும்

செய்யவேண்டுமா?

அல்லது வெறும் நோன்பு களா செய்தால் மட்டும் போதுமா?

 பதில்: ரமலான் அல்லாத வேறு நாட்களில் நோன்பு வைத்திருப்பவர், (ரமலானில் விட்ட நோன்பை களா செய்வதாக இருந்தாலும் சரி அல்லது வேறு வகையான நோன்பாக இருந்தாலும் சரி) நோன்பை முறிக்கும் காரியங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டால் அந்த நோன்பு முறிந்து விடும் என்பதால் வேறொரு நாளில் அந்த நோன்பை களா செய்துதான் ஆக வேண்டும்.

ஆனால் (கஃப்ஃபாரா) குற்றப் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.

காரணம் (நோன்பை முறித்ததற்கான) கஃப்ஃபாரா என்பது ரமலான் நோன்புக்கே உரித்தானது.

அதன் மூலம் ரமலான் நோன்பின் மகிமை உணர்த்தப்படுகிறது.

 குறிப்பு:- 

ரமலான் மாத நோன்பை பாழாக்கிய குற்றத்திற்கு கஃப்ஃபாரா பரிகாரம் வருமாறு

ஒரு அடிமையை உரிமை விடுவது.

அது முடியவில்லை என்றால்,

இரண்டு மாதங்கள் இடைவிடாது (தொடர்ந்து) நோன்பு வைப்பது.

(அவ்வாறு வைக்கும் இரண்டு மாத நோன்புகளில் இரு பெருநாட்கள் மற்றும் துல் ஹஜ் பிறை 11,12,13, ஆகிய நாட்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.)


அதுவும் முடியாவிட்டால், தன் குடும்பத்தினருக்கு வழங்கும் உணவில் நடுத்தர வகை உணவை அறுபது ஏழைகளுக்கு அளிப்பது.


 بدائع الصنائع في ترتيب الشرائع (2 / 97): 

وَأَمَّا وُجُوبُ الْكَفَّارَةِ فَيَتَعَلَّقُ بِإِفْسَادٍ مَخْصُوصٍ وَهُوَ الْإِفْطَارُ الْكَامِلُ بِوُجُودِ الْأَكْلِ أَوْ الشُّرْبِ أَوْ الْجِمَاعِ صُورَةً وَمَعْنًى مُتَعَمِّدًا مِنْ غَيْرِ عُذْرٍمُبِيحٍ وَلَا مُرَخِّصٍ وَلَا شُبْهَةَ الْإِبَاحَةِ،


 بدائع الصنائع في ترتيب الشرائع (2 / 102): 


وَأَمَّا صِيَامُ غَيْرِ رَمَضَانَ فَلَا يَتَعَلَّقُ بِإِفْسَادِ شَيْءٍ مِنْهُ وُجُوبُ الْكَفَّارَةِ، لِأَنَّ وُجُوبَ الْكَفَّارَةِ بِإِفْسَادِ صَوْمِ رَمَضَانَ عُرِفَ بِالتَّوْقِيفِ، وَأَنَّهُ صَوْمٌ شَرِيفٌ فِي وَقْتٍ شَرِيفٍ لَا يُوَازِيهِمَا غَيْرُهُمَا مِنْ الصِّيَامِ وَالْأَوْقَاتِ فِي الشَّرَفِ وَالْحُرْمَةِ، فَلَا يَلْحَقُ بِهِ فِي وُجُوبِ الْكَفَّارَةِ.


وَأَمَّا وُجُوبُ الْقَضَاءِ فَأَمَّا الصِّيَامُ الْمَفْرُوضُ: فَإِنْ كَانَ الصَّوْمُ مُتَتَابِعًا كَصَوْمِ الْكَفَّارَةِ وَالْمَنْذُورِ مُتَتَابِعًا فَعَلَيْهِ الِاسْتِقْبَالُ لِفَوَاتِ الشَّرَائِطِ وَهُوَ التَّتَابُعُ، وَلَوْ لَمْ يَكُنْ مُتَتَابِعًا كَصَوْمِ قَضَاءِ رَمَضَانَ وَالنَّذْرِ الْمُطْلَقِ عَنْ الْوَقْتِ وَالنَّذْرِ فِي وَقْتٍ بِعَيْنِهِ فَحُكْمُهُ أَنْ لَا يَعْتَدَّ بِهِ عَمَّا عَلَيْهِ وَيَلْحَقُ بِالْعَدَمِ، وَعَلَيْهِ مَا كَانَ قَبْلَ ذَلِكَ فِي قَضَاءِ رَمَضَانَ وَالنَّذْرِ الْمُطْلَقِ وَفِي الْمَنْذُورِ فِي وَقْتٍ بِعَيْنِهِ، عَلَيْهِ قَضَاءُ مَا فَسَدَ.


وَأَمَّا صَوْمُ التَّطَوُّعِ: فَعَلَيْهِ قَضَاؤُهُ عِنْدَنَا


 الدرالمختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 404): 


(قَوْلُهُ: أَوْ أَفْسَدَ) أَيْ وَلَوْ بِأَكْلٍ أَوْ جِمَاعٍ (قَوْلُهُ: غَيْرَ صَوْمِ رَمَضَانَ) صِفَةٌ لِمَوْصُوفٍ مَحْذُوفٍ دَلَّ عَلَيْهِ الْمَقَامُ أَيْ صَوْمًا غَيْرَ صَوْمِ رَمَضَانَ فَلَا يَشْمَلُ مَا لَوْ أَفْسَدَ صَلَاةً أَوْ حَجًّا وَعِبَارَةُ الْكَنْزِ صَوْمُ غَيْرِ رَمَضَانَ وَهِيَ أَوْلَى أَفَادَهُ ح (قَوْلُهُ: أَدَاءً) حَالٌ مِنْ صَوْمٍ وَقَيَّدَ بِهِ لِإِفَادَةِ نَفْيِ الْكَفَّارَةِ بِإِفْسَادِ قَضَاءِ رَمَضَانَ لَا لِنَفْيِ الْقَضَاءِ أَيْضًا بِإِفْسَادِهِ


 مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 241): 

(وَلَا كَفَّارَةَ بِإِفْسَادِ صَوْمٍ غَيْرِ رَمَضَانَ) ؛ لِأَنَّهُ لَمْ يَهْتِكْ حُرْمَةَ الشَّهْرِ فَعَلَى هَذَا لَا تَلْزَمُ الْكَفَّارَةُ عَلَى قَضَاءِ رَمَضَانَ


 مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 250): 

والكفارة: تحرير رقبة ولو كانت غير مؤمنة فإن عجز عنه صام شهرين متتابعين ليس فيهما يوم عيد ولا أيام التشريق فإن لم يستطع الصوم أطعم ستين مسكينا يغديهم ويعشيهم غداء وعشاء مشبعين أو غداءين أو عشاءين أو عشاء وسحورا أو يعطي كل فقير نصف صاع من بر أو دقيقه أو سويقه أو صاع تمر أو شعير أو قيمته


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக