வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 45

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 45

கேள்வி: நோன்பு வைத்திருப்பவர், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமா? அப்படி செய்வதால் நோன்பு முறியுமா?


 பதில்: தற்போது நடைமுறையில் இருந்து வரும் விதத்தில் கொரோனா பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது.

ஏனென்றால் பரிசோதனையின் போது, (பரிசோதிக்கப்படுபவரின்) மூக்கு மற்றும் தொண்டையில் செலுத்தப் படும் சாதனத்தில் மருந்துகள் ஏதுமில்லை.

 மூக்கு அல்லது தொண்டையில் அந்த சாதனத்தை செலுத்தி,  ஈரத்தை வெளியாக்கி பரிசோதிக்கப்படுகிறது.

நோன்பு என்பது ஏதும் உள்ளே செல்வதால் தான் முறியும் .


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 396):


"وكذا لو ابتلع خشبةً أو خيطًا ولو فيه لقمة مربوطة إلا أن ينفصل منها شيء. ومفاده أن استقرار الداخل في الجوف شرط للفساد، بدائع".


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக