திங்கள், 25 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 36

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 36


ஒரு மாநாட்டில் இரவு சிறப்புரை நிகழ்த்தி விட்டு வாடகை காரில்  ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அந்த பிரபலமான ஆலிம்.

ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்ல அரை மணிநேரத்திற்கு முன்பு ஒரு ஊருக்குள் இருக்கும் பள்ளிவாசலை அடையாளம் சொல்லி அங்கு சென்றடைந்தனர்.

"வாருங்கள் நேரம் இருக்கிறது தஹஜ்ஜுத் தொழுது கொள்ளலாம்" என்று ஓட்டுனரை அழைத்தார் அந்த ஆலிம்.

அதற்கவர், "ஜீ! நான் இரவு புறப்படும் முன் இஷா தொழுத போது, வித்ரு தொழுகையும் முடித்து விட்டேனே;

வித்ரு தொழுத பிறகு எப்படி (தஹஜ்ஜுத்) நஃபில் தொழுவது? கூடாதுன்னு சொல்லுவாங்களே?" என்று பேச்சை வளர்த்தார் அவர்.

இமாம், அவரிடம் "வாங்க முதலில் தொழுவோம் பிறகு வந்து பேசுவோம்" என்று கூறி அழைத்துச் சென்றார்.

தொழுகை முடிந்த பிறகு இமாம், ஓட்டுனரிடம் ஜீ!

நல்லா தெரிஞ்சுக்கோங்க!

இஷாவுக்குப் பிறகிலிருந்து ஃபஜ்ருக்கு முன்னர் வரை இரவு தொழும் தொழுகைகளில் வித்ரு தொழுகையை கடைசியாக தொழுவது, (முஸ்தஹப்பான) விரும்பத்தக்க ஒரு காரியம் அவ்வளவுதான்.

அதற்காக; வித்ரு தொழுது விட்டால் அதன் பிறகு நஃபில் ஏதும் தொழக் கூடாது என்பது தவறாகும்.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு விழித்திடுவோம் என்ற உறுதி உள்ளவர் தஹஜ்ஜுத் தொழுது விட்டு வித்ரு தொழுது கொள்ள வேண்டும்.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு விழிக்காமல் போய்விடுவோமோ என்று அச்சப்படுபவர் தூங்கும் முன்பே வித்ரு தொழுது கொள்ள வேண்டியது.

அப்படி முன் கூட்டியே வித்ரு தொழுது (முடித்து) விட்டவர் தஹஜ்ஜுத் வேளையில் கண் விழித்தார் என்றால் தாராளமாக தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றலாம்.

"ஓ அப்படியா என்னுடைய தவறான புரிதலால் நிறைய நாட்கள் தஹஜ்ஜுத் தவறிவிட்டது இனி நான் அந்த வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்வேன்" என்றார் நன்றியுடன் அந்த ஓட்டுனர்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 369):


(وَ) تَأْخِيرُ (الْوِتْرِ إلَى آخِرِ اللَّيْلِ لِوَاثِقٍ بِالِانْتِبَاهِ) وَإِلَّا فَقَبْلَ النَّوْمِ، فَإِنْ فَاقَ وَصَلَّى نَوَافِلَ وَالْحَالُ أَنَّهُ صَلَّى الْوِتْرَ أَوَّلَ اللَّيْلِ فَإِنَّهُ الْأَفْضَلُ.


 (قَوْلُهُ: وَتَأْخِيرُ الْوِتْرِ إلَخْ) أَيْ يُسْتَحَبُّ تَأْخِيرُهُ، لِقَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «مَنْ خَافَ أَنْ لَا يُوتِرَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ» ) رَوَاهُ مُسْلِمٌ وَالتِّرْمِذِيُّ وَغَيْرُهُمَا وَتَمَامُهُ فِي الْحِلْيَةِ. وَفِي الصَّحِيحَيْنِ «اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ وِتْرًا» وَالْأَمْرُ لِلنَّدْبِ بِدَلِيلِ مَا قَبْلَهُ بَحْرٌ.


(قَوْلُهُ: فَإِنْ فَاقَ إلَخْ) أَيْ إذَا أَوْتَرَ قَبْلَ النَّوْمِ ثُمَّ اسْتَيْقَظَ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، وَلَا كَرَاهَةَ فِيهِ بَلْ هُوَ مَنْدُوبٌ، وَلَا يُعِيدُ الْوِتْرَ، لَكِنْ فَاتَهُ الْأَفْضَلُ الْمُفَادُ بِحَدِيثِ الصَّحِيحَيْنِ إمْدَادٌ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக