வியாழன், 7 ஜூலை, 2016

நன்மைகள் தொடர வேண்டும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
நன்மைகள் தொடர வேண்டும்



وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ الحج: 77
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " اطْلُبُوا الْخَيْرَ دَهْرَكُمْ كُلَّهُ --- شعب الإيمان
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்மைகளை அதிக அளவில் செய்யும் வாய்ப்பாகவும் பாக்கியமாகவும் அமைந்த புனித ரமளான் நம்மிடமிருந்து விடைபெற்று விட்டது.
ரமளானில் நாம் நோன்பு வைத்தோம், அதிகமாக தொழுதோம், தான தர்மங்கள் செய்தோம், இன்னும் பல நல்ல பண்புகளைப் பேணினோம். (அவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு நற்கூலி வழங்கட்டும்)

ஆனால் ரமளானில் பல வகையிலும் நன்மையில் ஈடுப்பட்ட நாம் ரமளானுக்குப்பின் ஒட்டு மொத்த நன்மைகளுக்கும் மூடுவிழா நடத்தி விட்டு மார்க்க கடமைகளை மறந்து இறை வரம்புகளை மீறி வாழ்பவர்களாக ஆகி விடக்கூடாது.
அதற்காக நாம் சொல்லிக்கொள்வது .....
1-  ரமளானும் முடிந்தது நன்மையும் முடிந்தது என்ற நிலைக்கு நாம் போய் விடக்கூடாது.  நாம் ரமளானை வணங்குபவர்கள் அல்ல ரமளான் முடிந்ததும் வணக்குமும் முடிந்தது என்று சொல்வதற்கு.
நம்முடைய உழைப்பும், பாடுபடுதலும், நன்மையில் ஈடுபடுதலும் பலனற்றதாக ஆகிவிடக்கூடாது என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது.

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا - النحل: 92
16:92. நீங்கள் (மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்.

2-  ரமளானில் நாம் செய்த வணக்கங்களும் நன்மைகளும் நமக்கு பலன் தந்ததாக எப்பொழுது ஆகுமெனில் நோன்பின் பலன் என்று இறைமறை கூறும் தக்வா நம்மில் வந்தால்தான்.
  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [البقرة: 183]
3-  இறை மன்னிப்பு கிடைப்பது ரமளானுடைய பலன்களில் ஒன்று. ரமளானில் நோன்பு வைப்பதால் மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால் பெரும் பாவம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.


إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا - النساء: 31
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (அல்-குர்ஆன் 4:31)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ» صحيح مسلم

396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் ஸஹீஹ் முஸ்லிம்)


தொழுகையை விடுவதை விட பெரிய பாவம் வேறென்ன இருக்கிறது?

தொழுகை எனும் கடமை தவறுவது குஃப்ரில் தள்ளி விடும் அபாயம் கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ» صحيح مسلم
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்134)

4-  நன்மைகளும் வணக்க வழிபாடுகளும் மரணம் வரை தொடர வேண்டும்.
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ - الحجر: 99
وَالْمُرَادُ اسْتِمْرَارُ الْعِبَادَةِ مُدَّةَ حَيَاتِهِ،- تفسير القرطبي

وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ الحج: 77
மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். (அல்-குர்ஆன் 22: 77)
عن أنسِ بن مالك - رضي الله عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم  افعلوا الخير دهرَكم،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ رواه الطبراني في الكبير، وهو في الصحيحة

நீங்கள் (வாழும்) காலம் முழுவதும் நன்மையை செய்து கொண்டே இருங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதே கருத்தில் உள்ள இன்னொரு ஹதீஸ்......
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " اطْلُبُوا الْخَيْرَ دَهْرَكُمْ كُلَّهُ --- شعب الإيمان
நோன்பும் தொடர வேண்டும்
ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ்...

عَنْ أَبِي أَيُّوبَ، صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ، ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ، فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ» - سنن أبي داود

ரமளானில் ஒருவர் நோன்பு நோற்று, அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமும் ஆறு நாட்கள் நோன்பு நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர் போன்றவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் அபூதாவூத்
மாதம் மூன்று நோன்பு பற்றிய ஹதீஸ்....

عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ فَقَدْ صَامَ الدَّهْرَ كُلَّهُ - سنن النسائي
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பவர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவர் போன்றாவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடமையான நோன்பு ரமளானுடன் முடிந்தது. காலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய நோன்பு ஒன்று இருக்கிறது.
இதுவரை நாம் பிடித்து வந்தது உணர்வுக்கான நோன்பு
பசி உணர்வை அடக்கினோம். தாக உணர்வை அடக்கினோம். காம உணர்வையும் கூட அடக்கினோம் எல்லாம் அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் உத்தரவுக்காக.
இனி கடைபிடிக்க வேண்டியது உறுப்புகளுக்கான நோன்பு.
நாவு, கண், காது, கை, கால் ஆகிய ஒவ்வொன்றுக்கும் நோன்பு இருக்கிறது. என்ற கருத்தை இமாம் கஜ்ஜாலி ரஹ் அவர்கள் இஹ்யாவில் குறிப்பிடுவார்கள்.
மனதையும் உடல் உருப்புகளையும் தீமைகளிலிருந்து கட்டுப்பாட்டில் வைப்பதுதான் தக்வா அந்த தக்வா கிடைத்தால்தான் நோன்பின் பலன் பெற்றோம் என்று பொருள்.
இல்லையென்றால் வெறும் கடமைக்கும் ஒப்புக்கும் நோன்பு வைத்ததாகி விடும்.

குர்ஆன் ஓதுதல் தொடர வேண்டும்
عَنْ رَجُلٍ مِنَ الْإِسْكَنْدَرِيَّةِ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الْحَالُّ الْمُرْتَحِلُ» قَالَ: قِيلَ لَهُ: مَا الْحَالُّ الْمُرْتَحِلُ؟ قَالَ: «الْخَاتِمُ الْمُفْتَتِحُ» الزهد والرقائق
எத்தகைய செயல் சிறந்தது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அல்-ஹால்லுல் முர்தஹில் என்று பதிலளித்தார்கள். அல்-ஹால்லுல் முர்தஹில் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது ஒரு நன்மையை செய்து முடித்து (அதோடு நிறுத்திக்கொள்ளாமல்) மீண்டும் புதிதாக செய்யத் துவங்கி விடுபவர் என்று விளக்கமளித்தார்கள்.
(குர்ஆனை முடித்து மீண்டும் ஆரம்பிப்பவர் தொடர்பாக வேறு பல அறிவிப்புகள் வந்துள்ளது.)
தருமம் செய்தலும் தொடர வேண்டும் அதற்காக பெரும் வசதி இருக்கவேண்டும் என்பதில்லை.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَبَقَ دِرْهَمٌ مِائَةَ أَلْفِ دِرْهَمٍ» قَالُوا: وَكَيْفَ؟ قَالَ: «كَانَ لِرَجُلٍ دِرْهَمَانِ تَصَدَّقَ بِأَحَدِهِمَا، وَانْطَلَقَ رَجُلٌ إِلَى عُرْضِ مَالِهِ، فَأَخَذَ مِنْهُ مِائَةَ أَلْفِ دِرْهَمٍ فَتَصَدَّقَ بِهَا» - سنن النسائي

ஒரு லட்சம் திர்ஹங்களை ஒரு திர்ஹம் வென்று விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்பொழுது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே அதெப்படி?” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒருவருக்கு ஏராளமான செல்வம் இருந்தது அவற்றிலிருந்து ஒரு லட்சம் திர்ஹங்களை எடுத்து தருமம் செய்தார். இன்னொருவரிடம் இருந்ததே இரண்டு திர்ஹங்கள்தாம். அதில் ஒன்றை தருமம் செய்தார். (எனவே இருந்ததில் பாதியை தருமம் செய்தவர் என்ற கணக்கில் இவருடைய ஒரு திர்ஹம் அவருடைய ஒரு லட்சம் திர்ஹங்களை வென்று விட்டது) என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ)

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ، قَالَ: «مَنْ طَالَ عُمُرُهُ، وَحَسُنَ عَمَلُهُ» ، قَالَ: فَأَيُّ النَّاسِ شَرٌّ؟ قَالَ: «مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ» سنن الترمذي
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்? என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு, எவருடைய ஆயுள் நீண்டு செயல் நன்மையாகுமோ அவர் என்றார்கள். மக்களில் தீயவர் யார்? என்று அவர் கேட்டார். எவருடைய ஆயுள் நீண்டு செயல் தீமையாகுமோ அவர் என்றார்கள் நபி )ஸல்( அவர்கள். (நூல்: திரமிதி)
நாம் எந்த பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதை நாமே சிந்தித்து, தீர்மானித்து அதற்கேற்ப செயல்படுவோம்.

நன்றி: தாவூதி ஆலிம்கள் சங்கமம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக