செவ்வாய், 29 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 11

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 11


ஊருக்குள் நுழைந்ததும்  நம்மை மகிழ்விக்கும் விதமாய் அமைந்திருந்தது (சிறியதாய், அழகாய்)  அந்த ஊர் பள்ளிவாசல்.


 சனத் தொகை அதிகரிப்பு காரணமாக விரிவான பெரிய பள்ளிவாசல் ஒன்று கட்ட திட்டமிட்டனர் அந்த ஊர் மக்கள்.


"பழைய பள்ளிவாசலை ஷஹீதாக்கி (இடித்து) விட்டு அந்த இடத்தையும் உள்ளடக்கி பிரம்மாண்டமான புதிய பள்ளிவாசலை அமைக்கலாம்" என்பது சிலரின் யோசனை.


"இல்லீங்க! பழைய பள்ளிவாசல் தெருவைப் பார்த்தவாறு இருப்பதால் அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடலாம் அதனால் வருமானம் கிடைக்கும் பல செலவுகளை சமாளிக்கலாம்

புதிய பள்ளிவாசலை உள்ளே தள்ளி தனியாக அமைத்துக் கொள்ள தாராளமாக இடம்தான் இருக்கிறதே" என்பது நிர்வாகம் உள்ளிட்ட பலரின் கருத்து.


 பெருவாரியான மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய கருத்துக் கேட்பு  கூட்டம் நடந்தது.


 இமாம் தவிர்த்து (இன்ஜினியர் உட்பட) அனைவரும் அதில் பங்கு பெற்றனர் 

ஜமாஅத் தலைவர் தான் செய்ய விரும்பும் காரியத்தையும் அதனால் கிடைக்கும் வருமானத்தையும் அழகாய் ஜோடித்து சொன்னார். 


வருமானம் கிடைக்கும் அதன் மூலம் பள்ளிவாசலுக்கு சந்தா கொடுக்கும் சிரமம் நீங்கும் எனக்கருதி  வெகுஜன மக்கள் அந்த (விபரீத) முடிவுக்கு மௌனமாய் சம்மதித்தனர்.


நிர்வாகத்தின் இந்த ஆபத்தான முடிவு பற்றி அறிந்த இமாம் கடுமையாக ஆட்சேபனை செய்தார்; தன் ஆட்சேபனைக்கு காரணத்தையும் நிர்வாகத்திடம் பின் வருமாறு விளக்கினார்.


ஒரு இடத்தில் பள்ளிவாசல் (ஷரீஅத் பார்வையில் மஸ்ஜிதாக வக்ஃப் செய்யப்பட்டு) உருவாகி விட்டால் அது உலக அழிவு நாள் வரை பள்ளிவாசலாகத்தான் நீடி(த்து நிலை)க்கும்  அதை வேறொன்றாக மாற்ற  யாருக்கும் உரிமை இல்லை. 


அதை நிர்வாகம் செய்ய நினைத்தாலும் சரி ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்தாலும் சரி  ஏன் வக்ஃப் செய்தவரே வந்து சொன்னாலும் சரி பள்ளிவாசலை கடைகளாக மாற்ற முடியாது அப்படி செய்வது கூடவே கூடாது.


(வருமானத்திற்கு வேறு வழியை யோசிக்கலாம்)


பள்ளிவாசல் இருந்த இடத்தை கடைகளாக மாற்றினாலும் அல்லாஹ்வுடைய கணக்கில் அது பள்ளிவாசல் தான் எனவே அந்த கடைகளில் நடைபெறும் (பள்ளிவாசலின்) விதி மீறிய செயல்கள் பாவமாகும். 

எனவே பழைய பள்ளிவாசல் இருந்த இடத்தையும் உள்ளடக்கியதாக புதிய பள்ளிவாசலை கட்டுங்கள்!

அதன் மூலம் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் பாவம் தவிர்க்கப்படும் என எச்சரித்தார் இமாம்.



சரியான நேரத்தில் உறுதியான கருத்தை எடுத்துரைத்ததற்காக மக்கள் வெகுவாக பாராட்டியதுடன் துஆவும் செய்தனர். 



درر الحكام شرح غرر الأحكام (2 / 135):

(قَوْلُهُ وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ وَاسْتَغْنَى عَنْهُ يَبْقَى مَسْجِدًا عِنْدَ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ) هُوَ الْمُفْتَى بِهِ لِمَا قَالَ فِي الْحَاوِي الْقُدْسِيِّ قَالَ أَبُو يُوسُفَ هُوَ مَسْجِدٌ أَبَدًا إلَى قِيَامِ السَّاعَةِ لَا يَعُودُ مِيرَاثًا وَلَا يَجُوزُ نَقْلُهُ وَنَقْلُ مَالِهِ إلَى مَسْجِدٍ آخَرَ سَوَاءٌ كَانُوا يُصَلُّونَ فِيهِ أَوْ لَا وَهُوَ الْفَتْوَى اهـ.

وَفِي خِزَانَةِ الْمُفْتِينَ هُوَ مَسْجِدٌ أَبَدًا وَهُوَ الْأَصَحُّ فَلَوْ بَنَى أَهْلُ الْمَحَلَّةِ مَسْجِدًا آخَرَ فَاجْتَمَعُوا عَلَى بَيْعِ الْأَوَّلِ لِيَصْرِفُوا ثَمَنَهُ إلَى الثَّانِي فَالْأَصَحُّ أَنَّهُ لَيْسَ لَهُمْ ذَلِكَ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4 / 358):

(وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ وَاسْتُغْنِيَ عَنْهُ يَبْقَى مَسْجِدًا عِنْدَ الْإِمَامِ وَالثَّانِي) أَبَدًا إلَى قِيَامِ السَّاعَةِ (وَبِهِ يُفْتِي) حَاوِي الْقُدْسِيِّ


(قَوْلُهُ: وَلَوْ خَرِبَ مَا حَوْلَهُ) أَيْ وَلَوْ مَعَ بَقَائِهِ عَامِرًا وَكَذَا لَوْ خَرِبَ وَلَيْسَ لَهُ مَا يُعْمَرُ بِهِ وَقَدْ اسْتَغْنَى النَّاسُ عَنْهُ لِبِنَاءِ مَسْجِدٍ آخَرَ (قَوْلُهُ: عِنْدَ الْإِمَامِ وَالثَّانِي) فَلَا يَعُودُ مِيرَاثًا وَلَا يَجُوزُ نَقْلُهُ وَنَقْلُ مَالِهِ إلَى مَسْجِدٍ آخَرَ، سَوَاءٌ كَانُوا يُصَلُّونَ فِيهِ أَوْ لَا وَهُوَ الْفَتْوَى حَاوِي الْقُدْسِيِّ، وَأَكْثَرُ الْمَشَايِخِ عَلَيْهِ مُجْتَبَى وَهُوَ الْأَوْجَهُ فَتْحٌ. اهـ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக