வியாழன், 31 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 12

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 12

அந்த வட்டார உலமாக்கள் ஏற்பாட்டில், பள்ளிவாசல் வளாகத்தில், சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது  "மஸாயில் மஜ்லிஸ்"

அனுபவமும் ஆழ்ந்த ஞானமும் மிகுந்த ஆலிம் ஒருவர் (மார்க்கம் தொடர்பான) மக்களின் கேள்விகளுக்கு அழகாகவும் ஆணித்தரமாகவும் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

மஜ்லிஸ் நிறைவை எட்டும் தருணம் ஒருவர் எழுந்து எனக்கு சில கேள்விகள் உண்டு அதற்கு மட்டும் பதிலளித்து (முடித்து) விடுங்கள்! என்றார்.

சரி சொல்லுங்கள் என்று பொறுமையாக கேட்டு தெளிவாக பதிலுரைத்தார் அந்த ஆலிம்.

இதோ அந்தக் கேள்விகளும் பதில்களும்

 கேள்வி:- தொழுகைக்கு வரும்போது ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று வச்சுக்கோங்க!  இமாம் ருகூஃவுக்குச் சென்று விட்டார் அப்ப நாம ஜமாஅத்தில் இணையலாமா? இணைந்தால் அந்த ரக்அத் கணக்கில் சேருமா?

அப்படி இணையும்போது தக்பீர் கூறி கைகளைக் கட்டி, அவூது, பிஸ்மி ஓதிவிட்டுத் தான் நாம் ருகூஃ செய்யனுமா?

அதேபோல இமாம் ஸஜ்தவில் இருக்கும் போது வருபவர் அப்போதே ஜமாஅத் தொழுகையில் இணையலாமா?

 பதில்:- இமாம் ருகூவில் இருக்கும் போதும் ஜமாஅத்தில் இணையலாம். இமாம் தலையை உயர்த்தும் முன்பே இமாமுடன் (ஒரு வினாடியேனும்)  ருகூஃவை அடைந்து விட்டார் என்றால் அந்த ரக்அத்தை அடைந்து விட்டதாக கருத வேண்டும்.


இமாம் ருகூஃவில் இருக்கும் போது வருபவர் தக்பீர் தஹ்ரீமா சொல்லி நிற்கிறார், அதற்குள் இமாம் தலையை உயர்த்தி விட்டாலோ அல்லது இவர் ருகூஃவிற்கு குனியும்போது இமாம் தலையை உயர்த்தி விட்டாலோ அந்த ரக்அத்தை அடைந்தவராக ஆகமாட்டார்.

இமாம் ருகூஃவில் இருக்கும் போது ஜமாஅத் தொழுகையில் சேருபவர் தக்பீர் தஹ்ரீமா சொல்லி சிறிது நேரம் கூட நிற்காமல், கைகளையும் கட்டாமல் "அவூது", "பிஸ்மி"  ஓதாமல் (அடுத்த தக்கபீர் சொல்லிக்கொண்டே) ருகூஃவுக்கு சென்று விடவேண்டும்.

நின்று கை கட்டிய பின் தான் ருகூஃ செய்யனும் என்று எண்ணுவது தவறாகும்.

ஏனென்றால் தக்பீர் தஹ்ரீமாவுக்காக நின்றதே அந்த ரக்அத்தின் (கியாம்) நிலை நிற்க்குதலுக்கு போதுமாகிவிடும்.

இமாம் ஸஜ்தவில் இருக்கும் போதும் (தாமதமாக) வருபவர் ஜமாஅத்தில் இணையலாம்.

 (சிலர் நினைப்பது போல) இமாம் எழுந்திரிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஆனால் அந்த ரக்அத்தை அவர் அடைந்தவராக ஆகமாட்டார்.

 

سنن أبي داود (1 / 236):

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا، وَلَا تَعُدُّوهَا شَيْئًا، وَمَنْ أَدْرَكَ الرَّكْعَةَ، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

 وفي إعلاء السنن: قال ابن عبد البر في شرح الاستذکار: قال: جمہور الفقہاء: من أدرک الإمام راکعًا، فکبر ورَکع وأمکن یدیه من رکبتیه قبل أن یرفع الإمام رأسه فقد أدرک الرکعة ومن لم یدرک ذلک فقد فاتته الرکعة، ومن فاتته الرکعة فقد فاتته السجدة أي لا یعتد بھا․ (إعلاء السنن، 305/4)

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 489):

(فَيَأْتِي بِهِ الْمَسْبُوقُ عِنْدَ قِيَامِهِ لِقَضَاءِ مَا فَاتَهُ) لِقِرَاءَتِهِ (لَا الْمُقْتَدِي) لِعَدَمِهَا

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 444):

فَلَوْ كَبَّرَ قَائِمًا فَرَكَعَ وَلَمْ يَقِفْ صَحَّ لِأَنَّ مَا أَتَى بِهِ الْقِيَامُ إلَى أَنْ يَبْلُغَ الرُّكُوعَ يَكْفِيهِ قُنْيَةٌ

مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 143):

(وَمَنْ أَدْرَكَ الْإِمَامَ) حَالَ كَوْنِهِ (رَاكِعًا فَكَبَّرَ وَوَقَفَ حَتَّى رَفَعَ) الْإِمَامُ (رَأْسَهُ لَمْ يُدْرِكْ) تِلْكَ (الرَّكْعَةَ) وَكَذَا لَوْ لَمْ يَقِفْ بَلْ انْحَطَّ فَرَفَعَ الْإِمَامُ مِنْهُ قَبْلَ رُكُوعِ الْمُقْتَدِي لَا يَصِيرُ مُدْرِكًا لِفَوْتِ الْمُشَارَكَةِ فِيهِ الْمُسْتَلْزِمُ لِفَوْتِ الرَّكْعَةِ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக