ஞாயிறு, 10 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 22

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 22

நீண்ட காலம் முஅத்தினாக பணிபுரியும் பெரியவர் அவர். தொழுகை "களா" என்பது அவருக்கு ஏற்பட்டதே இல்லை. 

அருகிலுள்ள ஒரு ஊரில் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  மகளைப் பார்க்க சென்று வந்தாலும் ரயிலிலேயே நேரத்திற்கு தொழுது விடும் வழமை கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் ரயிலில் கடுமையான நெரிசல் மற்றும் தாமதத்தின் காரணமாக (லுஹர் தொழுகை தவறிய நிலையில்) அஸ்ர் பாங்கு சொல்லிய பின்புதான் வந்து சேர்ந்தார்.

தினமும் அஸ்ர் தொழுகை முடிந்ததும் இமாமுக்கு "டீ" இவர்தான் வாங்கி வருவார். 

எனவே இமாமிடம் சென்று லுஹர் களாவாகி விட்டது தொழுது விட்டு "டீ" வாங்கி தருகிறேன் என்று சொல்லிச் சென்றவர், 20 நிமிடங்கள் கழித்து இமாமிடம் வந்து நின்றார்.

"இவ்வளவு நேரம் என்னங்க செஞ்சீங்க?" என்றார் இமாம்.

ஏங்க, 12 ரக்அத் தொழுவனும்னா இவ்வளவு நேரம் ஆகாதுங்களா? என்றார் அவர்.

சரியாப்போச்சு என்று கூறிய இமாம் அவரை உட்கார வைத்து "களா" தொழுகை பற்றி சிறிது நேரம் பாடம் நடத்தினார்.

இதோ அந்தப் பாடத்தின் சுருக்கம்.

முதல் விஷயம்:- "அஸ்ர் தொழுகைக்கு பிறகு சுன்னத், நஃபில் தொழுகை ஏதும் தொழக் கூடாது." சரிங்களா?

அடுத்து "களா" என்பது (ஃபர்ள் மற்றும் வாஜிபுகளுக்கு மட்டும் தான்)

சுன்னத், நஃபில்களுக்கு களா இல்லை.

ஃபஜ்ர் தொழுகையில் மட்டும் ஃபர்ள் தொழுகையும் சேர்ந்து தவறிப் போனால் அதுவும் அன்றைய (ஜவால்) சூரிய உச்சிப் பொழுதுக்கு முன்பே "களா" செய்தால் மட்டும் முதலில் "சுன்னத்" பிறகு "ஃபர்ள்" என "களா" செய்ய வேண்டும். 

அதை விட தாமதமாக "களா" செய்தாலோ அல்லது நாட்கள் கடந்து "களா" செய்தாலோ வெறும் ஃபர்ள் மட்டுமே "களா" செய்ய வேண்டும்.

ஃபஜ்ரில் சுன்னத் மட்டும் தவறிப் போனது என்றால்

"இஷ்ராக்" வக்து துவங்கியதிலிருந்து அன்றைய (ஜவால்) சூரிய உச்சிப் பொழுதுக்கு முன்னால் "களா" செய்ய அனுமதி உண்டு.

அதை விட தாமதமாக ஃபஜ்ருடைய சுன்னத் (ஆனாலும்) தனியாக "களா" செய்ய அனுமதி இல்லை.

லுஹர் தொழுகையின் அல்லது ஜுமுஆவின் முன் சுன்னத் தவறி விட்டால் ஃபர்ள் முடிந்த பிறகு வக்துக்குள்ளாக மட்டும் "களா" செய்ய அனுமதி உண்டு.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 453):

"ولم تقض سنة الفجر إلا بفوتها مع الفرض" إلى الزوال وقال محمد رحمه الله تقضى منفردة بعد الشمس قبل الزوال فلا قضاء لها قبل الشمس ولا بعد الزوال اتفاقا وسواء صلى منفردا أو بجماعة "وقضى السنة التي قبل الظهر" في الصحيح "في وقته قبل" صلاة "شفعة" على المفتي به كذا في شرح الكنز للعلامة المقدسي وفي فتاوى العتابي المختار تقديم الاثنتين على الأربع


سنن الترمذي ت شاكر (2 / 291):

عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلَّاهُنَّ بَعْدَهَا»


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 59):


 (وَلَا يَقْضِيهَا إلَّا بِطَرِيقِ التَّبَعِيَّةِ ل) قَضَاءِ (فَرْضِهَا قَبْلَ الزَّوَالِ لَا بَعْدَهُ فِي الْأَصَحِّ) لِوُرُودِ الْخَبَرِ بِقَضَائِهَا فِي الْوَقْتِ الْمُهْمَلِ، بِخِلَافِ الْقِيَاسِ فَغَيْرُهُ عَلَيْهِ لَا يُقَاسُ (بِخِلَافِ سُنَّةِ الظُّهْرِ) وَكَذَا الْجُمُعَةُ (فَإِنَّهُ) إنْ خَافَ فَوْتَ رَكْعَةٍ (يَتْرُكُهَا) وَيَقْتَدِي (ثُمَّ يَأْتِي بِهَا) عَلَى أَنَّهَا سُنَّةٌ (فِي وَقْتِهِ) أَيْ الظُّهْرِ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக