செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விதைக்கபட்டதே அறுக்கப்படும்


விதைக்கபட்டதே அறுக்கப்படும்

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ  [الزلزلة: 8]
عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبِرُّ لَا يَبْلَى، وَالْإِثْمُ لَا يُنْسَى، وَالدَّيَّانُ لَا يَمُوتُ، فَكُنْ كَمَا شِئْتَ كَمَا تَدِينُ تُدَانُ جامع معمر بن راشد
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம் செயல்களுக்கு தகுந்த விளைவுகள் இவ்வுலகில் அல்லது மறுவுலகில் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் அனைவரிடமும் இருக்கும்.

நல்ல செயல்களாக இருந்தால் நல்ல விளைவுகளும் தீய செயல்களாக இருந்தால் தீய விளைவுகளும்  ஏற்படும் என்றும் நம்ப வேண்டியவர்கள் நாம். நம்பவும் செய்கிறோம்.

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ الرحمن: 60
 وَالَّذِينَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةٍ بِمِثْلِهَا يونس: 27
ஆனால் குர்ஆன்و ஹதீஸ் வழியிலும் முன்னோர்கள், நல்லோர்கள் மொழியிலும் ஆராயும்போது, பல நேரங்களில் நாம் செய்யும் செயலின் அதே வகையில் நாம் விளைவுகளை அணுபவிக்க நேரும் என்ற உண்மையை அறியலாம்.
இதை உறுதி படுத்தும் குர்ஆன் வசனங்கள்
وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ [البقرة: 40]
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ  البقرة: 152
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ [محمد: 7]
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ  النور: 22
இதை உறுதி படுத்தும் நபி மொழிகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» سنن ابن ماجه
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ، الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ» سنن الترمذي
عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ قَالَ: سَمِعْتُ جَرِيرًا يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ، وَمَنْ لَا يَغْفِرْ لَا يُغْفَرْ لَهُ " مسند أحمد 
நன்மையின் பலன் நன்மையே
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ» سنن الترمذي
عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبِرُّ لَا يَبْلَى، وَالْإِثْمُ لَا يُنْسَى، وَالدَّيَّانُ لَا يَمُوتُ، فَكُنْ كَمَا شِئْتَ كَمَا تَدِينُ تُدَانُ جامع معمر بن راشد

1269 عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ» ، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ: " أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] صحيح البخاري
         இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை" என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது. ஸஹீஹுல் புஹாரீ1269
தீமையின் விளைவு தீமை
رُوِيَ أَنَّهُ لَمَّا نَزَلَتْ سُورَةُ الرَّحْمَنِ عَلَّمَ القرآن قَالَ عَلَيْهِ السَّلَامُ لِأَصْحَابِهِ مَنْ يَقْرَؤُهَا مِنْكُمْ عَلَى رُؤَسَاءِ قُرَيْشٍ، فَتَثَاقَلُوا مَخَافَةَ أَذِيَّتِهِمْ، فَقَامَ ابْنُ مَسْعُودٍ وَقَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَأَجْلَسَهُ عَلَيْهِ السَّلَامُ، ثُمَّ قَالَ: مَنْ يَقْرَؤُهَا عَلَيْهِمْ فَلَمْ يَقُمْ إِلَّا ابْنُ مَسْعُودٍ، ثُمَّ ثَالِثًا كَذَلِكَ إِلَى أَنَّ أَذِنَ لَهُ، وَكَانَ عَلَيْهِ السَّلَامُ يُبْقِي عَلَيْهِ لِمَا كَانَ يَعْلَمُ مِنْ ضَعْفِهِ وَصِغَرِ/ جُثَّتِهِ، ثُمَّ إِنَّهُ وَصَلَ إِلَيْهِمْ فَرَآهُمْ مُجْتَمِعِينَ حَوْلَ الْكَعْبَةِ، فَافْتَتَحَ قِرَاءَةَ السُّورَةِ، فَقَامَ أَبُو جَهْلٍ فَلَطَمَهُ فَشَقَّ أُذُنَهُ وَأَدْمَاهُ، فَانْصَرَفَ وَعَيْنَاهُ تَدْمَعُ، فَلَمَّا رَآهُ النَّبِيُّ عَلَيْهِ السَّلَامُ رَقَّ قَلْبُهُ وَأَطْرَقَ رَأْسَهُ مَغْمُومًا، فَإِذَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ يَجِيءُ ضَاحِكًا مُسْتَبْشِرًا، فَقَالَ: يَا جِبْرِيلُ تَضْحَكُ وَابْنُ مَسْعُودٍ يَبْكِي! فَقَالَ: سَتَعْلَمُ، فَلَمَّا ظَهَرَ الْمُسْلِمُونَ يَوْمَ بَدْرٍ الْتَمَسَ ابْنُ مَسْعُودٍ أَنْ يَكُونَ لَهُ حَظٌّ فِي الْمُجَاهِدِينَ، فَأَخَذَ يُطَالِعُ الْقَتْلَى فَإِذَا أَبُو جَهْلٍ مَصْرُوعٌ يَخُورُ، فَخَافَ أَنَّ تَكُونَ بِهِ قُوَّةٌ فَيُؤْذِيَهُ فَوَضَعَ الرُّمْحَ عَلَى مِنْخَرِهِ مِنْ بعيد طَعَنَهُ، وَلَعَلَّ هَذَا مَعْنَى قَوْلِهِ: سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ثُمَّ لَمَّا عَرَفَ عَجْزَهُ وَلَمْ يَقْدِرْ أَنْ يَصْعَدَ عَلَى صَدْرِهِ لِضَعْفِهِ فَارْتَقَى إِلَيْهِ بِحِيلَةٍ، فَلَمَّا رَآهُ أَبُو جَهْلٍ قَالَ: يَا رُوَيْعِيَّ الْغَنَمِ لَقَدِ ارْتَقَيْتَ مُرْتَقًى صَعْبًا، فَقَالَ ابْنُ مَسْعُودٍ:
الْإِسْلَامُ يَعْلُو وَلَا يُعْلَى عَلَيْهِ، فَقَالَ أَبُو جَهْلٍ: بَلِّغْ صَاحِبَكَ أَنَّهُ لَمْ يَكُنْ أَحَدٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فِي حَيَاتِي ولا أحد أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فِي حَالِ مَمَاتِي، فَرُوِيَ أَنَّهُ عَلَيْهِ السَّلَامُ لَمَّا سَمِعَ ذَلِكَ قَالَ: «فِرْعَوْنِي أَشَدُّ مِنْ فِرْعَوْنِ مُوسَى فَإِنَّهُ قَالَ آمَنْتُ [يونس: 90] وَهُوَ قَدْ زَادَ عُتُوًّا» ثُمَّ قَالَ لِابْنِ مَسْعُودٍ: اقْطَعْ رَأْسِي بِسَيْفِي هَذَا لِأَنَّهُ أَحَدُّ وَأَقْطَعُ، فَلَمَّا قَطَعَ رَأْسَهُ لَمْ يَقْدِرْ عَلَى حَمْلِهِ، تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير

இளம் தம்பதியினர் தங்களுடைய வயது முதிர்ந்த பெற்றோருக்கு உணவு அளிப்பதற்காக பழைய மண் பாண்டங்களையே உபயோகித்து வந்தனர்.
இதனை கவனித்து வந்த அந்த தம்பதியினரின் மகன், பாட்டன், பாட்டி மரணத்திற்குப் பின் அதை எடுத்து பத்திரப்படுத்தினான். காணமல் போன பாத்திரத்தை தேடிய தம்பதியினர். தங்கள் மகனிடமும் விசாரித்தனர் அதற்கு அந்தச்சிறுவன் அந்த மண் பாத்திரங்களை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் ஏனென்றால் நீங்கள் வயதான போது உங்களுக்கு சோறு போடுவதற்கு அது தேவைப்படும் அல்லவா! என்றான்.
v முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுவது இதைத்தான்.

பாதிப்புக்குள்ளாகுபவர்களைப் பார்த்து என்ன அநியாயம் செய்தானோ இப்படி அணுபவிக்கிறான் என்று கூறுவதற்காக இதை குறிப்பிடவில்லை
மாறாக, தீமைகளில் சிக்கும்போது அதாவது பிறருக்கு துரோகம் செய்யும் போது, துண்புறுத்த எண்ணும் போது, திண்டாட விட்டு ரசிக்கும் போது, சிக்கலில் மாட்டி விடும் போது, நாமாகவே அச்சம் கொள்ள வேண்டும் இதே நிலை நாளை நமக்கும் ஏற்படுமே என நம் மனசாட்சி உறுத்த வேண்டும்.

நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வதற்கும் இந்த சிந்தனை உதவும்.
மக்களிடம் மிகைத்து நிற்கும் ஒரு மோசமான மனோநிலையை காட்சி படுத்திய ஒரு கார்ட்டூன் காணொளியை பார்க்க நேர்ந்தது.
அதில் ஒருவன் வீட்டின் பால்கனி பகுதியில் தடுமாறி கீழேவிழும் அபாயநிலையில் தன்னை காப்பாற்ற உதவி கேட்டு அலறிக் கொண்டிருக்கிறான் அவனுக்கு உதவிடும் நிலையில் இருக்கும் இன்னொரு வீட்டுக்காரன் உதவாமல் ஆபத்தான இந்த காட்சியை கேமராவுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கிறான். ஆபத்தான நிலையிலிருந்தவன் மிக சீக்கிரமாகவே சுதாரிப்புடன் தப்பிப்பது கண்டு வியந்து படம் பிடித்துக்கொண்டிருந்த அவன் சற்று பின்னால் செல்லச் செல்ல அவன் வீட்டிலிருந்து தடுமாறி கீழே விழும் அபாயத்தில் உதவி கேட்கிறான் அப்போது அதை முப்பதுக்கும் மேற்பட்ட அடுத்த வீட்டுக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

சிந்திக்க வைக்கும் சிறுகதை
காட்டு அரசனாகிய சிங்கம் ஒன்று திடீரென்று நோய் வாய்ப்பட்டது. அதனால் வேட்டைக்குச் செல்லாமல் குகையிலேயே படுத்து இருந்தது.
இதை அறிந்த காட்டு விலங்குகள் அனைத்தும் குகைக்கு வந்தன. சிங்கத்தைப் பார்த்து விசாரித்து விட்டுச் சென்றன. ஆனால் நரி மட்டும் அங்கு வரவே இல்லை.
சிங்கத்தின் அருகில் இருந்து ஓநாய் ஒன்று நரி வரவில்லை என்பதை அறிந்தது. தன் பகைவனாகிய நரியைப் பழிவாங்க நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று மகிழ்ந்தது.
சிங்கத்தைப் பணிவாக வணங்கிய அது 'அரசே யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் எல்லாம் இங்கே வந்து உங்களை விசாரித்து விட்டுச் சென் றுள்ளன.
ஆனால் ஒரேயொரு விலங்கு மட்டும் இங்கு வரவில்லை' என்றது.
இதைக்கேட்ட சிங்கம் 'இந்தக் காட்டில் என்னை மதிக்காத விலங்கு உள்ளதா? அது எது என்று சொல். இப்பொழுதே கொன்று ஒழிக்கிறேன்.' என்று கோபத்துடன் கரஜனை செய்தது.
'அரசே நரிதான் இத்தனை நாட்களில் ஒரு முறை கூட உங்களை வந்து பார்க்கவில்லை'
'என்னையே அவமதிக்கும் துணிவு அந்த நரிக்கு வந்து விட்டதா? எங்கே இருந்தாலும் அதை இங்கே இழுத்து வாருங்கள்' என்ற கட்டளை இட்டது சிங்கம்.
செய்தி அறிந்த நரி நடுங்கியபடியே குகைக்குள் நுழைத்தது. சிங்கத்தைப் பணிவாக வணங்கியது.
'நரியே உனக்கு என்ன திமிர்? ஒருமுறை கூட நீ இங்கு வந்து என்னைப் பார்க்கவில்லையே. நான் அழைத்த பிறகே வருகிறாய். அவ்வளவு பெரியவனாகிவிட்டாயா? உன் ஆணவத்திற்கு என்ன தண்டனை தெரியுமா' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். அருகில் இருந்த ஓநாயோ நரிக்குக் கிடைக்கப் போகும் தண்ட னையை எண்ணிச் சிரித்தபடி நின்றது.
இந்த ஓநாய்தான் சிங்கத்திடம் தன்னைப் பற்றிக் கோள் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் சிங்கம் இப்படிக் கோபப்படுகிறது என்ற உண்மை நரிக்குப் புரிந்தது. ஓநாயைப் பழிக்குப் பழி வாங்க நினைத்தது.
சிங்கத்தைப் பார்த்து அது 'அரசே உங்கள் நலத்தையே எப்பொழுதும் நாடும் அடிமை நான். நீங்கள் நோய்வாய்ப்பட்டதை அறிந்தேன். அதற்குத் தகுந்த மருந்து தேடிப் பல இடங்களில் அலைந்தேன். அதனால்தான் நான் உங்களைச் சந்திக்க வரவில்லை.
முனிவர் ஒருவரை நேற்றுச் சந்தித் தேன். உங்கள் நோய் தீர நல்ல மருத்துவமொன்றை அவர் சொன்னார். அந்த மருத்துவ முறையை நீங்கள் மேற்கொண்டால் நோய் ஒரே வாரத்தில் பறந்துவிடும். நீங்கள் பழைய வலிமையைப் பெறுவீர்கள். அதைச் சொல்லத்தான் இங்கு ஓடோடி வந்தேன்' என்றது.
'நரியே! என் நலத்தில் நீ உண்மையான அக்கறை கொண்டுள்ளாய். உன் னைப்பற்றித் தவறாக நினைத்ததற்கு வருந்துகிறேன். முனிவர் சொன்ன மருத்துவம் என்ன? உடனே சொல்' என்று ஆர்வத்துடன் கேட்டது சிங்கம்.
'அரசே ஓநாயின் தோலை நீங்கள் ஒருவாரம் போர்த்திக் கொண்டி ருந்தால் போதும். உங்கள் நோய் குணமாகும். என்றார் அந்த முனிவர்' என்றது நரி.
இதைக் கேட்டு நடுநடுங்கியது ஓநாய். 'அரசே! என்னைப் கொன்று விடாதீர்கள்' என்று அங்கிருந்து ஓட முயற்சி செய்தது.
அங்கிருந்த நரி, 'அரசே உங்கள் நோய் குணமாவது இந்த ஓநாய்க்குப் பிடிக்கவில்லை. தப்பித்து ஓட முய ற்சி செய்கிறது பாருங்கள்" என்றது.
உடனே சிங்கம் அந்த ஓநாயின் மீது பாய்ந்து அதைக் கொன்று வீழ்த்தியது.

v வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
v ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்
v கெடுவான் கேடு நினைப்பான்
போன்ற பழமொழிகளெல்லாம் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக