புதன், 6 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரில் நடைபெறவிருந்தது 

ஒரு மாபெரும் மார்க்க நிகழ்வு. 

அதில் கலந்து கொள்ள பயணம் செய்தனர் நான்கு பெரியவர்கள்.

செல்லும் வழியில் தொழுகைக்காக பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளிவாசலை சென்றடைந்தனர்.

அப்போது அந்தப் பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருந்தது இவர்கள் தயாராகி ஜமாஅத்தில் சேரும்போது இரண்டு ரக்அத்துகள் முடிந்திருந்தது.

 மூன்றாம் ரக்அத்தில் இணைந்த இவர்களில் ஒருவர் (மட்டும்) இமாமுடனே சலாம் கொடுத்து தொழுகையை முடித்துவிட்டார்.

மற்ற மூன்று பேரும் நான்கு ரக்அத்துகள் நிறைவு செய்து தொழுகையை முடித்தனர்.

இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுதவரிடம் மற்றவர்கள், ஏன் இரண்டு ரக்அத்துகளிலே சலாம் கொடுத்து முடித்து விட்டீர்கள்? என்று கேட்டதற்கு பயணத்தில் (ளுஹர் போன்ற நான்கு ரக்அத் தொழுகைகளில்) இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுது சுருக்கிக் கொள்ள அனுமதி உண்டுதானே அதுவும் நாம் சரியாக இரண்டு ரக்அத்துகள் முடிந்த பிறகு தான் வந்து சேர்ந்தோம் அதனால்தான் என்றார்.

அதற்கு அவர்கள் அப்படி இல்லீங்க ஜீ!

"ஒரு முஸாஃபிர் தனியாக தொழுதால் அல்லது முஸாஃபிரான இமாமைப் பின்பற்றி தொழுதால் தான் இரண்டு ரக்அத்துகளோடு சுருக்கிக் கொள்ள வேண்டும்.

முகீமாக உள்ள இமாம் நடத்தும் ஜமாஅத்தில் இணைந்து தொழுதால், கண்டிப்பாக நான்கு ரக்அத்துகள் தான் தொழ வேண்டும். நாம் ஆரம்பத்திலேயே இணைந்தாலும் நடுவில் இணைந்தாலும் கடைசி அத்தஹிய்யாத் அமர்வில் இணைந்தாலும் சட்டம் ஒன்றுதான்."

என்றனர்.

"சரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார் அவர்.

"இமாமுடன் நீங்கள் தொழுத ஃபர்ள் (சலாம் கொடுத்த பிறகு பேசி விட்டதால்) ஃபஸாத் ஆகிவிட்டது எனவே புதிதாக தொழவேண்டும்.

ஆனால் ஒன்று புதிதாக (தனியாக) தொழும்போது இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழவேண்டும்" என்றனர் அவர்கள் 

குறிப்பு:- ஷரீஅத் பார்வையில், (77 கிலோமீட்டர் அல்லது அதை விட அதிக தூரம்) பிரயாணம் செய்யும் ஒருவர், ஒரு ஊரில் சென்று 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வரும் வரை முஸாஃபிர் ஆவார். 

ஒரு ஊரை சென்றடைந்தது 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வந்து விட்டவர் அல்லது பயணம் மேற்கொள்ளாமல் சொந்த ஊரிலேயே இருப்பவர் முகீம் ஆவார்.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 427):


"وإن اقتدى مسافر بمقيم" يصلي رباعية ولو في التشهد الأخير "في الوقت صح" اقتداؤه "وأتمها أربعا"


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 145):


(قَوْلُهُ: وَلَوْ اقْتَدَى مُسَافِرٌ بِمُقِيمٍ فِي الْوَقْتِ صَحَّ وَأَتَمَّ) ؛ لِأَنَّهُ يَتَغَيَّرُ فَرْضُهُ إلَى الْأَرْبَعِ لِلتَّبَعِيَّةِ كَمَا تَتَغَيَّرُ نِيَّةُ الْإِقَامَةِ لِاتِّصَالِ الْمُغَيَّرِ بِالسَّبَبِ، وَهُوَ الْوَقْتُ وَفَرْضُ الْمُسَافِرِ قَابِلٌ لِلتَّغَيُّرِ حَالَ قِيَامِ الْوَقْتِ كَنِيَّةِ الْإِقَامَةِ فِيهِ وَإِذَا كَانَ التَّغْيِيرُ لِضَرُورَةِ الِاقْتِدَاءِ فَلَوْ أَفْسَدَهُ صَلَّى رَكْعَتَيْنِ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக