ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

கனத்த இதயத்துடன்...



السلام عليكم ورحمة الله وبركاته.....


 என்எனருமை தந்தை மர்ஹூம் அல் காரி அல் ஹாஜ் V.M.பீர் முஹம்மது ரஷாதி.யின் நினைவு நாள் இன்று 
இறை அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள்.. இன்றோடு 8 வருடங்கள் ஆகிவிட்டது. . .நினைக்காத நாளில்லை. . .
4.11.1964 பிறந்தார்கள் 
மூன்றாம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு..
சேலம் மளாஹிருல் உலூமில் சிறிது காலம் ஓதிவிட்டு நிறைவாக பெங்களூர் ஸபீலுர்ரஷாதில் ஆலிம் படிப்பை முடித்து அங்கேயே காரி பட்டமும் பெற்றார்கள் ..அன்னாரின் திறமையைக் கண்டு அல்லாமா அமீரே ஷரீஅத் அபுஸுஊத் ஹழ்ரத் அவர்கள் தன்னுடைனே தங்க வைத்து கர்நாடகவில் பல பகுதிகளுக்கும் தொளுகை நேரங்களை கணிக்கும் பொறுப்பை கொடுத்தார்கள்....
1984க்கு பிறகு 4வருடங்கள் கேரளா மஞ்சேரியில் உஸ்தாதாக வேலை..
21.2.1988ல் திருமணம்.
நவம்பரில் முதல் குழந்தை.
1993
ல் இரண்டாம் குழந்தை.
1996ல்  ஹஜ் யாத்திரை.
1997ல் மூன்றாம் குழந்தை.
1999
ல் நான்காம் குழந்தை.
2004ல் முதல் மகள் திருமணம்.
2005ல் ஈரோடு அக்ரஹாரத்தில் جامعة طيبةஎன்ற பெண்கள் மதரஸா தொடங்கபட்டது அதற்கு தலைமை தாங்கி பெண்கள் சீர்திருத்தம் அடைய அக்கறையுடன் சிறப்பாக வழிநடத்தி சென்றார்கள்.
1989ஆம்  ஆண்டு முதல் 19ஆண்டுகள் தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் பணிபுரிந்தார்கள்.
15
வருடங்கள் ரமளான் மாதம் தப்லீக் ஜமாத்தில் சில்லா செல்வார்கள்.
அத்துடன் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் பல மஸ்ஜித்கள் மக்தப் மதராஸாக்கள் உருவாவதற்கு ஆலோசனை நல்கி ஏற்பாடு செய்தார்கள்.
மேலும் குடும்ப பிரச்சினைக்காக வரும் தம்பதிகளுக்கு நல் ஆலோசனை வழங்கியும் சமூக விஷயத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்தார்கள்..
மாற்றார்களை இஸ்லாம் ஆக்குவதி்ல் முனைப்பாக இருந்தார்கள்..(எங்கள் வீட்டில் என் தந்தை கலிமா சொல்லி கொடுக்க
இஸ்லாத்தை ஏற்ற பலரை நான் என் சிறுவயதில் கண்டது இன்னமும் நினைவு இருக்கிறது..)
 
மேலும் சில ஆண்டுகள் ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா தலைவராகவும் இருந்து அரும்பணியாற்றினார்கள்.
சிறந்த பேச்சாளர்,, இனிமையான கிராஅத்,,எதிலும் நிதானம் புகழ்ச்சியை சிறிதும் விரும்பமாட்டார்கள்..

எல்லா விஷயங்களிலும் இறைவனின் திருப்தியை மையமாக கொண்டிருந்தது அவர் வாழ்க்கை எதற்கும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.. 
சமுதாய சேவையால் குடும்ப சூழ்நிலை பெரிதும் பாதிக்க பட்டிருந்தது..மிகவும் ஏழ்மையான சூழ்நிலைதான்..ஆடம்பரத்தையே விரும்பமாட்டார்கள் கடைசி வரை அப்படித்தான்.. 
3
அபா  4கைலி 3 பனியன் கிழியும் வரை போடலாம் என்பார்கள்..அத்தா பனியன் கிழிந்து இருக்கிறதென்று நாங்கள் சொன்னால் அது காத்து போகும் ஓட்டைடா எனகூறி சிரிப்பார்கள்..
தன் வாழ்நாள் முழுவதும் தீனுக்காகவும் மார்க்க சேவைக்காகவும் அர்ப்பணித்தவர்.. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பெரும் பணிகளை வெரும் 19ஆண்டுகளில் நிறைவு செய்தார்கள்.. 
இறைவன் தன்  சுவர்க்கலோகத்துக்கு  அழைத்து விட்டான் போலும்
   என் அம்மா,அக்கா,நான் மற்றும் எனது 6,7வயதுடைய தங்கைகளயும் தவிக்க விட்டுவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார்கள்...

إنا لله وإنا إليه راجعون


என்னுயிர் தந்தையே  4ம் பெண் பிள்ளைகள் என்று நினைத்து ஒரு நாளும் நீங்கள் கவலை பட்டதே இல்லை..அல்லாஹ் எனக்கு தந்த பரக்கத் என்பீர்கள்.. 
எங்களுடன் மிகவும் பாசமாக நடந்து கொள்வீர்கள்..
நோயுற்று கடைசி தருணத்தில் இருக்கும்போது கூட என்  பிள்ளைகளை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு செல்கிறேன் என் ரப்பு பார்த்து கொள்வான் நீ கவலை படாதே என்று அம்மாவிற்கு ஆறுதல் கூறினீர்கள்... 
உண்மைதான் அத்தா எந்த சொந்தங்களுடய உதவியோ தயவோ எங்களுக்கு இல்லை,, அல்லாஹ்வின் மாபெரும் கிருபை ஒவ்வொரு நாளும் நிம்மதியாக கழிகிறது الحمدلله..
பிரிவின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றாலும் இறை நியதியை ஏற்று பொறுமையுடன் இருக்கிறோம்.. அத்தா நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும் உங்கள் உபதேசங்கள் போதும் மார்க்க முறைப்படி நடந்து கொள்வோம் انشالله..
இந்த நாகரீக குழப்பவாதிகள் தோன்றிய பின்னர் சமுதாயத்திலும் கொள்கை ரீதியிலும் பிளவை ஏற்படுத்தி நாங்கள் தான் இஸ்லாத்தை தூய வடிவில் காட்டுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு அண்ணல் நபி(ஸல்)அவர்களும் ஸஹாபாக்களும் கட்டி காத்து வந்த இஸ்லாத்தின் ஒற்றுமை தற்போது தகர்ந்து போய் விட்ட  கவலைக்குரிய நிலையை நீங்கள் பார்த்தால் மிகவும் வேதனை படுவீர்கள் என்றுதான் அல்லாஹ் உங்களை 44வயதிலேயே தன்னுடைன் அழைத்து கொண்டான்..
தாவூதிய்யாவுக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை உங்கள் மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஆலிம்களின் மரணம்தான். உங்கள் நெருங்கிய நண்பர் நஸ்ருல்லாஹ் ஹஜ்ரத்,,அப்துல் காதர் ஹஜ்ரத்,,சித்தீக் ஹஜ்ரத்,, நம் பக்கத்து வீட்டுக்காரர் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள்...
அல்லாஹ் உங்கள் அனைவரின் மார்க்க சேவைகளை ஏற்றுفردوس எனும் உயர்வான சொர்க்கத்தை அளிப்பானாக...امين
எனதுயிர் தந்தையே சிரித்த முகத்துடன் மரணித்த உங்கள்
முகம் இப்போது நினைவுக்கு வருகிறது. . .
சுவனத்தில் ஓய்வெடுக்க இறைவன் உங்களை அன்போடு அழைத்து கொண்டான் சுகமாக ஓய்வெடுங்கள் . . .
அல்லாஹ் உங்களின் இக்லாஸான சேவையை அங்கீகரித்து உயர்வான அந்தஸ்த்துக்களை மறுமை நாளில் வழங்கிடுவானாக... امين 
             
கண்ணீரோடும் 
பிரார்த்தனைகளோடும் உங்கள் பிரிய மகள் ஹபீபா...........
இப்பதிவை படிப்பவர்கள்
படிப்பவர்கள் உங்களால் முடிந்தால் என் அத்தாவிற்காக குர்ஆன் ஓதி யாஸீன் ஓதி இன்று ஹதியா செய்யுங்கள்.. உங்கள் நல் அமல்களின் நன்மைகள் ஸதக்கத்துல் ஜாரியாவாக என் தந்தையை சென்றடையட்டும்...




1 கருத்து: