திங்கள், 4 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

தொழுகைக்காக பள்ளி வாசலுக்குள் வரும்போது (ஃபர்ள்) ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிந்தால் சுன்னத் தொழவேண்டுமா? அல்லது ஜமாஅத்தில் இணைய வேண்டுமா? என்று கேள்வி கேட்டு மத்ரஸாவிற்கு தபால் அனுப்பி இருந்தார் வெளியூர் உதவியாளர் ஒருவர்.

அதற்கு, மத்ரஸாவின் முதல்வர் அனுப்பி வைத்த பதிலின் சுருக்கம் கீழே..

 (ஃபஜ்ரைத் தவிர்த்து) ளுஹர், அஸ்ர், இஷா ஆகிய வக்துகளில் ஃபர்ள் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் போது சுன்னத் தொழுகையை ஆரம்பிப்பது கூடாது.

ஒருவர் இகாமத் சொல்லப்படுவதற்கு சற்று முன்புதான் சுன்னத் தொழுகையை ஆரம்பித்தார் சிறிது நேரத்தில் இகாமத் சொல்லப்படுகிறது என்றால், அவர் (நான்கு ரக்அத்துகள் நிய்யத் செய்திருந்தாலும்) இரண்டு ரக்அத்துகளை மட்டும் விரைவாக தொழுது விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.


(நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழுவதற்காக நிய்யத் செய்த(அ)வர் மூன்றாவது ரக்அத்துக்கு எழுந்த பிறகு தான் இகாமத் சொல்லப்பட்டது என்றால், நான்கு ரக்அத்துகளையும் நிறைவு செய்து விட்டுத் தான் ஜமாஅத்தில் இணைய வேண்டும்.

ஆனால் ஃபஜ்ர் தொழுகையில் மட்டும் சட்டம் வேறுபடும் அது வருமாறு 

இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும் போது வருபவர், அல்லது தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது வருபவர்கள் கூட கண்டிப்பாக சுன்னத் தொழுது விட்டுத்தான் ஜமாஅத் தொழுகையில் இணைய வேண்டும். (அந்தளவுக்கு ஃபஜ்ருடைய சுன்னத் வலியுறுத்தப்பட்டுள்ளது) ஆனால், சுன்னத் தொழுகையை ஆரம்பித்து நாம் அதை முடிக்கும் முன்பே இமாம் சலாம் கொடுத்து விடுவார் என்ற அச்சம் இருந்தால் அப்போது (மட்டும்) சுன்னத் தொழாமலே ஜமாஅத் தொழுகையில் இணைந்து கொள்ள வேண்டும்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 377)

''(وكذا يكره تطوع عند إقامة صلاة مكتوبة) أي إقامة إمام مذهبه ؛ لحديث: «إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة» (إلا سنة فجر إن لم يخف فوت جماعتها) ولو بإدراك تشهدها، فإن خاف تركها أصلاً۔


(قوله: إلا سنة فجر)؛ لما روى الطحاوي وغيره عن ابن مسعود: أنه دخل المسجد وأقيمت الصلاة فصلى ركعتي الفجر في المسجد إلى أسطوانة، وذلك بمحضر حذيفة وأبي موسى، ومثله عن عمر وأبي الدرداء وابن عباس وابن عمر، كما أسنده الحافظ الطحاوي في شرح الآثار، ومثله عن الحسن ومسروق والشعبي شرح المنية.

(قوله: ولو بإدراك تشهدها) مشى في هذا على ما اعتمده المصنف والشرنبلالي تبعاً للبحر، لكن ضعفه في النهر، واختار ظاهر المذهب من أنه لا يصلي السنة إلا إذا علم أنه يدرك ركعة، وسيأتي في باب إدراك الفريضة، ح. قلت: وسنذكر هناك تقوية ما اعتمده المصنف عن ابن الهمام وغيره''.


مصنف عبد الرزاق الصنعاني (2/ 437)

'' عن ابن جريج، عن عطاء قال: «إذا أقيمت الصلاة فلا صلاة، فإن خرج الإمام وأنت راكع، فاركع إليها ركعةً أخرى خفيفةً، ثم سلم»''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக