வெள்ளி, 4 மார்ச், 2016

நிழல் எப்படி நிஜமாகும்?

بسم الله الرحمن الرحيم
நிழல் எப்படி நிஜமாகும்?



قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ - النساء: 77 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْلُ الجَنَّةِ جُرْدٌ مُرْدٌ كُحْلٌ لَا يَفْنَى شَبَابُهُمْ وَلَا تَبْلَى ثِيَابُهُمْ - سنن الترمذي 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதனின் நிலைகள் மூன்று
1 பிறப்பிற்கு முந்திய நிலை
2 இறப்பிற்கு பிந்திய நிலை
3 பிறந்தது முதல் இறக்கும் வரையுள்ள நிலை
இவற்றில் முதல் நிலைக்கு ஆரம்பம் என்பது இல்லை.
இரண்டாவது நிலைக்கு முடிவு என்பது இல்லை.
மூன்றாவது நிலைக்கு ஆரம்பமும் இருக்கிறது முடிவும் இருக்கிறது.
ஆரம்பமும் முடிவும் இருக்கிற உலக வாழ்வின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்கள் குறைவுபுரிந்து கொண்டவர்களில் அதன்படி நடப்பவர்கள் மிக குறைவு. அதிகமானவர்களின் நடைமுறைகளும் செயல்பாடுகளும் இந்த உலகம்தான் நிரந்தரம் என்பது போல அமைந்திருக்கிறது.
·            உலகம் நிரந்தரமல்ல தற்காலிகம்.
·            உலகம் உண்மையல்ல போலியானது.
·            உலக இன்பம் நிஜமல்ல ஏமாற்று.
இந்த உலகில் இன்பம் தரக்கூடியது என்று நாம் கருதும் உணவு, உடை, உறவு, உறைவிடம் ஆகியவைகளை மறுமையில் கிடைக்கவிருக்கும் உணவு, உடை, உறவு, உறைவிடம் ஆகியவைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த உலகில் உள்ள அனைத்தும் போலியானது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
உணவு
இந்த உலகில் உணவுக்காக உழைக்க வேண்டிய சிரமம், தயாரிக்க வேண்டிய சிரமம், பாதுகாக்க வேண்டிய சிரமம், உடல் நிலைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யவேண்டிய சிரமம், சாப்பிட்ட பின் கழிவை வெளியேற்ற வேண்டிய சிரமம் என்று நிறைய இருக்கிறது.
ஆபத்தாக அமையும் உணவு 

வெயில் காலத்தில்,உணவு சீக்கிரம் கெட்டு விடும். கெட்டு போன உணவில் வாடை வருவதை வைத்து, உணவு கெட்டு விட்டதாக கணிக்கிறோம். உணவில் வாடை வருவது கெட்டுப்போனதன் உச்சக்கட்டத்தை காட்டுகிறது. ஆனால்அதற்கு முன்பே உணவு கெட்டு விடுகிறது. வெயில் காலத்தில் இறைச்சி உணவுகள் தான் விரைவில் கெடுகின்றன. எனவே இக்காலத்தில் வெளியே அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் பொருட்கள், நிறமிகள் மூலமும் 'புட்பாய்சன்' ஏற்படுகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=954955&Print=1
பாதுகாப்பற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட் களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் நுண் கிருமிகள், வேதிப்பொருட்கள் மனிதனுக்கு 200 வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. அதில் மிக முக்கியமானது, இன்று மனித உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய். அதனாலேயே, இந்த ஆண்டு உலக மக்களின் ஆரோக் கியத்தைப் பாதுகாக்க தோட்டம் முதல் தட்டு வரை உணவை பாதுகாப்போம் என்ற கோஷத்தைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ - فصلت: 31 
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ - محمد: 15 
உடை
உடுப்புகள் எடுக்க செலவாகிறது, அப்படியேசெலவானாலும் பட்டு போன்ற ஆடைகளை அணிவதில் ஆண்களுக்கு கட்டுப்பாடு இருக்கின்றது. ஆனால் சுவனத்தில் அது கிடையாது.
إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ [الحج: 23]
பின் கசங்கி விடுகிறது, அழுக்காகி விடுகிறது, இத்து கிழிந்து விடுகிறது, அல்லது சிறியதாகி விடுகிறது போன்ற பிரச்சனைகளெல்லாம் இந்த உலக உடுப்புகளில் ஏற்படுகின்றன.
ஆனால் சுவனத்தில் அதுவும் கிடையாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْلُ الجَنَّةِ جُرْدٌ مُرْدٌ كُحْلٌ لَا يَفْنَى شَبَابُهُمْ وَلَا تَبْلَى ثِيَابُهُمْ» سنن الترمذي
உறவு
]துணைகள்[
وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ البقرة: 25
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ الرحمن: 58
حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ   الرحمن: 72
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ الرحمن: 70
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ  الواقعة: 23
6568 - وَقَالَ: «غَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ، أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ لَأَضَاءَتْ مَا بَيْنَهُمَا، وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا، وَلَنَصِيفُهَا - يَعْنِي الخِمَارَ - خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» صحيح البخاري
மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். 142 உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும் அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களைவிட மேலானதாகும். நூல்: ஸஹீஹுல் புஹாரி 6568.
நம் கண்களுக்கு சுவன கன்னிகள்  அழகாக இருப்பார்கள். அவர்கள் கண்களுக்கும் நாம் அழகாக தோற்றமளிக்க வேண்டும். எனவே இந்த உலகில் ஆடைகளை வாங்கி மாட்டுவதுபோல மறுமையில் நாம் விரும்பும் ஜாடையை வாங்கி மாட்டலாம்.
عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الجَنَّةِ لَسُوقًا مَا فِيهَا شِرَاءٌ وَلَا بَيْعٌ إِلَّا الصُّوَرَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، فَإِذَا اشْتَهَى الرَّجُلُ صُورَةً دَخَلَ فِيهَا - سنن الترمذي 

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا - صحيح مسلم 
உறைவிடம்
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ - الزمر: 20 
 « عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِنَّ لِلْمُؤْمِنِ فِي الْجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ، طُولُهَا سِتُّونَ مِيلًا، لِلْمُؤْمِنِ فِيهَا أَهْلُونَ، يَطُوفُ عَلَيْهِمِ الْمُؤْمِنُ فَلَا يَرَى بَعْضُهُمْ بَعْضًا - صحيح مسلم 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது. இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 5458.
என்னதான் இந்த உலகில் வசதி வாய்ப்புகளை பெற்றிருந்தாலும் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருந்தால் அது இன்பமே இல்லை. இந்த உலகில் உள்ள அனைத்து இன்பங்களும் பறிபோய் விடக்கூடியதுதான்.
مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ- النحل: 96

 ஒன்று நம்மை விட்டு அவை போய்விடும் என்ற பயம். அல்லது  அவைகளை விட்டு நாம் போய்விடுவோம் என்ற பயத்தோடுதான் இருக்கிறோம் என்றால் இது என்ன வாழ்க்கை?
இறுதியாக....
மறுமையில் சுவனத்தில் காத்திருக்கும் இன்பகரமான வாழ்வுடன் ஒப்பிடுகையில் இந்த உலகம் ஒன்றுமே இல்லை.
எனவேதான் உலக வாழ்வின் நிலை பற்றி குர்ஆன் இப்படி தெளிவு படுத்தியுள்ளது.
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ - آل عمران: 185 
مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ - النساء: 77 
நாம் என்ன செய்ய வேண்டும்?
مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ- الشورى: 20 
மாளிகையின் நிழலில் களைப்பாறி ஏமாற  வேண்டும?
அல்லது மாளிகைக்குள் பிரேவேசிக்கும் தகுதியை உறுவாக்கிக் கொள்ள வேண்டுமா?

தற்காலிகமாக வைத்திருக்க கொடுத்த முத்து, வைரம், மாணிக்கம், தங்கம் போன்றவைகளைக் கொண்டு போலி மகிழ்ச்சி அடைபவன் போல வாழ்ந்து மடிய வேண்டுமா?
அவைகளை நிரந்தரமாக உரிமையாக்கிக் கொண்டவனாக வாழ்க்கையை முடிக்க வேண்டுமா?

நிழல் பெண்ணை பார்த்து ரசித்தே காலம் கடத்த வேண்டுமா?
நிஜப்பெண்ணுக்கே உரியவனாக ஆக வேண்டுமா?
3244 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ «أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ - صحيح البخاري » 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3244.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக