ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 56

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 56


கேள்வி: எதோ ஒரு காரணத்தால் இஷா (ஃபர்ள்) தொழுகையை தனித் தனியே தொழுது கொண்ட சிலர் மட்டும் ஒன்று கூடி தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழலாமா?


 பதில்: தாராவீஹ் ஜமாஅத்தாக தொழுகை நடத்தப்படும் மஸ்ஜிதில் இஷா (ஃபர்ள்) தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்றிருக்க வேண்டும்.

எனவே இஷாவை ஜமாஅத்தாக தொழாதவர்கள் ஒன்று கூடி தராவீஹை மட்டும் ஜமாஅத்தாக தொழுவது சரியல்ல.


ஆனால் இஷா ஜமாஅத் நடைபெற்ற பள்ளியில் இஷா ஜமாஅத்தை தவறவிட்ட ஒருவர், தனியாக இஷா தொழுதுவிட்டு தராவீஹ் ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாம். 

ஏனென்றால் ஒரு பள்ளியின் தராவீஹ் ஜமாஅத் நடைபெறுவதற்கு இஷா ஜமாஅத் நடைபெற்றிருக்க வேண்டும் அவ்வளவுதான்.


 தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் இஷாவை ஜமாஅத்தாக நிறைவேற்றி இருக்க வேண்டும் என்பதில்லை.


 الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 48): 


"أما لو صليت بجماعة الفرض وكان رجل قد صلى الفرض وحده فله أن يصليها مع ذلك الإمام؛ لأن جماعتهم مشروعة فله الدخول فيها معهم لعدم المحذور".


 البحر الرائق (2/ 75) : 


"وفي القنية: صلى العشاء وحده فله أن يصلي التراويح مع الإمام، ولو تركوا الجماعة في الفرض ليس لهم أن يصلوا التراويح جماعة؛ لأنها تبع للجماعة، ولو لم يصل التراويح جماعةً مع الإمام فله أن يصلي الوتر معه، ثم ذكر بعده: أنه لو صلى التراويح مع غيره له أن يصلي الوتر معه، هو الصحيح اهـ".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக