சனி, 23 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 35

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 35

கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்திய பின், நோய் தொற்று பரவலில் இருந்து ஓரளவு மீண்டு விட்ட நாடு அது.

மெல்ல மெல்ல தளர்வுகளை அறிவித்தது.

 தொழுகையில் (மாஸ்க்) முகக் கவசம் அவசியமில்லை என்பதும் அவற்றில் ஒன்று.

நோய் தொற்று பயமின்றி மக்கள் இயல்பாக தங்கள் அலுவல்களில் ஈடுபட்டனர். 

அதன்படி தொழுகையில் மாஸ்க் அணிவதையும் முற்றாக தவிர்த்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு குளிர் ஆரம்பித்தது. அப்போது தொழுகைக்கு வரும் சில வாலிபர்கள் துண்டு, மஃப்ளர் போன்றவற்றால் தங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொண்டு தொழுதனர்.

அவர்களைக் கவனித்த இமாம், "ஏன் எல்லோரும் சாதாரணமாக தொழுகைக்கு வரும் போது, நீங்கள் மட்டும் முகத்தை மறைத்துக் கொண்டு வந்து தொழுகிறீர்கள்?

கொரோனா பயம் இன்னும் போகலையா?" என்று கேட்டார்.

"இல்லீங்க! இமாம்! சும்மா..! குளிருதுன்னு மூடி இருக்கோம்; கொரானா பயம் எல்லாம் போயி ரொம்ப நாளாச்சு".என்றனர் அவர்கள்.

அப்படி இல்லீங்க தம்பிங்களா!

 "நோய் பரவல் பயம் இருந்த போது மாஸ்க் போட்டு முகத்தை மறைத்து தொழுவதற்கு அனுமதி இருந்தது.

ஆனால் (அது போன்ற தக்க காரணம் இல்லாமல்) குளிர் போன்ற சாதாரண விஷயத்துக்காக முகத்தை மறைத்து தொழுவது மக்ரூஹ் ஆகும். ஆகவே அப்படிச் செய்யாதீர்கள்!" என்று கூறினார்.

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 652):


يُكْرَهُ اشْتِمَالُ الصَّمَّاءِ وَالِاعْتِجَارُ وَالتَّلَثُّمُ وَالتَّنَخُّمُ وَكُلُّ عَمَلٍ قَلِيلٍ بِلَا عُذْرٍ؛


(قَوْلُهُ وَالتَّلَثُّمُ) وَهُوَ تَغْطِيَةُ الْأَنْفِ وَالْفَمِ فِي الصَّلَاةِ لِأَنَّهُ يُشْبِهُ فِعْلَ الْمَجُوسِ حَالَ عِبَادَتِهِمْ النِّيرَانَ زَيْلَعِيٌّ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக