திங்கள், 25 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 37

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 37

சுமார் 200 அடிகள் அகலத்தில், பிரம்மாண்டமாக, கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் அது.


அந்தப் பள்ளிவாசலின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள, சில நண்பர்களுடன் சென்றிருந்தார் தர்ம சிந்தனையுள்ள ஒரு செல்வந்தர்.


தன் ஊரிலும் ஒரு பள்ளிவாசல் கட்டவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது; எனவே அந்த புதிய பள்ளிவாசலின் அமைப்பு ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனித்தார்.


ஒவ்வொரு ஸஃப்புக்கும் நான்கு அடிகள் இடைவெளி என்ற கணக்கில் துல்லியமாக அடையாளம் போடப்பட்டிருந்தது.


ஆனால் முதல் ஸஃப்பிற்கு  முன்னால் (அதாவது பள்ளியின் முன் சுவற்றிர்க்கும் முதல் ஸஃப்பின் நான்கு அடிகளுக்குமிடையே) கூடுதலாக இரண்டு அடிகளும் கடைசி ஸஃப்பின் பின்னால் கூடுதலாக இரண்டு அடிகளும் சும்மா காலியாக விடப்பட்டிருப்பதைப்பார்த்து, எல்லாம் சரிதான் ஆனால், முன்னாலும் பின்னாலும் இரண்டிரண்டு அடிகளை காலியாக விட்டிருக்க கூடாது


முன்னால்  இரண்டு அடிகளை விடாமல் (மிஹ்ராபுக்கு அடுத்து) முதல் ஸஃப்பை துவங்கி இருந்தால், அந்த இரண்டு அடிகளை கடைசியில் உள்ள இரண்டு அடிகளோடு சேர்த்து  ஒரு ஸஃப்பு கூடுதலாக கிடைத்திருக்கும் என்றார்.


அப்போது எதிர்ப்பட்ட இமாமை அழைத்து, "ஏன் இப்படி முன்னும் பின்னும் இரண்டிரண்டு அடிகளை காலியாக விட்டு ஒரு ஸஃப்பை வேஸ்ட் பண்ணிட்டாங்க?" என்று கேட்டார்.


அதற்கு இமாம், அவரிடம் 

அப்படி இல்லீங்க ஜீ!


"ஒரு சட்டச் சிக்கலையும் இடைஞ்சலையும் தவிர்க்கத் தான் இப்படி இரண்டிரண்டு அடிகள் காலியாக விடப்பட்டுள்ளது.


அது என்ன என்பதை விபரமாக சொல்கிறேன் கேளுங்கள்!" என்று சொல்லி விட்டு பின் வருமாறு விளக்கினார்.


மிஹ்ராபுக்கு அடுத்து இரண்டு அடிகளை (காலியாக) விடாமல் போயிருந்தால், 

 (மக்கள் முதல் ஸஃப்பில் நின்று தொழும்போது) இமாம் முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்த வேண்டி வரும் அப்படி முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்துவது மக்ரூஹ் ஆகிவிடும்.


ஆனால் இமாம் மிஹ்ராபுக்கு வெளியே (பாதங்கள் இருக்குமாறு) நின்று தொழுகை நடத்தி ஸஜ்தாவை மிஹ்ராபில் செய்கிறார் என்றால், அது மக்ரூஹ் அல்ல.


எனவே மக்கள் பள்ளியின் முதல் ஸஃப்பில் தொழ வேண்டிய அவசியம் ஏற்படும் போது இமாம் (பாதம் உட்பட) முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்தும் மக்ரூஹான நிலையை தவிர்க்கத் தான் மிஹ்ராபுக்கும் முதல் ஸஃபுக்குமிடையில் இரண்டு அடிகள் விடப்பட்டுள்ளது (ஒரு அடி மட்டும் விட்டிருந்தாலும் அது போதுமானது தான்)


 ஆனால் ஒன்று; இமாம், மிஹ்ராபுக்கு நேராக (பள்ளியின்) முதல் ஸஃப்பில் நின்று தொழுகை நடத்த, மக்கள் (பள்ளியின்) இரண்வது ஸஃப்பில் நின்று தொழும்போது இந்த பிரச்சினை வராது ஏனென்றால் இமாம் முழுமையாக மிஹ்ராபுக்கு வெளியே தான் நிற்பார். 


மேலும் குர்ஆன் அலமாரிகள், ரேஹால்கள், தொழுகையாளிகளின் உடமைகள் ஆகியவற்றை வைக்கவும் எடுக்கவும் அந்த இடைவெளி கூடுதலாக பயன்படும்.


 அதேபோல் கடைசி ஸஃப்பின் பின்னால் இரண்டு அடிகள் இல்லாமல் போனால், சட்டச் சிக்கல் ஒன்றுமில்லை.


ஆனால் அந்தக் கடைசி ஸஃப்பில் நின்று தொழுபவர்கள், ருகூஃ மற்றும் ஸஜுக்கு செல்லும் போது (பின்னாலிருந்து சுவர் தட்டுவதால்) இடைஞ்சலாக இருக்குமல்லவா அதைத் தவிர்க்கவும் உள் பள்ளியின் கதவுகளை திறந்து நிறுத்தி வைக்கும் போது கடைசி ஸஃப்பில் நின்று தொழுபவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சலை தவிர்க்கவும் இந்த இடைவெளி உதவுமல்லவா? அதற்காகத்தான்."

என்று விளக்கினார் இமாம்.


ஓ அப்படியா...! அப்ப சரிதான்…! 


அப்ப நாம் கட்ட இருக்கும் பள்ளிவாசலையும் இந்த அம்சத்தில் தான் கட்டவேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டார்.

 


 குறிப்பு:- 


ஒரு பள்ளிவாசல் மேல் சொன்ன அமைப்பில் கட்டப்படவில்லை; மாறாக (மிஹ்ராபுக்கும் பள்ளியின் முதல் ஸஃப்பிற்கும் இடையில்  இடைவெளி இல்லாமல்) மிஹ்ராபுக்கு அடுத்து முதல் ஸஃப்பு துவங்கி விடும் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது அதில் மக்ரூஹை தவிர்க்க வேண்டும் என்றால் இமாம் எங்கு எப்படி நிற்பார்? என்று கேட்டால்,  அதற்கான பதில் இதோ!


அது போன்ற பள்ளிகளில்

 தொழுகையாளிகள் குறைவாக இருக்கும் (சாதாரண) சூழ்நிலையில் இமாம் , பள்ளியின் முதல் ஸஃப்பில் (மிஹ்ராபுக்கு நேராக உள்ள பகுதியில்) நின்று தொழுகை நடத்த மக்கள், இரண்டாவது ஸஃப்பில் நின்று தொழுது கொள்ள வேண்டும்.


 இதன் மூலம் மக்ரூஹ் தவிர்க்கப்படும்.


ஆனால் தொழும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது; இமாம் முன் ஸஃப்பில் நின்று தொழுகை நடத்தினால், சிலருக்கு இடம் கிடைக்காது என்ற சூழலில் (மட்டும்) இமாம் முழுமையாக மிஹ்ராபுக்குள் நின்று தொழுகை நடத்துவது மக்ரூஹ் அல்ல என்று ஃபத்வாக்களில் கூறப்பட்டுள்ளது.


درر الحكام شرح غرر الأحكام (1 / 108):


(وَقِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ ۔۔۔۔۔۔۔۔۔)۔۔۔۔۔۔۔۔۔۔ يَعْنِي يُكْرَهُ قِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ وَحْدَهُ؛ لِأَنَّهُ تَشَبُّهٌ بِأَهْلِ الْكِتَابِ لَا قِيَامُهُ فِي الْخَارِجِ وَسُجُودُهُ فِيهِ لِانْتِفَاءِ سَبَبِ الْكَرَاهَةِ،


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 645):


(وَقِيَامُ الْإِمَامِ فِي الْمِحْرَابِ لَا سُجُودُهُ فِيهِ) وَقَدَمَاهُ خَارِجَة لِأَنَّ الْعِبْرَةَ لِلْقَدَمِ


الفتاوى الهندية (1 / 108):


وَيُكْرَهُ قِيَامُ الْإِمَامِ وَحْدَهُ فِي الطَّاقِ وَهُوَ الْمِحْرَابُ وَلَا يُكْرَهُ سُجُودُهُ فِيهِ إذَا كَانَ قَائِمًا خَارِجَ الْمِحْرَابِ هَكَذَا فِي التَّبْيِينِ وَإِذَا ضَاقَ الْمَسْجِدُ بِمَنْ خَلْفَ الْإِمَامِ فَلَا بَأْسَ بِأَنْ يَقُومَ فِي الطَّاقِ. كَذَا فِي الْفَتَاوَى الْبُرْهَانِيَّةِ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக