வெள்ளி, 1 மே, 2015

தொழிலாளர்களின் உரிமைகள்

தொழிலாளர்களின் உரிமைகள்






فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ الجمعة: 10
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:«أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» سنن ابن ماجه 2 / 81


உழைப்பு மற்றும் உழைப்பாளிகள் பற்றி இஸ்லாம்

عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَلَبُ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» المعجم الكبير للطبراني 10 / 74
2072- عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ» صحيح البخاري 3 / 57
3406- عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجْنِي الكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ» قَالُوا: أَكُنْتَ تَرْعَى الغَنَمَ؟ قَالَ: «وَهَلْ مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ رَعَاهَا» صحيح البخاري 4 / 157
. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் 
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது" என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள். புஹாரி :3406
2071 - عَنْ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَّالَ أَنْفُسِهِمْ، وَكَانَ يَكُونُ لَهُمْ أَرْوَاحٌ، فَقِيلَ لَهُمْ: «لَوِ اغْتَسَلْتُمْ» صحيح البخاري 3 / 57
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது.புஹாரி 2071. 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ، فَقَالَ: «أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ؟» قَالَ: بَلَى، حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ، وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنَ الْمَاءِ، قَالَ: «ائْتِنِي بِهِمَا» ، قَالَ: فَأَتَاهُ بِهِمَا، فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَقَالَ: «مَنْ يَشْتَرِي هَذَيْنِ؟» قَالَ رَجُلٌ: أَنَا، آخُذُهُمَا بِدِرْهَمٍ، قَالَ: «مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا» ، قَالَ رَجُلٌ: أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ، وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ، وَقَالَ: «اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ، وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ،» ، فَأَتَاهُ بِهِ، فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ، ثُمَّ قَالَ لَهُ: «اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ، وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا» ، فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ، فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ، فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا، وَبِبَعْضِهَا طَعَامًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ، إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ: لِذِي فَقْرٍ مُدْقِعٍ، أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ، أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ سنن أبي داود (2 / 120

முதலாளிகளாக இருப்பவர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் என்ன? என்பது பற்றிறயெல்லாம் இஸ்லாம் அன்றே போதித்தது.

தொழிலாளர்களின் உரிமைகளை முதலாளிகளும் முதலாளிகளின் உரிமைகளை தொழிலாளிகளும் யாரும் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் கொடுக்கச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. 

உத்திரவாதமுள்ள ஊதியம்.
                இன்றைய உலகில் சில முதலாளிகள்தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைவான கூலி கொடுப்பதையும்சிலர் கூலியே கொடுக்காமல் உழைப்பாளிகளை ஏமாற்றுவதையும் பார்க்க முடிகிறது.
2270 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قَالَ اللَّهُ تَعَالَى: ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ، رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ " صحيح البخاري (3 / 90
. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اسْتَأْجَرَ أَجِيرًا فَلْيُسَمِّ لَهُ إِجَارَتَهُ» مصنف عبد الرزاق الصنعاني 8 / 235
பணியாளனை நியமிப்பவர் அவருக்கான கூலியை நிர்ணயம் செய்துக் கொள்ளட்டும் ( அபு ஸயிதுல் குத்ரி (ரலி) அப்துர் ரஸாக்)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ اسْتِئْجَارِ  الْأَجِيرِ وَلَمْ يُبَيِّنْ، يَعْنِي حَتَّى يُبَيِّنَ لَهُ أَجْرَهُ» المراسيل لأبي داود (1 / 167):
உரிய நேரத்தில் ஊதியம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» سنن ابن ماجه 2 / 81

தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனுக்குரிய கூலியை கொடுத்து விடுங்கள்.(இப்னு உமர்(ரலி) இப்னுமாஜா

உடல் நலன்,  உணர்வு பற்றி அக்கறை வேண்டும்.
2557 عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ» صحيح البخاري (3 / 150)
எனவே சக்திக்கேற்ற வேலை தரவேண்டும்.
அல்லாஹ்வே சக்திக்கு அதிகமாக வணக்க வழிபாடுகளில் கட்டளையிடுவதில்லை.
ஸஹாபாக்களின் வாழ்வில்
عَنِ المَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ»
صحيح البخاري (1 / 15):

ஒரு முறை அபுதர்(ரலி) அவர்கள், அவரை போன்றே உடையணிந்த நபருடன் வருகின்றார்கள்.அப்போது அந்நபரைப் பற்றி விசாரிக்கும்போது, அவர் அவர்களின் அடிமையாவார்.ஒரு முறை அவ்வடிமையை கோபத்தில் அவரின் தாயை பழித்து விட, அதையறிந்த நபி(ஸல்) அவர்கள், என்ன அபுதர் அவர்களே! இன்னும் உங்களிடம் அறியாமைக் கால பழக்கம் உள்ளது. அவர்கள் உங்கள் சகோதரர்கள். அல்லாஹ் உங்கள் கரங்களில் ஒப்படைத்துள்ளான். தாம் உண்ணும் உணவையும் உடுத்தும் உடையையும் வழங்கட்டும். அவர்களது சக்திக்கு மேல் வேலை வாங்க வேண்டாம். அப்படி இருந்தால் சேர்ந்து உதவட்டும். (மஃருக் பின் ஸீவய்து(ரலி) புகாரி முஸ்லிம்)

அனுசரிக்கும் குணம் உள்ளவராக முதலாளி இருக்க வேண்டும்.
எத்தனை முறை மன்னிப்பது?
5164 - عَنِ الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ، ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلَامَ، فَصَمَتَ، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ، قَالَ: «اعْفُوا عَنْهُ فِي كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً»
سنن أبي داود (4 / 341):
பொருப்புணர்வுள்ளவராக பணியாளர் இருக்கவேண்டும்.
............................... وَالخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
....................... صحيح البخاري
தொழிலாளிக்கும் பொறுப்பு உண்டு.தன் எஜமானரின் பொருட்களுக்கு தொழிலாளி விசாரிக்கப்படுவார்.(இப்னு உமர் (ரலி) புகாரி

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
மூன்று பேர் மாலை நேரத்தில் காட்டுப்பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது, மழைக்காக ஒதுங்க எண்ணி, ஒரு குகையில் தஞ்சம் அடைகின்றனர்.அந்த நேரத்தில் மலையில் இருந்து உருண்டோடி வந்த பாறை ஒன்று அந்த குகையின் வாசலை அடைத்து விடுகின்றது. அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்காக தாங்கள் செய்த நற்செயலை முன்வைத்து அந்த பாறையை விலக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.அதில் ஒன்று தான் இது. 

என் இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் இருந்தார். ஒரு நாள் தன் வேலைக்கான கூலியை வாங்காமல் மாயமாய் ஆகி விட்டார். சில நாட்கள் கழித்து வந்து, தன்னுடைய கூலியைக் கேட்டார். நான் ஆட்டுப் பண்ணையையும், ஒட்டகப் பண்ணையையும் காண்பித்து, இதெல்லாம் உமது கூலி தான் எடுத்துக் கொள்ளும் என்று சொல்லும்போது, அவர், என்னை கிண்டல் செய்கின்றீரா? எனக் கேட்க, நான் உமது கூலியிலிருந்து வாங்கிய ஆட்டின் மூலமாக பெருகியவைகள் உனக்கு தான் சொந்தம் என்று அவரிடம் அதை கொடுத்தேன்.இதை நான் உனக்காக செய்திருந்தால் இந்த குகையை திறந்து விடு என்று கூற,பாறை சற்று விலகியது (நீண்ட ஹதிஸின் சுருக்கம்: (இப்னு உமர்(ரலி) புகாரி 2215)

நம் கூலி நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
فَإِذَا كَانَتْ غَدَاةَ الْفِطْرِ بَعَثَ اللهُ الْمَلَائِكَةَ فِي كُلِّ بِلَادٍ فَيَهْبِطُونَ إِلَى الْأَرْضِ فَيَقُومُونَ عَلَى أَفْوَاهِ السِّكَكِ، فَيُنَادُونَ بِصَوْتٍ يُسْمِعُ مَنْ خَلَقَ اللهُ عَزَّ وَجَلَّ إِلَّا الْجِنَّ وَالْإِنْسَ فَيَقُولُونَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ، اخْرُجُوا إِلَى رَبٍّ كَرِيمٍ يُعْطِي الْجَزِيلَ، وَيَعْفُو عَنِ الذَّنْبِ الْعَظِيمِ، فَإِذَا بَرَزُوا إلى مُصَلَّاهُمْ، يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ لِلْمَلَائِكَةِ: مَا جَزَاءُ الْأَجِيرِ إِذَا عَمِلَ عَمَلَهُ؟ فَتَقُولُ الْمَلَائِكَةُ: إِلَهَنَا وَسَيِّدَنَا جَزَاؤُهُ أَنْ تُوَفِّيَهُ أَجْرَهُ،
شعب الإيمان (5 / 278)

இருவருக்குமிடையே இனக்கமான சூழல் இருக்க வேண்டும்.
உறவினர் ஒருவர் தன் உறவுக்கார்ருக்கு ஆதரவாக சாட்சி சொன்னால் ஏற்கப்படாது என்பது சட்டம்.
அதேபோன்றதோர் சட்டம் தொழிலாளி முதலாளி தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது
عَنْ مُحَمَّدٍ، عَنْ شُرَيْحٍ قَالَ: «لَا تَجُوزُ شَهَادَةُ الْعَبْدِ لِسَيِّدِهِ، وَلَا الْأَجِيرِ لِمَنِ اسْتَأْجَرَهُ، وَلَا الشَّرِيكِ» مصنف عبد الرزاق الصنعاني (8 / 325)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக