ஞாயிறு, 10 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 21

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 21

சொந்தமாக தொழில் செய்யும் திறமையான ஆலிம் அவர்.

சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு சொந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

செல்லும் வழியில் சாலை ஓரமாக ஒரு சிறிய பள்ளிவாசலைப் பார்த்ததும் லுஹர் தொழுகையை தொழுது விடலாம் என்று உள்ளே சென்றார்.

அந்தப் பள்ளிவாசலுக்கு தனி இமாம் கிடையாது. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் முஸ்லிம் சகோதரர்கள் மூவர் மட்டும் வந்து தனியாக தொழுது விட்டுச் செல்வர்.

ஆகவே இந்த ஆலிமை பார்த்த அந்த மூவருக்கும் இன்று ஜமாஅத்தாக தொழப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி.

ஆலிம் ஷா! இந்த பள்ளிவாசலுக்கு இமாம் கிடையாது நீங்கள் இமாமாக நின்று எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்  என்றனர் அந்த மூவர்.

அப்படியா?அப்படியானால், நான் "முஸாஃபிர்" அதாவது, பயணத்தில் இருக்கிறேன் எனவே  இரண்டு ரக்அத்தில் நான் ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக் கொள்வேன். 

நீங்கள் ஸலாம் கொடுக்காமல் எழுந்து, (நிலை நிற்கும்போது ஏதும் ஓதாமல்) இமாமுடனே தொழுவது போல தொழுது மீதம் இரண்டு ரக்அத்துகளை நிறைவு செய்யுங்கள் என்று ஆலிம் கூறினார். 

அதன் படியே அந்த மூவரும் தொழுது முடித்தனர்.


"وصح اقتداء المقیم بالمسافر في الوقت، وبعده فإذا قام المقیم إلی الإتمام لایقرأ، ولایسجد للسهو في الأصح؛ لأنه کاللاحق "․  (ردالمحتار علی الدرالمختار، كتاب الصلاة ، باب صلاة المسافر ۲/۱۲۹ط: سعید)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக