வெள்ளி, 1 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

சவூதியில் உள்ள  நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞர் அவர்.

 வெள்ளிக் கிழமை விடுமுறை என்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட, நண்பர் ஒருவரை நலம் விசாரித்து விட்டு, ஜுமுஆ தொழுகைக்கு சென்றிருக்கிறார்.

 இவர் போய்ச் சேரும் போது இமாம் (அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தார் அவசரமாக அவர் தக்பீர் தஹ்ரீமா கூறி ஜமாஅத்தில் இணைந்து கொண்டார். 

இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து இரண்டு ரக்அத்துகளை நிறைவு செய்திருக்கிறார்.

அருகில் தொழுத வெளிநாட்டவர் நீ (இமாமுடன் ஒரு ரக்அத்தைக் கூட அடையாததால்) நான்கு ரக்அத்துகள் லுஹராக தொழுதிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்டு குழம்பிய அவர் ஊரில் உள்ள நெருங்கிய ஆலிம் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கூறினார்.

அதற்கு அந்த ஆலிம்,

நீங்கள் தொழுத இரண்டு ரக்அத்துகள் (ஜுமுஆ) கூடிவிடும்.

ஹனஃபீ மத்ஹபு சட்டப்படி அது சரிதான். 

மற்ற மூன்று மத்ஹபுகளிலும் ஜுமுஆவில் இமாமுடன் ஒரு ரக்அத்தையாவது பெற்றிருப்பவர் தான் மீதமுள்ள ஒரு ரக்அத்தை பூர்த்தி செய்து ஜுமுஆவாக தொழ முடியும்.

இமாமுடன் ஒரு ரக்அத்தைக்கூட அடையாத நிலையில் (இமாம் இரண்டாம் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து எழுந்த பின்) இணைந்தவர்கள் நான்கு ரக்அத்துகள் (லுஹராக) நிறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

உங்கள் அருகில் தொழுதவர் வேறு மத்ஹபு சட்டத்தின் படி தொழுபவராக இருந்திருப்பார் என்று விளக்கமளித்தார்.


تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 222):

وَمَنْ أَدْرَكَهَا فِي التَّشَهُّدِ أَوْ فِي سُجُودِ السَّهْوِ أَتَمَّ جُمُعَةً


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 199):

"ومن أدركها" أي الجمعة "في التشهد أو" في "سجود السهو" وتشهده "أتم جمعة" لما رويناه: "وما فاتكم فاقضوا

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக