திங்கள், 4 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 15


வடகரை தாவூதி ஆலிம் பதில் 15

தஹஜ்ஜுத்" தொழுககையை அனுதினமும்  தவறாமல் நிறைவேற்றும் பெரியவர் அவர்.

அன்றொரு நாள் வெளியூர் சென்று வந்ததால், நீண்ட நேரம் தூக்கம் கெட்டு  தாமதமாகத் தான் கண் விழித்தார் அவசரமாக தேவைகளை முடித்து தஹஜ்ஜுத் தொழ நின்றார். 

ஒரு ரக்அத் தான் நிறைவு செய்திருப்பார் அதற்குள் ஃபஜ்ர் பாங்கு சப்தம் கேட்டது தொடர்ந்து தொழுது முடித்தவருக்கு இது கூடுமா? கூடாதா? என்று சந்தேகம் ஏற்பட்டது. 

காரணம்; "ஃபஜ்ர் வக்த் வந்த பின், ஃபஜ்ருடைய சுன்னத் (இரண்டு ரக்அத்துகள்) தவிர வேறு நஃபில் தொழுகை தொழுவது தடுக்கப்பட்டதாகும்" என்பதை சில தினங்களுக்கு முன்னர் தான்   ஒரு பயானில்  ஹஜ்ரத் சொல்லக் கேட்டிருந்தார். 

ஆகவே, ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின்பும்  தஹஜ்ஜுத் தொழுகையை தொடர்ந்து தொழுது முடித்தது சரிதானா? என்று தெளிவு பெற இமாமை அணுகி, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விவரித்தார்.

இமாம் கூறிய பதில் வருமாறு,

ஆம்! ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தவிர வேறு எந்த வகையான நஃபில் தொழுகையும் (ஆரம்பித்து) தொழுவது (ஹதீஸில்) தடுக்கப்பட்டதாகும். எனவே அப்படித் தொழுவது மக்ரூஹ்.

ஆயினும் நீங்கள் செய்ததைப் போன்று ஃபஜ்ர் வக்துக்கு முன்பே (தஹஜ்ஜுத் வேளையில்) துவங்கி விட்ட நஃபில் தொழுகையை  ஃபஜ்ர் வக்து வந்த பின்  தொடர்(ந்து நிறைவு செய்)வது அப்படி மக்ரூஹ் அல்ல. 

அதே சமயம் தினமும் ஸஹ்ரின் கடைசி நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகையை ஆரம்பித்து ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் நிறைவு செய்யும் இந்த முறையை வழமையாக்கிக் கொள்வது நல்லது இல்லை.

 ஏனென்றால் அது முழுமையான தஹஜ்ஜுத் தொழுகையாக ஆகாது.


قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ 


(حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) 

قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ (حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) ۔


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக